Verified Web

கரையோர மாவட்ட கோரிக்கை இடைக்கால அறிக்கையில் இல்லை

11 days ago ARA.Fareel

கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக கரை­யோர மாவட்டம் தேவை­யென ஒரு பிரே­ர­ணை­யாக முஸ்லிம் காங்­கிரஸ் புதிய அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தில் குழு­விடம் சமர்ப்­பித்­தி­ருந்­தது. ஆனால் அப்­பி­ரே­ரணை வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் நான் விளக்கம்  கேட்­டி­ருக்­கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர் வழங்கல் மற்றும் நக­ர­திட்­ட­மிடல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். 

நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ‘தேர்தல் திருத்­தங்­களும் இடைக்­கால அறிக்­கையும்’ எனும் தலைப்­பி­லான திறந்த கலந்­து­ரை­யா­டலில் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் ‘புதிய அர­சி­ய­ல­மைப்பில் வட­கி­ழக்கு இணைக்­கப்­ப­ட­போ­கி­றது, சமஷ்டி ஆட்சி வழங்­கப்­ப­டப்­போ­கி­றது என்று தெற்கு மக்கள் மத்­தியில் ஒரு பீதியை உரு­வாக்கும் நிலை­தோன்­றி­யுள்­ளது. இது­வரை சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான ஒரு தீர்வு வராத நிலையில், வட கிழக்கில் உள்ள முஸ்லிம், தமிழ் அர­சியல் வாதிகள் வட– கிழக்கு இணைப்பு தொடர்பில் கருத்­து­களை வெளி­யிட்டு வரு­கி­றார்கள் கிழக்கில் உள்ள அர­சியல்வாதிகள். நான் வட­கி­ழக்கு இணைப்பை எதிர்ப்­ப­தாக கூறு­கி­றார்கள்.

கிழக்­கி­லுள்ள அர­சியல்வாதிகள் வட– கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்­றத்தில் கைதூக்கி விட்­டது என்று குற்றம் சுமத்­து­கி­றார்கள். வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அலகு தேவை. முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு ஒரு பாரம்­ப­ரியம் இருக்­கி­றது. தனி­யான கொள்­கைகள் இருக்­கின்­றன. தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு குறுக்கே நிற்கும் ஒரு­வ­னாக நான் பார்க்­கப்­படத் தேவை­யில்லை. சும்மா இருக்கும் சங்கை ஊதிக்­கெ­டுக்க விரும்­ப­வில்லை. வடக்கு –கிழக்கை மைய­மாக வைத்து வங்­கு­ரோத்து அர­சியல் செய்ய விரும்­ப­வில்லை. முஸ்லிம் காங்­கிரஸ் இதனால் வாக்­குத்­தேட வேண்டும் என்­பதும் தவறு. 

வடக்கு, கிழக்கு இணைந்­தாலும் பிரிந்­தி­ருந்­தாலும் எமக்குத் தனி­அ­லகு தேவை. கிழக்கில் கரை­யோர மாவட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு அவ­சியம் என்­பதில் முஸ்லிம் காங்­கிரஸ் உறு­தி­யாக இருக்­கி­றது. பேரி­ன­வாதக் கட்­சிகள் இந்­நாட்டில் சிதறி வாழ்­கின்ற தமிழ், முஸ்லிம் மக்­களின் முதுகில் ஏறி அர­சியல் செய்யும் நிலைமை இன்று உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் திருத்­தச்­சட்ட மூலத்­துக்கு எதி­ராக உயர்­நீதி மன்றம் சென்று நாம் போரா­டி­யுள்ளோம். இன்று விஷயம் தெரி­யாமல் எதையும் புரிந்து கொள்­ளாமல் எம்­ம­வர்கள் குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள். 

சில விஷ­யங்­களைக் கூறி மக்­க­ளிடம் கை­தட்டு வாங்கும் வங்­கு­ரோத்து அர­சி­யலை நாங்கள் செய்ய விரும்­ப­வில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எதிரான கட்சியல்ல. நாங்கள் எதிரானவர்களுமல்லர். முஸ்லிம் சமூகம் நடுநிலைமையான சமூகம். குர்ஆனின்  போதனைகளுக்கேற்ப வாழும் சமூகம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாக நாம் இருப்பவர்களல்ல என்றார்.