Verified Web

பொது பல சேனா­வுடன் முஸ்லிம் தரப்பு பேச்சு

2017-10-16 03:50:36 ARA.Fareel

சந்­தே­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிப்பு 
வழக்­குகள் பற்றி ஆரா­யப்­ப­ட­வில்லை

ஏ.ஆர்.ஏ.பரீல்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர்  கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் முஸ்லிம் சிவில் தலை­மை­க­ளுக்­கு­மி­டையில் இது­வரை இரு கட்டப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் மூன்றாம் கட்டப் பேச்­சு­வார்த்தை விரைவில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் தெரி­விக்­கின்­றன.

இப் பேச்­சு­வார்த்­தை­யா­னது முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும் இஸ்லாம் தொடர்­பா­கவும் பொது பல சேனா அமைப்பு கொண்­டுள்ள சந்­தே­கங்­களை நிவர்த்­திக்கும் நோக்­கி­லேயே இடம்­பெ­று­வ­தா­கவும் முஸ்­லிம்­களால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்­கு­களை வாபஸ் பெறு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை அல்ல என்றும் இப் பேச்­சுக்­களில் ஈடு­பட்­டுள்ள தரப்­பினர் 'விடி­வெள்ளி'யிடம் உறு­திப்­ப­டுத்­தினர்.

குறித்த பேச்­சு­வார்த்­தை­களில் தாம் பங்­கு­பற்­றி­யதை பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரும் அவ்­வ­மைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கேயும் உறு­திப்­ப­டுத்­தினர். அதே­போன்று இவ்­வா­றா­ன­தொரு பேச்­சு­வார்த்­தையில் தமது பிர­தி­நி­திகள் பங்­கு­பற்­றி­ய­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகிய அமைப்­பு­களும் தெரி­வித்­துள்­ளன. 

இப் பேச்­சு­வார்த்­தையில் பங்கேற்ற தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளிக்­கையில், பேச்­சு­வார்த்­தைகள் நீதி­மன்­றங்­களில் ஞான­சா­ர­தே­ர­ருக்கு எதி­ராக முஸ்­லிம்­களால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்­கு­களை வாபஸ் பெற்றுக் கொள்­வது தொடர்பில் நடை­பெ­ற­வில்லை. சமூக வலைத்­த­ளங்கள், ஞான­சா­ர­ருக்கு எதி­ரான வழக்­கு­களை வாபஸ் பெறு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­று­வ­ரு­வ­தாக தவ­றான செய்­தி­களைப் பரப்பி வரு­கின்­றன.

பேச்­சு­வார்த்­தைகள் பொது­ப­ல­சேனா அமைப்பு இஸ்­லாத்தின் மீதும் குர்ஆன், ஹதீஸ் மீதும் கொண்­டுள்ள தவ­றான கருத்­துக்கள் மற்றும் சந்­தே­கங்­களை நீக்­கு­வ­தற்­கா­கவே நடாத்­தப்­பட்­டன. ‘அல் தக்­கியா’ பற்றி ஞான­சார தேர­ருக்கு பேச்­சு­வார்த்­தையில் கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தியால் விரி­வான விளக்கம் அளிக்­கப்­பட்­டது. 

நாம் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்­கு­களை வாபஸ் பெற்றுக் கொள்­வது பற்றிப் பேச­வில்லை. அளுத்­கம சம்­ப­வத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். நாட்டில் தொடர்ந்து இடம்­பெற்­று­வரும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள் தொடர்பில் நீதி வழங்­கப்­பட வேண்டும். 

ஞான­சார தேரரின் பின்­ன­ணி­யி­லேயே சிங்­ஹலே போன்ற இன­வாத அமைப்­புகள் உரு­வா­கின. வழக்­கு­களை வாபஸ் பெற்று ஞான­சார தேரரை பாது­காக்க முயற்­சிப்­ப­தென்றால் அது முஸ்லிம் சமூ­கத்­துக்குச் செய்யும் துரோ­க­மாகும். 

