Verified Web

தலதா மாளிகை வீதியை திறக்குமாறு கோரும் மனு விசாரணைக்கு

2017-11-14 23:51:46 ARA.Fareel

1998 ஆம் ஆண்டு முதல் மூடப்­பட்ட நிலை­யி­லுள்ள கண்டி தலதா மாளி­கைக்கு முன்பாகச் செல்லும் A–26 வீதியை மக்கள் பாவ­னைக்­காக மீளத் திறக்­கு­மாறு கோரி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு­வினை விசா­ரிப்­ப­தற்கு உயர்­நீ­தி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி குறிப்­பிட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் ஈவா வன­சுந்­தர, பிரி­யந்த ஜய­வர்­தன மற்றும் நளின் பெரேரா ஆகியோர் இது தொடர்­பாக ஆராய்ந்து விசா­ர­ணைக்கு திகதி நிர்­ண­யித்­தனர்.

குறிப்­பிட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு கே.முதி­யான்­ச­லாகே கீர்த்தி, எச்.எம்.தயா­நந்த, ஜே.எம்.மஹிந்த மற்றும் ஆர்.சந்­தி­ர­ரத்ன ஆகி­யோரால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பிர­தி­வாதிக­ளாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை, பொலிஸ்மா அதிபர், உயர் கல்வி மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல,  சட்­டமா அதிபர் உட்­பட சிலர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

A26 வீதியின் தல­தா­மா­ளி­கையை அண்­மித்த ஒரு பகுதி மூடப்­பட்­டி­ருப்­பதால் பொது­மக்கள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். பெரும்­போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்­டுள்­ளது என மனு­தா­ரர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட வீதி மூடப்­பட்டு மாற்­று­வ­ழியில் வாக­னங்கள் செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளதால் அப்­ப­கு­தியில் வாழும் மக்கள் போக்­கு­வ­ரத்து நெரிசல் கார­ண­மாக சூழல் மாச­டைந்து சுகா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட மூடப்­பட்­டுள்ள பாதை A26 வீதியின் 600 மீட்­டர்கள் கொண்ட பகு­தி­யாகும். இப்­பாதை தல­தா­மா­ளி­கையின் கிழக்கு எல்­லையை ஊட­றுத்து செல்­கி­றது. இந்த பாதை  A1,A9 மற்றும் A26 வீதி­க­ளுக்­கான நுழைவு பாதை­யாகும். இது சில மாகா­ணங்­க­ளுக்­கான நுழைவு பாதை­யாகவும் உள்ளது. இந்தப் பாதை­யை தினம் 10 ஆயிரம் வாக­னங்கள் பயன்­ப­டுத்­தின.

1998 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம்  25 ஆம் திகதி தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் தலதா மாளிகை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­தை­ய­டுத்து, தல­தா­மா­ளி­கையின் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் முக­மாக இப்பாதை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தலதாமாளிகையில் தியவதன நிலமே உட்பட பஸ்நாயக்க நிலமே மற்றும் பௌத்த தேரர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்றினையும் தாக்கல் செய்துள்ளனர்.