Verified Web

சட்டம் இறுகுமா தளருமா

2017-10-16 04:27:16 A.L.M. Satthar

ஏ.எல்.எம். சத்தார்

அண்­மைக்­கா­லங்­களில் பேரின கடும் போக்­கு­வா­தி­க­ளால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக விளை­விக்­கப்­பட்ட அசம்­பா­வி­தங்­க­ளுக்கு சரி­யா­ன­தொரு தீர்வு கிடைக்­க­வில்லை என்ற அதி­ருப்தி முஸ்­லிம்­க­ளி­டையே நில­வு­கி­றது.

அடுத்­த­டுத்து பல பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. தொடர்ச்­சி­யாக முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டும் சேத­மாக்­கப்­பட்டும் பாரிய பொரு­ளா­தார இழப்­பீ­டு­க­ளுக்கு வழி­வ­குக்­கப்­பட்­டன. இந்­நிலை இடை விட்டு விட்டு தொடர்­கின்­றன. ஆரம்­பத்­தி­லேயே குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக முறை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு நீதி நிலை நாட்­டப்­பட்­டி­ருக்­கு­மாயின், நாச­கா­ரி­களின் கரங்கள் எப்­போதோ ஓய்ந்­தி­ருக்கும். குற்­ற­மி­ழைத்தோர் சரி­யாகத் தண்­டிக்­கப்­பட்­டி­ருந்தால் அக்­கி­ர­மங்­க­ளுக்கு முடிவு கிடைத்­தி­ருக்கும்.

சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கு எதி­ராக பேரி­ன­வா­திகள் குழப்­பங்கள், கொடு­மைகள் இழைக்கும் சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் சிறு­பான்மை அடக்கி ஒடுக்­கப்­பட்டும் அவர்கள் அழிவைச் சந்­திக்­கட்டும் என்ற தோர­ணையில் பொலிஸார் கை கட்டி வேடிக்கை பார்த்து வந்­த­மையே வர­லா­றாகும். பொலிஸார் மட்­டு­மன்றி அரச நிறு­வ­னங்கள், வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­களில் எல்லாம் பெரும்­பாலும் சிறு­பான்மைப் புறக்­க­ணிப்பு நடந்து வரு­வதே யதார்த்­த­மாகும். இதனை இல்­லா­ம­லாக்க அல்­லது ஓர­ள­வுக்­கேனும் குறைக்கச் செய்ய பொலிஸ் துறை உட்­பட சகல அரச துறை­க­ளிலும் இயன்­ற­வ­ரையில் கணி­ச­மா­னளவு முஸ்­லிம்கள் இணைந்து கொள்ள வேண்டும். அப்­போது தனிக்­காட்டு ராஜா­வா­க­வி­ருந்து பேரி­னத்­தோரால் பாகு­பா­டு­ காட்ட வாய்ப்­பின்றிப் போகும்.

முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்ட, முஸ்லிம் வர்த்­தக கடைகள் நாச­மாக்­கப்­பட்ட வழக்­குகள் தொட­ரப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிற போதி­லும் முஸ்லிம் தரப்­புக்கு திருப்­தி­யான தீர்­வுகள் கிடைப்­ப­தா­க­வும தெரி­ய­வில்லை. இதனால் முஸ்லிம் விரோத இன­வா­தி­களின் கை மேலும் ஓங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. பொலி­ஸாரால் பேரின குற்­ற­வா­ளிகள் தந்­தி­ரோ­பா­ய­மாக காப்­பாற்­றப்­ப­டு­கின்­றனர். இதற்கு அர­சியல் மேல் மட்ட கரங்­களும் உறு­துணை புரி­வ­தா­கவும் தக­வல்கள் கசி­கின்­றன.

இத்­த­கைய பின்­ன­ணி­க­ளி­லேதான் மியன்மார் அக­திகள் விட­யத்­திலும் பேரின கடும் போக்­கா­ளர்கள் கண்­மூ­டித்­த­ன­மாக மூக்கை நுழைத்­தனர். இப்­போது மூக்கை உடைத்துக் கொண்­டுள்­ள­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­களே தென்­ப­டு­கின்­றன. பின்னர் என்­ன­வாகும் என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் அவ­தா­னிக்க வேண்டும். ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான ஆணை­ய­கமும் இந்த இடத்தில் உன்­னிப்­பாக இருப்­ப­தாலும் இந்த அடா­வ­டித்­த­னங்கள் சர்­வ­தேசம் வரை­யிலும் ஊடு­ரு­வப்­பட்­டுள்­ள­தாலும் அரசும் நீதித்­து­றையும் விழிப்­ப­டையும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆரம்­பத்தில் பொலிஸார் பக்­கச்­சார்­பாக நடந்து கொண்ட போதிலும் இப்­போது பொலிஸ் துறையும் இந்த விட­யத்தில் உசார் அடைந்­தி­ருப்­பதை உணர முடி­கி­றது.

