Verified Web

ஹஜ் குழு நாளை கூடுகிறது

2017-09-13 08:29:14 SNM.Suhail

விசாரணை குழுவும் அமைக்கப்படும்

அரச ஹஜ் குழு நாளை வியாழக்கிழமை கூட­வுள்­ளது. இதன்­போது, ஹஜ் முறைப்­பா­டுகள் தொடர்­பான விசா­ரணை குழு­வொன்றும் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஹஜ் குழு உறுப்­பினர் எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார்.

அத்­துடன், இம்­முறை ஹஜ் ஏற்­பா­டு­க­ளின்­போது அசெ­ள­க­ரி­யங்­களை சந்­தித்த ஹாஜிகள் எழுத்­து­மூ­ல­மான முறைப்­பா­டு­களை சமர்ப்­பித்தால் மாத்­தி­ரமே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் முதற்­கட்­ட­மாக ஹஜ்­ஜுக்கு செல்ல முடி­யா­மற்­போன 35 பேருக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்­தப்­படும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
தொடர்ந்தும் அவர் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், 

இம்­முறை ஹஜ் ஏற்­பா­டுகள் மிகவும் நுணுக்­க­மாக மேற்­கொள்­ளப்­பட்­டது. எமது நாட்டை பொறுத்­த­வரை, நாம் நீதிமன் ஹஜ் வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே ஏற்­பா­டு­களை செய்­திருந்தோம். அதற்­க­மைய, முறைப்­பா­டுகள் மற்றும் விசா­ர­ணைகள் குறித்தும் வியாழனன்று ஹஜ் குழு கூடி தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளது. 

முக்­கி­ய­மாக 35 பேருக்கு ஹஜ் கட­மையை நிறை­வேற்ற முடி­யாமற் போனமை சம்­பந்­த­மாக விரி­வாக ஆரா­ய­வுள்ளோம். பாதிக்­கப்­பட்ட 35 பேரில் 27 பேர் ஒரே முக­வ­ரி­னூ­டாக ஹஜ்­ஜுக்கு செல்ல பணம் செலுத்­தி­யி­ருந்­தனர். மூவர் மற்­று­மொரு முகவ­ரிடம் பணத்தை செலுத்­தி­ய­தோடு ஐவர் சவூ­திக்கு சென்று திரும்­பி­யி­ருந்­தனர். இந்த ஐவர் குறித்த தக­வல்கள் அமைச்­சுக்கோ திணைக்­க­ளத்­திற்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆகவே, ஹஜ் முறைப்­பா­டுகள் தொடர்­பாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள குழு­வினர் முதலில் விசா­ரணை செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

இது குறித்து நட­வ­டிக்கை எடுக்க ஹஜ் குழு­வுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­களே இருக்­கின்­றன. எனினும் சட்­டத்­த­ர­ணி­களின் ஆலோ­ச­னை­யின்­படி நீதி­மன்­றி­னூ­டாக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து கவனம் செலுத்­த­வுள்ளோம். 

அத்­தோடு, ஏனை­ய­வர்­களும் எழுத்து மூல­மாக தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் மற்றும் ஏற்­பட்ட அசெ­ள­க­ரி­யங்கள் தொடர்பில் நிய­மிக்­கப்­ப­ட­வி­ருக்கும் விசா­ரணை குழுவில் முறை­யி­டலாம். 

ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் சட்­டத்­த­ர­ணிகள் அடங்­க­லான விசா­ரணை குழுவை நிய­மிக்­க­வி­ருக்­கிறோம்.
இது குறித்த விபரங்­களை அடுத்த மாத முதல் வாரத்தில் பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரப்­ப­டுத்­த­வி­ருக்­கிறோம். 

இதே­வேளை, இறுதித் தரு­ணத்தில் இலங்­கை­ய­ருக்கு கிடைக்­கப்­பெற்ற 600 வீசாக்கள் மூலம் ஹஜ் நிறை­வேற்ற சென்­ற­வர்­க­ளுக்கு சில அசெ­ள­க­ரி­யங்கள் ஏற்­பட்­டன. மினாவில் சில குறை­பா­டுகள் நில­வின, இதன்­போது முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் ஹலீம் தெற்­கா­சிய பிராந்­தி­யத்­திற்கு பொறுப்பா அதி­கா­ரி­க­ளுடன் பேசி நிலை­மை­களை சுமு­க­மாக்­கினார். இதேவேளை, சவூதியில் அரச ஹஜ்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்களின் அறிக்கைகளும் கலந்துரையாடப்பட்டு வியாழக்கிழமை பல தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். அனைத்து தீர்மானங்களும் ஹாஜிகளின் நலன் பேணுவதாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகவும் அமையும் என்றார்.