Verified Web

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 2000 க்கும் அதிகமான பெண் பிர­தி­நி­திகள்

5 days ago Hassan Iqbal

25 சத­வீத பெண்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை வலி­யு­றுத்தும் புதிய தேர்தல் முறை­மையின் கீழ் 2,000 க்கும் அதி­க­மான பெண் பிர­தி­நி­திகள் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். முன்னர் அமுலில் இருந்த விகி­தா­சார தேர்தல் முறை­மையின் படி 82 பெண் பிர­தி­நி­தி­களே உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்­டனர். ஒவ்­வொரு சபைக்­கு­மான உறுப்­பி­னர்­களின் எண்­ணி­கையை குறிப்­பிடும் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 

அதன் பிர­காரம் 341 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 8,356 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.   கடந்த தேர்­தலில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு தெரி­வான உறுப்­பினர் தொகை­யுடன் ஒப்­பி­டு­கையில் இம்­முறை 4,486 ஆல் அதி­க­ரித்­துள்­ளது. இவர்­களில் 3,840 உறுப்­பி­னர்கள் தொகு­தி­வாரி முறை­மையின் கீழும் எஞ்­சியோர் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறைமை மூலமும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 341 உள்­ளூ­ராட்சி சபை­களில் 276 பிர­தேச சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 24 மாந­கர சபைகள் ஆகும். அடுத்த வருடம் பெப்­ர­வரி 15 இல் அனைத்து சபை­களும் கூடு­கின்­றன. 

உள்­ளூ­ராட்­சி­களில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு வர­வேற்­ப­ளித்­துள்ள பப்ரல் அமைப்பு, உள்­ளூ­ராட்சி நிர்­வா­கத்தில் தகுதியும் திறமையும் மிக்க, முடிவெடுக்கும் ஆற்றல் மிகுந்த பெண்களை தேர்தலில் நிறுத்துவது கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என தெரிவித்துள்ளது.