Verified Web

முகத்திரை தடையில் ஐரோப்பாவை பின்பற்றும் முஸ்லிம் நாடுகள்

2017-09-26 17:06:03 Administrator

ஹஸன் இக்பால் 

தனது நாட்டுப் பெண்கள் முகத்­திரை அணி­வ­தற்கு தஜி­கிஸ்தான் அரசு தடை விதித்­துள்­ளது. மாறாக, பாரம்­ப­ரிய ஆடை கலா­சா­ரத்தை கடைப்­பி­டிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. பாரம்­ப­ரிய ஆடை­களை அணி­வ­திலும் பாரம்­ப­ரிய கலா­சா­ரங்­களை பின்­பற்­று­வ­திலும் நிலைத்­தி­ருக்­கு­மாறு தஜி­கிஸ்தான் அரசு தனது நாட்டு மக்­களை கேட்டுக் கொண்­டுள்­ளது. இஸ்­லா­மிய ஆடைகள் அணி­வதில் இருந்தும் முஸ்லிம் பெண்­களை தூரப்­ப­டுத்தும் ஒரு நிகழ்­வாக இது கரு­தப்­ப­டு­கி­றது. 

“இஸ்­லா­மிய ஆடைக் கலா­சாரம் ஆபத்­தா­னது” என முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட தஜி­கிஸ்தான் நாட்டின் கலா­சார அமைச்சர் சம்­சுதீன் மேற்­கத்­தேய ஊட­க­மொன்றின் செவ்­வியில் தெரி­வித்­துள்ளார்.  பெண்கள் ஹிஜாப் ஆடை­யினுள் ஏதேனும் மறைத்து வைத்­தி­ருக்­கின்­ற­னரா என்­பது தொடர்பில் அனை­வரும் சந்­தே­கத்­து­டனே நோக்­கு­வ­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

தஜி­கிஸ்­தானின்  பாரம்­ப­ரிய கலா­சாரம் தொடர்­பி­லான திருத்தச் சட்­ட­மூலம் ஹிஜாப் அணி­வது தொடர்பில் குறிப்­பாக எவ்­வித தடை­யையும் விதிக்­க­வில்லை. எனினும், பெண்கள் முகத்­திரை அணி­வது “வேற்­றுக்­கி­ர­க­வா­சிகள் கலா­சாரம்” என தஜி­கிஸ்தான் நாட்டின் அர­சியல் தலை­வர்கள் வர்­ணித்­துள்­ளனர்.  ஹிஜாப் அணியும் பெண்கள் தஜி­கிஸ்தான் நாட்டின் அரச அலு­வ­ல­கங்­களில் நுழைய முடி­யாது எனும் தடைச் சட்டம் இருந்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.  ஆகஸ்ட் மாத ஆரம்­பத்தில் தஜி­கிஸ்தான் தலை­நகர் துஷான்­பேயில் வாழ்ந்து வரும் 8,000 முஸ்லிம் பெண்­களை அதி­கா­ரிகள் அணுகி தஜிக் கலா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் ஹிஜாப் அணிந்து கொள்­ளு­மாறு கட்­ட­ளை­யிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தஜி­கிஸ்தான் நாட்டின் புதிய சட்­ட­மூலம் விதி­முறை மீற­லுக்­காக தண்­ட­னை­களை இது­வரை அமுல்­ப­டுத்­த­வில்லை. எனினும், இனி வரும் காலங்­களில் அமுல்­ப­டுத்­தப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

சனத்­தொ­கையில் 98 சத­வீ­த­மான முஸ்­லிம்­களைக் கொண்ட நாட்டின் இத்­த­கைய தடைச்­சட்டம் இஸ்­லா­மிய உலகில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தஜி­கிஸ்தான் மத சுதந்­தி­ரங்­களில் தலை­யி­டாத , மதச்­சார்­பற்ற நாடா­கவே தன்னைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