நானும் மேலும் பலரும் அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்ளோம். நான் வழக்­கினை  வாபஸ் பெற்­றுக்­கொள்­ள­மாட்டேன். முஸ்­லிம்கள் எவரும் வாபஸ் பெற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள். நாம் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­களை திரி­பு­ப­டுத்தி ஒரு­சில மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு முஸ்­லிம்கள் அர­சி­யலில் சுய­லாபம் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். ஏனைய முஸ்­லிம்கள் எமது பேச்­சு­வார்த்­தை­களை ஆத­ரிக்­கின்­றனர். எமது பேச்­சு­வார்த்­தை­களை எதிர்ப்­ப­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தை குழப்ப முயற்­சிக்­கின்­றனர். 

குர்ஆன் மற்றும் ஹதீஸில் ஞான­சார தேர­ருக்கு மயக்­க­மான விட­யங்­களில் தெளி­வு­களை வழங்கி இருக்­கிறோம். அந்தத் தெளி­வு­களை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு குர்ஆன், ஹதீஸ், அல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) பற்றி பேச வேண்டாம், விமர்­சிக்க வேண்டாம் என்று ஞான­சார தேரரை கோரி­யி­ருக்­கிறோம். 

நாங்கள் ஞான­சார தேர­ருடன் இர­க­சியப் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வ­தா­கவும் அவ­ருக்கு எதி­ராக எம்மால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை வாபஸ் பெற்­றுக்­கொள்ளப் போவ­தா­கவும் தவ­றான, பொய்­யான கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­வதை நாம் கண்­டிக்­கிறோம். 
நான் ஒரு­போதும் ஞான­சார தேரரை பாது­காக்க முயற்­சிக்­க­வில்லை. ஞான­சார தேர­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் என்­னுடன் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், உப தலைவர் ஹில்மி அஹமட், இஸ்­லா­மிய பிர­சா­ரகர் தஹ்லான் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­யாக மௌலவி பாஸில்­பாரூக் ஆகியோர் கலந்து கொண்­டனர் என்றார். 

பொதுபல சேனா

நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் தொடர்பில் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் மற்றும் நிறே­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே ஆகி­யோ­ரிடம் விளக்கம் கோரி­ய­போது பேச்­சு­வார்த்­தைகள் தொடர்­பான விப­ரங்­களை முஸ்லிம் தரப்­பி­ன­ரி­டமே கேட்­ட­றிந்து கொள்­ளு­மாறு ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்­தனர்.

ஜம்­இய்­யதுல் உலமா

இதே­வேளை இச் சந்­திப்­புகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

 சமூக வலைத்­த­ளங்­களில் 'வழக்­கு­களை வாபஸ் பெற்று ஞான­சார தேரரை காப்­பாற்ற முயற்சி' என்ற செய்தி பரவி வரு­கின்­றது. இதில் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்­கு­களை வாபஸ் வாங்­கு­மாறு ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீ­னிடம் வேண்­டி­ய­தாக கூறப்­பட்­டுள்ள செய்தி உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். உண்­மைக்கு புறம்­பான இவ்­வா­றான செய்­தி­களை எழு­து­கின்­ற­வர்­களும் பரப்­பு­ப­வர்­களும் அல்­லாஹ்வை பயந்து கொள்­ள­வேண்டும்.

மேற்­படி விடயம் சம்­பந்­த­மாக பின்­வரும் விட­யத்தை அகில இகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அனை­வ­ருக்கும் அறி­யத்­தர விரும்­பு­கின்­றது.

இலங்­கையில் சக­வாழ்வை கட்­டி­யெ­ழுப்ப அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா எடுத்­துள்ள முயற்­சிகள் நாம் அறிந்­ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்­இய்யா வெளி­யிட்ட சக­வாழ்வு பிர­க­டனம் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்­றிய தெளிவு பிற மதத்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். இஸ்லாம் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்கள் களை­யப்­பட வேண்டும், சத்­தியம் அனை­வ­ருக்கும் போய்ச்­சேர வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே ஜம்­இய்யா செயற்­ப­டு­கின்­றது. அதற்­கான முயற்­சி­க­ளா­கவே ஜம்­இய்­யாவின் சமாஜ சங்­வாத புத்­தக வெளி­யீடும் பிற மதத் தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்­பு­களும் காணப்­ப­டு­கின்­றன.

