Verified Web

39 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக சேவை புரிந்த ஏ.சி.எஸ். ஹமீத்

2017-09-06 18:57:24 Administrator

ரஷி ஹாஷிம்
ஊடகச் செயலாளர், தபால், தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சு 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வ­ருடம் தொடர்ச்­சி­யாக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகித்த 40 வருட கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்தார். அப்­ப­டி­யாயின் கடந்த வருடம் 39 வருடம் பிர­த­ம­ருக்கு பூர்த்தி, இதற்கு முன்னர் 39 வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய தலைவர் ஒருவர் இருக்­கின்றார். இவரும் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவப்படுத்­திய பன்­முக ஆளுமை கொண்டவர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளிவி­வ­கார பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது அவர் வெளிவி­வ­கார அமைச்­ச­ராக இருந்­தவர். அந்தக் கனவான் அர­சி­யல்­வாதி வேறு­யா­ரு­மல்ல 20 ஆம் நூற்­றாண்டில் இலங்கை அர­சியல் வர­லாற்றில் தனி­யிடம் பிடித்­தி­ருந்த ஏ.சி.எஸ்.ஹமீத் ஆவார்.

 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அக்­கு­ற­ணையில் பிறந்த ஏ.சி.எஸ்.ஹமீத், கண்டி புனித அந்­தோ­னியார் கல்­லூ­ரியில் கல்வி கற்றர். மாத்­தளை வின்ட்சர் கல்­லூ­ரியில் ஒரு ஆசி­ரி­ய­ராக தனது சமுகப் பணியை ஆரம்­பித்தார். ஆசி­ரி­ய­ராக, அதி­ப­ராக கல்விப் பணி ஆற்­றி­வந்த கால­கட்­டத்தில் பொது­மக்­களின், குறிப்­பாக பெரும்­பான்மைச் சமூக மக்­களின் உந்­து­தலால் 1950 களில் அர­சி­ய­லுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டவர். அவர் 1960 ஆண்டு மார்ச் தேர்­தலில் வெற்­றி­பெற்று இலங்­கையின் 4 வது பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­ன­ரானார். பின்னர் 1960 ஜுலை, 1965, 1970, 1977, 1989, 1994 ஆகிய வரு­டங்­களில் இலங்­கையின் 5 ஆம், 6 ஆம், 7 ஆம், 8ஆம், 9 ஆம் மற்றும் 10 ஆவது பாரா­ளு­மன்­றிலும் இடம்­பி­டித்தார். 1960 ஆண்டு முதல் தோல்­வி­யு­றாது தொடர்ந்து மர­ணிக்கும் வரை மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட பிர­தி­நி­தி­யாகத் திகழ்ந்தார்.

ஏ.சி.எஸ். ஹமீத் இந்த நாட்டின் முப் பெரும் சமூ­கங்­க­ளாலும் முழு­மை­யாக மதிக்­கப்­பட்ட ஒரு சிறந்த அர­சி­யல்­வாதி ஆவார். இன, மத, குல, அர­சியல் பேதங்­க­ளுக்கு அப்பால் நின்று அப்­ப­ழுக்­கற்ற சேவை­யாற்றி மக்கள் உள்ளங்களிலே நிலை­யான ஓரி­டத்தைத் தன­தாக்­கிக்­கொண்­டவர்.

இத்­துடன் இலங்கை வர­லாற்றில் முத­லா­வது முஸ்லிம் வெளிவி­வ­கார அமைச்­ச­ராக பத­வி­வ­கித்த பெருமை ஏ.சி.எஸ்.ஸையே சாரும். அத்­துடன் நீதி அமைச்சு மற்றும் உயர்­கல்வி அமைச்சுப் பத­வி­க­ளையும் வகித்­துள்ளார்.

நாளைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கெல்லாம் இன்றே உதா­ர­ணத்­து­வ­மாக வாழ்ந்து காட்­டிய பெரு­மகன் அவர். இத­னால்தான் அவரால் எண்­பது சத­வீ­த­மான பெரும்பான்மையினர் மத்­தியில் 39 ஆண்­டு­காலம் தனது பிர­தி­நி­தித்­து­வத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள முடிந்­தது.
அர­சி­யல்­வா­திகள் என்போர் மக்­க­ளிடம் பெற்ற ஆணையைப் பரி­பூ­ர­ண­மாக நிறை­வேற்றும் தன்­மை­யோடு விளங்க வேண்டும். இல்­லாத பட்­சத்தில் மக்­க­ளா­லேயே நிரா­க­ரிக்கப் படு­வ­தற்கு முன் தாமா­கவே அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெறும் கலா­சா­ரத்தை ஏற்க தம்மைப் பக்­கு­வப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்ற யதார்த்­தத்­தையும் போதித்­தவர் அவர்.

1960 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அக்­கு­றணை தொகு­தியில் போட்­டி­யிட்டு வெற்றிவாகை சூடிய ஏ.சி.எஸ். அனைத்து இன மக்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்றி தன் சேவையை ஆற்­றிக்­கொண்­டி­ருந்த சம காலத்­தி­லேயே உலக விவ­கா­ரங்கள் தொடர்­பான துறையில் ஈடு­பட்டு நாட்டின் மேம்­பாட்­டுக்­கான வழி­வ­கை­க­ளையும் மேற்­கொண்டார்.

1977 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் தொகுதி நிர்­ணய அடிப்­ப­டையில் பெரும்­பான்­மை­யி­னரைப் பெரு­வா­ரி­யாகக் கொண்டு அமைக்­கப்­பட்ட ஹாரிஸ்­பத்­துவ எனும் இரட்டை அங்­கத்­தவர் தொகு­தியில் முத­லா­வது உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார்.
இதன்­போது, இலங்­கையின் வெளி­வி­வ­காரக் கொள்கை இலக்­கின்றிப் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த வேளையில் இப்­ப­தவி இவ­ரிடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஏ. சி. எஸ். ஹமீ­துக்கு உலக விவ­கா­ரங்கள் தொடர்பில் ஏற்­க­னவே இருந்த ஆழ்ந்த பரிச்­சயம், உலகத் தலை­வர்­க­ளோடு குறிப்­பாக முஸ்லிம் நாடு­க­ளோடு கொண்­டி­ருந்த நட்­பு­றவு என்­ப­வற்றைப் பிரயோ கித்து இலங்­கையின் புகழை உலக அரங்கில் ஏற்றி வைப்பதில் அவர் பெரும் வெற்றி கண்டார்.

அணி­சேரா நாடு­களின் உச்சி மாநாடு, சார்க் அமைப்பு நாடு­களின் கூட்டத் தொடர், பொது­ந­ல­வாய நாடுகள் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­னது கூட்டத் தொடர்கள், ஆயுத பரி­க­ரண மாநா­டுகள், இலங்­கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் அமைப்பு என்­பற்றில் கலந்­து­கொண்டு வெளி­யு­றவு அமைச்சர் என்ற ரீதியில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்­களும், அபிப்­பி­ரா­யங்­களும், வேண்­டு­கோள்­களும் உலக அரங்கில் இலங்­கையைக் கீர்த்­தி­மிக்க நாடாகப் பரி­ண­மிக்க வைத்த அதே­வேளை, நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கும், அபி­வி­ருத்­திக்கும் பெரும் சக்­தி­யா­கவும் விளங்­கின.

அர­சி­யலில் பரந்த அறிவைப் பெற்­றி­ருந்த இவர் பாராளுமன்ற நட­வ­டிக்­கை­களின் போது, வாதப் பிர­தி­வா­தங்­களின் போது எதி­ர­ணி­யி­னரை திணறச் செய்­துள்­ள­தோடு, இவரின் கருத்­துக்­களை அங்­கீ­க­ரித்து அதன் பிர­காரம் செயற்­பட வகை செய்­துள்ள சந்­தர்ப்­பங்­களும் அனந்தம்.

