Verified Web

பலஸ்தீனின் அறிவையும் அனுபவத்தையும் இலங்கையுடன் பரிமாற விரும்புகிறோம்

2017-09-09 15:02:28 MBM.Fairooz

 பலஸ்­தீன சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு முக­வ­ர­கத்தின் பணிப்­பாளர் நாயகம் இமாத் அல் ஸுஹைரி 

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மாக பலஸ்தீன் பல்­வேறு சவால்­களைச் சந்­தித்து வரு­கின்ற போதிலும் எம்­மிடம் இருக்கும் அறி­வையும் அனு­ப­வத்­தையும் எமக்கு உதவி செய்­கின்ற நாடு­க­ளுடன் பகிர்ந்து கொள்ள நாம் விரும்­பு­கிறோம். அந்த வகையில் இலங்­கை­யுடன் விவ­சாயம் மற்றும் சுகா­தாரம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் இணைந்து செயற்­பட விரும்­பு­கிறோம் என பலஸ்­தீன சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு முக­வ­ர­கத்தின் பணிப்­பாளர் நாயகம் இமாத் அல் ஸுஹைரி தெரி­வித்தார்.

அண்­மையில் பலஸ்­தீன தூதுக் குழு­வுக்கு தலைமை தாங்கி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட  இமாத் அல் ஸுஹைரி 'விடி­வெள்ளி'க்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே இதனைக் குறிப்­பிட்டார்.

தமது இலங்கை விஜயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் ,  பலஸ்­தீன சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு முக­வ­ர­க­மா­னது பலஸ்­தீன வெளி­வி­வ­கார அமைச்சின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய நிறு­வனக் கட்­ட­மைப்­பாகும். இதுவே பலஸ்­தீன அர­சாங்­கத்தின் பொது இரா­ஜ­தந்­திர விவ­கா­ரங்­களைக் கையாள்­கி­றது. 

பலஸ்­தீ­னிடம் காணப்­படும் அறி­வையும் அனு­ப­வத்­தையும் பிற நாடு­க­ளுடன் பரி­மாறிக் கொள்­வதில் எமது நிறு­வனம் சிறப்புத் தேர்ச்சி பெற்று விளங்­கு­கி­றது.

சுகா­தாரம், விவ­சாயம் , சுற்றுச் சூழல், நீர்,  சக்தி  போன்ற துறை­களில் எமது அறி­வையும் அனு­ப­வத்­தையும் நாம் இத­னூ­டாகப் பிற நாடு­க­ளுடன் பகிர்ந்து கொள்ள எதிர்­பார்க்­கிறோம்.

ஐக்­கிய நாடுகள் சபை­யினால் பலஸ்­தீன அரசு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து நாம் ஏனைய நாடு­க­ளுடன் வலு­வான உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்ப தீர்­மா­னித்தோம்.  இதுவே இந்த நிறு­வனக் கட்­ட­மைப்பை புதி­தாக தோற்­று­விப்­ப­தற்­கான கார­ண­மாகும்.

பலஸ்­தீ­னுக்கு கடந்த பல தசாப்த கால­மாக பல நாடுகள் பல்­வேறு வழி­க­ளிலும் உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. நெருக்­கடி நிலை­மை­களின் போது எமக்கு இந்த நாடுகள் ஒரு­மைப்­பாட்டைத் தெரி­விக்­கின்­றன. அந்த வகையில் குறித்த நாடு­க­ளுடன் எமது அறி­வையும் அனு­ப­வத்­தையும் பரி­மாறிக் கொள்­வதன் ஊடாக எமது நன்­றி­களைத் தெரி­விக்க விரும்­பு­கிறோம்.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் நாம் தற்­போது இலங்­கைக்கும் விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ளோம்.  எமது இந்த விஜ­யத்­திற்­கான ஏற்­பா­டு­களை இலங்­கை­யி­லுள்ள பலஸ்­தீன தூதுவர் ஸுஹைர் தார் ஸைத்  மேற்­கொண்­டி­ருந்தார். அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வெளி­வி­வ­கார அமைச்சர் மற்றும் விவ­சாய அமைச்சர் ஆகி­யோ­ருடன் பேச்சு நடத்தி இதற்­கான அனு­ம­தியைப் பெற்­றி­ருந்தார். 
அத­ன­டிப்­ப­டையில் விவ­சாயத் துறையில் எமது அறி­வையும் அனு­ப­வத்­தையும் இலங்­கை­யுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இத்­து­றையில் நிபு­ணத்­துவம் கொண்­ட­வர்­க­ள­டங்­கிய குழு­வினர் எனது தலை­மையில் இங்கு வருகை தந்­துள்­ளனர். 

