Verified Web

இன்று கட்டார் செல்கிறார் ஜனாதிபதி

25 days ago Administrator

ஹக்கீம், ரிஷாட், பைஸர், முஜிபுரும் உடன் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார். கட்டார் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கைத்தொழில் வர்த்தக வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான்  மற்றும் இன்னும் சில அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து கட்டார் செல்லவுள்ளனர்.