மார்ச் மாதம் அன்­னையர் தின நிகழ்­வொன்றில் உரை­யாற்­றி­ய­போது தஜி­கிஸ்தான் ஜனா­தி­பதி எமோ­மாலி ரஹ்மான் முஸ்லிம் பெண்கள்  “கறுப்பு நிற ஆடைகள்” அணி­வது தொடர்பில் பகி­ரங்­க­மாக கண்­ட­னங்­களை வெளி­யிட்­டி­ருந்தார். இது அந்­நிய கலா­சாரம் எனவும் குறிப்­பிட்­டி­ருந்தார். “ஹிஜாப் அணிதல், பாரம்­ப­ரிய ஆடை­களை தவிர்த்து எமது நாட்­டுக்கு பொருந்­தாத ஆடைக் கலா­சாரம் ஒன்றை குருட்­டுத்­த­ன­மாக பெண்கள் பின்­பற்ற வேண்­டிய நிய­மங்கள் அல்ல” என தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­நிய கலா­சார ஆடை­களை தவிர்க்கும் முக­மாக பெண்­க­ளுக்­கென்று பொது­வான, நியம  ஆடை­களை தஜி­கிஸ்தான் கலா­சார அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்த இருப்­ப­தாக  கலா­சார அமைச்சர் சம்­சுதீன் தெரி­வித்­துள்ளார். 

புர்கா ஆடை­களை உற்­பத்தி செய்தல் மற்றும் விற்­பனை செய்­த­லுக்கு எதி­ரான மொரோக்­கோவின் தடை 

ஒரு முஸ்லிம் பெண் தன்னை அந்­நிய ஆண்­க­ளிடம் இருந்து மறைக்கும் பொருட்டு தலையில் இருந்து கால் வரை மூடிய வகையில் அணி­யப்­படும் ஆடை புர்கா/ நிகாப் ஆடைகள் எனப்­ப­டு­கின்­றன. 

புர்கா ஆடை­க­ளுக்கு எதி­ரான  தடை விதிப்­பா­னது உள்­நாட்டு தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை குறைக்கும் ஒரு முன்­னெ­டுப்பு  என மொரோக்கோ அரசு அறி­வித்­துள்­ளது. புர்கா ஆடை­களை அணிந்த வண்ணம் பொது­மக்­க­ளோடு பொது­மக்­க­ளாக ஒன்­றித்து தீவி­ர­வா­திகள் தமது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வ­தாக கிடைக்கப் பெற்ற தக­வ­ல்­களை கருத்­திற்­கொண்டே மேற்­படி தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மொரோக்கோ தெரி­விக்­கின்­றது.  பாது­காப்புக் கார­ணங்­களைக் கருத்­திற்­கொண்டே உடலை முழு­து­மாக மறைக்கும் புர்கா ஆடை­களை தடை செய்­துள்­ள­தாக உள்­நாட்டு அமைச்சு அறி­விக்­கின்­றது. 

புர்கா ஆடை­களை வடி­வ­மைக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு உற்­பத்­தியை நிறுத்­து­மாறும் கையி­ருப்பு புர்கா ஆடை­களை 48 மணி­நே­ரத்­துக்குள் அழித்­து­வி­டு­மாறும் இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி மொரோக்கோ அர­சினால் அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. நாடு தழு­விய ரீதியில் புர்கா ஆடைகள் தொடர்­பி­லான இறக்­கு­மதி, உற்­பத்தி மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் அத்­த­னையும் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்கள் மற்றும் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்கள் புர்கா ஆடை­களை தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்­வ­தாக அரச தரப்பு குற்றம் சாட்­டு­கி­றது. 
எனினும், மொரோக்கோ நாட்டில் முகம் தவிர்த்து தலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை­க­ளுக்கு எவ்­வித தடை விதிப்பும் இது­வரை இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.   

