Verified Web

உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்­திப்பு

5 days ago Administrator

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் உயர்­மட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன்  தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் கடந்த வியா­ழக்­கி­ழமை விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. 

இக் கலந்­து­ரை­யா­டலில் சம­காலப் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ட­தா­கவும்  கடந்த காலங்­களில் ஆர்.ஆர்.ரி. அமைப்­பினர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுடன் புரிந்­து­ணர்­வு­டனும், ஒத்­து­ழைப்­பு­டனும் நடந்து கொண்­டது போலவே தொடர்ந்தும் சமூக நலன்­களில் இணைந்து செயற்­பட வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தா­கவும் உலமா சபையின் ஊடகப் பிரிவு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக் கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின்  சார்பில் அதன் தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தி , பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக், பிரதித் தலைவர் அஷ் ஷெய்க் ஏ.சீ அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.