Verified Web

முஸ்லிம் சமூகத்தின் அவலங்களும் சீர்திருத்தவாதிகளின் நடவடிக்கைகளும்

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2017-09-05 10:47:26 Ash Sheikh SHM Faleel

 இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை உற்­று­நோக்­கும்­போது மிகுந்த கவ­லையும் அதே­நேரம் ஒரு­வித அச்­சமும் எம்மை பீடிக்­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக தஃவா, அர­சியல் ஆகிய இரண்டு துறை­களில் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­போ­ரது போக்­குகள் சமூ­கத்தை குட்டிச் சுவ­ராக்கிக் கொண்­டி­ருப்­ப­தாகக் கருத முடியும். பின்­வரும் சம்­ப­வங்கள் இதற்குச் சான்­றாகும். 

01. ஒரு சாரார், குர்­ஆ­னுக்கு ஹதீஸ் முரண்­ப­டுமா என்ற சர்ச்­சையில் சிக்கி இதற்­கான விவாத மேடை­களைக் கூட ஏற்­பாடு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்யும் கருத்­துகள் இஸ்­லா­மிய வரம்­பு­களை மீறி­யி­ருக்­கின்­றன.

02. இரண்டு அர­சியல் கட்­சி­களைச் சேர்ந்த ஆத­ர­வா­ளர்கள் தத்­த­மது அர­சியல் தலை­வர்­களை நியா­யப்­ப­டுத்­தியும் பிறரைக் குறை­கண்டும் எழுதி வரு­கி­றார்கள். எதிர்த்­த­ரப்­பினர் மீது விப­சாரக் குற்றம் சுமத்து­வது, அபாண்டம் சுமத்­து­வது என்­ப­தற்­கெல்லாம் இவர்கள் கையாளும் வழி­மு­றைகள் நவீன தொழில்­நுட்ப முன்னேற்றத்தையே மிஞ்சி நிற்­கின்­றன. போட்டோ சொப்பில் செய்­யப்­பட்ட ஒரு போட்­டோவை ஒரு கட்­சிக்­காரர் முக­நூலில் பதி­வேற்ற அடுத்த கட்­சிக்­கா­ரர்கள் அதே போட்­டோவை ’போட்டோ சொப்’ முறைப்­படி எடிட் செய்து தமது எதிர்த்­த­ரப்­பாரை அவ­ம­திக்­கி­றார்கள்.

03. சவூ­தியும் கட்­டாரும் பகைத்துக் கொண்­டதைத் தொடர்ந்து ஸலபி, இக்வான், ஷீயா, சுன்னா, எகிப்து, துருக்கி ஆகிய சொற்கள் பட்ட பாடும் எய்­யப்­பட்ட எறி­க­ணை­களும் இன்னும் இரத்தம் வழியச் செய்து கொண்­டி­ருக்­கின்­றன.

04. சர்­வ­தேச பிறையா, தேசியப் பிறையா, அரபா நாள் சவூ­திப்­ப­டியா, உள்­நாட்டுப் படியா சூனி­யத்தை நம்­பு­பவர் பற்­றிய தீர்ப்பு யாது என்­றேல்லாம் தலை­களைப் பிளந்து கொண்டு ஆய்­வுகள் நடத்­தப்­பட்டு வரு­கி­றன.இவற்றைப் பார்க்கும் போது ஏற்­படும் மனக்­க­வ­லையை வார்த்­தை­களால் வடிக்க முடி­யா­துள்­ளது. 

அவ­தா­னங்கள்

ஏன் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம்? பின்­வரும் அவ­தா­னங்­களை இங்கு குறிப்­பி­டலாம்.

