Verified Web

கிந்தோட்டை டயரிக் குறிப்புகள்

2017-11-28 04:41:34 Administrator

13.11.20107 முதல் 21.11.2017 வரை

13.11.2017 திங்கட் கிழமை:
கிந்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மஹ ஹப்­பு­கல பகு­தியில் சிங்­கள இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் முஸ்லிம் பெண் மற்றும் அவ­ரது மகள் மீது மோதி­யதில் அம்­மூ­வரும் காய­ம­டைந்து மூவரும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

14.11.2017 செவ்­வாய்க்­கி­ழமை :
மோட்டார் சைக்­கிளை செலுத்தி வந்த இளை­ஞனை பொலிஸார் கைது செய்­தனர். பின்னர் விபத்­துடன் சம்­பந்­தப்­பட்ட இரு தரப்­பி­னரும் பொலிஸ் நிலையம் சென்று விட­யத்தை சமா­தா­ன­மாக முடித்துக் கொண்­டுள்­ளனர். இது தொடர்பில் காய­ம­டைந்த பெண்­ணுக்கும், பிள்­ளைக்கும் 25 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் விபத்­துக்குக் கார­ண­மாக நபரால் வழங்­கப்­ப­டு­வ­தாக இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. 

16.11.2017 வியா­ழக்­கி­ழமை
முஸ்லிம் இளை­ஞர்கள் இருவர் உதைப்­பந்­தாட்டப் போட்டி ஒன்றில் விளை­யா­டி­விட்டு மோட்டார் சைக்­கிளில் பய­ணிக்கும் போது, கிந்­தோட்டை விதா­ன­கம பகு­தியில் வைத்து சிங்­கள இளை­ஞர்கள் சிலரால் தாக்­கப்­பட்­டுள்­ளனர். 13 ஆம் திகதி இடம்­பெற்ற விபத்துச் சம்­ப­வத்தை பின்­ன­ணி­யாகக் கொண்டே இத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அன்று மாலை வேளையில் முன்னாள் பிர­தேச சபை உறுப்­பி­ன­ரான முஹமட் கியாஸ் தலை­மையில் முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர், தம்மைத் தாக்­கிய சிங்­கள இளை­ஞர்­களைத் தேடிச் சென்­றுள்­ளனர். இதன்­போது வாக்­கு­வாதம் ஏற்­பட்டு இரு தரப்­பி­னரும் கைக­லப்பில் ஈடு­பட்­டுள்­ளனர். இதன்­போது சிங்­கள மக்கள் வசிக்கும் வீடு ஒன்று சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதில் சிலர் காய­ம­டைந்­தனர். எனினும் கியாஸ் இரு தரப்­பையும் சமா­தா­னப்­ப­டுத்­தவே அங்கு சென்­ற­தா­கவும் வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வில்லை எனவும் முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றனர்.

மாலை வேளை­யி­லி­ருந்து பிர­தேத்தின் நிலைமை மோச­மா­வதை அறிந்த பொலிஸார்  முஹமட் கியாஸை கைது செய்­த­துடன் பிர­தே­சத்தின் பாது­காப்­பையும் பலப்­ப­டுத்­தினர். பிர­தேச பௌத்த பிக்­குவின் அழுத்­தத்தின் பேரி­லேயே முஹமட் கியாஸ் கைது செய்­யப்­பட்டார். கியாஸை கைது செய்­யா­விட்டால் நான் தீக் குளிப்பேன் என குறித்த பிக்கு பொலி­சா­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார். 

17.11.2017 வெள்­ளிக்­கி­ழமை

காலையில், முஸ்லிம் இளை­ஞர்­களை வியா­ழக்­கி­ழ­மை­யன்று தாக்­கிய இரு சிங்­கள இளை­ஞர்­களை பொலிசார் கைது செய்­தனர். அவர்கள் இரு­வ­ரையும்,  சிங்­கள வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் கைதான கியாஸ் என்­ப­வ­ரையும் பொலிஸார் காலி நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்து   20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர். 

பிர­தே­சத்­திற்கு வழங்­கப்­பட்ட பாது­காப்பு படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்­டது. எனினும் இதன்­போது பதற்றம் தணிந்­தி­ருக்­க­வில்லை. பிர­தேச சிங்­கள, முஸ்லிம் மக்கள் அச்­சத்­து­ட­னேயே இருந்­தனர்.

கிந்­தோட்டை தூபா­ராம விகா­ரையில் ஒன்று கூடிய சிங்­கள இளை­ஞர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­து­வ­தற்கு தயா­ரா­கினர். தாக்­கு­த­லுக்­காக வெ ளியூர்­க­ளி­லி­ருந்து வாக­னங்­களில் நூற்றுக் கணக்­கானோர் குறித்த விகா­ரைக்கு கொண்டு வரப்­பட்­டனர்.
 இரவு 7.30 மணி முதல் அங்கு வன்­மு­றைகள் பாரிய அளவில் பதி­வாக ஆரம்­பித்­தன. அந்த விகா­ரையில் இருந்த தேரர்கள் சிலரால் தூண்­டப்­பட்­டுள நிலையில் அன்று இரவு கிந்­தோட்டை முழுதும் வன்­மு­றைகள் பதி­வா­கின. 

இரு பள்­ளி­வா­சல்கள், 66 இற்கும் மேற்­பட்ட வீடுகள், 14 வரை­யி­லான வாகங்கள் மற்றும் 23 இற்கும் மேற்­பட்ட வியா­பார நிலை­யங்கள் என்­பன அடித்தும் எரித்தும் நாச­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. 

 இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை பிர­தே­சத்தில் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்ட பின்­னரும் முஸ்­லிம்­களின் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் மீது தாக்­கு­தல்கள் தொடர்ந்­தன.
 இவ் வன்­மு­றைகள் தொடர்பில் பொலிஸார் 19 பேரை 17 ஆம் திகதி இர­வோ­டி­ர­வாக கைது செய்­தனர். அவர்­களில் 16 சிங்­க­ள­வர்­களும் 3 முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கினர். 

அமைச்­சர் பைசர் முஸ்­தபா மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், விஜயபால ஹெட்டியாரச்சி ஆகியோர் இர­வோ­டி­ர­வாக கிந்­தோட்­டைக்கு விரைந்து நிலை­மை­களை பார்­வை­யிட்­ட­துடன் உயர் மட்­டங்­களை தொடர்பு கொண்டு மேலும் வன்­மு­றைகள் பர­வா­த­வாறு பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர்.

18.11.2017 சனிக்­கி­ழமை
அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தினார். 
காலையில் வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு சேத விப­ரங்கள்  மற்றும் வாக்கு மூலங்கள், முறைப்­பா­டு­களை பதிவு செய்ய  சிறப்பு பொலிஸ் குழுக்கள்  அனுப்பி வைக்­கப்­பட்­டன. 

காலி மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி அமைப்­பா­ளரும் உட்­துறை அமைச்­ச­ரு­மான வஜிர அபே­வர்­தன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், பிர­தி­ய­மைச்­சர்­க­ளான மனுஷ நாண­யக்­கார, அமீர் அலி, எச்.எம்.எம். ஹரீஸ், மேல் மாகாண சபை உறுப்­பினர்களான இப்திகார் ஜெமீல், ஏ.ஜே.எம் பாயிஸ், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஸ்லாம் உட்­பட பலரும் கிந்­தோட்­டைக்கு விஜயம் செய்து மக்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர விஜயம் செய்து பாது­காப்பு ஏற்­பா­டு­களை பலப்­ப­டுத்­தி­ய­துடன் சட்ட நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறும் சேத விப­ரங்­களை அறிக்­கை­யி­டு­மாறும் பணிப்­புரை விடுத்தார்.

காலை வேளை காலி மாவட்ட செய­ல­கத்தில் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தலை­மையில் சமா­தானக் கூட்டம் ஒன்று நடை­பெற்­றது. 
பி.ப. 1 மணி­ய­ளவில் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞானா­சர தேரர் கிந்­தோட்­டைக்கு விஜயம் செய்து சிங்­கள மக்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.

தூபா­ராம விகா­ரைக்குச் சென்ற ஞான­சார தேரர் அங்­குள்ள விகா­ரா­தி­பதி மற்றும் பொது மக்­க­ளுடன் கூட்டம் ஒன்றை நடத்­தினார். இதில் அமைச்சர் வஜி­ரவும் பங்­கேற்றார்.

மீண்டும் பி.ப 3 மணி­ய­ளவில் காலி மாவட்ட செய­ல­கத்தில் பௌத்த மற்றும் இஸ்­லா­மிய சமயத் தலை­வர்­களும் அர­சியல் சிவில் பிர­மு­கர்­களும் பொலி­சாரும் பங்­கேற்ற கூட்டம் ஒன்று நடை­பெற்­றது. இதில் பிர­தே­சத்தில் அமை­தியை நிலைநாட்ட சக­லரும் ஒத்­து­ழைப்­பது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மற்றும் தேசிய ஷூரா சபை ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் கிந்­தோட்டை பகு­திக்கு விஜயம் செய்து நிலை­மை­களை அவ­தா­னித்­த­துடன் மக்­க­ளுக்கு ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கினர்.

சனிக்­கி­ழமை இரவு 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.

இதன்­போது இரவு 10 மணி­ய­ளவில் அல­பட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு ஒன்று முற்­றாக எரிக்­கப்­பட்­ட­துடன்  கட்­டு­கொட, நுக­துவ பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தும்புத் தொழிற்­சாலை ஒன்றின் மீதும் தீ வைக்­கப்­பட்­டது. அத்­துடன்  காலி- கொழும்பு பிர­தான வீதியில் அமைந்­துள்ள மீரான் ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

19.11.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை
கிந்­தோட்டை நிலை­மை­களைப் பார்­வை­யிடும் நோக்கில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காலி மாவட்­டத்­துக்கு விஜயம் செய்தார். பாதிக்­கப்­பட்ட சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் பிர­தேச அர­சியல் ,சிவில், மத தலை­வர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.  அத்­துடன் இந்த வன்­மு­றைகள் தொடர்பில் உட­ன­டி­யாக தனக்கு பூரண அறிக்கை ஒன்­றினை அளிக்­கு­மாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு பிர­தமர் உத்­த­ர­விட்டார். 

கிந்­தோட்டை பிர­தே­சத்தில் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் கடற்­ப­டை­யி­னரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறி­வித்­தது.

20.11.2017 திங்கட் கிழமை
கிந்­தோட்டை பகு­தியில் இன்­றைய தினம் இயல்பு நிலை ஓர­ள­வுக்கு வழ­மைக்குத் திரும்பியது. எனினும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கும் மக்கள் குறைந்தளவிலேயே வருகை தந்தனர்.
பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் ஓரளவு அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தனர்.

21.11.2017 செவ்வாய்க் கிழமை
மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க கிந்­தோட்­டைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை அவ­தா­னித்தார். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டனும் மத தலைவர்களுடனும் கலந்துரையாடினார். 

கிந்­தோட்டை பகு­தியில் இயல்பு நிலை திரும்­பி­யது. கடைகள் திறக்­கப்­பட்­ட­துடன் பாட­சா­லைகள், அரச அலு­வ­ல­கங்­களும் இயங்­கின. மக்கள் நட­மாட்­டமும் அதி­க­ரித்­தி­ருந்­தது.