ஞான­சார தேர­ரோடு பேச்­சு­வார்த்தை நடாத்த வேண்டும் என்று ஜம்­இய்­யாவோ ஜம்­இய்­யாவின் தலை­வரோ யாரி­டமும் கேட்டுக் கொள்­ள­வில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்­றிய சில சந்­தே­கங்கள் பற்றி கலந்­து­ரை­யாடி முஸ்லிம்­க­ளு­ட­னான தனது பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண விரும்­பு­வ­தா­கவும் அதற்­காக அவ­ருடன் சந்­திப்­பொன்று நடாத்­தப்­பட இருப்­ப­தா­கவும் கூறி அதில் உல­மாக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஜம்­இய்­யா­விடம் வேண்­டிக்­கொண்­டனர். 

இதன்­போது குறித்த இவ்­வி­ட­யத்தில் அனு­பவ­முள்ள சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் அவர்­க­ளையும் பிறி­தொரு சட்­டத்­த­ர­ணி­யையும் ஜம்­இய்­யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்­வி­ட­யத்தில் எவ்­வாறு நடந்து கொள்­ளலாம் என ஆலோ­சனை பெற்றார். அதன்­போது சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் குறித்த தேரரை சந்­திப்­பதில் பிரச்­சி­னை­யில்லை என்றும் தான் இச்­சந்­திப்பில் கலந்துகொள்ளப் போவ­தில்லை என்றும் ஞான­சார தேர­ரு­ட­னான வழக்­குகள் விட­யத்தில் அவர் நீதி­மன்­றத்­திலே தனது பிழையை ஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடு­பட மாட்டேன் என உறு­தி­ய­ளிக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்டார். பின்னர் குறித்த சந்­திப்பில் கலந்­து­கொள்ள அஷ்-ஷெய்க் பாஸில் பாரூக் அனுப்­பப்­பட்டார்.

அடுத்­தநாள் நடை­பெற்ற சந்­திப்பில் கலந்­து­கொண்ட அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், குறித்த தேரர் மீதான வழக்­குகள் பற்றி அங்கு கலந்­து­ரை­யா­ட­வில்லை என்­ப­தா­கவும் மாறாக அவ­ரிடம் காணப்­பட்ட இஸ்லாம் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்­க­ளுக்கு பதில் வழங்கும் வகை­யிலேயே சந்­திப்பு நடை­பெற்­ற­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தினார்.

இவ்­வி­டயம் ஜம்­இய்­யாவின் கடந்த நிறை­வேற்றுக் குழுக் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட போது, குறித்த தேரர் இஸ்­லாத்­திற்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக தான் முன்­வைத்த கருத்­து­க­ளுக்கு மன்­னிப்புக் கேட்டு, உண்­மையில் இஸ்லாம் பற்­றிய அவ­ரது தப்­ப­பிப்­பி­ரா­யங்­க­ளுக்கு தெளிவு பெற விரும்­பினால் அவ­ருடன் உரை­யா­டலை தொட­ரலாம் என்றும் அவ­ருக்கு எதி­ராக பதி­யப்­பட்­டுள்ள வழக்­குகள் சம்­பந்­த­மாக குறித்த சட்­டத்­த­ர­ணி­களே முடி­வெ­டுக்க வேண்டும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எனவே, சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­பட்டு வரும் குறித்த செய்தி உண்­மைக்கு புறம்­பா­ன­தாகும். பிழை­யான தக­வல்­களைப் பரப்பி மக்கள் மத்­தியில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதை தவிர்ந்து கொள்­ளு­மாறு சக­ல­ரையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது என அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் கவுன்சில்

பொது­ப­ல­சேனா அமைப்­புடன் பேசு­வ­தற்கு தமக்கு கிடைத்த வாய்ப்பை சரி­வர பயன்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் முஸ்­லிம்கள் தொடர்­பான அவர்­க­ளது சந்­தே­கங்­களை நிவர்த்­திக்­கவும் சம­காலப் பிரச்­சி­னைகள் குறித்து விரி­வாகக் கலந்­து­ரை­யா­டவும் முடிந்­த­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரி­வித்தார். 

