Verified Web

தொகுதி நிர்ணயம் இன்று என்ன நடக்கிறது

2017-10-16 06:16:02 Administrator

எச்.ஏ.ஆலிப் சப்ரி 

கலப்பு தேர்தல் முறைமை அறி­முகம் செய்­யப்­பட்­ட­தினால் இலங்­கையின்  அர­சியல்  வர­லாற்றில்  மீண்டும்  பேசு­பொ­ரு­ளாக  வந்­துள்ள  தேர்தல் தொகுதி  நிர்­ணயம் சம்பந்­த­மாக  மக்­க­ளுக்கு  தெளி­வூட்ட  வேண்­டிய தேவையும்  கடப்­பாடும்  அர­சியல்  தலை­வர்­க­ளுக்கும்  சிவில்  சமூ­கத்­துக்கும்  ஏற்­பட்­டுள்­ளது.  

கடந்த கால  வர­லாற்றில்  நம்  தலை­வர்கள்  தெரிந்தும் தெரி­யா­மலும்  பல  தவ­று­களை  செய்­து­விட்­டார்கள். குறிப்­பாக  அர­சியல் யாப்பு, தேர்தல் சட்டம், காணி போன்ற முக்­கிய விட­யங்கள் உட்­பட  இறு­தி­யாக அண்­மையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சியலமைப்பு இடைக்­கால அறிக்­கையில் முஸ்லிம் தலை­வர்­களின் அச­மந்த போக்­கினை அறிய முடி­கின்­றது. சொல்ல வேண்­டிய இடத்தில் சொல்­லாமல் வெறு­மனே மக்கள் மத்­தியில் வந்து தம் தவ­று­களை பற்றி சொல்­லி­ய­ழு­வதில் எப்­ப­யனும் இல்லை. இவ்­வா­றான ஒரு பின்­ன­ணியில் முக்­கி­ய­மான ஒரு கால­கட்­டத்தில் தேர்தல் தொகுதி சம்பந்­த­மான ஒரு வர­லாற்று பார்­வையை சற்று திருப்பி பார்ப்­பது சாலச்­சி­றந்­தது.

இலங்­கையின் முத­லா­வது தேர்தல் தொகுதி நிர்­ண­யிக்­கப்­பட்­டது 1946 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பு 76(2) பிரி­வுக்கு அமை­வாக ஆகும். இதன்­படி 89 தேர்தல் தொகு­திகள் உரு­வாக்­கப்­பட்­டன. இதில் 25 தொகு­திகள் 1000 சதுர மைல் பரப்­பையும் 64 தொகு­திகள் 75000 மக்­க­ளுக்கு ஒரு உறுப்­பினர் என்ற வகை­யிலும் அப்­போ­தைய சனத்­தொகை 6.4 மில்­லியன் மதிப்­பீட்டின் படி உரு­வாக்­கப்­பட்­டது. மொத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 101 ஆகவும் இதில் 6 நிய­மன உறுப்­பி­னர்கள் தவிர மிகுதி 95 உறுப்­பி­னர்­களும் தொகு­தி­ ரீ­தியாக தெரிவு செய்­யப்­பட்­டனர். பல உ­றுப்­பினர் தெரிவு தொகு­தி­யாக கொழும்பு மத்­தியில் இருந்து 3 பேரும் கடு­கண்­ணாவை, அம்­ப­லாங்­கொட, பல­பிட்­டிய மற்றும் பலாங்­கொடை தொகு­தி­களில் இருந்து தலா 2 உறுப்­பி­னர்­க­ளு­மாக தெரிவு செய்­யப்­பட்­டனர். 