கல்­கி­சையில் மியன்மார் அக­திகள் தங்­கிய விடு­தியின் முன் குழப்பம் விளை­வித்தோர் காணொளி காட்­சியை மைய­மாக வைத்து கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அவை மேலும் தொடர்­கின்­றன. குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்டம் உரிய முறையில் பிர­யோ­கிக்­கப்­படும் என்று அரசும் பொலிஸ் தலை­மை­ய­கமும் உறு­தி­ய­ளித்­துள்­ளன.

மியன்மார் அக­தி­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டப் பேர­ணியை வழி நடத்­தி­ய­வர்­களில் டான் பிரி­யசாத் என்­பவர் மிகவும் முக்­கி­ய­மா­னவர். நாட்டின் அமைதி, இனங்­க­ளுக்கு இடை­யோன நல்­லி­ணக்­கத்­துக்கு ஊறு­வி­ளை­வித்­தமை விளை­விக்கத் தூண்­டி­யமை போன்ற குற்­றச்­சாட்டின் பெயரில் டான் பிரி­ய­சாத்­துக்கு எதி­ராக நீதி­மன்ற வழக்­குகள் இருக்­கின்­றன. அத்­துடன் நீதி­மன்ற உத்­த­ரவில் பிணையில் கூட விடப்­பட்­டுள்­ளவர். அப்­ப­டி­யி­ருந்தும் இவரும் ஒரு சில கடும் போக்கு பிக்­கு­களைப் போன்று நீதி­மன்ற நிபந்­த­னை­களை ஒரு துட்­டுக்கும் மதிக்­கா­த­வ­ரா­கவே நடந்து வந்­துள்ளார். இப்­போது மரங்­கொத்தி வாழையில் சிக்கிக் கொண்­ட­வ­ாறான நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது. இதுவும் எவ்­வ­ளவு தூரம் சாத்­தி­ய­மாகும் என்­ப­தையும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

கல்­கிசை அசம்­பா­விதம் ஏற்­பட்டு நான்கு தினங்­களின் பின் அதா­வது அக்­டோபர் 1 ஆம் திகதி டான், அவ­ரது சகாக்­க­ளான ஜனித், சிந்­தக, கயான் உள்­ளிட்ட ஏழுபேர் கைது செய்­யப்­பட்­டனர். ஏற்­க­னவே சட்டம் சரி­யாக கையா­ளப்­பட்­டி­ருப்பின் இந்த ஆர்ப்­பாட்­டத்தை வழி நடத்­தவே இவர்கள் முன்­வந்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

ஏற்­க­னவே பல சந்­தர்ப்­பங்­களில் டான் டாம்­பீ­க­மா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக துள்ளிக் குதித்துக் கொண்­டதை பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன. பொலிஸார் பின்­ன­ணி­யி­லி­ருந்து இவ­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தா­லேதான் இவரும் தைரி­ய­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருந்தார் என்றால் மிகை­யா­காது. இவ­ருக்குப் பின்னால் பெரும் கரம் ஒன்று இருப்­ப­தா­கவே இவ­ரது நட­வ­டிக்­கைகள் பிர­தி­ப­லித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. 

2016 நவம்பர் 7 ஆம் திகதி டான் தலை­மை­யி­லான குழு­வினர் கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­பாக நடத்­திய ஆர்ப்­பாட்­டத்­தின்­போது, அவர் இஸ்­லா­மிய சம­யத்தை இழி­வாகப் பேசி­ய­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக போர் தொடுப்­ப­தா­கவும் முஸ்­லிம்­களைக் கொன்­றொ­ழிப்­ப­தா­கவும் ஆவேச வார்த்­தை­களை அள்ளிக் கொட்­டினார். இந்த உரையும் ஆர்ப்­பாட்டக் காட்­சி­களும் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டு­மி­ருந்­தன. இந்த ஆதா­ரங்­களை முன்­வைத்து முஸ்லிம் தரப்பால் கோட்டை நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட பீ/ 3720 ஆம் இலக்க வழக்கில் 2016 டிசம்பர், 2 ஆம் திகதி நிபந்­த­னை­யு­ட­னான பிணையில் விடு­விக்­கப்­பட்டார். கோட்டை நீதிவான் விடுத்­துள்ள நிபந்­த­னையில் இதன் பின்னர் இனங்­க­ளுக்­கி­டையே அமை­திக்குப் பங்கம் விளை­விக்கும் விதத்தில் செயல்­பட்டால் பிணை இரத்துச் செய்­யப்­பட்டு மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­படும் என அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறிது காலம் அமை­தி­யாக இருந்தார். அப்­போது பௌத்த விகா­ரை­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களைத் திரட்டிக் கொடுப்­பதில் ஈடு­பட்டார். பின்னர் பிணை நிபந்­த­னையை முறிக்கும் விதத்தில் மீண்டும் இறங்­கினார்.