புர்கா ஆடை­களை தடை செய்­துள்ள ஐரோப்­பிய நாடுகள் 

நெதர்­லாந்து 

பொது போக்­கு­வ­ரத்து, மருத்­து­வ­ம­னைகள், அரச அலு­வ­ல­கங்கள் என்­ப­வற்றில் முகம் முழுதும் மறைக்­கும்­ப­டி­யான புர்கா ஆடை­களை பெண்கள் அணி­வதை டச்சு அரசு தடை செய்­துள்­ளது. இத்­தடை முகத்தை முழு­து­மாக மறைக்கும் தலைக்­க­வ­சங்­க­ளுக்கும் பொருந்தும். இவ்­விதி மீற­லுக்கு எதி­ராக உயர்ந்­த­பட்­ச­மாக 400 யூரோ  வரை தண்­டப்­ப­ண­மாக விதிக்­கப்­ப­டு­கி­றது.

பிரான்ஸ்  

ஜனா­தி­பதி நிகொலஸ் சர்­கோ­சியின் ஆட்­சியின் கீழ் பொது­வெ­ளி­களில் முகம் மறைத்­த­லுக்கு எதி­ரான தடைச்­சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வந்­ததன் மூலம் ஐரோப்­பிய நாடு­க­ளி­லேயே முதன் முத­லாக புர்கா ஆடை­களை தடை செய்த நாடு பிரான்ஸ் ஆகும். இத்­தடைச் சட்டம் புர்கா ஆடை­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி முகத்தை மறைக்கும் வித­மான தலைக்­க­வ­சங்கள், கழுத்­துப்­பட்­டிகள், முக­மூ­டிகள் என்­ப­வற்­றுக்கும் பொருந்தும். புர்கா ஆடை­க­ளுக்கு எதி­ரான இத்­தடைச் சட்டம் 2011 இல் பிரான்ஸில் அமு­லுக்கு வந்­தது. இத்­த­டைச்­சட்டம் 2014 இல் மனித உரி­மை­க­ளுக்­கான ஐரோப்­பிய அமை­யத்தின் ஆத­ர­வையும் பெற்றுக் கொண்­டது. இத்­தடைச் சட்ட மீற­லுக்கு எதி­ராக 150 யூரோ வரை உயர்ந்­த­பட்ச தண்­டப்­பணம் விதிக்­கப்­பட முடியும். மேலும் கைது செய்­யப்­ப­டவும் முடியும். புர்­கினி என்­ற­ழைக்­கப்­படும் முழு உட­லையும் மறைக்கும் வித­மான இஸ்­லா­மிய நீச்சல் ஆடைகள் தொடர்­பிலும் பிரான்ஸ் நாடு தடை விதிக்க விரும்­பி­ய­போதும் நீதி­மன்றம் அதற்கு அனு­மதி வழங்க மறுத்து விட்­டது. ஐரோப்­பிய நாடு­க­ளி­லேயே முஸ்­லிம்கள் அதி­க­மாக வசிக்கக் கூடிய நாடாக (5 மில்­லி­ய­னுக்கும் அதிகம்) பிரான்ஸ் திகழ்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிரித்­தா­னியா 

புர்கா ஆடைகள் தொடர்பில் பிரித்­தா­னியா அரசு இது­வரை தடைச் சட்­டங்­களை விதிக்­க­வில்லை. எனினும் 2007 இல் மதம் சார்ந்த பாட­சா­லை­களின் பணிப்­பா­ளர்­க­ளுக்கு சுய­வி­ருப்பின் பேரில் முகத்­திரை ஆடை­களை தடை செய்யும் உரி­மையை பிரித்­தா­னிய கல்வி அமைச்சு  வழங்­கி­யது.இது­வரை நாடு தழு­விய முகத்­திரை தடையை பிரித்­தா­னியா அரசு விதிக்­க­வில்லை. தனி­ம­னித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. 3 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் பிரித்­தா­னி­யாவில் வாழ்ந்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

