Verified Web

அளுத்­கம வர்த்­தக நிலை­யத்தில் ஆயு­தத்­துடன் கொள்ளை முயற்சி

18 days ago MFM.Fazeer

பட்­டப்­ப­கலில் துணி­கரம்; சுவர் மீது துப்­பாக்கிச் சூடு

அளுத்­கம நகரில் அமைந்­துள்ள வெளி­நாட்டு நாண­யங்­களை மாற்றும் நிலையம் ஒன்றில்  அடை­யாளம் தெரி­யாதோர் ஆயுத முனையில் கொள்­ளையில் ஈடு­பட முயற்­சித்­துள்­ளனர். இச்­சம்­பவம் நேற்று பிற்­பகல் 2.50  மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

மோட்டார் சைக்­கிளில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் அணிந்து வந்த இருவர் இந்த கொள்ளை முயற்­சியில் ஈடு­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர்  சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

எனினும் கொள்­ளை­யிடும் கொள்­ளை­யர்­களின் திட்டம் தோல்வி அடைந்­துள்­ள­தா­கவும் அத­னை­ய­டுத்து அவர்கள் நாணய மாற்று  நிலைய சுவர்­களை நோக்கி துப்பாக்கியால் சுட்­டு­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் அளுத்­கம பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். குறித்த கொள்­ளையர்கள் வருகை தந்த திசை, தப்பிச் சென்ற திசை உள் நுழையும், வெளிச் செல்லும் நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட அனைத்தும் சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கம­ராவில் பதி­வா­கி­யுள்ள நிலையில் அவர்­களைக் கைது செய்ய இரு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் கொள்­ளை­யர்கள் தொடர்பில் எந்­த­வொரு தக­வ­லேனும் தெரி­யு­மாயின் 034 2275222 அல்­லது 034 2271350 எனும் இலக்­கத்­துக்கோ 0718591697 எனும் கையடக்கத்தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தறுமாரு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை வேண்டியுள்ளது.