ஆகஸ்ட் 9 ஆம் திகதி முஸ்லிம் வீடொன்­றுக்குள் இவர் நான்கு பேர் அடங்­கிய குழு­வொன்­றுடன் நுழைந்து அச்­சு­றுத்தல் விடுத்தும் அட்­ட­காசம் புரிந்தார். சிங்­க­ள­வர்­களை மலட்டுத் தன்­மை­யுள்­ள­வர்­க­ளாக்கும் பால் வகை­யொன்று தயா­ரிக்கப்­ப­டு­வ­தாகப் போலிக் குற்­றச்­சாட்­டொன்றை சுமத்­தி­ய­வ­ராக குறித்த வீட்டில் காணொளி காட்­சி­களும் பதிவு செய்­துள்ளார். 

இது குறித்து மேற்­படி வீட்டுத் தலை­மை­யாளி கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். அதில்,
“டான் பிரி­யசாத் உள்­ளிட்ட குழு­வினர் தாம் ஹிரு, சீ.ஐ.டி. யினர் என்று கூறி­ய­வாறு எனது வீட்­டுக்குள் பல­வந்­த­மாக நுழைந்­துள்­ளனர். அப்­போது அங்கு எனது இளைய மகனும் மகளும் மாத்­தி­ரமே வீட்டில் இருந்­துள்­ளனர். இவர்கள் எனது இரு பிள்­ளை­க­ளையும் ஒரு­புறம் தள்­ளி­விட்டு வீட்டின் உட்­ப­கு­தி­களை காணொளி பதிவு செய்­துள்­ளனர். இவர்­க­ளுடன் எனது அயல் வீட்டைச் சேர்ந்த சந்­தியா என்ற பெண்ணும் அவ­ரது மகனும் வந்­தி­ருந்­தனர். இவர்கள் இரு­வரும் எனது இரு பிள்­ளை­களும் வீட்டை விட்டும் வெளியே செல்­லா­த­வாறு கதவு, ஜன்­னல்­களை அடைத்து தடை செய்­துள்ளனர். மகளை அச்­சு­றுத்­தியும் தொல்லை கொடுத்தும் கேள்­வி­களைத் தொடுத்­துள்­ளனர். நான் வீட்­டுக்கு வந்­த­வுடன் எனது மகள் ஓடி வந்து நடந்த விப­ரங்­களை அழு­த­வாறு கூறினாள். அப்­போது ஹிரு சீ.ஐ.டி. என்று கூறிய குழு­வினர் சென்று விட்­டனர். பின்னர் சந்­தியா என்ற பெண் கூச்­ச­லிட்டு சனத்தை ஒன்று திரட்­டினார். எம்மை வீட்டை விட்டும் வெளியே வரும்­ப­டியும் எம்மை வெட்ட வேண்டும் என்றும் திரண்ட கூட்­டத்­தினர் சத்­த­மிட்­டனர். உடனே நான் 119 க்கு அழைப்பு விடுத்தேன். எனது வீட்டின் உட்­ப­கு­தி­களை வீடியோ செய்த டான் அக்­காட்­சி­களை இணையத் தளத்தில் பதி­வேற்றம் செய்­தி­ருந்தார்” இவ்­வாறு அவர் பொலிஸ் முறைப்­பாட்டில் பதிவு செய்­துள்ளார்.

