Verified Web

இன­வாத பிர­சாரம் செய்­வோ­ருக்கு எதி­ராக மேலும் பல முறைப்­பா­டுகள்

2017-09-27 08:33:11 Administrator

ஆர்.ஆர்.ரி. அமைப்பு நட­வ­டிக்கை
 
மும்­மான பாட­சாலை விளை­யாட்டு மைதான வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் கடந்த வாரம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.  எனினும் இவ்­வ­ழக்கு ஒக்­டோபர் மாதத்தில் இறுதி தீர்ப்­புக்­காக ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் சாத­க­மான முடி­வுகள் பெறப்­படும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் சிரேஷ்ட  சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்­துள்ளார். 

இதே­வேளை, ரோஹிங்ய முஸ்­லிம்கள் தொடர்­பிலும், அவர்கள் இலங்­கையில் அக­தி­க­ளாக வசிப்­பது தொடர்­பிலும் குரோ­தத்தை வளர்க்கும் வகையில் போலி­யான தக­வல்­களை கொண்டு சூழ்ச்சிமிக்க பிர­சா­ரங்­களை சமூக ஊட­கங்­களில் மேற்­கொண்ட வகையில் டான் பிரி­யசாத், அமித் வன­சிங்க, ராஜாங்­க­னயே சதா­ரத்ன ஹிமி, மஹாசன் பால­கயா அமைப்பின் அமித் வீர­சிங்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் 4 முறைப்­பா­டுகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

மேலும் அளுத்­கம கல­வ­ரத்­தின்­போது பலி­யான இரு முஸ்­லிம்­களின் மரண விசா­ரணை தொடர்­பான வழக்கு களுத்­துறை மாஜிஸ்ட்ரேட் நீதி­மன்றில் கடந்த 21 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போது சந்­தேக நபர்­களைக் கைது செய்ய தமக்கு மேலும் கால அவ­காசம் தேவைப்­ப­டு­வ­தாக கொழும்பு குற்­றப்­பி­ரிவு (சி.சி.டி) உத்­தி­யோ­கத்தர் கோரி­யதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் மாதத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

ஞான­சார தேர­ருக்கு எதி­ரான நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு கடந்த 21 ஆம் திகதி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போது  ஆர்.ஆர்.ரி. சட்­டத்­த­ர­ணி­களும் பிர­சன்­ன­மாகி நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அவ­தா­னித்­தனர். 

இதே­வேளை டான் பிரி­ய­சாத்­துக்கு எதி­ரான வழக்கு கடந்த 22 ஆம் திகதி கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதி­மன்றில் சட்­டமா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. பிணையில் இருந்த காலப்­ப­கு­தி­யிலும் சந்­தேக நபர் முன்னர் செய்த குற்­றத்­தையே செய்து வந்­த­தற்­கான எழுத்து மூல­மான ஆதா­ரங்கள் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டன. 

டான் பிரி­ய­சாத்­துக்கு எதி­ரான 6 பிந்­திய குற்­றச்­சாட்­டுக்­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. முறைப்­பா­டுகள் தாக்கல் செய்­யப்­பட்­டதன் பிர­திகள் 22.09.2017 அன்று நடை­பெற்ற இந்த வழக்­கிற்கு முன்­ன­தா­கவே உரிய பொலிஸ் அதி­கா­ரி­க­ளிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.
இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு  பொலி­ஸா­ருக்கு கட்­ட­ளை­யிட்­ட­துடன் பிணை வழங்­கு­வதை தடை செய்யும் வித­மாக பிணை வழங்கல் சட்­டத்தின் கீழ் முறைப்­பாடு ஒன்றை  பதி­வு­செய்­யு­மாறும் கோரப்­பட்­டுள்­ளது.

டான் பிரி­யசாத் முழு­நாட்­டுக்கும் அச்­சு­றுத்­த­லாக விளங்கும் விதம் பற்­றியும் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்பிப் பிழைக்கும் விதம் பற்றியும் நீதிமன்றுக்கு தாம் எடுத்துக் கூறியதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். 

டான் பிரியசாத் நீதிபதியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரை நீதிவான் அறிவுறுத்தினார்.