Verified Web

இலங்கை முஸ்லிம் விவகாரங்கள் ஐ.நா. சபையை வந்தடைவதில்லை

2017-12-04 09:55:07 Administrator

யாழ். முஸ்லிம் பிரதிநிதிகளிடம் மனித உரிமை ஆணைக்குழு

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மற்றும் பாதிப்­புகள் குறித்த விப­ரங்கள் தம்மை வந்­த­டை­வ­தில்லை என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு கவலை தெரி­வித்­துள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு அலு­வ­ல­கத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அலு­வ­ல­கத்­திற்­கான ஆசிய பசுபிக் பிரிவின்  பிரதிப் பணிப்­பாளர் தோமஸ் குன­கேயை  சர்­வ­தேச யாழ்ப்­பாண முஸ்லிம் பிர­தி­நி­திகள் சந்­தித்த போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இச்­சந்­திப்பின் போது, அவர்  மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரில் ஒரு பகு­தி­யி­ன­ரான முஸ்­லிம்­களை சந்­திப்­பதில் நாம் மகிழ்­வ­டை­கிறோம். இலங்கை முஸ்­லிம்கள் மீதான கவ­னத்தை நாம் தற்­போது படிப்­ப­டி­யாகக் குவித்து வரு­கிறோம். எதிர்­வரும் மார்ச்சில் ஜெனீ­வாவில் இலங்கை முஸ்­லிம்கள் குறித்து முக்­கிய அறிக்­கை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு, அது­பற்­றிய விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் முஸ்லிம் விவ­கா­ரத்­தையும் உள்­ளீர்த்து அது­பற்றி ஆராய்வோம்.

இலங்­கையில் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ள­தாக அறி­கிறோம். இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் போதிய வாக்குப் பலம் இருந்தும், அவர்கள் தமது வாக்குப் பலத்தை உரிய வகையில் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என உணர்­கிறோம்.

இலங்கை முஸ்­லிம்கள் ஆயுத்தில் நம்­பிக்கை கொண்­ட­வர்கள் அல்ல என்­பதை நாம் அறிவோம். எனினும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மற்றும் பாதிப்­புகள் குறித்து விப­ரங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவை வந்­த­டை­வ­தில்லை. இந்­நிலை மாற்­றப்­பட வேண்டும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

அதே­வேளை இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்ட சர்­வ­தேச யாழ்ப்­பாண முஸ்லிம் பிர­தி­நி­திகள் பொது­பல சேனா­வுக்கு மியன்­மாரின் பௌத்த தீவி­ர­வாத அமைப்­பான 969 அமைப்­புடன் ஏற்­பட்­டுள்ள நெருங்­கிய உறவை சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­துடன், இலங்கை முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு போதிய கவனம் செலுத்­த­வில்லை என்றால், மியன்­மாரை ஒத்த நிலை, இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் ஏற்­ப­ட­லா­மென சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

மேலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பூட்டும் பேச்­சுகள் மற்றும் பிரச்­சா­ரங்­களில் சிங்­க­ள­வர்கள் மாத்­தி­ர­மின்றி, தமி­ழர்­களும் ஈடு­ப­டு­வ­தா­கவும் எனினும் பொலிஸார் அவர்கள் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தில்லை எனவும், சட்­டத்தை சரி­வரப் பயன்­ப­டுத்­தாது பொலிஸார் பார­பட்சம் காண்­பிப்­ப­தா­கவும் இதன்­போது  சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இத­னையும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அலு­வ­ல­கத்­திற்­கான ஆசிய பசுபிக் பிரிவின்  பிரதிப் பணிப்­பாளர் தோமஸ் குணகே உரி­ய­வ­கையில் குறிப்­பெ­டுத்துக் கொண்­டுள்ளார்.

ஐ.நா. மனித உரி­மைகள் சிறு­பான்மை விவ­கார, சிறப்பு அறிக்­கை­யாளர் யாழ்ப்­பாண சர்­வ­தேச முஸ்லிம் அமைப்பின் பிர­தி­நி­திகள் ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் சிறு­பான்மை விவ­கார சிறப்பு அறிக்­கை­யா­ள­ராக தற்­போது புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள டொக்டர் பெர்னான்ட் டீ. வேன­ஸி­னையும் சந்­தித்­தனர். இதன்­போது அவர் தெரி­வித்த விட­யங்­க­ளா­வன,

இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் பற்­றிய விவ­காரம் பேசப்­ப­டு­கி­றது. இதில் முஸ்­லிம்­க­ளுக்கு பார­பட்சம் நிகழும் என்று நீங்கள் நம்­பு­வீர்­க­ளாயின் இது­பற்­றிய உரிய ஆதா­ரங்­க­ளிளை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வி­டடம் சமர்ப்­பி­யுங்கள். 

மேலும் முஸ்­லிம்­களின் காணி­களை பெரும்­பான்மை சிங்­கள சமூ­கமோ அல்­லது வடக்­கி­ழக்கில் பெரும்­பான்­மை­யாக விளங்கும் தமி­ழர்­களோ ஆக்­கி­ர­மித்­தி­ருந்தால் அது­பற்­றியும் இலங்கை முஸ்­லிம்கள் முறை­யி­டலாம். இது­பற்றி கவனம் செலுத்த ஐ.நா. மனித உரி­மைகள் சிறு­பான்மை விவ­கார சிறப்பு அறிக்­கை­யாளர் அலு­வ­லகம் தயா­ராக இருக்­கி­றது என குறிப்­பிட்­டுள்ளார்.

நோர்வே, மலே­சியத் தூதுவர்களுடன் சந்­திப்பு

ஜெனீ­வா­வுக்­கான நோர்வே தூதுவர் ஹான்ஸ், ஜெனீ­வா­வுக்­கான மலே­சியத் தூதுவர் செய்­யது எட்வான் ஆகி­யோ­ரையும் ஜெனீ­வாவில் வைத்து யாழ்ப்­பாண முஸ்லிம் சமூக சர்­வ­தேசப் பிர­தி­நி­திகள் சந்­தித்­துள்­ளனர்.

இதன்­போது யாழப்­பாண முஸ்­லிம்­களின் வர­லாறு, புலி­க­ளினால் அந்த முஸ்­லிம்கள் இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்­டமை., தற்­போது அவர்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­மான வாழ்வு, மீள்­கு­டி­யேற்­றத்தில் பார­பட்சம், மத்­திய அர­சி­னதும், மாகாண அர­சாங்­கத்­தி­னதும் புறக்­க­ணிப்பு, யாழ்ப்­பாண முஸ்லிம் பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய அபி­வி­ருத்­திகள், அதற்கு குறித்த இரு நாடு­களும் உதவ வேண்­டு­மெ­னவும் இதன்­போது யாழ்ப்­பாண முஸ்­லிம்கள் தரப்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அறிக்­கைகள் கைய­ளிப்பு

அதே­நேரம் மேற்­கு­றிப்­பிட்ட இந்த பிர­மு­கர்­க­ளு­ட­னான சந்திப்பின் போது, இலங்கையில் சட்டத்தை பாரபட்சமின்றி அமுல்படுத்துதல், ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில் யாழ்ப்பாண மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆவணமும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பில், சர்வதேச யாழப்பாண முஸ்லிம் அமைப்பின் தலைவர் அனீஸ் ரவூப், செயலாளர் ரமழான், பொருளாளர் ஜவாமில் மற்றும் நுஸ்லா நவாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.