1. இலங்­கை­யி­லுள்ள மொத்த சனத்­தொ­கையில் 90%ஆக­வுள்ள முஸ்லிம் அல்­லாத சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இந்த வெட்டுக் குத்­து­களும் சிறு பிள்ளைத் தன­மான சண்­டை­களும் நன்கு தெரியும். எம்மைப் பார்த்து அவர்கள் எள்ளி நகை­யா­டு­கி­றார்கள். முஸ்லிம் சமூகம் பற்­றிய மதிப்­பு­ணர்வு அவர்­க­ளது உள்­ளங்­க­ளி­லி­ருந்து படிப்­ப­டி­யாக எடு­பட்டுப் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. முஸ்லிம் சமூ­கத்தை உணர்ச்சி வசப்­படும், அவ­ச­ரப்­படும், அற்ப இலக்­கு­க­ளுக்­காக சண்­டை­போடும், கட்­டுக்­க­டங்­காத ஒரு சுய­நல சமூ­க­மா­கவே அவர்கள் பார்க்­கி­றார்கள். சாந்தி, சமா­தா­னத்தை, சமூகக் கட்டுக் கோப்பை தராத ஒரு மார்க்­கத்தை முஸ்­லிம்கள் பின்­பற்றிக் கொண்­டி­ருப்­ப­தாகக் கருதி இஸ்­லாத்­தி­லி­ருந்து அவர்கள் தூர­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். விமர்­ச­னங்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இஸ்­லாத்தின் அழ­கிய கருத்­து­களை அவர்கள் நூல்­களில் படித்­தி­ருந்­தாலும் முஸ்­லிம்­க­ளது வாழ்வில் அவை அமுலில் இல்­லாமல் இருப்­பது அவர்­க­ளுக்கு இந்த மார்க்­கத்தில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. உண்­மை­யாகக் கூறப்­போனால் மார்க்­கத்தின் மீது முட்­கம்­பி­களை போட்டு பிறர் அதனுள் நுழை­யா­தி­ருக்க நாமே கார­ண­மாக அமைந்­தி­ருக்­கிறோம். எதிலும் குதர்க்கம், விதண்டா வாதம், புன்­மு­றுவல் இல்­லாத முக­பா­வனை, பிறரை சகிக்­காத மனப்­பாங்கு இவை தான் இஸ்லாம் தரும் பண்­புகள் என்று அவர்­களை எண்ணச் செய்­து­விட்டோம்.

2. குளிக்­கப்போய் சேறு பூசிக் கொள்­கிறோம். இதன் பொருள்தான் என்ன? சமூக சீர்­தி­ருத்தம், தஃவாப் பணி, அர­சியல் செயற்­பா­டுகள் என்­பன நாட்­டிலும் சமூ­கத்­திலும் நல்ல பல விளை­வு­களை ஏற்­ப­டுத்த வேண்டும். அதுதான் அவற்றின் இலக்­குகள். ஆனால் இந்த செயற்­பா­டு­களில் சம்­பந்­தப்­பட்­டுள்ள சிலர்- - பலர் அல்ல - எரி­கிற நெருப்பில் எண்ணெய் வார்க்­கி­றார்கள். குளிக்கப் போய் சேறு பூசிக் கொள்­கி­றார்கள்.

இஸ்­லா­மிய சீர்­தி­ருத்த, தஃவா, அர­சியல் சமூகப் பணி­களின் இலக்­குகள், சமூக ஐக்­கியம், ஸ்திரப்­பாடு சகோ­த­ரத்­துவ வாஞ்சை, அபி­வி­ருத்தி, இன சௌஜன்யம் போன்­ற­ன­வாகும். ஆனால், களத்தில் இருப்­ப­வர்­க­ளது முயற்­சிகள் ’சாண் ஏற முழம் சறுக்­கு­கின்­றன’.இவர்கள் வாய் மூடி இருந்­தி­ருந்தால் இஸ்லாம் எவ்­வ­ளவோ பயன் பெற்­றி­ருக்கும்.

3.’ தாஈ’ – இஸ்­லா­மிய பிர­சா­ர­கர்­களிற்  சிலர் குர்­ஆனில் உள்ள சூரதுல் ஹுஜ்ராத், சூரதுல் நூர் போன்ற சூராக்­களை ஓது­வதே இல்லை என்ற முடி­வுக்கு வரலாம். ஓதி­னாலும் அவற்­றி­லுள்ள கருத்­துகள் பல அவர்­க­ளது வாழ்வில் ஏன் வர­வில்லை என்று ஆச்­ச­ரி­யப்­பட வேண்­டிய நிலை வந்­தி­ருக்­கி­றது.