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தே­ர­ருக்கும் முஸ்லிம் தரப்­புக்கும் இடையில் அண்­மையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். 

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் மீது முஸ்லிம் தரப்­பி­னரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்­கு­களை வாபஸ் பெற்­றுக்­கொள்­ளு­மாறு பேச்­சு­வார்த்­தை­யின்­போது கேட்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு நாம் கூற­வு­மில்லை 

நிபந்­த­னைகள் எது­வு­மில்­லா­மலே பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. இஸ்லாம் மார்க்கம் மற்றும் குர்ஆன், ஹதீஸ் பற்றி ஞான­சார தேரர் கொண்­டுள்ள தவ­றான கருத்­துக்­களை நீக்கி கொள்ளும் வகையில் தெளி­வு­களை வழங்­கினோம். சந்­தே­கங்­களைத் தீர்த்து வைத்தோம்.

முஸ்லிம் சமூகம் சம­கா­லத்தில் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிகள், தொல்­பொ­ருட்கள் அமைந்­துள்ள  பிர­தே­சங்­களில் வாழும் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கி வரும் சவால்கள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டினோம்.  

எந்தச் சந்­தர்ப்­ப­திலும் ஞான­சா­ர­தேரர் மீதான வழக்­குகள் தொடர்பில் பேசப்­ப­ட­வில்லை. இரண்டு கட்­டப் ­பேச்சுவார்த்­தைகள் நடத்­தி­யுள்ளோம். 3 ஆம் கட்டப் பேச்­சு­வார்த்­தை­யையும் விரைவில் நடாத்­த­வுள்ளோம். 

சமூ­க­வ­லைத்­த­ளங்கள் எமது பேச்­சு­வார்த்­தையை திரி­பு­ப­டுத்தி தவ­றான,பொய்­யான செய்­தி­களைப் பரப்பி வரு­கின்­றன என்றார். 

ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர்  சட்டத்­த­ரணி சிராஸ் நூர்தீன்

இதே­வேளை முஸ்­லிம்­களால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள எந்­த­வொரு வழக்கும் வாபஸ் பெறப்­ப­ட­வில்லை என்றும் எதிர்­கா­லத்தில் வாபஸ் பெறப்­ப­ட­மாட்­டாது எனவும்  ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்­துள்ளார்.

பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சா­ர­ருக்கு எதி­ரான வழக்­கு­களை ஒரு­போதும் வாபஸ் வாங்கப் போவ­தில்லை.
ஞான­சார தேர­ருடன் தொடர்­பு­டைய வழக்­கு­களை சட்­டமா அதி­பரே கையாள்­கிறார். முஸ்லிம் சமூகத்தின் நலன்களின் மீது அக்கறை கொண்ட ஒரு சட்டத்தரணியே நான். சட்டத்தரணி என்ற வகையில்  என்னால்கூட ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்க முடியாது.

முஸ்லிம் சமூகம் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையை காற்றில் பறக்கவிடும்படியாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் படியாகவோ எனது செயற்பாடுகள் ஒருபோதும் அமையாது. 

மேலும் இங்கு சகலரும் அறியவேண்டிய ஒருவிடயம் உள்ளது. அதாவது ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து, முஸ்லிம் சட்டத்தரணிகளாகிய நாம் தொடுத்த இந்த வழக்குகளினாலேயே,  ஞானசாரர் ஓரளவுக்கேனும் அமைதியாகவுள்ளார். இந்த வழக்குகளை நாம் தொடுத்திராவிட்டால், ஞானசாரரின் ஆட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

அத்துடன் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால், அவர் திருந்தி விடுவதற்கான எத்தகைய உத்தரவாதங்களும்  நம்மிடம் இல்லை. இந்த நிலையில் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குவது எந்தவகையில் நியாயம்?

எனவே ஞானசாரருக்கு எதிராக, நாம் தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கமாட்டோம் என்பதை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மிகுந்த பொறுப்புடனும், திட்டவட்டமாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.