Verified Web

இலங்கை அணியை இம்முறையும்நானே அழைத்துச் செல்வேன்

2017-10-24 23:54:40 Hassan Iqbal

"இலங்­கையில் நான் வைப­வங்­களில் கலந்து கொண்­டி­ருந்தேன்.... அங்கேயும் நான் பொருட்­கொள்­வ­னவு செய்யச் சென்­றி­ருந்த சுப்பர் மார்­கெட்­க­ளிலும் இலங்கை மக்கள் கூட்­ட­மாக கூடி தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருந்தனர்.... ‘ஹீரோ....ஹீரோ...’ என அவர்கள் என்னை வாழ்த்­தினர்.... அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான அனு­ப­வ­மாக இருந்­தது...

2009 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த இலங்கை அணி­யினர் சென்ற பஸ் வண்டி மீது தீவி­ர­வாத தாக்­குதல் நடாத்­தப்­பட்­டி­ருந்­தது.  இந்த தாக்­கு­தலை அடுத்து அங்கு சர்­வ­தேச கிரிக்கெட் அணிகள் சென்று விளை­யாட மறுப்புத் தெரி­வித்­தி­ருந்­தன. 

பாகிஸ்­தானில் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களை மீளக்­கொண்டு வரும் நோக்­கோடு இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்கிடை­யி­லான இரு­த­ரப்பு தொடரின் இறுதி T-20 போட்­டியை பாகிஸ்­தானில் நடாத்த பெரும் இழு­ப­றிக்கு மத்­தியில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினால் தமது நாட்டில் விளை­யாட விடுக்­கப்­பட்­டி­ருக்கும் இந்த அழைப்­பினை ஏற்­றுக்­கொண்டு பாகிஸ்தான் செல்லத் தயா­ரா­கி­யி­ருக்கும் இலங்கை அணிக்கு ஜனா­தி­ப­திக்கு நிக­ரான பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்து தரப்­படும் என ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டுள்­ளது.  

இந்­நி­லையில், 2009 இல் லாகூர் கடாபி அரங்கை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த இலங்கை கிரிக்கெட் அணி­யினர்  பய­ணித்த பஸ் மீது தீவி­ர­வாத தாக்­குதல் நடாத்­தப்­பட்ட சம்­ப­வத்தில் குறித்த பஸ் வண்­டியின் சார­தி­யாக பணி­யாற்­றிய மெஹர் முஹம்மத் கலீல் என்­பவர் தாக்­குதல் குறித்து தனது திகில் அனு­ப­வங்­களை  இந்­தியன் எக்ஸ்­பிரஸ் பத்­தி­ரி­கையின் செவ்­வி­யொன்றில் அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.   பாகிஸ்­தானில் தற்­போது நிலை­மைகள் மாறி­யுள்­ள­தா­கவும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இலங்கை கிரிக்கெட் அணி­யினர் மிகவும் பாது­காப்­பாக வர­வேற்­கப்­ப­டுவர் எனவும் தானே இம்­மு­றையும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்­களை அரங்கம் நோக்கி அழைத்துச் செல்­ல­வி­ருப்­ப­தா­கவும் அவர் இதன்­போது குறிப்­பிட்­டுள்ளார். 

“பாகிஸ்­தானில் வந்து விளை­யா­டுங்கள்; பாகிஸ்­தானில் கிரிக்­கெட்டை மீள் உயிர்ப்­பி­யுங்கள் என அழைப்பு விடு­வது இல­கு­வான காரி­யம்தான்... எனினும், அத்­தாக்­கு­தலின் பயங்­கர அனு­ப­வங்­களை பெற்­ற­வர்கள் என்­ற­வ­கையில் அவர்­க­ளுக்­குத்தான் அதன் வலி தெரியும்.... அத்­தாக்­கு­த­லின்­போது ஏற்­பட்ட அச்­சமும் தவிப்பும் நிறைந்த அனு­ப­வங்­களும் அடுத்து என்ன நடக்கப் போகின்­றது என்ற பயமும் இல­குவில் மறந்­து­விட முடி­யாத கொடூ­ரங்கள்...  என்னால் அவர்­களின் தயக்­கத்தை புரிந்­து­கொள்ள முடி­கி­றது... ஆனால், இலங்கை கிரிக்கெட் அணி­யி­ன­ரிடம் தற்­போது நான் கூறிக்­கொள்ள விரும்­பு­வது என்­ன­வெனில், தற்­போது சூழ்­நிலை மாறி­யுள்­ளது... பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது... இரா­ணுவம் உங்­க­ளுக்கு அதி­யுச்ச பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ளது.... எங்­க­ளு­டைய மக்கள் அனை­வரும் உங்­க­ளோடு இருப்பர்... உங்கள் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது...” என மெஹர் முஹம்மத் கலீல் கூறு­கின்றார்.