’சூரதுல் ஹுஜ்ராத்’ இல் வரும், அல்­லாஹ்­வையும் தூத­ரையும் முந்­தா­தீர்கள். நபியின் சப்­தத்­துக்கு மேலால் சப்­தத்தை உயர்த்­தா­தீர்கள் ஆகிய கருத்தில் வரும் வச­னங்கள் தலை­மைத்­துவக் கட்­டுப்­பாட்­டையும் பொறுப்பில் உள்­ள­வர்­க­ளுக்கு மரி­யாதை செய்­வ­தையும் வலி­யு­றுத்­து­கின்­றன. ஆனால், சமூ­கத்தில் எவ­ருக்கும் கட்­டுப்­ப­டாத பலர் உரு­வாகி வரு­கி­றார்கள்,இது குர்­ஆனின் கட்­டளை மீற­லாகும். தலை­மைத்­து­வங்­களும் நம்­பகத் தன்­மை­யை இழந்து வரு­கின்­றன. தடி எடுத்­த­வர்கள் எல்­லோரும் வேட்­டைக்­கா­ரர்கள்.ஹதீஸ் துறையில் நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்கள் இருக்க மார்க்கம் அல்­லாத துறை­களில் இருப்போர் ஹதீஸும் குர் ஆனும் முரண்­ப­டுமா என விவா­திக்கத் தலைப்­பட்டு விட்­டார்கள்.அல்­லாஹ்­வுக்கும் தூத­ருக்கும் ’உலுல் அம்ரு’ களுக்கும் கட்­டுப்­ப­டுங்கள் என்று தான் குர்ஆன் கூறு­கி­றது. ’உலுல் அம்­ரு’கள் என்போர் துறை­சார்ந்­த­வர்கள்,நிபு­ணத்­துவ அறிவைப் பெற்­ற­வர்கள் என்­பது பொரு­ளாகும்.மருத்­துவக் கல்­லூ­ரியில் சென்று முறை­யாக மருத்­துவம் கற்­காமல் மருத்­துவம் செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கும் சமூகம், மார்க்­கத்தை துறை போகக் கற்­காமல் இஸ்­லாத்தை ’எடுப்பார் கைப் பிள்­ளை­யாக’ மாற்­றி­யுள்ளோர் பற்றி மெளனம் சாதிப்­பது ஏன்?  ’ஸைட்டம்’ பற்றி அலட்­டி­கொள்ளும் அள­வுக்கு இலங்­கையில் இருக்கும் மார்க்கம் பேச உரிமை அற்­ற­வர்கள் பற்றி நாம் பேசு­வ­து­மில்லை. இதனை கட்­டுப்­ப­டுத்த ‘மெகா­னிசம்’ ஒன்­றையும் காண­வில்லை.

 ’சூரதுல் ஹுஜ்ராத்’ இல் அல்லாஹ்,  தக­வல்­களைப் பரப்ப முன்னர் ஊர்­ஜிதம் செய்­யுங்கள். புறம் பேசா­தீர்கள். பரி­க­சிக்­கா­தீர்கள், பிற­ரது குறை­களை துருவித் துருவி ஆரா­யா­தீர்கள், பிறர் பற்றி தப்­பெண்ணம் கொள்­ளா­தீர்கள். இரண்டு சாரார் மோதிக் கொள்ளும் நிலை ஏற்­பட்டால் சமா­தானம் செய்து வையுங்கள் போன்ற கட்­ட­ளைகள் மிகத் தெளி­வாகக் கூறு­கிறான்.

முக­நூலில், வட்ஸ்­அப்பில் பதி­வேற்­றப்­படும் பல பதி­வுகள், போட்­டோக்கள் இந்த அடிப்­ப­டை­யான இஸ்­லா­மிய தொடர்­பாடல் ஒழுக்க விதி­களை மீறு­வ­தாயின் அது என்ன இஸ்லாம்? இதற்­கெப்­படி இஸ்­லா­மிய பிர­சாரம் என்று கூற முடியும்?

“The ends justify the means” -  இலக்­குகள் வழி­மு­றை­களை நியா­யப்­ப­டுத்தும்- என்ற கருத்து  இஸ்­லாத்­திற்கு மிக­வுமே முர­ணா­னது. ’இலக்கு தூய்­மை­யாயின்  வழி­மு­றைகள் எப்­ப­டியும் அமை­யலாம்’ என்று நினைப்­ப­வர்கள் பாரிய தவறைச் செய்­கி­றார்கள். ஹராத்தை நோக்கி இட்டுச் செல்லும் அனைத்தும் ஹரா­மாகும் என்­பதே இஸ்­லாத்தின் தாரக மந்­தி­ர­மாகும். இஸ்லாம் கூறும் சமூக அமைப்பை பொய், புறம், கோள், பரி­காசம், அகம்­பாவம், அபாண்டம் போன்­ற­வற்­றி­னூ­டாக அடைய முடி­யாது. ’படிப்­பது தேவாரம், இடிப்­பது கோயில்’ என்­பது போல மனதில் உள்ள இலட்­சியம் இஸ்லாம். ஆனால் அதனை அடையக் கையா­ளப்­படும் அணு­கு­மு­றைகள் இஸ்­லா­மிய ஒழுங்­கு­களைப் பேணாத போது அது ஹரா­மா­கி­விடும்.

