Verified Web

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சர்வதேசம் கைகொடுக்குமா

2017-09-06 19:01:43 Administrator

ஹஸன் இக்பால் 

கடந்த வாரம் தொட்டு சர்­வ­தேச அரங்கில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்ள ரோஹிங்யா முஸ்­லிம்கள் விவ­கா­ரத்­துக்கு நிரந்­தர தீர்வு எட்­டப்­ப­டுமா? மனி­தா­பி­மானம் மரித்­துப்­போன மண்ணில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் நிலை­பெற சர்­வ­தேச சமூகம் கைகொ­டுக்­குமா? மனி­த­நே­யத்தை போதிக்கும் மத­வா­திகள் வாழும் நாட்டில் குருதி பாயும் நிலை கண்டும் கலங்­காத உள்­நாட்டு தலை­மைகள் இனச்­சுத்­தி­க­ரிப்பை ஆத­ரிக்­கின்­றதா? உலக சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்­த­வென ஸ்தாபிக்­கப்­பட்ட ஐ.நா. சபை உயி­ரோட்டம் இழந்­துள்­ளதா? என பல­வா­றான கேள்­வி­களை ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இரா­ணு­வத்தின் அட்­டூ­ழி­யங்­களும் அரசின் மெத்­த­னமும் எழச் செய்­துள்­ளன. 

ஆகஸ்ட் 25 இல் பொலிஸ் காவ­ல­ரண்­களை தாக்­கினர் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மியன்மார் இரா­ணுவம் ஈவி­ரக்­க­மின்றி ரோஹிங்க்­யர்­களை கொன்­றொ­ழிக்கும் தமது செயற்­றிட்­டத்தை மீண்டும் செவ்­வனே கையி­லெ­டுத்­தது. இன்று வரை ஆயிரக்­க­ணக்­கான ரோஹிங்யா முஸ்­லிம்­களின் உயிர்­களைப் பறிக்­கவும், 90,000 க்கும் அதிகமான அக­திகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அயல்­நாட்­டுக்கு சொந்த நாடு விட்டு காடு தாண்டி தஞ்சம் புகவும் ஏது­வான இரா­ணு­வத்தின் அட்­டூ­ழி­யங்கள் குறித்து மியன்மார் அரசு மௌனி­யாக இருப்­பது இன­வ­ழிப்­புக்கு தனது பேரா­த­ரவை மறை­மு­க­மாக வழங்­கு­வது போலவே தோற்­று­கி­றது. மியன்­மாரின் அர­சியல் தலைவரான சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி எனும் பெண் ஆளுமை, தான் கட்டிக் காத்த உலக மக்­க­ளி­னதும் தலை­வர்­க­ளி­னதும் பேரா­த­ர­வையும் அபி­மா­னத்­தையும் வெகு­வாக இழந்து வரு­கின்­றமை கண்­கூடு. 

கறுப்­பின மக்­களின் எழுச்­சிக்­காக பாடு­பட்ட நெல்சன் மண்­டேலா போன்ற உய­ரிய ஆளு­மை­க­ளுக்கு நிக­ராக பேசப்­பட்ட, உலக சமா­தான  குறி­யீட்டு ஆளு­மை­யாக வலம் வந்த, பல­ரதும் அபி­மா­னத்­தையும் ஆத­ர­வையும் பெற்ற ஆங்சாங் சூகி அனைத்­துக்கும் நேரெ­தி­ராக அடிப்­படை மனித உரி­மை­க­ளையும் மறுக்­கின்ற, சிறு­பான்­மை­களை வேரோடு பிடுங்கி எறி­கின்ற நாட்டின் தலை­வி­யாக இருக்கின்றமை ஜீர­ணிக்க முடி­யாத விட­ய­மாகிப் போயுள்­ளது. ஒரு பிர­ஜையின் அடிப்­படை உரி­மை­யான வாழும் உரி­மையே பறி­போ­யுள்ள நிலையில் உயி­ருக்­காகப் போராடும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் விட­யத்தில் வன்­முறை புரியும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஆத­ர­வாக ஆங்சாங் சூகி  செயற்­பட்டு வரு­வது அவர் பெற்­றுக்­கொண்ட உய­ரிய சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசின் தகை­மை­களை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது. மியன்­மாரில் இடம்­பெற்று வரும் இன­வ­ழிப்பு தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஐ.நா. முயன்­றாலும் ஆங்சாங் சூகி ஐ.நா. அதி­கா­ரி­க­ளுக்கு வீசா வழங்­கு­வதை தடுத்தி நிறுத்தி ரோஹிங்யா முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் நிரந்­தர தீர்வு காண தடைக்­கல்­லாக விளங்­கு­கின்­றமை மனித உரிமை ஆர்­வ­லர்­களை  அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. 

