Verified Web

இலங்கையில் 728 வௌிநாட்டு அகதிகள்

2017-10-04 05:45:23 ARA.Fareel

மியன்மார் உட்­பட பல முஸ்லிம் நாடு­களைச் சேர்ந்த 728 பேர் அக­திகள் அந்­தஸ்தில் இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களில் உள்ளடங்கும் மியன்மார் முஸ்லிம் அக­தி­களை ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான - முக­வரகம் விரைவில் வேறோர் 3 ஆம் நாட்டில் புக­லிடம் அளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்ஹ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மைக்­ கா­ரி­யா­லயத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; இலங்­கையில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திக­தி­வரை அக­திகள் அந்­தஸ்தில் மொத்தம் 728 பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 113 ஆப்­கா­னிகள், 7 ஈரா­னி­யர்கள், 8 மாலை­தீவு நாட்­டவர், 35 மியன்மார் நாட்­டவர், 533 பாகிஸ்­தா­னி­யர்கள், 10 பலஸ்­தீ­னி­யர்கள், 1 சோமா­லியர், 14 சிரிய நாட்­டவர், 1 டியு­னி­சியர், 6 யெமன் நாட்­டவர் தங்­கி­யி­ருக்­கின்­றனர்.

1951 ஆம் ஆண்டின் அக­திகள் தொடர்­பான ஐ.நா பிர­க­ட­னத்தில் உடன்­ப­டிக்­கை­களில் இந்­தியா, பாகிஸ்தான் உட்­பட இலங்கை போன்ற நாடு­கள் கைச்­சாத்­தி­ட­வில்லை. அதனால் வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் அக­தி­க­ளுக்கு நாம் நிரந்­தர புக­லிடம் வழங்க கட­மைப்­ப­ட­வில்லை. ஆனால் அவ்­வாறு வந்­த­வர்­களை நாம் மனி­தா­பி­மா­னத்­துடன் நடத்த வேண்டும்.

இலங்­கையில்  UNHCR காரி­யா­லயம் இருக்­கி­றது. அக­தி­களை இந்­நி­று­வனம் வாழ்­விடம், உணவு, கல்வி, மற்றும் வச­தி­களை வழங்கி 3 ஆம் நாடொன்­றுக்கு அனுப்பி வைக்கும் வரை பரா­ம­ரிக்கும். அர­சியல் பழி­வாங்கல் போன்ற கார­ணங்­க­ளுக்­காக  அக­தி­க­ளாக  வந்­த­வர்கள் 3 ஆம் நாடொன்றில் குடி­யே­றப்­ப­டு­வார்கள். அந்த நாட்டின் விருப்­பத்தின் பேரிலே இது நடை­பெறும்.

இலங்­கைக்கு 2008, 2013 காலங்­க­ளிலும் அக­திகள் வந்­துள்­ளார்கள். 2008 இல் இலங்கை கடல் எல்­லைக்குள் பிர­வே­சித்த பங்­க­ளாதேஷ் அக­திகள் கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு பின்பு UNHCR  ஆல் அவர்­களை 3 ஆம் நாடொன்­றுக்கு அனுப்பி வைத்­தது.
இதே­போன்று 2013 இல் மேலும் சிலர் அக­தி­க­ளாக வந்­தனர். இவர்­களில் 138 பேர் பங்­க­ளா­தே­ஷத்­த­வர்கள், 32 பேர் மியன்மார் நாட்­டவர். அவர்­களும் தற்­கா­லி­க­மாக இலங்­கையில் தங்­க­வைக்­கப்­பட்டு அமெ­ரிக்கா, கனடா ஆகிய நாடு­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டனர். அந்­நா­டுகள் அவர்­களை ஏற்­றுக்­கொள்ள விருப்பம் தெரி­வித்­தி­ருந்­தன.

2017 இல் தென் இந்­தி­யா­வி­லி­ருந்து பட­கு­மூலம் வந்து இலங்கை கடல் எல்லையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் அகதிகளே தற்போது அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். சட்டத்தின்படி அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது. UNHCR அவர்கள் தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.