இஸ்லாம் புறம் பேசு­வதை ஹரா­மாக்­கி­யுள்­ளது. வதந்­தி­களை நம்­பு­வதை தடுத்­தி­ருக்­கி­றது. இஸ்­லா­மியப் பணியில் ஈடு­ப­டு­பவர்  தஃவாவின் போது பிற­ரது மாமி­சத்தை புசிப்­ப­தாயின், வதந்­தி­களை பரப்­பு­வ­தாயின் அல்லாஹ் எப்­படி அதனை அங்­கீ­க­ரிப்பான்?
ஒருவர் தான் பொருத்­த­மா­னவர் என்று நம்­பி­யுள்ள அர­சி­யல்­வா­தியை தொடர்ந்தும் ஆட்சிக் கதி­ரையில் தக்க வைத்­துக்­கொள்ள அவ­ரது வாலைப் பிடித்­துக்­கொண்டு மாற்று அர­சியல் கட்­சித்­த­லைவர் பற்றி அபாண்டம் சுமத்­து­வ­தாயின் அல்லாஹ் எப்­படி இந்தப் பாவத்தை மன்­னிப்­பானோ யாம் அறியோம்.

முஸ்லிம் சமூ­கத்தின் விடி­வுக்­கா­கவே தாம் கட்­சி­களை ஸ்தாபித்­தி­ருப்­ப­தாகச் சிலர் கூறு­கி­றார்கள். முஸ்லிம் பெயர்­களைத் தாங்கி ‘நாரே தக்பீர்’ முழங்கி, பாதி­ஹா­வு­டனும் ’நஹ்­ம­துஹு வநஸ்­த­யீ­னுஹு’ உடனும் ஆரம்­பித்து சுப்­ஹா­ன­கல்­லா­ஹும்ம, துஆ­வுடன் கூட்டம் முடி­வ­டை­கி­றது என்­ப­தற்காகக் எந்தக் கட்­சியும் முஸ்லிம் கட்­சி­யாகி விட­மாட்­டாது. இலக்கில் தூய்மை, எண்­ணத்தில் தூய்மை, அணு­கு­மு­றையில் தூய்மை இருப்­பது அவ­சி­ய­மாகும். எல்­லா­வற்­றிலும் இஸ்­லா­மிய முத்­திரை ஜொலிக்க வேண்டும்.
சூரதுன் நூரில் வரும் ஒரு வச­னத்­தின்­படி அபாண்டம் சுமத்­து­வது சாதா­ரண பாவ­மல்ல. அப்­ப­டி­யான குற்­றத்தில் சம்­பந்­தப்­ப­டு­ப­வ­ருக்கு 80 கசை­ய­டிகள் வழங்­கப்­பட வேண்டும். அவ­ரது சாட்­சியம் இதற்குப் பிறகு ஏற்­கப்­ப­ட­மாட்­டாது. அப்­ப­டி­யாயின் கட்­சியை வளர்க்க அபாண்­டங்­க­ளையும் புழு­கு­மூட்­டை­க­ளையும் முதுகில் சுமந்­து­கொண்டு அர­சியல் செய்­வோரும் இவர்­களை கண்டு கொள்­ளாமல் இருக்கும் கட்சித் தலை­மை­களும் தொண்­டர்­களும் எப்­படி இஸ்­லாத்தின் பிர­தி­நி­தி­க­ளாக இருக்க முடியும்?. 