இரண்­டா­வது எல்லை நிர்­ண­யத்­துக்­காக 1959 ஆம் ஆண்­டைய அர­சியல் யாப்பு திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. முத­லா­வது எல்லை நிர்­ணய கொள்­கையில் சற்று மாற்­ற­மாக ஏனை­ய­வர்­களின் சலு­கைகள் கருத்தில் எடுக்­காமல் இனக் குழுக்­களின் அடிப்­ப­டையில் பல பிர­தி­நி­தித்­துவ எல்­லைகள் பிரிக்­கப்­பட்­டன. அப்­போ­தைய சனத்­தொகை 8.2 மில்­லியன் மதிப்­பீட்டின் படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 157 ஆக அதி­க­ரித்து தேர்தல் தொகு­தி­களின் எண்­ணிக்­கையும் 145 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டன. இத­ன­டிப்­ப­டையில் 6 நிய­மன உறுப்­பி­னர்கள் தவிர மிகுதி 151 உறுப்­பி­னர்­களும் தொகு­தி­ரீ­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டனர். பல-­ உ­றுப்­பினர் தெரிவு தொகு­தி­யாக கொழும்பு மத்­தியில் இருந்து 3 பேரும் கொழும்பு தெற்கு, அக்­மீ­மன, மூதூர் மற்றும்  மட்­டக்­க­ளப்பு  தொகு­தி­களில் இருந்து தலா 2 உறுப்­பி­னர்­க­ளு­மாக தெரிவு செய்­யப்­பட்­டனர்.

மூன்­றா­வது எல்லை நிர்­ணயம் 1976 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்­டது. 1971 ஆம் ஆண்­டைய 12.7 மில்­லியன் சனத்­தொகை மதிப்­பீட்டின் அடிப்­ப­டையில் 160 தொகு­திகள் உரு­வாக்­கப்­பட்­டன. இத்­தொ­கு­தி­களில் 143 தொகு­திகள் 90,000 மக்­க­ளுக்கு ஒரு தொகுதி என்ற அடிப்­ப­டை­யிலும் 25 தொகு­திகள் 1000 சது­ரமைல் பரப்­புக்கு ஒரு தொகுதி என்ற ரீதி­யிலும் வகுக்­கப்­பட்­டன. இத்­தேர்தல் தொகு­தி­களில் இருந்து 168 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். இக்­கா­லப்­ப­கு­தியில் சுமார் 10 இலட்சம் மக்கள் வாக்­கு­ரிமை அற்­ற­வர்­க­ளாக இருந்­தார்கள் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். இன­ரீ­தி­யான எல்லை நிர்­ணயம் கடைப்­பி­டிக்­கப்­பட்ட போதிலும் மஹ­நு­வர (கண்டி), தெல்­தெ­னிய, விய­லுவ மற்றும் கொழும்பு மேற்கு பிர­தே­சங்­களில் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டது என்றே சொல்­ல­வேண்டும். 

இவ்­வாறு  இன­ரீ­தி­யாக எல்­லைகள் பிரிக்­கப்­படும் போது கிழக்கில் பிர­தே­ச­ரீ­தி­யாக பல பாதிப்­புகள் ஏற்­பட்­டன. நிந்­தவூர் தொகுதி இல்­லா­ம­லாக்­கப்­பட்டு பொத்­துவில் தொகுதி உரு­வாக்­கப்­பட்­ட­போது அதிக சனத்­தொகை கொண்ட ஊரான அக்­க­ரைப்­பற்று இரண்­டாக பிரிக்­கப்­பட்டு பொத்­துவில் தொகு­தி­யிலும் சம்­மாந்­துறை தொகு­தி­யிலும் சேர்க்­கப்­பட்­டது. 