2009 மார்ச் மாதத்தில் இடம்­பெற்­றி­ருந்த குறித்த தீவி­ர­வாத தாக்­கு­தலில் இலங்கை கிரிக்கெட் அணி­யினைச் சேர்ந்த 6 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கினர்; அத்­துடன் பாகிஸ்­தா­னிய பொலிஸார் அறு­வரும், பொது­மக்கள் இரு­வரும் கொல்­லப்­பட்­டனர். 

தாக்­குதல் நிகழ்ந்த கொடூ­ர­மான அன்­றைய நாளை சாரதி கலீல் நினை­வு­கூ­ரும்­போது... தீவி­ர­வா­திகள் பஸ்ஸை நோக்கிச் சுட ஆரம்­பிக்­கும்­போது எழுந்த துப்­பாக்கிச் சூட்டுத் சத்­தங்­களை கேட்­டதும், தான் ஆரம்­பத்தில் மக்கள் கிரிக்கெட் அணி­யி­னரை கண்ட சந்­தோ­ஷத்தில்  வெடி வெடித்து, பட்­டாசு கொளுத்தி கொண்­டா­டு­வ­தாக நினைத்துக் கொண்­ட­தாக கூறு­கின்றார். அடுத்த கணமே இலங்கை அணி வீரர்கள் பேருந்தின் இருக்­கை­களில் இருந்து பக்­க­வாட்டில் கீழே குதித்து மறைந்து கொள்ள முயற்­சிப்­பதை பேருந்தின் கண்­ணா­டிகள் வழியே கண்­டதும் தான் சுதா­க­ரித்துக் கொண்­ட­தாக கூறு­கின்றார். 

“திரும்பிப் பார்த்­த­போது வீதியில் இருந்து ஒருவன் துப்­பாக்­கியால் பேருந்தை நோக்கி சர­மா­ரி­யாக சுடு­வதைக் கண்டேன்... ஒரு துப்­பாக்கிச் சன்னம் பேருந்தின் கண்­ணா­டியை பதம் பார்த்­தது... இன்­னொன்று பேருந்­துக்கு அப்பால் சென்­றது... சடு­தி­யாக என்ன செய்­வ­தென்று அறி­யாது அதிர்ச்­சியில் ஒரு­நொடி உறைந்து போனேன்... அணி வீரர்கள் பேருந்தை நிறுத்த வேண்டாம் எனவும் தொடர்ந்து செலுத்­து­மாறும் கத்­தினர்.... அவர்­களின் கூக்­கு­ரலில் சுய­நி­னை­வுக்கு  வந்த நான் வண்­டியை முன்­னோக்கி படு­வே­க­மாக செலுத்­தினேன்... பாரிய வாக­ன­மான சொகுசு பேருந்து வண்­டியை சடு­தியில் படு­வே­க­மாக செலுத்­து­வ­தென்­பது அசாத்­தி­ய­மா­ன­தொன்று... எனினும் பத்துப் பதி­னைந்து பேர் இரு குழுக்­க­ளாக சர­மா­ரி­யாக துப்­பாக்­கியால் சுட்டுக் கொண்­டி­ருந்த அவ்­வி­டத்தை விட்டும் பஸ் வண்­டியை நகர்த்தி, தப்­பிக்க வேண்டும் என்­பதே எனது நோக்­காக இருந்­தது.

தாக்­குதல் நடை­பெற்று ஒரு சில மணித்­தி­யா­லங்­களின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்­காக விமான நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர். அத்­த­ரு­ணத்தில் தம்மை பாரிய அச்­சு­றுத்­தலில் இருந்து காப்­பாற்­றிய சாரதி கலீ­லுக்கு நன்றி தெரி­விக்­காமல் நாட்டை விட்டு தாம் வெளி­யேற மாட்டோம் என இலங்கை அணி வீரர்கள் தெரி­வித்­த­தாக கூறு­கின்றார். அந்­நேரம் தான் பொலிஸ் நிலை­யத்தில் இருந்­த­தா­கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினர் தன்னை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்­க­ளிடம் அழைத்துச் சென்­ற­தா­கவும் கூறு­கின்றார். 

