Verified Web

மாண­வனின் ஜனாஸா மூன்று நாட்­களின் பின் கரை­யொ­துங்­கி­யது

2017-11-14 23:45:32 Administrator

 சாய்ந்­த­ம­ருது கடலில் நண்­பர்­க­ளுடன் குளித்துக் கொண்­டி­ருந்­த­போது கடந்த சனிக்­கி­ழமை கடல் அலையில் சிக்­குண்டு நீரில் மூழ்­கிய நிலையில் காணாமல் போயி­ருந்த மாண­வனின் சடலம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை திருக்­கோவில் பகு­தியில் கரை­யொ­துங்­கி­ய­தாக கல்­முனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

சாய்ந்­த­ம­ருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் (வயது-16) எனும் மாண­வனின் சட­லமே இவ்­வாறு கரை­யொ­துங்­கி­யுள்ள நிலையில் மீட்­கப்­பட்­டுள்ளது. 

கல்­முனை ஸாஹிராக் கல்­லூ­ரியில் க.பொ.த.சாதா­ரண தர வகுப்பில் கல்வி பயில்­கின்ற சாய்ந்­த­ம­ருதை சேர்ந்த ஆறு மாண­வர்கள் கடந்த சனிக்­கி­ழமை மதியம் சாய்ந்­த­ம­ருது முகத்­து­வா­ரத்தை அண்­மித்­துள்ள கடலில் குளித்துக் கொண்­டி­ருந்­த­போது மூவர் கடல் அலையில் சிக்­குண்டு மூழ்­கி­யுள்­ளனர். இவர்­களுள் இருவர் மீன­வர்­க­ளினால் காப்­பாற்­றப்­பட்டு, ஆபத்­தான நிலையில் கல்­முனை அஷ்ரப் ஞாப­கார்த்த வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தனர். மற்­றைய மூன்று மாண­வர்கள் பாதிப்பு எது­வு­மில்­லாமல் கடலில் இருந்து வெளி­யே­றி­யி­ருந்­தனர்.

அதே­வேளை குறித்த ஒரு மாணவன் காணாமல் போயி­ருந்­தமை தொடர்பில் கல்­முனை பொலிஸில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் அந்த மாண­வனை தேடும் பணிகள், மீன­வர்­களின் உத­வி­யுடன் குடும்­பத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது.

 எனினும் மூன்று நாட்கள் கடந்த நிலையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை சாய்ந்­த­ம­ருதில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலை­வி­லுள்ள திருக்­கோவில் பகு­தியில் அவ­ரது சடலம் கரை­யொ­துங்­கி­யுள்­ளது. இது அவரது சடலம்தான் என்பதை பெற்றோர் அடையாளம் காட்டினர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.