Verified Web

பலஸ்தீன நல்லிணக்கத்திற்காக ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுமா

2017-10-16 04:38:09 M.I.Abdul Nazar

தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் 

இக் கட்டுரை ஹமாஸ் – பதாஹ் இணக்கப்பாடு எட்டப்பட முன்னர் எழுதப்பட்டதாகும்.

பலஸ்­தீ­னத்தின் முக்­கிய இரு பிரி­வு­க­ளான பதாஹ் மற்றும் ஹமாஸ் ஆகி­யன தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மிகக் கடு­மை­யாக முயன்­று­வ­ரு­கின்ற நிலையில் பலஸ்­தீன அதி­கார சபையின் ஜனா­தி­பதி மஹ்மூத் அப்பாஸ் வெளி­யிட்­டுள்ள நிபந்­தனை, பேச்­சு­வார்த்­தையில் முட்­டுக்­கட்­ட­டை­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

ஹமாஸ் தனது ஆயு­தங்­களை பலஸ்­தீன அதி­கார சபை­யிடம் ஒப்­ப­டைக்க வேண்­டு­மென கடந்த வாரம் அப்பாஸ் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். கடந்த செவ்­வாய்க்கி­ழமை எகிப்தின் ஏற்­பாட்டில் கெய்­ரோவில் இரு தரப்­பி­னரும் சந்­திக்கத் தீர்­மா­னித்­தி­ருந்­தனர். 
ஹமாஸ் மற்றும் பதாஹ் அமைப்­புகள் பிரிந்து ஒரு தசாப்­தத்­திற்கும் அதி­க­மான காலம் கடந்த பின்னர் இக்கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

இஸ்­ரே­லினால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் ஆக்­கி­ர­மிப்­புக்­களை எதிர்க்கும் ஒரே­யொரு அதி­கா­ர­பூர்வ அமைப்­பாக ஹமாஸ் தன்னை வடி­வ­மைத்துக் கொண்­டது. எனினும் கடந்த வாரம் எகிப்­திய தொலைக்­காட்­சியில் பேசிய அப்பாஸ் 'ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே சட்டம், ஒரே ஆயுதம்'  என்­ப­வற்­றிற்கு அழைப்பு விடுத்தார். 

லெபனான் ஆயுதக் குழுவும் அர­சியல் இயக்­கமும் ஒன்­றி­ணைந்து நாட்டின் தெற்குப் புறத்தில் பெரும்­பா­லான பகு­தி­களை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பதை மேற்கோள் காட்டி பேசிய அப்பாஸ் 'லெப­னானில் ஹிஸ்­புல்லாஹ் அமைப்­பிற்கு ஏற்­பட்ட அனு­ப­வத்தை காஸாவில் மீள ஏற்­ப­டுத்த நான் அனு­ம­திக்கப் போவ­தில்லை' எனத் தெரி­வித்தார். 

கடந்த மாதம் நிரு­வாகக் குழு கலைக்­கப்­பட்­டமை தொடர்பில் ஹமாஸ் அறி­வித்­தது. 2007 ஆம் ஆண்டு ஏற்­பட்ட பிளவின் கார­ண­மாக காஸாவை நிரு­வ­கித்த அர­சியல் பிரிவு அது­வாகும். 

அப்­பா­ஸினால் முன்­வைக்­கப்­பட்ட பிர­தான கோரிக்­கை­யினை ஏற்றுக் கொண்ட அக்குழு, ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சங்­களில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தி­யது. 

தேசிய நல்­லி­ணக்க அர­சாங்கம் காஸாவின் அர­சாங்க நிரு­வா­கத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கையேற்­ற­தாக கடந்த வாரம் ஹமாஸ் அறி­வித்­தது. 

பத்து ஆண்­டு­க­ளாக தேசிய ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்டு தோல்­வி­யடைந்த முயற்­சி­களைத் தொடர்ந்து தற்­போ­தைய முயற்­சியில் ஆயு­தங்­களைக் கைவிடும் கோரிக்கை பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தவே செய்யும். 

