Verified Web

நுரைச்­சோலை சுனாமி வீட்­டுத்­திட்டம் தொடர்பில் காணிக்­கச்­சேரி நடத்­து­மாறு அரச அதிபர் பணிப்பு

2017-09-13 08:42:14 Administrator

அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் அப்துல் லத்தீப்

ஏ.எல்.நிப்றாஸ்

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு பல வரு­டங்­க­ளாக பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­தி­ருக்கும் சுனாமி வீட்டுத் திட்­டத்தை பொருத்­த­மா­ன­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்கும் நட­வ­டிக்­கையின் ஒரு­கட்­ட­மாக காணிக் கச்­சேரி நடத்­து­மாறு அம்­பாறை அரச அதிபர் பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரி­வித்தார். 

அர­சாங்க அதி­பரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக, சம்­பந்­தப்­பட்ட ஏழு பிர­தேச செய­ல­கங்­களில் காணிக் கச்­சேரி செயன்­மு­றைகள் ஒக்­டோபர் 01 ஆம் திக­திக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

இது தொடர்­பாக அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்டம் பல வரு­டங்­க­ளாக பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாமல் உள்­ளது. இந்­நி­லையில், இது தொடர்­பாக நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்ட தீர்ப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விகி­தா­சா­ரத்­திற்கு அமைய மூவின மக்­க­ளுக்கும் இவ்­வீ­டு­களை பகிர்ந்­த­ளிக்க வேண்­டிய கடப்­பாடு மாவட்ட செய­ல­கத்­திற்கு இருக்­கின்­றது. 

இந்­நி­லையில், காணிக் கச்­சே­ரி­களை நடத்­து­மாறும் அந்­ந­ட­வ­டிக்­கையை 01.10.2017ஆம் திக­திக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அர­சாங்க அதிபர் துஷித பீ. வணி­க­சிங்க பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கு கடிதம் மூலம் பணிப்­புரை வழங்­கி­யுள்ளார். அதற்­க­மை­வாக அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை, இறக்­காமம், தமண, உகன, ஆலை­ய­டி­வேம்பு, அம்­பாறை ஆகிய பிர­தேச செய­ல­கங்­களின் கீழுள்ள உத்­தேச பய­னா­ளி­க­ளுக்­காக காணிக் கச்­சே­ரிகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. 

அம்­பாறை மேல­திக அரச அதி­பரின் தலை­மையில் அமைக்­கப்­படும் காணிக்­கச்­சேரி குழுவில் உதவி காணி ஆணை­யாளர், தலை­மைப்­பீட காணி உத்­தி­யோ­கத்தர் ஆகி­யோ­ருடன் சம்­பந்­தப்­பட்ட பிர­தே­சங்­களின் பிர­தேச செய­லா­ளர்­களும் உறுப்­பி­னர்­க­ளாக இடம்­பி­டிப்­பார்கள். அக்­க­ரைப்­பற்றைப் பொறுத்­த­வரை, நாம் ஏற்­க­னவே இதற்­கான ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்ளோம் என்றார். 

சுனாமி அனர்த்தம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து சவூதி அரே­பிய அர­சாங்­கத்தால் அக்­க­ரைப்­பற்று - நுரைச்­சோலை கிரா­மத்தில் 500 வீடு­களை உள்­ள­டக்­கி­ய­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீட்­டுத்­திட்­டத்தை முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் வழங்­கு­வது தொடர்பில் ஏற்­பட்ட சர்ச்­சை­யாலும், நீதி­மன்றில் அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாலும் அவ்வீடுகள் இதுவரை யாருக்குமே வழங்கப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன. அதேநேரத்தில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த குடும்பங்கள் தமக்கு இவ்வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.