கடந்த மாதம் இடம்­பெற்ற ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான புதிய தாக்­குதல் நட­வ­டிக்­கை­யினால் மாத்­திரம் பத்து நாட்­க­ளுக்குள் 90,000 ரோஹிங்­யர்கள் பங்­க­ளாதேஷ் நாட்­டுக்கு அடைக்­கலம் கோரித் தப்பிச் சென்­றுள்­ளனர் என ஐ.நா. வெளி­யிட்­டுள்ள அறிக்கை தெரி­விக்­கின்­றது.

ஒதுக்­கப்­பட்ட இனக்­கு­ழு­வாக சொந்த நாட்டில் உயி­ரச்­சு­றுத்­த­லுக்கு மத்­தியில் அஞ்சி நடுங்கி வாழ்­வதைக் காட்­டிலும் அக­தி­யாக வேறு நாட்டில் குடி­ய­மர்­வது நலம் என ரோஹிங்­யர்கள் கரு­து­கின்­றனர்.

மியன்மார் இரா­ணுவம் பொது­மக்­களை கொன்று குவிப்­பதை மறுத்து, இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அச்­சு­றுத்­த­லாக விளங்­கிய ரோஹிங்ய ஆயுதக் குழு­வி­ன­ரையே அழித்து வரு­வ­தாக ஆங்சாங் சூகி அரசு சர்­வ­தே­சத்­துக்கு தெரி­வித்து வரு­கின்­றது. எனினும் ஐ.நா. தனது அறிக்­கையில் மியன்மார் இரா­ணு­வத்தின் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றையை  “இனச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்கை” என்றே வர்­ணித்­துள்­ளது.  

"ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­படும் வன்­மு­றைகள் தொடர்பில் செய்­தி­களை கேட்­கும்­போது என் இதயம் வெடித்து சுக்கு நூறா­கி­றது. மியன்­மாரில் மனி­தா­பி­மானம் இழி­நி­லைக்கு சென்­றுள்­ளமை வருத்­த­ம­ளிக்­கின்­றது. இதற்கு எதி­ராக  கடந்த பல வரு­டங்­க­ளாக கண்­டனம் தெரி­வித்தே வரு­கின்றேன். எனது சக நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி இது தொடர்பில் காத்­தி­ர­மான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்வார் என நான் நம்­பு­கிறேன்” என்­ற­வாறு நோபல் பரிசு பெற்ற மலாலா தனது கண்­ட­னத்தை டுவிட்­டரில் வெளி­யிட்­டுள்ளார்.

 “ஆங்சாங் சூகியின் மௌனம் ஏமாற்­றத்தை தரு­கி­றது. மனித உரி­மைகள் மீற­லுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுக்­காது மௌனம் காக்­கின்றார். இது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது” என மலே­ஷிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் சாடி­யுள்ளார். "முஸ்லிம் சிறு­பான்மை மீது நடாத்­தப்­படும் வன்­முறை நட­வ­டிக்­கை­களை மியன்மார் அரசு உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என பாகிஸ்தான் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் காவாஜா முஹம்மத் ஆஸிப்  அழுத்தம் கொடுத்­துள்ளார். “இன­வ­ழிப்பு நட­வ­டிக்­கையில் இருந்து முஸ்­லிம்­களை மீட்க சர்­வ­தேசம் அணி­தி­ரள வேண்டும். இது விட­யத்தில் ஐ.நா. உயி­ரோட்­ட­மாக செயற்­பட வேண்டும்” என ஈரா­னிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் ஜாவாத் ஸரிப் காட்டம் தெரி­வித்­துள்ளார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மியன்மார் தூத­ரா­ல­யத்­திற்கு முன்னால் ரஷ்யா தலை­நகர் மொஸ்க்­கோவில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் அணி­தி­ரண்டு தமது எதிர்ப்புக் கோஷங்­களை தாங்­கிய சுலோக அட்­டை­களை ஏந்­தி­ய­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் மியன்மார் அர­சுக்கு பகி­ரங்க கண்­டனம் தெரி­வித்­துள்­ள­துடன், மியன்மார் அர­சுக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க பல்­வேறு நாட்டு தலை­மை­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார். இவ்­வா­றாக ரோஹிங்யா விவ­காரம் சர்­வ­தேச கவ­ன­யீர்ப்பை பெற்­றுள்­ளமை வர­வேற்­க­த்தக்க விடயம். கண்­ட­னக்­ கு­ரல்கள் காரியச் செயல்­க­ளாக மாற்றம் பெற வேண்டும் என்­பதே சமூக ஆர்­வ­லர்­களின் எதிர்­பார்ப்பு. ரோஹிங்­யர்கள் விட­யத்தில் நிரந்­தர, தீர்க்­க­மான முடி­வுகள் பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும். சொந்த நாட்டில் நிம்­ம­தி­யா­கவும் சகல தனி மனித உரி­மை­களை அனு­ப­விக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும் அவர்கள் வாழ வேண்டும் என்­பதே அநேகரின் அவா. 