கலந்­து­ரை­யா­ட­லின்­போது குழு­வி­னது ஆயு­தங்கள் தொடர்­பான விடயம் எடுக்­கப்­ப­ட­வில்லை என உள்ளூர் ஊட­க­மொன்­றிற்கு கரு­தத்துத் தெரி­வித்த ஹமாஸ் பேச்­சாளர் ஹாஸெம் காஸ்ஸெம், அந்த ஆயு­தங்கள் சட்­ட­பூர்­வ­மா­னவை எனச் சுட்­டிக்­காட்­டினார். 
அவ்­வா­யு­தங்கள் பலஸ்­தீ­னர்­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவும், இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து அவர்­க­ளது நிலங்­களை விடு­விப்­ப­தற்­கா­க­வுமே இருக்­கின்­றன. எனவே அது கலந்­து­ரை­யா­டப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­யல்ல எனவும் காஸ்ஸெம் தெரி­வித்தார். 

ஹமாஸ் தனது நிலைப்­பாட்டை விரைவில் மாற்­றிக்­கொள்ளும் என தான் எதிர்­பார்க்­க­வில்லை எனவும் நல்­லி­ணக்­கத்­திற்­காக ஹமாஸ் ஆயு­தங்­களைக் வைவிடும் என­பதை நினைத்தும் பார்க்க முடி­யாது என பலஸ்­தீன திட்­ட­மிடல் வலை­ய­மைப்­பான அல்-­ஷ­பா­காவின் திட்­ட­மிடல் ஆலோ­ச­க­ரான தாரிக் தானா தெரி­வித்தார். 

'உண்­மையில் அவ்­வாறு நடை­பெ­று­மானால் அதுவும் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை கொண்­டு­வந்­து­வி­டாது. மாறாக பலஸ்­தீன அர­சியல் களத்­திலும் நிறு­வ­னங்­க­ளிலும் பதாஹ் அமைப்பின் மேலா­திக்­கத்­தையும் சர்­வா­தி­கா­ரத்­தையும்  மேலோங்கச் செய்யும்' எனவும் தாரிக் தானா தெரி­வித்தார். 

2006 ஆம் ஆண்டு ஹமாஸ் 44.5 வீத வாக்­கு­களைப் பெற்று பலஸ்­தீன சட்­ட­மன்­றத்தில் 74 ஆச­னங்­களைக் கைப்­பற்­றி­யது. ஹமாஸ் மற்றும் பதாஹ் அமைப்­புக்­க­ளுக்­கி­டை­யி­லான உள்­ளக முரண்­பா­டுகள் கார­ண­மாக இரு அணி­களும் கூட்­ட­மைப்­பொன்றை ஏற்­ப­டுத்திக் கொள்­வது சாத்­தி­யமற்றுப் போய்­விட்­டது. 

பின்னர் அப்­பா­ஸி­னாலும் பதா­ஹினால் மேலா­திக்கம் செய்­யப்­ப­டு­கின்ற பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­தி­னாலும் ஹமாஸ் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை பதவி நீக்கம் செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.  

அல்-­ஜெ­ஸீ­ரா­வினால் 'பலஸ்தீன் பேப்பர்ஸ்' என மேற்­கொள்­ளப்­பட்ட புல­னாய்வில் பிரித்­த­ா­னிய உளவு அமைப்­பான எம்16 என்ற அமைப்பே அடிப்­ப­டையில் பலஸ்­தீன அதி­கார சபை­யினால் ஹமாஸ் பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான திட்­டத்­தினை வரைந்­தமை தெரி­ய­வந்­தது. அதே­வேளை அமெ­ரிக்கா அப்­பா­ஸுக்கு நம்­பிக்­கை­யான ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவு மற்றும் ஆயுதப் படை ஆகி­வற்­றிற்கு பயிற்­சி­ய­ளித்தல் மற்றும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உத­வி­யது. 

2007 ஆம் ஆண்டு காஸாவில் ஏற்­பட்ட பதற்ற நிலை ஆயுத மோத­லாக வெடித்­தது. அந்த சந்­தர்ப்­பத்தில் ஹமாஸ் பதா­ஹினை பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­விட்டு கரை­யோரப் பகு­தி­களைக் கைப்­பற்­றி­யது. 