இந்த முறைப்­பாட்­டையும் கூட பொலிஸார் டான் மீது குற்றம் சுமத்­தா­த­வாறே நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இதனால் டான் பிணை ஒப்­பந்­தத்தை முறித்­த­வ­ராகக் காணப்­ப­ட­வில்லை. காரணம் டான் பல­வந்­த­மாக வீட்­டினுள் பிர­வே­சித்­தமை, குறித்த வீட்டில் விஷம் கலந்த பால் மக்­க­ளுக்கு பருகக் கொடுத்­தமை குறித்த குற்றச்சாட்டு என்று வேண்­டு­மென்றே பொலிஸார் இரண்டையும் ஒரே வழக்­காக பதிவு செய்தே மன்றில் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். எனவே இதனைத் தனித் தனி­யாக இரு வழக்­கு­க­ளாக முன்­வைக்­கும்­படி நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இந்த வழக்கு நடந்த தினத்­திலும் நீதி­மன்ற வளவில் வைத்து டான் பிரி­யசாத் குறித்த வழக்­கா­ளிகள் மீது அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.
மேற்­படி வழக்குத் தொடர்ந்­த­வரின் மைத்­துனர் கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் இது குறித்து மற்­றொரு முறைப்­பாட்டை பதிவு செய்­துள்ளார். அதில்,“ஆகஸ்ட் 11 ஆம் திகதி நான் எனது மைத்­து­ன­ருடன் நீதி­மன்­றத்­துக்கு சென்­றி­ருந்தேன். அப்­போது எனது சகோ­த­ரியின் மக­னுக்கு டான் பிரி­யசாத் அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார். அத்­துடன் அங்­கி­ருந்த அவ­ரது ஆட்கள் இவர்­களைக் கொல்ல வேண்டும் என்று திட்­டு­வ­தையும் நான் செவி­யுற்றேன். மேலும் டான் என்­னையும் திட்­டினார். நீதி­மன்ற தீர்ப்பின் பின்னர் நாம் வெளியே வரும்­போது நீதி­மன்­றத்தில் வைத்து சோன­க­ரா­கிய உங்­க­ளுக்கு நஞ்சூட்­டப்­பட்ட பாலை ஊட்­டித்தான் கழுத்தை வெட்ட வேண்டும் என்று அச்­சு­றுத்தல் விடுத்தான்….” என்று முறைப்­பாட்டில் பதிவு செய்­துள்ளார்.

பின்னர் டான் பிரி­யசாத், நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்­ட­தாக போலி­யா­ன­தொரு தீர்ப்பை தனது முக­நூலில் அன்று மாலையில் பதி­வேற்றம் செய்­தி­ருந்தார். அதில் “இன்று முதல் முஸ்­லிம்கள் சிங்­கள மக்­க­ளுக்கு எந்த வகை உணவு, பானங்­க­ளையும் வழங்­கக்­கூ­டாது என்று நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது” என்று குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் நீதி­மன்­றத்தில் வழங்­கப்­பட்­டுள்ள தீர்ப்போ முஸ்லிம் தரப்பு குற்­ற­மி­ழைத்­தி­ருப்பின் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு வழக்கும் டான் பிரி­யசாத் குற்றம் புரிந்­தி­ருந்தால் பிறி­தொரு வழக்­கு­மாக இரு­வேறு வழக்­கு­களை நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கும்­ப­டியே நீதிவான் பொலி­ஸா­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். இவ்­வா­றுதான் அந்தத் தீர்ப்பும் அமைந்­தி­ருந்­தது.

மேற்­படி இரு முறைப்­பா­டுகள் குறித்தும் பொலிஸார் எத்­த­கைய நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. இரண்டு முறைப்­பா­டு­க­ளிலும் டான் பிரி­யசாத் பீ/ 3720 வழக்குத் தீர்ப்பில் வழங்­கப்­பட்­டுள்ள பிணை நிபந்­த­னையை முறித்­தி­ருப்­பது நன்கு தெளி­வா­கி­றது. அத்­துடன் குறித்த தீர்ப்பின் பிர­தி­யொன்றும் முறைப்­பாட்­டுடன் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் பிணை நிபந்­தனை மீறப்­பட்­ட­தற்கு எதி­ராக பொலிஸார் செயற்­படத் தவ­றி­யுள்­ளனர். எதுவும் தெரி­யா­த­ சிறு பிள்­ளைகள் மாதிரி பொலிஸார் நடந்து கொண்­டுள்­ளனர். இவ்­வாறு டான் காப்­பாற்­றப்­ப­டு­வதால் ஆகஸ்ட் 12 ஆம் திகதி அவரால் ஒழுங்கு செய்­யப்­பட்ட கூட்டம் ஒன்றில், “இது பௌத்த நாடு, இங்கு பௌத்த பிரித் ஓது­வதைத் தவிர்த்து வேறு எத­னையும் செய்­யக்­கூ­டாது” என்று முஸ்லிம் பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு எதி­ரா­கவும் உரை நிகழ்த்­தி­யுள்ளார். இது விட­ய­மா­கவும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி டான் பிரி­ய­சாத்­துக்கு எதி­ராக முறைப்­பாடு எழுந்­துள்­ளது. 