1981 ஆம் ஆண்­டைய எல்லை நிர்­ண­ய­மா­னது ஜனா­தி­பதி ஜே. ஆர்.ஜெய­வர்த்­த­னவின் அறுதி பெரும்­பான்மை அர­சினால் முன்­வைக்­கப்­பட்ட வர­லாற்றின் மிக­ முக்­கி­ய­மான ஒரு கண்­து­டைப்­பாகும். 1976 ஆம் ஆண்­டைய தொகு­திகள் அவ்­வாறே இருக்­கத்­தக்க 9 மாகா­ணங்­க­ளுக்கும் 4 உறுப்­பி­னர்கள் என்ற ரீதியில் அதி­க­ரிக்­கப்­பட்டு மேலும் 29 தேசி­யப்­பட்­டியல் ஆச­னங்­களை உள்­வாங்கி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 225 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது. சனத்­தொகை மதிப்­பீடோ அல்­லது நிலப்­ப­ரம்­பலோ கருத்தில் எடுக்­காமல் அரசின் அதி உச்ச அதி­காரம் இதன் போது பயன்­ப­டுத்­தப்­பட்­டது.   உறுப்­பி­னர்­களின் தெரிவு விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ அடிப்­ப­டையில் 22 தேர்தல் மாவட்­டங்­களின் அடிப்­ப­டையில் நடை­பெற்­ற­தனால் தொகுதி ரீதி­யான பிர­தி­நி­தித்­துவம் இங்கு முக்­கியம் பெற­வில்லை.  இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்கள் அதி­கூ­டிய மக்கள் பிர­தி­நி­தி­களை முஸ்லிம் கட்­சி­களின் ஊடா­கவும் பெரும் தேசிய கட்­சி­களின் ஊடா­கவும் பெற்­றுக்­கொண்­டது இத்­தேர்தல் முறை மூல­மாகும். அத்­துடன் ஏனைய சிறு­பான்மை தமி­ழர்­களும் புதி­தாக வாக்­கு­ரிமை பெற்ற இந்­திய வம்­சா­வளி மக்­களும் அதி­கூ­டிய மக்கள் பிர­தி­நி­தி­களை பெற்­றதும் இத்­தேர்தல் முறை மூல­மாகும்.

இந்­நி­லை­யி­லேயே, மிக அண்­மையில் - கலப்பு தேர்தல் முறை­மையை உள்­வாங்­கிய புதிய மாகாண சபை சட்டம் அவ­சர அவ­ச­ர­மாக கொண்­டு­வ­ரப்­பட்டு 2/3 பெரும்­பான்மை பலத்­துடன் நிறை­வேற்­றப்­பட்­டது. அத்­துடன் புதிய உள்­ளூராட்சி சபை சட்­ட­மூ­லமும்  நிறை­வேற்­றப்­பட்­டமை புதிய எல்லை நிர்­ணய தேவைப்­பாட்டை மேலும் வலி­யு­றுத்தி நிற்­கின்­றது. நிச்­சயம் விகி­தா­சார தேர்தல் முறை­மையில் இருந்த சாத­கத்­தன்மை கலப்பு முறை­மையில் குறை­வா­கவே இருக்கும். 

எனவே கடந்த கால வர­லாற்று தவறில் இருந்து படிப்­பி­னையைப் பெற்று எதிர்­கா­லத்தில் வர­வி­ருக்கும் எல்லை நிர்­ணய சபைக்கு காத்­தி­ர­மான தீர்­வினை முஸ்லிம் சமூகம் முன்­வைக்க தயா­ராக வேண்டும். மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியின் போதும் சிறு­பான்மை சமூ­கத்­திற்கு  பாத­க­மான விட­யங்­களில் எல்லாம் அப்­போ­தைய ஒவ்வா சூழ்­நிலை கார­ண­மாக எம்­ம­வர்கள் ஆத­ரவு  அளித்­து­விட்டு நல்­லாட்­சி­யிலும் சமூகம் சார்ந்த விட­யங்­களில் கண்­ணைக்­கட்டி கை உயர்த்தும் கலா­சா­ரமே தொடர்­கின்­றது. எனவே இவ்­வி­ட­யத்தில் தற்­போ­தைய மக்கள் பிர­தி­நி­தி­களை நம்­பு­வதில் எப்­ப­யனும் இல்லை. சிவில் சமூ­கத்தை சார்ந்த துறை சார் நிபு­ணர்கள் சமூக அக்­க­றை­யுடன் முன்­வந்து இந்­ந­ட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்­பது காலத்தின் தேவை­யாகும். 