அதே ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் உத­வி­யோடு தற்­போது வரை நிலவிக் கொண்­டி­ருக்கும் காஸா மீதான தடை­களை அமுல்­ப­டுத்­தி­யது. இதன் கார­ண­மாக ஆள்­புலப் பிர­தே­சத்­திற்­குள்­ளி­ருந்தும் வெளி­யி­லி­ருந்தும் மக்கள் நட­மாட்டம், பொருட்கள், மருந்­துகள், உணவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் என்­பன மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. 

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் காஸா பள்­ளத்­தாக்கில் இருக்கும் பஸ்­தீ­னர்கள் மீது மூன்று தட­வைகள் இஸ்ரேல் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களைக் கட்­ட­விழ்த்து விட்­டது. 

இறு­தி­யாக 2014 ஜுலையில் ஆரம்­பித்து 51 நாட்கள் நடை­பெற்ற யுத்தத்தில் இஸ்ரேல் இரா­ணுவம் 2,200 இற்கும் மேற்­பட்­டோரை கொன்று குவித்­தது. அவர்­களுள் பெரும்­பான்­மை­யினர் சிவி­லி­யன்­க­ளாவர். 

இம் மாத ஆரம்­பத்தில் கொள்கை மற்றும் மதிப்­பீட்டு ஆய்­வுக்­கான பலஸ்­தீன மத்­திய நிலை­யத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­த­றியும் வாக்­கெ­டுப்பில் மூன்றில் இரண்டு பலஸ்­தீ­னர்கள் அப்பாஸ் இரா­ஜி­நாமா செய்ய வேண்டும் என எதிர்­பார்க்­கின்­றனர். அதே­வேளை கருத்­த­றியும் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொண்ட அரை­வா­சிக்கும் மேற்­பட்டோர் பலஸ்­தீன அதி­கார சபை பலஸ்தீன மக்­க­ளுக்கு சுமை­யாக இருப்­ப­தாகக் கரு­து­கின்­றனர்.  

'பலஸ்­தீன அதி­கார சபை இஸ்­ரே­லுடன் வெற்­றி­ய­ளிக்­காத பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதால் மனங்­களில் ஆழ­மாக ஏற்­பட்ட ஏமாற்­றத்தின் விளை­வாக பலஸ்­தீன மக்­களின் பார்­வையில் ஹமாஸ் சட்­ட­பூர்வ அந்­தஸ்­து­டைய அமைப்­பாக மாறி­யது' என தாரிக் தானா விளக்­கினார்.

'இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக போராட்டச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக பலஸ்­தீ­னர்­களுள் பெரும்­பா­லா­னோரின் மரி­யா­தை­யினை ஹமாஸ் பெற்றுக் கொண்­டது' எனவும் தாரிக் தானா தெரி­வித்தார்.

'ஹமாஸ் ஆயு­தங்­களைக் கீழே வைக்­கு­மானால், அது தொடர்ந்தும் விடு­தலை இயக்­க­மாக இருக்க முடி­யாது. எனவே அதன் பிர­பலம் இழக்­கப்­ப­டு­வ­தோடு, அதி­கா­ரத்தின் முக்­கிய பிரி­வாகக் காணப்­படும் அதன் சட்ட அந்­தஸ்தும் இல்­லாமல் போகும் என' அவர் மேலும் தெரி­வித்தார்.

'ஹமா­ஸுக்கு ஆத­ர­வ­ளிக்­காதோர் உட்­பட காஸா­வி­லுள்ள பலஸ்­தீ­னர்­களுள் பெரும்­பான்­மை­யினர் ஆயு­தங்­களை கைவி­டு­வ­தற்கு எதி­ரா­கவே இருக்­கின்­றனர்' என காஸாவின் அல்-­அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் அர­ச­றி­வியல் பேரா­சி­ரியர் முக்­ஹைமர் அபூ சாதா மதிப்­பீடு செய்­துள்ளார். 

'ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும். இஸ்­ரே­லிய இரா­ணுவம் ஒவ்­வொரு நாளும் இரவு வேளை­களில் தேடு­தல்­களை நடத்­து­கின்­றது. தீவிரப் போக்­கு­டைய குடி­யே­றிகள் பொது­மக்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­து­கின்­றது. இதே நிலைமை தமக்கும் ஏற்­பட்­டு­விடக் கூடா­தென அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்' எனவும் அவர் தெரி­வித்தார். 