ஜேர்மன்

2016 ஆகஸ்ட் மாத­ம­ளவில் ஜேர்­ம­னிய உள்­துறை அமைச்சர் தோமஸ் டிமை­சரி பகு­தி­ய­ள­வி­லான புர்கா தடைச் சட்டம் ஒன்றை முன்­மொ­ழிந்தார். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யா­கவே அதனை அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். நாடு தழு­விய ரீதியில் அன்றி அரச அலு­வ­ல­கங்கள், பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், நீதி­மன்­றங்கள், சமூ­கத்தின் மிக முக்­கிய பகு­தி­களில் மாத்­தி­ரமே இத்­த­டைச்­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­படும் என கோரி­யி­ருந்தார். அத்­துடன் வாகனம் ஓட்டும் போது பெண்கள் முகம் மூடி­ய­வா­றான ஆடை­களை அணிந்­தி­ருக்கக் கூடாது எனவும் தடை விதிக்­கப்­பட்­டது. ஜேர்­மனில் 4 மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் வாழ்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பெல்­ஜியம் 

இனங்­காண முடி­யா­த­வாறு முகத்தை முழு­து­மாக அல்­லது பகு­தி­ய­ளவில் மறைத்­த­லுக்கு எதி­ரான சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் பொது­வெ­ளி­களில் முகத்­திரை ஆடைகள் அணி­வதை 2011 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி பெல்­ஜியம் அரசு தடை செய்­தது.  தொழிற்­சா­லை­களில் பாது­காப்புக் கருதி முக­மூடி அணி­வது, களி­யாட்ட நிகழ்­வு­களில் கேளிக்கை முக­மூடி அணி­வது என்­பன இச்­சட்­ட­மூ­லத்தில் விலக்­க­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இச்­சட்ட மீறல் தொடர்பில் ஏழு­நாட்கள் வரையில் சிறைத் தண்­டனை மற்றும் தண்­டப்­பணம் விதிக்­கப்­பட முடியும்.

இத்­தாலி 

முகம் மூடுதல் தொடர்­பான தடைச் சட்­டங்கள் இது­வரை இல்லை எனினும், அது­தொ­டர்­பான வாத விவா­தங்கள் இத்­தா­லியில் தலை­யெ­டுத்­துள்­ளன. இத்­தா­லியின் லம்­பார்டி நகரில் மருத்­து­வ­ம­னைகள் மற்றும் அரச நிறு­வ­னங்­களில் முகம் மூடி­ய­வா­றான ஆடை­களை அணி­வதை தடை செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

சுவிட்­சர்­லாந்து 

புர்கா ஆடைகளுக்கு எதிரான திட்டவரைபை சுவிட்சர்லாந்து அரசு 2016 இல் செப்டெம்பர் மாதமளவில் அங்கீகரித்துள்ளது. எனினும் இதுவரை சட்டமாக்கப்படவில்லை. எனினும் சுவிட்சர்லாந்தின் டெஸ்ஸின் நகரில் புர்கா தடை 2016 ஜூலை 1 தொடக்கம் அமுலில் இருந்து வருகின்றது. இத்தடை மீறலுக்கு எதிராக உயர்ந்தபட்சமாக 9,200 யூரோ வரை தண்டப்பணம் விதிக்கப்பட முடியும்.

நோர்வே 

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கல்வி அமைச்சர் இசாகீனினால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் முகம் மூடிய ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

பல்கேரியா 

2016 செப்டெம்பர் மாதமளவில் முகத்தை முழுதுமாக அல்லது பகுதியளவில் மறைக்கும் ஆடைகளை பல்கேரிய அரசு தடை செய்தது. எனினும் மருத்துவ, சுகாதார காரணங்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு கவசங்கள் என்பன தொடர்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடைச் சட்ட மீறல் தொடர்பில் 750 யூரோ வரையில் தண்டப்பணம் விதிக்கப்பட முடியும்.