Verified Web

ஜனவரியில் உள்ளூராட்சி மார்ச்சில் மாகாண தேர்தல்

2017-10-13 00:49:15 ARA.Fareel

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திலும்  மாகாண சபை­களின் தேர்தல் மார்ச் மாதத்­திலும் நடத்­தப்­படும். எதிர்­வரும் தேர்­தல்கள் அனைத்தும்  புதிய தேர்தல் முறை­மையின் கீழேயே  நடை­பெறும் என  மாகாண சபைகள்  மற்றும்  உள்­ளூ­ராட்சி  அமைச்சர் பைசர் முஸ்­தபா  தெரி­வித்தார். 

மாகா­ண­ச­பைகள்  மற்றும்  உள்­ளூ­ராட்சி அமைச்சின்  கேட்போர்  கூடத்தில்  நேற்று  முன்­தினம் புதன்­கி­ழமை நடை­பெற்ற  செய­ல­மர்வில்  கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு  கூறினார்.  செய­ல­மர்வில்  வெளி­நாட்டு தூத­ர­கங்­களின்  பிர­தி­நி­திகள் உள்­நாட்டு  மற்றும்  சர்­வ­தேச  அர­ச­சார்­பற்ற  நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள், தேர்தல்  கண்­கா­ணிப்­பா­ளர்கள்  என்போர்  கலந்து  கொண்­டி­ருந்­தனர். 

அமைச்சர்  பைசர் முஸ்­தபா தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,  புதிய தேர்தல் முறை­மூலம்   கிரா­மத்­துக்குப் பொறுப்­புக்­கூறும் தலை­மைத்­துவம் மற்றும்  அதி­க­மான பெண்  பிர­தி­நி­தித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் மூலம்  அர­சி­யலில் அர­சி­யலில்  குடும்ப  ஆதிக்கம்  இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ளது. வட்­டா­ர­முறை முறை மற்றும் விகி­தா­சார முறை­யுடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைமை  மக்­க­ளுக்குக் கிடைத்­துள்ள  வரப்­பி­ர­சா­த­மாகும். 

உள்­ளூ­ராட்சி  மன்­றங்­க­ளுக்கு  25%  பெண் பிர­தி­நி­தித்­துவம் மற்றும் மாகாண  சபை­க­ளுக்கு 25% பெண் பிர­தி­நி­தித்­துவம் பெற்றுக் கொள்ளும் வகையில்  சட்டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ, அமைச்­சர்­களோ, பிர­தேச அர­சியல்வாதி­களோ தமது மனைவி அல்­லது மகள்­மார்­களை உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் போட்­டி­யிடச் செய்­வதை நாம் எதிர்­பார்க்­க­வில்லை. நாங்கள் ஏனைய பெண்­க­ளுக்கு அவ­காசம் வழங்க வேண்டும். குடும்ப பெண் அங்­கத்­த­வர்­க­ளுக்கு தேர்­தலில் வாய்ப்­ப­ளிக்க வேண்டாம் என நான் அர­சியல் வாதி­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்­கிறேன். 

இன்று எமது நாட்டு அர­சி­யலில் பிரச்­சி­னை­யொன்று உள்­ளது. பெண்கள் பெண் அபேட்­சகர் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை. இது எமது நாட்­டி­லுள்ள பிரச்­சி­னை­யாகும். நாம் பெண்­களை நம்­பிக்­கை­யூட்ட வேண்டும். பெண்கள் தலை­மைத்­துவப் பொறுப்­பு­களை ஏற்க வேண்டும். 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமராக எம்மால் சிறிமாவோ பண்டார நாயக்கவை நியமிக்க முடியுமாயிருந்தது. இந்த இலக்கை நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது.  நாமே உலகில் முதல் பெண் பிரதமரை நியமித்தோம் என்றார்.