மாகாண  சபை தேர்தல் முறை 50:50 என்ற கலப்பு முறையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­ப­டியால் பாரா­ளு­மன்ற தேர்தல் முறையும் இவ்­வ­டிப்­ப­டை­யி­லேயே நடை­பெறும் வாய்ப்­புகள் அதிகம் உள்­ளன. தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 294 ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­மே­யானால் 2012 ஆம் ஆண்­டைய குடி­சன மதிப்­பீட்டின் படி 220 சிங்­க­ள­வரும், 33 தமி­ழரும், 28 முஸ்­லிம்­களும், 13 இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரும்  உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­ப­டு­வது இக்­க­லப்பு முறை தேர்­தலில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அத்­துடன் புதிய அர­சியல் யாப்பு நகல் முறைப்­படி ஒரு­வேளை பாரா­ளு­மன்ற கீழ்­சபை கலப்பு முறையில் தெரிவு செய்­யப்­படும் பட்­சத்தில் பாரா­ளு­மன்ற மேல்­ச­பைக்­கான தெரிவு எவ்­வாறு அமையும் என்­பதில் ஒரு தெளி­வற்ற நிலையே காணப்­ப­டு­கின்­றது. உலகின் பல்­வேறு பல்­லின சமூ­கங்கள் வாழ்­கின்ற  நாடு­களில் குறிப்­பாக ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் இந்­தி­யாவில் இரு­சபைகளை உள்­ள­டக்­கிய  பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம்  வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற படி­யினால் அவற்றின் நகல்­களை பின்­பற்­று­வது  ஏற்­பு­டை­யது.

எவ்­வா­றான போதிலும் அண்­மைக்­கால அர­சியல் நகர்­வு­களின் போக்கை நோக்­கும்­போது, மீண்டும் ஒரு முறை­யான எல்லை நிர்­ணயம் நடை­பெ­றாமல் 1981 ஆம் ஆண்டில் ஐ. தே. க. அரசு பின்­பற்­றிய முறை­யினை கையா­ளலாம் என்­பதை ஊகிக்க முடி­கின்­றது. இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்டு அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வட்­டா­ரங்­களின் பிரிப்பும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யு­மாகும். குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட சில பிர­தேச செய­ல­கங்­களின் எல்­லைகள் இன்னும் நிர்­ண­யிக்­கப்­ப­டாமல் இருக்கும் நிலையில் அதற்­கான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வட்­டா­ரங்கள் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. சனத்­தொகை மதிப்­பீ­டுக்கும் உறுப்­பி­னர்­களின் எண்ணிக்கைக்கும் சில பிரதேசங்களில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான தவறுகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன் எதிர்கால மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொகுதிகள் நிர்ணயத்தில் சமூகத்தை விழிப்பூட்டுவது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.

எவ்வாறான முறை வந்த போதிலும் பெரும் தேசியக் கட்சிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளை இனரீதியான பிரதிநிதித்துவத்துக்குள் கணிப்பிடுவதில் கருத்துமுரண்பாடு காணப்படுகின்றது. இருந்தபோதிலும் இனரீதியான பிரதிநிதித்துவம் அவ்வினத்தவர் சார்ந்த கட்சிகளில் அல்லது குழுக்களில் இருந்து அவ்வினத்தவர்களினால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களினாலேயே பூர்த்திசெய்யப்படும். இக்கோட்பாட்டின் அடிப்படையில் தேர்தல் தொகுதிகள், பிரதேசசபை வட்டாரங்கள் நாட்டின் இனரீதியான விகிதாசாரத்துக்கேற்ப பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தும் அடிப்படையில் வகுக்கப்படுவதனை உறுதி செய்வது சமூகக் கடமையாகும்.