Verified Web

தமிழ்-­முஸ்­லிம்­க­ளி­டையே இணக்­கப்­பாடு அவ­சியம்

2017-11-27 04:56:51 MC.Najimudeen

வட கிழக்கு இணைப்பு விட­யத்தில் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே ஒரு இணக்­கப்­பாடு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை  மாலை மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு தாண்­டவன் வெளி பேடினன்ட் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இக் கருத்­த­ரங்கில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய அவர் , 
வட கிழக்கு இணைப்ப சம்­பந்­த­மாக ஒரு முடிவு வர­வேண்டும். வட கிழக்கு இணைக்­கப்­பட்ட போதிலும் கூட நிரந்­த­ர­மாக முழு­மை­யாக இணைக்­கப்­பட வில்லை. ஒரு தற்­கா­லி­க­மான இணைப்­பா­கத்தான் இருந்­தது.

உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்பின் மூல­மாக தற்­போது வட கிழக்கு இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.
சரித்­திர ரீதி­யாக தமிழ் பேசும் மக்கள் வட கிழக்கில் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள் என்ற அடிப்­ப­டையில் தான் வட கிழக்கு இணைக்­கப்­பட்­டது.

வட கிழக்கு இணைப்பு விட­யத்தில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே ஒரு இணக்­கப்­பாடு வர­வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.
மர்ஹும் அஷ்ரப் அவர்­க­ளு­டைய காலத்தில் நாங்கள் பேசி சில ஒழுங்­கு­களை செய்­தி­ருந்தோம். வட கிழக்கு மாகாணம் தென் கிழக்கு மாகாணம் அதி­கா­ரங்கள் சம்­பந்­த­மாக சில ஒழுங்­கு­களை செய்­தி­ருந்தோம்.

அத­ன­டிப்­ப­டையில் விட்டுக் கொடுப்­புடன் தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் தமது சந்­த­தியின் நலன் கருதி இவ்­விரு சமூ­கங்­களும் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக உரி­மை­யுடன் வாழ வேண்டும் நோக்­கத்தை கருத்தில் கொண்டு ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­வேண்டும்.
அந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக சேவேண்டும் என்று தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். அந்த பேச்­சுக்கள் ஆழ­மாக நடை­பெற்று முடி­வுக்கு நாங்கள் வர­வேண்டும்.

அது ஒரு முக்­கி­ய­மான விடயம் அதற்கு தமிழ் மக்­களின் உதவி எங்­க­ளுக்கு தேவை­யாகும்.
சமஷ்டி ஆட்சி முறை நல்ல ஆட்சி முறை­யாகும் மத்­தியில் கூட்­டாட்சி மாகா­ணங்­களில் பிராந்­தி­யங்­களில் சுய ஆட்சி இது ஒரு சிறந்த ஆட்­சி­மு­றை­யாகும்.

நாங்கள் நாட்டை பிரித்துக் கேட்க வில்லை. ஒரு­மித்த நாட்­டுக்குள் நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்த பிர­தே­சங்­களை எமது பாது­காப்பை உறுதி செய்து எமது கௌர­வத்தை பாது­காத்து சுய கரு­மங்கள் தொடர்­பாக தமது தலை­வி­தியை தீர்­மா­னிக்க கூடிய தீர்­வைத்தான் நாங்கள் கேட்டோம்.

உல­கத்தில் வெவ்­வேறு நாடு­களில் ஐரோப்­பாவில், ஆபி­ரிக்­காவில், அமெ­ரிக்­காவில், அவுஸ்தி­ரே­லி­யாவில் இந்­தி­யாவில் பல் வேறு நாடு­களில் இருக்­கின்ற ஆட்சி முறையின்படி ஒரு அர­சியல் தீர்வை தான் நாங்கள் கேட்டோம். வேறெ­தையும் நாங்கள் கேட்­க­வில்லை.

தற்­போ­துள்ள அர­சாங்கம் ஒரு புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கும் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளது.
அதில் நாங்கள் பக்­கு­வ­மாக, நிதா­ன­மாக சர்­வ­தேச சமூகம் எமது நிலைப்­பாட்டை தெளி­வாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சிங்­கள மக்கள் மத்­தியில் எவ்­வி­த­மான சந்­தே­கத்­துக்கும் இட­ம­ளிக்­காமல் ஒருமித்த நாட்­டுக்குள்  பிரி­ப­டாத நாட்­டுக்குள் தமது நீண்ட கால அபி­லா­சை­யான நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்த பிர­தே­சங்­களில் சுய ஆட்­சியை கேட்டிருக்­கின்றோம்.

