Verified Web

ஹஜ் :அடுத்த வாரத்தில் விசாரணைக்கு அழைப்பு

2017-10-13 00:58:30 ARA.Fareel

32 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இவ்­வ­ருடம் இறுதி நேரத்தில் ஹஜ் கட­மையை மேற்­கொள்ள முடி­யா­மற்­போ­ன­மைக்கு கார­ண­மான மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்­களை அரச ஹஜ்­குழு அடுத்­த­வாரம் விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ளது.

இறுதி நேரத்தில் ஹஜ் கட­மையைத் தவ­ற­விட்ட 32 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களும் இலங்­கைக்கு மேல­தி­க­மாகக் கிடைத்த 600 கோட்­டா­வுக்குள் உள்­ள­டங்­கப்­பட்­ட­வர்­க­ளாகும். பாதிக்­கப்­பட்ட 32 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களும் ஹஜ் கட்­ட­ணங்­களை சம்­பந்­தப்­பட்ட மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்குச் செலுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் கருத்து தெரி­விக்­கையில் சம்­பந்­தப்­பட்ட மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்­களில் ஒரு முகவர் நிலைய உரி­மை­யாளர்  தொடர்ந்து சவுதி அரே­பி­யாவில் தங்­கி­யி­ருந்­த­மையே விசா­ர­ணையின் தாம­தத்­திற்குக் கார­ண­மாகும். குறிப்­பிட்ட முகவர் நிலைய உரி­மை­யாளர் இலங்கை திரும்பி விட்­ட­தாலே அடுத்த வாரம் விசா­ர­ணைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணையின் போது சம்­பந்­தப்­பட்ட ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் முக­வர்­க­ளுக்குச் செலுத்­தி­யுள்ள பணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்­தப்­படும். அப்­ப­ணத்தை மீளப்­பெற்று பாதிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் பற்றி கலந்­து­ரை­யா­டப்­படும்.

சம்­பந்­தப்­பட்ட மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் விசா­ர­ணையின் பின்பு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக ஓய்­வு­பெற்ற நீதி­பதி யு.எல்.மஜீடின் தலை­மை­யி­லான ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரிக்கும் விசா­ரணைக் குழுவின் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.

ஹஜ் பயணம் மேற்­கொண்ட ஹஜ்­ஜா­ஜிகள் முறைப்­பா­டுகள் ஏதும் சமர்ப்­பிக்க விரும்பின் எதிர்­வரும் 25 ஆம் திக­திக்கு முன்பு முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பிக்க முடியும். முறைப்­பா­டுகள் அடுத்­த­மாதம் 15 ஆம் திக­திக்குப் பின்பு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. என்­றாலும் இறுதி  நேரத்தில் ஹஜ் கட­மையை மேற்­கொள்ள முடி­யாமற் போன 32 பேரின் முறைப்­பா­டுகள் விரைவில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை குறிப்­பிட்ட 32 பேரி­னதும் வாக்கு மூலங்­களை அரச ஹஜ் குழு பதிவு செய்­துள்­ள­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து எழுத்­து­மூல முறைப்­பா­டு­க­ளையும் பெற்றுக் கொண்­டுள்­ளது. சம்­பந்­தப்­பட்ட 3 ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹஜ் முகவர்கள் மூலம் குறிப்பிட்ட 32 ஹஜ் பயணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ள தலா 2529 சவுதி ரியால்கள் முஅல்லிம் கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஹஜ் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.