“அங்கே முத்­தையா முர­ளி­தரன், குமார் சங்­கக்­கார, அஜந்த மென்டிஸ், திலான் சம­ர­வீர, மஹேல ஆகியோர் எனக்­காக காத்­தி­ருந்­தனர்... நான் சென்­றதும் என்னை ஆரத் தழுவி மரி­யாதை கலந்த நன்­றியை தெரி­வித்­தனர்.... அத்­துடன் உட­ன­டி­யாக அவர்கள் தம் கைவ­ச­மி­ருந்த பணத்தை திரட்டி உறை­யொன்றில் இட்டு என் கைகளில் திணித்து வைத்துக் கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தினர்....” எனக் கூறு­கின்றார்.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர் சாரதி கலீல் இலங்கை நாட்­டுக்கு விருந்­தி­ன­ராக அழைக்­கப்­பட்டு கௌர­விக்­கப்­ப­டி­ருந்தார். இதன்­போது 10 நாட்கள் இலங்­கையில் தங்­கியி­ருந்த சாரதி கலீல் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனை­வ­ரி­னதும் குடும்­பங்­களை சந்­தித்­துள்ளார் . அது பற்றி சாரதி கலீல்  கூறும்­போது.

“இலங்­கையில் நான் வைப­வங்­களில் கலந்து கொண்­டி­ருந்தேன்.... அங்­கேயும் நான் பொருட்­கொள்­வ­னவு செய்யச் சென்­றி­ருந்த சுப்பர் மார்­கெட்­க­ளிலும் இலங்கை மக்கள் கூட்­ட­மாக கூடி தங்கள் அன்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.... ‘ஹீரோ....ஹீரோ...’ என அவர்கள் என்னை வாழ்த்­தினர்.... அது எனக்கு மிகுந்த மகிழ்ச்­சி­யான அனு­ப­வ­மாக இருந்­தது... இப்­ப­ய­ணத்­தின்­போது இலங்கை நாட்டு ஜனா­தி­ப­தி­யினால் இர­வு­ணவு விருந்­து­ப­சா­ரத்­திற்கும் அழைக்­கப்­பட்டு கௌர­வப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தேன்..”

இப்­ப­ய­ணத்தின் பின்னர் சாரதி கலீல் தென்­னா­பி­ரிக்கா நாட்­டுக்கு சென்று இரண்டு வரு­டங்கள் அங்கே வசித்து வந்­துள்ளார். அதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யொன்றில் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் போட்­டி­யொன்றை மேற்­கொண்­டி­ருந்­தது. 

“அது­பற்றி அறிந்­ததும் கிரிக்கெட் வீரர்கள் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளுடன் உரை­யாட முற்­பட்டேன்... ஆனால், ஹோட்டல் வர­வேற்­பாளர்  எனது அழைப்பை பொருட்­ப­டுத்­த­வில்லை.... பிறகு நான் யார் என்­ப­தையும் எனது தொலை­பேசி இலக்­கத்­தையும் ஹோட்டல் வர­வேற்­பா­ள­ரிடம் கொடுத்து, மஹேல ஜெய­வர்­த­ன­விடம் விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­து­மாறு கூறினேன்... மஹேல உட­ன­டி­யாக எனக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தினார்... ‘ஓ... முஹம்மத் பாய்... எங்கே இருக்­கி­றீர்கள்?’ என கேட்டார். நான் இருப்­பி­டத்தைக் கூறி­யதும் உட­ன­டி­யாக வந்து தன்னை சந்­திக்­கு­மாறு வேண்டிக் கொண்டார்.

நாங்கள் இரு­வரும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம்... நல்­ல­தொரு மகிழ்ச்­சி­யான பொழு­தொன்­றாக அது அமைந்­தது...ஐ.பி.எல். போட்­டி­க­ளுக்­கான அனு­மதி சீட்­டுக்கள் பல­வற்றை எனக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கினார்.... அங்கே நான் தோனி, ரெய்னா ஆகி­யோ­ரையும் சந்­தித்தேன்.... ரெய்னா என்­னுடன் அன்­பாக உரை­யா­டினார்.... தோனி என்­னிடம் குறித்த சம்­ப­வத்தை நினைவுபடுத்தி, ‘நீங்கள் மிகவும் துணிச்சலான காரியம் செய்திருக் கிறீர்கள்... நீங்கள் அவர்களைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்’ என பாராட்டியிருந்தார். 

தென்னா பிரிக்காவில் இரண்டு வருடங்கள் வசித்து வந்த சாரதி கலீல் மீளவும் பாகிஸ்தானுக்கு திரும்பி மீண்டும் பஸ் சாரதியாக பணியாற்றி வருகின்றார். 2015 இல் சிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போதும் சிம்பாப்வே அணி வீரர்களை அரங்கம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்து சாரதியாக இவர் பணியாற்றி
யுள்ளார். உலக லெவன் அணி வருகையின் போதும் இவரே சாரதியாக பணியாற்றினார். இலங்கை அணி வீரர்களின் வருகைக்காக தற்போது சாரதி கலீல் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக் கின்றார்.