Verified Web

வில்பத்து தொடர்பான ஜனா­தி­பதி குழு­வின் காலம் நீடிப்பு

2017-09-12 10:52:26 SNM.Suhail

மாவில்லு பேண்­தகு வனப்­பா­து­காப்பு தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதிர்ப்பு வெளியி­டப்­பட்­ட­தை­ய­டுத்து, ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­விடம் ஓரிரு தினங்­க­ளுக்கு எழுத்து மூல­மான சாட்­சி­யங்­களை கைய­ளிக்­கலாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த குழு­வினர் இது குறித்து மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, மக்­களின் கருத்­த­றிந்து அறிக்கை தயா­ரிப்­ப­தற்­கான கால எல்லை கடந்த மாதம் 21 ஆம் திகதி நிறை­வ­டைந்த போதிலும், அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய கால எல்லை இம்­மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டது. தமது அறிக்­கை­களை சமர்­ப்பிக்க விரும்­பு­ப­வர்கள் ஓரிரு தினங்­க­ளுக்குள் குழுவின் தலை­வ­ரான உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சில் ஒப்­ப­டைக்­கலாம்.

இந்­நி­லையில், கடந்த சில தினங்­க­ளாக மக்­க­ளிடம் நேர­டி­யாகக் கருத்துகள் பெறப்­பட்­டன. 

நேற்­று­முன்­தினம் முசலி பிர­தேச செய­ல­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கருத்­த­றியும் செய­ல­மர்­வின்­போது, 15 க்கு மேற்­பட்ட சாட்­சி­யங்கள் பதி­யப்­பட்­டன. குறிப்­பாக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இதன்­போது சாட்சியமளித்தார். அத்தோடு, சிவில் அமைப்புகள், மீனவச் சங்கங்களும் இதன்போது சாட்சியமளித்தன என தெரிவிக்கப்படுகின்றது.