பொலிஸார் இவரைக் காப்­பாற்­று­வதால் முகநூல், இணை­யத்­த­ளங்கள் ஊடாக இவ­ரது அட்­ட­காசம் தொடர்ந்து கொண்டே வந்­தது.
ரோஹிங்ய முஸ்­லி­ம­்க­ளுக்கு எதி­ராக மியன்­மாரில் இடம்­பெற்­று­வரும் வன்­மு­றை­க­ளுக்கு வாழ்த்­துகள் தெரி­வித்து டான் செப்­டெம்பர் 9 ஆம் திகதி முக­நூலில் தகவல் வெளி­யிட்­டி­ருந்தார். தொடர்ந்து செப்­டெம்பர் 17 ஆம் திகதி கொழும்பு லிப்டன் சதுக்­கத்தில் மியன்மார் நாட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து பேர­ணி­யொன்றை நடத்­தினார். அப்­போதும் முஸ்­லிம்­க­ளுக்கும்  இஸ்­லாத்­துக்கும் எதி­ரா­கவும் கோஷங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. 

அத்­துடன் பஸ் வண்­டி­களில் பய­ணிப்போர் மீதும் தாக்­குதல் நடத்­தி­யு­முள்ளார். இத்­த­கைய செயற்­பா­டுகள் தொடரப் போவ­தா­கவும் முக­நூலில் சவால் விடுத்­தி­ருந்தார். 

இந்­நி­லையில், பிணை நிபந்­த­னையை செயற்­ப­டுத்­தும்­ப­டியும் நீதி­மன்றம் பல­முறை பொலி­ஸா­ரிடம் ஆலோ­சனை வழங்­கியும் பொலிஸார் டானைக் காப்­பாற்­று­வ­தி­லேயே கண்­ணாக இருந்­தனர்.

இப்­போது வெள்ளம் கழுத்­த­ளவு வந்த பிற­குதான் செயலில் இறங்­கி­யி­ருக்­கி­றார்கள். நல்­ல­வேளை தலைக்கு மேலால் போயி­ருந்தால் நிலைமை என்­ன­வா­கி­யி­ருக்கும். டான் மாத்­தி­ர­மல்ல, இவர் போன்று நாட்­டிலே இன­வாதச் செயற்­பா­டு­க­ளி­லேயே மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு­வரும் அமைப்­புகள் பிக்­கு­மார்கள் விட­யத்­திலும் சட்­டமும் ஒழுங்கும் நிலை நாட்­டப்­பட வேண்டும். அப்­போ­துதான் இந்­நாட்டில் சிறு­பான்­மை­யினர் நிம்­ம­தி­யாக வாழலாம். நாட்டில் அனைத்து மக்­களும் மகிழ்ச்­சி­யாக வாழும் சூழல் உரு­வாகும். நாடும் சுபீட்­சத்தின் பக்கம் வீறு நடை போடும்.

நாட்டில் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு எதி­ராக பேரின கடும் போக்­கா­ளர்­களால் அவ்­வப்­போது முடுக்கி விடப்­படும் அடா­வ­டித்­த­னங்கள் முடக்கி விட சட்டம் நிலை நாட்­டப்­ப­டு­மானால் இன­வாதம் அடி­யோடு அடங்கிப் போகும்.

