Verified Web

மியன்­மாரில் நடப்­பது இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு பாடப்புத்தக உதாரணம்

2017-09-12 10:57:57 Administrator

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்த் அல் ஹுஸைன் 

மியன்­மாரில் பாது­காப்பு படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நட­வ­டிக்­கைகள் இன சுத்­தி­க­ரிப்­புக்கு முன்­னு­தா­ர­ண­மாகக் கொள்ளக் கூடி­ய­தாகும் என ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரை நேற்­றைய தினம் ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்த் அல் ஹுஸைன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மியன்­மாரின் ரோஹிங்யா முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து பாது­காப்பு படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கைகள் இனச் சுத்­தி­க­ரிப்­புக்கான பாடப்­புத்­தக உதா­ர­ண­மொன்­றா­க­வுள்­ளது. ராகைனில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­யா­னது சமத்­து­வ­மற்­றது என்­பது தெளி­வா­னது.

“நாங்கள்  பாது­காப்புப் படை­யி­னரும் உள்ளூர் கிளர்ச்சிக் குழுவும் ரோஹிங்ய கிரா­மங்­களை எரி­யூட்­டு­வ­தையும்  தப்பிச் செல்லும் பொது­மக்கள் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்­துதல் உள்­ள­டங்­க­லான நீதிக்குப் புறம்­பான படு­கொ­லை­களை மேற்­கொள்­வ­தையும்  வெளிப்­ப­டுத்தும் பல அறிக்­கை­க­ளையும் செய்­மதி புகைப்­ப­டங்­க­ளையும்  பெற்­றுள்ளோம்"  எனத் தெரி­வித்த அவர், “தற்­போது இடம்­பெற்று வரும் கொடூர  இரா­ணுவ நட­வ­டிக்­கையை முடி­வுக்கு கொண்டுவரவும் அனைத்து வன்­மு­றை­க­ளுக்கும் பொறுப்புக் கூறவும் மியன்மார் அர­சாங்­கத்­திற்கு அழைப்பு விடுக்­கிறேன்" என்று கூறினார்.

அதே­ச­மயம் மியன்­மா­ரின் தற்­போ­தைய நிலைமை குறித்து  அறிந்து கொள்வதற்கு மனித உரிமைகள் விசாரணையாளர்கள்  அங்கு விஜயம் செய்வதற்கு அந்நாடு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவது குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார்.