Verified Web

பேரியல் சந்தேகப்பட தேவையில்லை

4 days ago ARA.Fareel

பஷீர் சேகுதாவூத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை நான் அர­சி­யலில் யாருக்கும் பின்னால் போன­வ­னல்ல. அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­த­லுக்கு பேரியல், அவ­ரது ஒரே மகன் மற்றும் குடும்­பத்தின் உத­வியை நாடி நிற்­கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.  மர்ஹூம் அஷ்­ரபின் துணை­வி­யாரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரியல் அஷ்ரப், தனது கண­வரின் மரண அறிக்கை விவ­காரம் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்த கருத்­து­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘மெடம் பேரியல் அஷ்ரப் எனக்கும் மக­னுக்கும் கவ­லை­யாக இருக்­கி­றது எனத் தெரி­வித்­துள்ளார். மறைந்த தலை­வரின் மனைவி என்ற வகை­யிலும் அவ­ரது ஒரே மகன் என்ற வகை­யிலும் அவர்­களின் மன­வே­தனை மற்றும் கவ­லையை என்னால் அறிய முடி­கி­றது, உணர முடி­கி­றது, எனக்கும் கவ­லை­யாக இருக்­கி­றது. நான் மாத்­தி­ர­மல்ல முழு முஸ்லிம் சமூ­கமும் கவ­லைப்­ப­டு­கி­றது. 

மர்ஹூம் அஷ்ரப் ஒரு கண­வ­ராக, ஒரு தந்­தை­யாக இருந்­ததை விடவும் ஒரு காத்­தி­ர­மான சமூகத் தலை­வ­ரா­கவும் இருந்­துள்ளார். அதனால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்­வ­தற்கு சமூகம் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. 

17 வருட காலம் என்­பது நீண்­ட­காலம் தான். உண்­மை­யி­லேயே நீண்ட இடை­வெளி ஏற்­றுக்­கொள்­கிறேன். 
தலைவர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் கால­மானார். அதன்­பின்பு இவ்­வி­பத்து தொடர்பில் 2001 ஆம் ஆண்டு ஜன­வரி 11 ஆம் திகதி முதன் முத­லிலும் பின்பு பல தட­வை­களும் பாரா­ளு­மன்­றத்தில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்றேன். விபரம் கேட்­டி­ருக்­கின்றேன். பின்பு ஒரு நீண்ட இடை­வெளி ஏற்­பட்டு விட்­டது. 

உயர்­ப­த­வியில் இருக்கும் போது மரணம் தொடர்பில் ஏன்­தே­ட­வில்லை? என மெடம் கேட்­டி­ருக்­கிறார். தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான உணர்வு என்னுள் இருந்து கொண்டே இருந்­தது. உயர்­ப­த­வியில் இருக்­கும்­போதே இந்த இடை­வெ­ளி­யேற்­பட்­டது. 

இந்த விடயம் கண்­களை மறைக்­கலாம். ஆனால் கருத்­து­களை மறைக்க முடி­யாது. எனக்குள் ஓடிக்­கொண்­டி­ருக்கும் உணர்­வு­க­ளுக்கு விடை­கொ­டுப்­ப­தென்றால் அவ­ரது மர­ணத்­துக்­கான விடை­தெ­ரி­ய­வேண்டும். அவ­ரது மர­ணத்தில் சந்­தே­கப்­பட வேண்­டிய சக்தி, ஓர் உயர்ந்த சக்­தி­யாக எனக்குள் நட­மா­டிக்­கொண்டே இருக்­கி­றது. மெடம் சந்­தே­கிக்க வேண்­டிய அவ­சி­ய­மே­யில்லை. எனது தேடு­த­லுக்கு உத­வியும் ஒத்­தா­சையும் வழங்க வேண்டும். 

தற்­போது தகவல் அறியும் சட்­ட­மூலம் அமுலில் உள்­ளது. இந்த சட்­ட­மூலம் ஊடாக நாங்கள் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக அறிந்து கொள்­ளாது வேறு எதைத்தான் அறிந்­து­கொள்­வது? என்றார்.  மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மா­ன­தை­ய­டுத்து அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வினால் மரணம் தொடர்பில் ஆராய ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

இந்­நி­லையில் அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­தி­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள தகவல் அறியும் சட்­டத்தின் ஊடாக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்தார் என்றாலும் குறித்த அறிக்கை தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.