எனவே சட்­டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், சட்­டமும் ஒழுங்கும் அமைச்சர், நீதி அமைச்சர், பிர­தமர், ஜனா­தி­பதி அனை­வரும் பொறுப்­பு­தா­ரி­களே! இவர்கள் கட­மை­யு­ணர்­வோடு செயல்­ப­டு­வார்­க­ளே­யானால் நாட்டில் அரா­ஜகம் தலை­தூக்க வாய்ப்பே இருக்­காது.
ரோஹி­ங்ய முஸ்லிம் அக­தி­க­ளுக்கு எதி­ராக செயல்­பட்டோர் தயவு தாட்­சண்­ய­மின்றி தண்­டிக்­கப்­ப­டு­வார்­க­ளே­யானால், அது எல்­லோ­ருக்கும் பாட­மாக அமையும். நாடும் அவப் பெய­ரி­லி­ருந்து காப்­பாற்­றப்­படும். இதன் பின்­ன­ரா­வது இன­வாத கடும் போக்­கா­ளர்­களும் அடங்கிப் போவார்கள். நாட்டில் மனி­தா­பி­மானம் தழைக்க வழி­கோலும். கடந்த காலங்­களில் இடம்­பெற்ற பார­பட்­ச­மான சம்பவங்­களைப் பாட­மாகக் கொண்டு இதன் பின்­ன­ரா­வது அப்­ப­டி­யான நிலைகள் உரு­வா­கா­தி­ருக்க வேண்டும். அதா­வது மீரா­வோடை முஸ்லிம் குடி­யிப்புப் பகு­திக்குள் புகுந்து அங்­குள்ள முஸ்லிம் வீடு­களைத் தாக்­கியும் முஸ்­லிம்­களை அச்­சு­றுத்­தியும் அட்­ட­காசம் புரிந்த சும­ன­ரத்ன தேர­ருக்கும் அவ­ரது குழு­வி­ன­ருக்கும் நட­வ­டிக்­கை­யெ­டுக்­காது பொலிஸார் பார­பட்­ச­மா­கவே நடந்து கொண்­டனர்.

தேரர் நீதி­மன்ற உத்­த­ரவுப் பத்­தி­ரத்­தையும் கிழித்­தெ­றிந்து ஆவே­ச­மாக செயற்­பட்ட நிலை­யிலும் அங்கும் சட்டம் செயல்­ப­ட­வில்லை. 
இவற்­றுக்கு மேலாக ஞான­சார தேரர் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த வழக்கு, குர்­ஆனை இழி­வு­ப­டுத்­திய வழக்கு உள்­ளிட்ட குற்றச் செயல்­களில் பிணை நிபந்­த­னையில் விடு­விக்­கப்­பட்டு வழக்­குகள் தொடர்ந்த வண்ணம் உள்­ளன. இந் நிலை­யிலும் அவர் தொடர்ந்தும் பல சந்­தர்ப்­பங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ராக வெறுப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களை நிகழ்த்தி வந்த நிலையில், அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டில் பொலிஸ் கைதி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக சில தினங்கள் தலை­ம­றை­வாக இருந்தார். பின்னர் பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில் பொலிஸில் சர­ண­டைந்தார். இதில் ஆச்­ச­ரியம் என்னவென்றால் பொலிஸார் இவருக்கு எதிராக முன்னர் சமர்ப்பித்த பீ அறிக்கையை மாற்றி அவரது குற்றச் செயல்களை இலகுவாக்கியிருந்த சம்பவமும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆவேச உணர்வையும் ஏற்படுத்தியிருந்தமை மறப்பதற்கில்லை. இவ்வாறு பொலிஸார் பேரினத்தவர் விடயத்தில் பாரபட்சமாகவே நடந்து வருகின்றனர். இது பல்லின மக்கள் வாழும் நாடொன்றுக்கு அழகில்லை. அத்துடன் நாட்டின் இன நல்லிணக்கத்துக்கும் சிறுபான்மையினரின் நம்பிக்கைக்கும் பாரிய அடியாகவே அமைகிறது.

இதேபோன்றே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பேரினத்தவர்களும் முஸ்லிம் தரப்பினரும் பரபஸ்பரம் முகநூல் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்டி தந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் இளம் வாலிபர் ஒருவர் பாரதூரம் அறியாது புத்தரை அவமதிக்கும் வசனங்களை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். இதனால் ஆத்திரம கொண்ட பேரின கடும் போக்காளர் தந்துறைப் பகுதியிலுள்ள 9 முஸ்லிம் வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் வாலிபனும் முஸ்லிம் வீடுகளைத் தாக்கிய இரு சிங்கள இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சிங்கள இளைஞர் இருவரும் 14 நாட்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் குறித்த முஸ்லிம் வாலிபனோ 88 நாட்கள் விளக்கமறியலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்னரே கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு ஆண்டிக்கொரு நீதியும் அரசனுக்கொரு நீதியும் என்ற நிலை அரங்கேறுவதை பல சந்தர்ப்பங்களிலும் அனுபவித்து வருகிறோம்.

ரோஹிங்ய விவ­கா­ரத்தில் பாடம் படித்த பின்­ன­ரா­வது இப்­பா­ர­பட்­சங்­க­ளுக்கு முடிவு காணப்­ப­டுமா? அதன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு விடிவு கிடைக்குமா?