மியன்மார் அரசின் மிலேச்­சத்­த­ன­மான மனித உரிமை மீற­லா­னது அந்­நாட்டை மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா, துருக்கி போன்ற சக முஸ்லிம் நாடுகள் இராஜ தந்­திர ரீதியில் புறக்­க­ணிக்க ஏது­வாக அமை­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மியன்மார் அரசு ரோஹிங்ய முஸ்­லிம்கள் விட­யத்தில் நீதியை பெற்றுக் கொடுக்க, உரி­மை­களை மீளக் கைய­ளிக்க காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கா­த­வரை அந்­நாட்­டு­ட­னான சகல இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் துண்­டிப்­ப­தாக மாலை­தீவு வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்ளார். 

முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் நாடான இந்­தோ­னே­ஷி­யாவில் மியன்மார் அர­சுக்கு எதி­ராக எழுந்த எதிர்ப்­ப­லைகள் கார­ண­மாக இந்­தோ­னே­ஷியா தன் நாட்டின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சரை மனித உரிமை மீறலை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு நேரில் அழுத்தம் கொடுக்­க­வென மியன்மார் நாட்­டுக்கு அனுப்­பி­யது. வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் ரெட்னோ மர்­சூதி, ஆங்சாங் சூகி­யையும் மியன்மார் இரா­ணுவ படை தள­பதி மின்­ஆங்­ஹு­லை­னையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். கடந்த சில நாட்­களில்  பல்­வேறு நாடு­களின் மியன்மார் தூத­ர­கங்களின் முன்னால் மியன்மார் அரசின் மிலேச்­சத்­த­னங்­க­ளுக்கு கண்­டனம் தெரி­வித்து  எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன. இந்­தோ­னே­ஷி­யாவில் மியன்மார் தூத­ர­கத்­திற்கு முன்னால் கூடிய மக்கள் குழு தூத­ரகம் மீது பெற்றோல் குண்டு ஒன்றை வீசிச் சென்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அனைத்து நாடு­க­ளிலும் அமைந்து மியன்மார் தூத­ர­கங்­க­ளி­னதும் பாது­காப்பு பல மடங்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

வன்­மு­றையில் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு மீள குடி­யி­ருப்­புக்­களை ஏற்­ப­டுத்தி, அடிப்­படை வாழ்க்கை வச­தி­களை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஐ.நா. மேற்­பார்­வையில் ராக்கைன் மாநில முஸ்­லிம்­க­ளது உரி­மைகள் பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும். சிறு­பான்மை முஸ்­லிம்கள் வாழும் ராக்கைன் மாநில பகு­தி­களில் அள­வுக்­க­தி­க­மாக நிலை ­நி­றுத்­தப்­பட்­டுள்ள இரா­ணுவ நிலைகள் அகற்­றப்­பட வேண்டும் என்­ப­னவே குறு­கிய கால நிறை­வேற்றுத் தீர்­மா­னங்­க­ளாக மியன்மார் அர­சுக்கு சர்­வ­தேச நாடுகள் வலி­யு­றுத்தி நிற்கும் கோரிக்­கை­க­ளாகும்.

ராக்கைன் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெ­று­கின்ற வன்­மு­றைக்கு உரிய முடிவை மியன்மார் அரசு எடுக்க மறுத்தால், இந்­நி­லைமை சிறு­பான்மை முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை பௌத்­தர்­க­ளாக ஒன்­றி­ணைந்து வாழக்­கூ­டிய மியன்­மாரின் ஏனைய பகு­தி­க­ளிலும் தொற்று நோயாய் பரவக் கூடும். ராக்கைன் மாநி­லத்தில் மாத்­திரம் இடம்­பெற்று வரும் இனச்­சுத்­தி­க­ரிப்பு அர­சினால் போஷிக்­கப்­பட்டால் எதிர்­கா­லங்­களில் நாடு முழுதும் பரவி  கட்­டுக்­க­டங்­காத  கல­வ­ர­மாக  முற்றி வெடிக்கக் கூடும் என அர­சியல் அவ­தா­னிகள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர்.