சகல தரப்பினரதும் கருத்­துக்­களைப் பணி­வோடு ஏற்று மதிப்­ப­ளித்து எதி­ர­ணி­யி­னரின் கருத்­துக்­க­ளாக இருந்­தாலும் நியா­ய­மான வற்றை ஏற்று நடை­மு­றைப்­ப­டுத்தும் தன்மை அவ­ரிடம் காணப்­பட்­டது. நாட்டு நல­னுக்கு அத்­தி­யா­வ­சியம் எனக் கருதும் பட்­சத்தில் எதிர்ப்­பு­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது செயற்­படும் துணிவும் இவ­ரிடம் இருந்­தது.

கலா­நிதி ஏ. ஸீ. எஸ். ஹமீத் அர­சி­யலில் உச்­சா­ணியில் இருந்த போதிலும் தனது சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சினைகள், அல்­லல்கள், அநீ­தி­களை, தட்டிக்கேட்கத் தவ­ற­வில்லை. சந்­தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் சமூ­கத்தின் குறை­களைக் களை­யவும் அவர் பின்­வாங்­க­வில்லை. அதே­வேளை, முஸ்லிம் சமு­தாயம் பின்­ன­டைவு காண்­ப­தற்­கான அடிப்­படைக் கார­ணங்­களைக் கண்­ட­றிந்து நிவா­ரணம் பெற்­றுக்­கொ­டுப்பதிலும் அவர் முன்­னின்றார்.

 முஸ்லிம் சமு­தாயம் கல்­வியில் சிரத்தை கொண்­டால்தான் சமு­தா­யத்தின் நாளைய மறு­ம­லர்ச்சி உறு­தி­யாகும் என்­பதை திட­மாக நம்­பிய அவர், அவ­ருக்கு முன்­னி­ருந்த தலை­வர்கள் மேற்­கொண்­டது போல் கல்­வியை மேம்­ப­டுத்தும் வழி­முறைகளை செயற்­ப­டுத்­தினார். முஸ்லிம்கள் உயர் கல்­வி­யிலும் தொழில்­நுட்பக் கல்­வி­யிலும் தம் திறமைகளைப் பறை­சாற்ற வேண்டும் என்­ப­தையும் அவர் சமுதாயத்­துக்கு உணர்த்­தினார். அதற்கு வாய்ப்­பு­களை உருவாக்கிக் கொடுப்­ப­திலும் அவர் முனைப்­போடு செயல்­பட்டார்.

உலக நாடு­களில் குறிப்­பாக முஸ்லிம் நாடு­களில் அன்­னா­ருக்­கி­ருந்த செல்­வாக்கைப் பிர­யோ­கித்து இலங்­கையின் தூதரகங்­களை அங்­கெல்லாம் நிறு­வி­ய­தோடு, பல்­வேறு தரப்­பட்ட தொழில்­வாய்ப்­பு­க­ளுக்­காக இலங்­கை­யர்­களை அங்கு அனுப்பி அந்­நிய செலா­வ­ணியை இங்கு குவிக்க வழி­வகை மேற்கொண்டார். நாட்டின் இன்­றைய பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு இதுவே அச்­சா­ணி­யாக அமைந்­துள்­ளது.
இது மட்­டு­மன்றி அரா­பிய நாடுகள் உட்­பட அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களின் தலை­வர்­க­ளோடு தான் கொண்­டி­ருந்த நட்பைப் பிர­யோ­கித்து எமது நாட்டில் முத­லீ­டு­களை மேற்கொள்­ளு­மாறும் அவர்­களை ஊக்­கு­வித்தார். அவர் தனது பதவிக் காலத்­திலே முஸ்­லிம்­க­ளுக்­காக ஆற்­றிய சேவைகளைப் பற்றி அவர் தம்­பட்டம் அடித்துக் கொண்­டி­ருக்­க­வில்லை. அது அவ­ருக்கு அவ­சி­ய­மாக இருக்­கவுமில்லை.