எம்மை பொறுத்தவரைக்கும் இந்த அர­சியல் தீர்வு எமக்கு தேவை இந்த புதிய அர­சியல் தீர்வு ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிர­தம ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் தேவை.

இந்த நாட்டின் கடன் சுமையை இந்த நாட்­டினால் தாங்க முடி­யாது. இந்த நாட்டின் வரு­மா­னத்தில் 70 வீத­மான வரு­மானம் கடன் சுமையை குறைப்­ப­தற்­காக செலவு செய்­யப்­ப­டு­கின்­றது.

இந்த நாடு கடன் சுமை­யி­லி­ருந்து மீட்­கப்­ப­டு­வ­தாக இருந்தால் இந்த நாட்டின் பொரு­ளா­தாரம் முன்­னேற வேண்­டு­மாக இருந்தால், இந்த நாட்டில் வெளி­நாட்டு முத­லீடு வர­வேண்­டு­மாக இருந்தால் உள் நாட்டு முத­லீடு நடை­பெற வேண்­டு­மாக இருந்தால், இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­படல் வேண்டும். இந்த நாட்டில் நிரந்­த­ர­மான சமா­தானம் சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஏற்­பட வேண்டும்.

பேச்சுவார்த்­தையின் போது அடிப்­படை விட­யங்­களை நாங்கள் விட்டுக் கொடுக்க முடி­யாது. ஆனால் சில விட­யங்­களை விட்டுக் கொடுக்­கவும் நாங்கள் தயா­ராக இருக்க வேண்டும். அவர்­களும் விட்­டுத்­தர வேண்டும். நாங்­களும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகா­ணத்தில் வாழும் மக்­க­ளுக்கு பாதிப்பில்­லாமல் இந்த கரு­மத்தை தீர்த்துக் கொள்­வ­தற்கு ஒரு வழியை நாங்கள் காண வேண்டும்.

இறை­வனின் உதவி எங்­க­ளுக்கு தேவை. இறைவன் கையில்தான் எல்லாம் தங்­கி­யி­ருக்­கின்­றது. எல்லாம் அவன் செய­லாகும். நாங்கள் இறை­வனின் கரு­வி­க­ளாகும்.

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் முக்­கி­ய­மான மாவட்­ட­மாகும். இந்த மாவட்­டத்தில் வாழும் மக்­களில் 75 வீத­மான மக்கள் தமிழ் மக்­க­ளாகும்.
இன்­றைய சூழலில் தமிழ் மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக நிற்க வேண்டும். ஒரு­மித்து நிற்க வேண்டும். 1956 ஆம் ஆண்டு ஒற்­று­மை­யாக ஒரு மித்து நின்­றதன் கார­ண­மா­கத்தான் நாங்கள் இன்று இந்த அந்­தஸ்த்தை அடைந்­தி­ருக்­கின்றோம்.

இன்­றைய இந்த சந்­தர்ப்­பத்தை நாங்கள் இழக்கக் கூடாது. இந்த வாய்ப்­பினை இழந்துவிடக்கூடாது. இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்பம் வரு­மென்று நாம் எதிர் பார்க்க முடி­யாது.

லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு பகு­தியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் எங்­களின் ஆத­ர­வு­டனும் சேர்ந்து இன்று இந்த அர­சாங்­கத்­தினை நடாத்­து­கின்­றனர். இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறக் கூடிய நிலைமை இருக்­கின்­றது.

ஜே.வி.பியும் ஆத­ரிக்க கூடிய நிலைமை இருக்­கின்­றது. மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்றால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆகையால் நாங்கள் ஒற்­று­மை­யாக ஒரு மித்து நிற்கவேண்டும்.

விரைவில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் மூலமாக நாம் ஒருமித்து ஒற்றுமையாக நிற்கின்றோம் என்பதை இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏனையோருக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக் கூடிய நிலைமை இருக்க வேண்டும்.

எமது வெற்றிக்காக நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். ஒற்றுமையாக நிற்பது உங்களது புனிதமான கடமையாகும். அந்தக் கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது என நான் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.