"மியன்­மாரில் காலா கால­மாக வாழ்ந்து வரும் ரோஹிங்­யர்­களை வந்­தே­றிகள் என கருதி அர­சினால் பிரா­ஜா­வு­ரிமை மறுக்­கப்­பட்டு வரு­கின்­றது. பிர­ஜா­வு­ரிமை மறுப்பானது ஒரு நாட்டில் சுதேசி அனு­ப­விக்கக் கூடிய அனைத்து உரி­மை­க­ளையும் களையும் நிலைக்கு வழி­வ­குத்­துள்­ளது. இது அரசு சொந்த நாட்டின் இனக்­குழு ஒன்­றுக்கு செய்யும் மிகப் பெரும் துரோ­க­மாகும். இந்­நிலை மாற்­றப்­பட வேண்டும். ரோஹிங்­ய­ர்­களை சுதே­சிகள் என ஏற்று ஏனைய மக்­களைப் போன்று அனைத்து நியா­ய­மான உரி­மை­களும் இவர்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும்" என முன்னாள் ஐ.நா. சபை பொதுச்­செ­ய­லாளர் கொபி அனா­னினால்  வழி­ந­டாத்­தப்­படும் ராக்கைன் மாநில ஆலோ­சக அமையம் விதந்­து­ரைப்­புக்­களை கடந்த மாதம் வெளி­யிட்­டி­ருந்­தது. இவ்­வி­தந்­து­ரைப்­புக்கள் வெளி­யி­டப்­பட்டு சில மணி­நே­ரங்­களின் பின்­னரே இரா­ணு­வத்தின் வன்­மு­றைகள் ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இரா­ணுவம் கூறு­வ­துபோல் ரோஹிங்­யர்கள் காவ­ல­ரண்­களை தாக்­கி­யமை வன்­மு­றைக்கு வழி­ச­மைத்­ததா? அல்­லது ஆலோ­சக அமையம் வெளி­யிட்ட விதந்­து­ரைப்­புக்கள் மேல் கொண்ட காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக அரசே வலிந்து வன்­மு­றையை உரு­வா­க்கி­யதா? என்­பது மக்கள் மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டிய கேள்­வி­யாக எழுந்­துள்­ளது. 

அர­சினால் ஒடுக்­கப்­பட்ட இனக்­கு­ழு­வி­ன­ருக்கு உதவ முன்­வரும் தன்­னார்வ அமைப்­புக்கு மியன்மார் அரசு “தீவி­ர­வாத அனு­தா­பிகள்” என இழித்­து­ரைக்­கின்­றமை மியன்­மாரில் மனிதாபிமானம் மரித்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

ரோஹிங்யா முஸ்லிம்களை மியன்மார் நாட்டின் சுதேசிகளாக அங்கீகரிப்பதில் மியன்மாரின் பௌத்த தீவிர போக்குடைய அமைப்புக்கள் தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால் ரோஹிங்யர்கள் தலைமுறை தலைமுறையாக மியன்மாரின் ராக்கைன் பகுதியில் வாழ்ந்து வருவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனினும் அரசு அதனை மெத்தனப்போக்கில் மறுத்தே வருகின்றது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அரசு காட்டி வரும் வெறுப்புணர்ச்சியும் பாகுபாடும் அதனால் வழிவந்த முஸ்லிம் நாடுகளின் மியன்மார் மீதான கசப்புணர்வுகள் என்பன நீண்டகாலத்தில்  ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் தடைக்கல்லாக விளங்கும் என்பதை அரசு உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

மியன்மார் அரசும் தீவிர போக்குடைய பௌத்த அமைப்புக்களும் ரோஹிங்யர்களை தம் நாட்டு சொந்த பிரஜைகளாக அங்கீகரித்து அரவணைப்பதே இந்நீண்டகால தீரா பிரச்சினையின் இறுதி தீர்வாகும். இதற்கு ஐ.நா. சபை வெறும் அறிக்கை விடும் சபையாக அன்றி உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக உயிரோட்டமுள்ளதாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.