Verified Web

முன்னாள் கான்ஸ்­ட­பிளை தேடி பொலிஸ் வலை­வீச்சு

13 days ago MFM.Fazeer

மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்­து­மீ­றல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட மேலும் இரு­வரை கைது செய்ய இரு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. 

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்ஸாவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் இந்த இரு தனிப்­ப­டை­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கிரு­லப்­பனை, பூர்­வா­ராம விகா­ரையின் அரம்­பே­பொல ரத­ன­சார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான, வாதுவைப் பகு­தியைச் சேர்ந்த பிரகீத் சானக குண­தி­லக ஆகி­யோரைக் கைது செய்­யவே இவ்­வாறு விஷேட பொலிஸ் படை அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இதில் பிரகீத் சானக்க குண­தி­ல­க­வுக்கு எதி­ராக பாணந்­து­றையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது  பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் பாணந்­துறை பாலிகா வித்­தி­யா­லயம் ஒன்றின் பெண் அதி­பரை அச்­சு­றுத்­தி­யமை  ஆகிய குற்­றச்­சாட்­டுகள் உள்­ள­தா­கவும் அது தொடர்பில் அவர் கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.
இந் நிலையில், குறித்த இரு­வரும் தற்­போது தமது இருப்­பி­டங்­களை விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தா­கவும் அவர்கள் தொடர்பில் எவ­ரேனும் தகவல் அறிந்தால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் நிசாந்த சொய்­ஸாவின் 0718591727 எனும் இலக்­கத்­துக்கு தகவல் தரு­மாறும் பொலிஸார் வேண்­டுகோள் விடுத்­தனர்.

அதன்­படி ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அத்­து­மீறல் தொடர்பில் இது­வரை ஒரு தேரர், பெண்­ணொ­ருவர் உள்­ளிட்ட 8 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்களில் ஒருவருக்கு பொலிஸ் பிணை அளிக்கப்பட்டுள்ளதுடன் தேரர், பெண் உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.