Verified Web

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரம் அறிக்கையை கோருகிறது நீதியமைச்சு

2017-11-28 22:56:21 ARA.Fareel

முஸ்லிம்  தனியார்  சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய  திருத்­தங்கள் தொடர்­பான அறிக்கை  கால­தா­ம­த­மின்றி  அவ­ச­ர­மாக நீதி­ய­மைச்­சுக்கு  அனுப்பி வைக்­கப்­பட வேண்­டு­மென  நீதி­ய­மைச்சின்  செய­லாளர்,  முஸ்லிம் தனியார் சட்­டத்தில்  மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய  திருத்­தங்­களை சிபாரிசு செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­விடம்  கோரிக்கை  விடுத்­துள்ளார். 

இந்­நி­லையில் முஸ்லிம்  தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு, அதன் தலைவர்  ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம்  மர்சூப்  தலை­மையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  கூடி­ய­போது குழுவின்  சில உறுப்­பி­னர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட மற்­றுமோர் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர்  அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி குழுத்­த­லை­வ­ரிடம் கைய­ளித்தார். அவ்­வ­றிக்கை 10 விட­யங்கள் தொடர்­பான அறிக்­கை­யாகும். 

குறிப்­பிட்ட அறிக்­கையில் கையொப்­ப­மிட்­ட­வர்கள் அனை­வரும்  கடந்த 26 ஆம் திகதி நடை­பெற்ற கூட்­டத்­துக்கு சமு­க­ம­ளிக்­கா­மை­யி­னாலும் கையொப்­ப­மிட்­டி­ருந்த ஒரு உறுப்­பினர் சுக­யீனம் கார­ண­மாக  கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­ற­மை­யாலும் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை. 

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு ஏற்­க­னவே  திருத்­தங்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்து உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்ளத் தயா­ராக இருந்த நிலையில் குழுவின் உறுப்­பி­னர்கள் சிலரால் மற்­று­மொரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு கைய­ளிக்­கப்­பட்­டதால்  இந்தப் பணி மேலும்  தாம­த­மா­னது. 

எனவே,  ஓய்வு பெற்ற முன்னாள்  நீதி­ய­ரசர்  சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது அடுத்த  அமர்­வினை  எதிர்­வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திக­திக்கு பிற்­போட்­ட­துடன் அன்­றைய தினம் ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ள­துடன், புதி­தாகக்  குழுவின்  சிலரால்  கைய­ளிக்­கப்­பட்­டுள்ள  அறிக்­கை­யுடன்  இரண்டு அறிக்­கைகள் நீதி­ய­மைச்சர் தலதா அத்து கோர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 

இதே­வேளை நீதி­ய­மைச்­ச­ரிடம்  இரு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­காது  ஓர் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதே சிறந்­தது என  குழு கரு­து­வதால் எதிர்­வரும்  டிசம்பர் மாதம்  3 ஆம் திகதி கூடி  இது­தொ­டர்பில் ஆரா­யப்பட­வுள்­ளது. 

இதே வேளை, முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு தனது அமர்­வு­களை நீதி­ய­மைச்சின்  கேட்போர்  கூடத்­திலே  நடத்த வேண்டும் என  நீதி­ய­மைச்­சரின் செய­லாளர் ஜய­மான்ன குழுவின் தலைவர்  சலீம் மர்­சூபை  கடிதம் மூலம்  கோரி­யுள்ளார்.  இக்­க­டிதம் கடந்த செப்­டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அனுப்பி  வைக்­கப்­பட்­டுள்­ளது. 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களை சிபாரிசு செய்­வ­தற்கு 2009 ஆம் ஆண்டு  அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் ஓய்வு பெற்ற  முன்னாள்  நீதி­ய­ரசர்  சலீம்  மர்­சூபின் தலை­மையில் இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. 
எட்டு வருட கால­மா­கியும் குறிப்­பிட்ட குழு தனது பணி­யினை  பூர­ணப்­ப­டுத்­தாது கால­தா­ம­தப்­ப­டுத்தி வரு­வதால் பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. 

இந்த நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக 2016 அக்­டோபர் மாதம் அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச  ராஜபக் ஷவினால் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவில்  அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன்,  பைசர் முஸ்தபா,  எம்.எச்.ஏ.ஹலீம், சந்திராணி பண்டார, சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே  ஆகியோர்  அங்கம் வகிக்கின்றனர்.