நாம் இலங்­கையில் 9 நாட்கள் தங்­கி­யி­ருந்து பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்தோம். இந்த விஜ­யத்தின் போது சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்கள், அதி­கா­ரிகள், திணைக்­களத் தலை­வர்­க­ளுடன் நாம் சந்­திப்­பு­களை மேற்­கொண்டோம். இதன் தொட­ராக சில புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளிலும் கைச்­சாத்­திட்டோம்.

எமது விஜ­யத்தின் இறு­தியில் இது தொடர்­பான விரி­வான அறிக்கை ஒன்றைத் தயா­ரித்து இலங்­கை­யி­டமும் பலஸ்­தீன வெளி­வி­வ­கார அமைச்­சி­டமும் கைய­ளிக்­க­வுள்ளோம்.

இலங்கை பலஸ்­தீனின் இறை­மைக்­கா­கவும் அதன் விடு­த­லைக்­கா­கவும் தொடர்ச்­சி­யாக குரல் எழுப்பி வரு­கின்ற ஒரு நாடாகும்.  அந்த வகையில் எமது பலஸ்­தீன மக்­களின் நன்­றி­களை இலங்கை அர­சாங்­கத்­திற்கு எத்தி வைக்­கின்ற விஜ­ய­மா­கவும் இதனைக் கருத முடியும்.

பலஸ்தீன் விவ­சா­யத்தில் விசேட அறி­வையும் அனு­ப­வத்­தையும் கொண்ட நாடாகும். இலங்­கையும் விவ­சா­யத்தை தனது பிர­தான மூல­மாகக் கொண்ட நாடு என்ற வகை­யிலும் எமது அறிவும் அனு­ப­வமும் இலங்­கைக்கு மிகவும் பிர­யோ­ச­ன­ம­ளிக்கும் என நம்­பு­கிறோம்.

இலங்­கை­யி­ட­மி­ருந்து எத­னையும் பெற்றுக் கொள்ளும் எதிர்­பார்ப்பில் நாம் இங்கு வருகை தர­வில்லை. மாறாக எம்­மி­ட­மி­ருப்­ப­வற்றை இலங்­கை­யுடன் பகிர்ந்து கொள்­ளவே வந்­துள்ளோம். 

விவ­சா­யத்­து­றையில் மாத்­தி­ர­மன்றி சுகா­தா­ரத்­து­றை­யிலும் பலஸ்தீன் மிகச் சிறந்த அறி­வையும் அனு­ப­வத்­தையும் கொண்­டுள்­ளது. எமது விஜ­யத்­தின்­போது நாம் இலங்­கையின் சுகா­தார அமைச்­ச­ரையும் சந்­தித்தோம். குறிப்­பாக திறந்த இதய சத்­திர சிகிச்சை, சிறு­நீ­ரக சத்­திர சிகிச்சை போன்­ற­வற்றில் நாம் விசேட திற­மை­களைக் கொண்­டுள்ளோம். அவை தொடர்பில் எதிர்­கா­லத்தில் நாம் பரி­மாற்ற திட்­டங்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

பலஸ்­தீன மக்கள் மிகவும் நெருக்­க­டியில் இருக்­கி­றார்கள் என்­பது உண்மை. பலஸ்தீன் அர­சியல் சமூக பொரு­ளா­தார ரீதி­யாக பல்­வேறு அடக்­கு­மு­றை­க­ளையும் சவால்­க­ளையும் சந்­தித்து வரு­கி­றது.  எனினும் இதற்­காக நாங்கள் எப்­போதும் பிற நாடு­களின் மீது தங்­கி­யி­ருக்க விரும்பவில்லை. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பலஸ்தீனர்களாகிய நாம் எம்மை பலப்படுத்தியும் வலுப்படுத்தியும் வருகிறோம். இவ்வாறான அனுபவங்கள் பலஸ்தீனைத் தவிர வேறு நாடுகளிடம் இருக்கும் என நாம் நம்பவில்லை. 

இதன்மூலம் எமக்கு கிடைக்கப் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் எம்முடன் மாத்திரம் வைத்துக் கொண்டிராமல் எமக்கு உதவி செய்கின்ற சக நாடுகளுடனும் சகோதர மக்களுடனும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறோம். இதுவே பலஸ்தீன மக்களின் உண்மையான பண்பாகும் என்றார்.