'எனது அனு­மானம் என்­ன­வென்றால் ஹமாஸ் அமைப்­பாக இருந்­தாலும் சரி ஏனைய எதிர்ப்புக் குழுக்­க­ளாக இருந்­தாலும் சரி அவற்­றின் ஆயு­தங்­களைக் களை­வ­தற்கு காஸா­வி­லுள்ள பெரும்­பான்மை பலஸ்­தீ­னர்கள் எதி­ரா­கவே இருக்­கின்­றனர். ஏனென்றால் நாம் தற்­போது வரை ஆக்­கி­ர­மிப்­புக்கும் தடை­களின் கீழேயும் இருக்­கின்றோம். காஸா எந்த நேரத்­திலும் இஸ்­ரே­லினால் இலக்கு வைத்­துத் தாக்­கப்­படும் ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளது' எனவும் அவர் குறிப்­பிட்டார். 

மஹ்மூத் அப்­பா­ஸையும் பலஸ்­தீன அதி­கார சபை­யி­னையும் பொறுத்­த­வரை, ஹமாஸ் அமைப்­பினை தொடர்ந்தும் ஆயு­தங்­க­ளுடன் இருக்க அனு­ம­திப்­பது ஹமாஸ் அமைப்பு 2007 ஆம் ஆண்டு நடை­பெற்ற சண்­டையில் காஸாவின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றியது போன்­ற­தொரு நிலை மீண்டும் ஏற்­ப­ட­்டு­வி­டக்­கூடும் என்ற அச்சம் காணப்­ப­டு­கின்­றது. 

'ஹமாஸ் ஆயு­தங்­களை கைவிட சம்­ம­திக்கும் என நான் நினைக்­க­வில்லை' எனத் தெரி­வித்த பேரா­சி­ரியர் முக்­ஹைமர் அபூ சாதா 'எதிர்­காலக் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெறும் வரை இந்தப் பிரச்­சினை ஒத்தி வைக்­கப்­படும்' எனவும் எதிர்வு கூறினார். 
'இது மிகவும் சிக்­க­லான பிரச்­சினை, இந்த விடயம் ஹமாஸ் மற்றும் பதாஹ் அமைப்­பி­னரால் மிக ஆழ­மாகக் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்­டிய விட­ய­மாகும்' எனவும் அவர் குறிப்­பிட்டார்.

காஸா­வி­லுள்ள பலஸ்­தீன விடு­த­லைக்­கான இட­து­சாரி பொது­மக்கள் முன்­ன­ணியின் அர­சியல் குழுவின் உறுப்­பினர் தொல்பிக்ர் ஸ்விரிஜோ நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார்.

'ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளி­ருக்­கின்ற மக்­களின் கஷ்­டங்­களை குறைப்­ப­தற்கு அர­சியல் தீர்வு காணப்­ப­டா­த­வி­டத்து காஸா இஸ்­ரே­லுடன் மற்­று­மொரு யுத்­தத்தில் ஈடு­ப­ட­வேண்­டி­யி­ருக்கும்' என ஸ்விரிஜோ வாதிட்டார். 

'சமாதானம் நிலவுமாக இருந்தால் ஹமாஸ் தனது ஆயுதங்கள் நல்லிணக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஏற்றுக்கொள்ளும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடையுமானால் இஸ்ரேலுடன் மற்றுமொரு மோதல் ஏற்படும். ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸாம் படைப்பிரிவு தனது ஆயுதங்களை பேணுவதோடு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 

பதாஹ் மற்றும் ஹமாஸ் ஆகியவற்றிற்கிடையே எவ்வித தீர்மானமும் எட்டப்படாமல் நாட்கள் நகர்கின்றன. இது காஸாவில் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என ஸ்விரிஜோ குறிப்பிட்டார். 

இந்தப் பின்னணியில், நல்லிணக்க பேச்சுவார்த்தை வெற்றிபெறாது என 60 வீதத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் நம்புவது கொள்கை மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்கான பலஸ்தீன மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 

"இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையாயின், முன்னரைவிட வேறுபட்ட விதத்தில் இராணுவ மோதல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என ஸ்விரிஜோ குறிப்பிட்டார்.

நன்றி: அல்-­ ஜெ­ஸீரா