Verified Web

சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளியை மையப்­ப­டுத்தி சுயேட்சை அணி

2017-09-12 10:48:14 Administrator

தீவி­ர­மாக ஆராய்வதாக கூறுகிறது ஷூரா கவுன்ஸில் 

அஸ்லம் எஸ்.மௌலானா

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விப்­புக்கு முன்­ன­தாக சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்­றத்­திற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­டா­விட்டால் கல்­முனை மாந­கர சபைக்­கான தேர்­தலில் சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வா­சலை மையப்­ப­டுத்தி பொது­வான சுயேச்சை அணி­யொன்றை கள­மி­றக்­கு­வது குறித்து சாய்ந்­த­ம­ருது ஷூரா கவுன்ஸில் கவனம் செலுத்தி வரு­வ­தாக அதன் செய­லாளர் எம்.ஐ.எம்.சாதாத் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ருது ஷூரா கவுன்­சிலின் பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்­றுக்­கி­ழமை அதன் பிரதித் தலை­வரும் ஓய்­வு­பெற்ற கல்விப் பணிப்­பா­ள­ரு­மான எம்.ஐ.ஏ.ஜப்பார் தலை­மையில் நடை­பெற்­ற­போது இவ்­வி­டயம் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­ட­தா­கவும் இதற்­கா­கான நகர்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக செய­ல­ணி­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இது விட­ய­மாக அவர் மேலும் தெரி­விக்­கையில் "சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்ட காலத் தேவை­யாக இருந்து வரு­கின்ற தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் உரு­வாக்­கப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு பகி­ரங்­க­மா­கவே சூழ்ச்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதனால் வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வதில் பலத்த இழு­பறி நிலவி வரு­கின்­றது. காலத்­திற்கு காலம் இவ்­வி­டயம் அர­சியல் தலை­மை­க­ளினால் பந்­தா­டப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஆகை­யினால் எமது கோரிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்­காக காத்­தி­ர­மான மூலோ­பாய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் நடுப்­ப­கு­தியில் கோரப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதற்கு முன்­ன­தாக சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்­றத்­திற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட வேண்டும். 

இல்­லையேல் கல்­முனை மாந­கர சபைக்­கான தேர்­தலில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்திலிருந்து அர­சியல் கட்­சி­களின் சார்பில் எவரும் போட்­டி­யி­டாமல் அனைத்து தரப்­பி­ன­ரையும் உள்­ள­டக்­கி­ய­தாக சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வா­சலை மையப்­ப­டுத்தி பொது­வான சுயேச்சை அணி­யொன்றை கள­மி­றக்­கு­வதன் மூலம் எமது மக்­களின் ஒட்­டு­மொத்த பலத்தை நிரூ­பிக்­கின்ற அதே­வேளை கல்­மு­னைக்­குடி சார்பில் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற வாதங்­க­ளுக்கு ஒரு தெளி­வையும் பெற்­றுக்­கொ­டுக்கும் என எமது ஷூரா கவுன்ஸில் எதிர்­பார்க்­கி­றது.

இந்த பொதுச்­ சு­யேச்சை அணியை சாத்­தி­யப்­ப­டுத்தும் பொருட்டு அரசியல் கட்சிகளில் சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரமுகர்களையும் பள்ளிவாசல் மரைக்காயர் சபையினரையும் நேரடியாக சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்வதற்கு எமது ஷூரா கவுன்ஸில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.