அர­சி­யலை அர­சி­ய­லாக மட்டும் அவர் நோக்­க­வில்லை. அர­சி­யலை சமூகக் கண்­கொண்டும் அவர் நோக்­கினார். மர்ஹூம் ஹமீத் பெரும்­பான்மைச் சமூ­கத்­தோடு ஒன்றி இருக்­கவும். அவர்­க­ளுக்கு சேவை புரி­யவும் வேண்­டிய கடப்­பாடு உள்­ள­வ­ராக இருந்­ததால் தனது சமு­தாய சேவைகளைப் பிர­பல்­யப்­ப­டுத்தும் நிலையில் அவர் இருக்­க­வில்லை. இதனால் அவ­ரது பரந்­து­பட்ட சேவைகள் இன்று நினை­வு­கூ­ரப்­ப­டா­மலே இருக்­கின்­றன.

ஜன­நா­யக ஆட்சி முறையில் பண்­பட்­டி­ருந்த இலங்கை காலத்­துக்குக் காலம் பத­விக்கு வந்த அர­சாங்­கங்­களின் முரண்­பட்ட கொள்­கைகள் கார­ண­மாக இளை­ஞர்கள் மத்­தியில், இனங்கள் மத்­தியில், பிர­தே­சங்கள் மத்­தியில் சிக்கல் களை உரு­வாக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டது. காலப்போக்கில் இது புரட்­சி­யா­கவும் தலை ­யெ­டுத்­தது.

இலங்­கை­யிலே காலம் கால­மாக நிலை­பெற்று வந்த ஜனநாயக அர­சியல் முறை தடம்­மாறி, கசப்­பான உணர்­வு­களும் பசப்­பான வார்த்­தை­களும் மேலோங்கி, ஆயுத கலா­சாரம் தலை­தூக்­கிய வேளையில், அதனை அடக்கு முறையில் ஒடுக்­கு­வதை விடுத்து இளைஞர் அமை­தி­யின்­மைக்­கான கார­ணங்­களைக் கண்­டு­பி­டித்து, அவற்­றுக்குத் தீர்வு காண்­பதுதான் சிறந்த அணுகு முறை என்­பதை அன்­றைய ஆட்­சியா ளர்­க­ளுக்கு எடுத்துக் கூறிய அர­சியல் ஞானி அவர்.

சமா­தா­னத்­தையே உயிர் மூச்­சாகக் கொண்டு வாழ்ந்த கலா­நிதி ஏ.சி.எஸ். ஹமீத் நாட்டின் சமாதானத்­துக்­கான விலை­யாக உயி­ரையே பணயம் வைத்து செயற்பட்டார். புரிந்­து­ணர்­வுட னான பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சமா­தா­னத்தை நிலைநிறுத்த அரும்பாடுபட்டார்.
நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை பதவிக்கு வரும் அரசுகளுக்கு மட்டுமே பொறுப்பான ஒன்றல்ல. எதிரணியினருக்கும் அவதானம் செலுத்தவேண்டிய பாரிய தேசியப் பிரச்சினை, இதுவென்பதை அதிகார தரப்பில் இருந்த போதிலும், எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் அவர் வலியுறுத்தினார்.

அரசியலை அடிப்படையாகக் கொண்டு தான் பிறந்த பொன் நாட்டுக்கும், தான் சார்ந்த சமுதாயத்துக்கும் அரும்பணியாற்ற இன்றைய காலகட்டத்தில் ஏ.சி.எஸ். ஹமீத் போன்ற தலைவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். தேசிய ஐக்கியத்துக்கும், சமுதாய விமோசனத்துக்கும், கனவான் அரசியலுக்கும் இன்றியமையாத காலகட்டத்தில் 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அன்னாரை இழக்க வேண்டி நேரிட்டது உலகத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அல்லாஹ் அன்னாருக்கு சிறப்பான ஜென்னதுல் பிர்தெளஸை வழங்குவானாக.