இஸ்­லா­மிய தராசில் எமது செயல்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

01. முஃமின் பிறரைக் குத்திக் குறை­கூ­று­ப­வ­னா­கவோ, சபிப்­ப­வ­னா­கவோ, தரங்­கெட்ட, வெட்கம் கெட்ட பேச்­சு­களைப் பேசு­ப­வ­னா­கவோ இருக்­க­மாட்டான்.” (ஆதாரம்:திர்­மிதீ:1977) 

02. பரஸ்­பரம் பொறாமை கொள்­ளா­தீர்கள். வெறுப்புக் கொள்­ளா­தீர்கள். ஒருவர் மற்­ற­வரை ஒதுக்கி புறக்­க­ணித்து வாழா­தீர்கள்.ஒரு முஸ்லிம் மற்ற முஸ்­லிமின் சகோ­த­ர­னாவான். அவன் அவ­னுக்கு அநீ­தி­யி­ழைக்­க­மாட்டான். (உதவி புரிய வேண்­டிய நேரத்தில்) துரோகம் செய்­ய­மாட்டான். அவனைத் தாழ்ந்­த­வ­னாகக் கரு­த­மாட்டான்.ஒருவன் தனது சகோ­தர முஸ்­லிமை இழி­வு­ப­டுத்­து­வதே அவ­னுக்கு தீமை கிடைப்­ப­தற்குப் போது­மா­ன­தாகும். ஒவ்­வொரு முஸ்­லி­மு­டைய இரத்­தமும், செல்­வமும், மானமும் மற்­றைய முஸ்­லி­முக்கு ஹரா­மாகும்.” (ஆதாரம் :முஸ்லிம்)

03. பிறரைத் தூசித்து அபாண்டம் சுமத்தி அதே­வேளை தொழுது, நோன்­பி­ருந்து, ஸகாத்தும் கொடுத்­து­வந்த ஒரு­வ­ரது நன்­மைகள் அவரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மறு­மையில் கொடுக்­கப்­படும் என்றும் இவ­ரது நன்­மைகள் முடிந்­து­விட்டால் இவரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது தீமைகள் இவ­ருக்கு சுமத்­தப்­பட்டு இறு­தியில் இவர் நர­கில் ­நு­ழைய நேரிடும் என்று கூறும் ஹதீஸ் ஸஹீஹ் முஸ்­லிமில் பதி­வா­கி­யுள்­ளது.

04. மனி­தர்­க­ளுக்கு மத்­தியில் அல்­லாஹ்­வுக்கு மிக வெறுப்­புக்­கு­ரி­யவர் அளவு மீறி தர்க்கம் செய்­ப­வ­ராவார்” (ஆதா­ரம்-­பு­ஹாரி; 2277), ”தீவி­ர­வா­திகள் அழிந்து விட்­டார்கள்” (அழிந்­து­வி­டட்டும்), (ஆதாரம்;-­ முஸ்லிம்- 2670) போன்ற ஹதீஸ்கள் வார்த்­தை­களில் கனிவும் பேச்­சு­களில் இங்­கி­தமும் நடத்­தை­களில் நிதா­னமும் இருக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­கின்­றன.அறி­வு­பூர்­வ­மான ஆய்­வு­க­ளையும் துறை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளது வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளையும் இஸ்லாம் விரும்­பு­வது மட்­டு­மல்ல அது அவ­சியம் என்றும் கூறு­கி­றது.ஆனால் கருத்து பேதங்­களின் போதான ஒழுக்­கங்­களை அனை­வரும் கடைப்­பி­டிக்க வேண்டும் என்­பதில் அது மிகக் கடு­மை­யாக இருக்­கி­றது

எனது இயக்க கட்­சிக்­காரர் மட்­டுமே வெல்ல வேண்டும் என்றும் பிற இயக்­கத்­தவர் ஏதா­வது ஒரு நற்­க­ரு­மத்தில் ஈடு­பட்டு அவ­ருக்கு நற்­பெயர் கிடைத்து விடக்­கூ­டாது என்றும் சிந்­திப்­பது இயக்­க­வெ­றியும் ஜாஹி­லிய்­ய­து­மாகும். ”முரண்­படு பிர­ப­ல­மாவாய்” என்று அறபில் ஒரு பழ­மொழி உண்டு.தமக்கு அறி­வி­ருக்­கி­றது என்று பிறர் மெச்ச வேண்டும் என்­ப­தற்­காக செயற்­ப­டு­வது மகா பெரிய அநி­யா­ய­மாகும். இவ்­வாறு நடந்­து­கொள்­வது ஒரு இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரிடம் – தாஈ-­யிடம் எப்­படிப் போனாலும் ஒரு சாதா­ரண முஸ்­லி­மிடம் கூட இருக்க முடி­யாத, இருக்கக் கூடாத இழிந்த பண்­பு­க­ளாகும். மாற்று இயக்­கத்­த­வர்­க­ளது உறவை முறித்துக் கொள்­வது, அவர்­க­ளது தவ­று­களை ஊதிப் பெருப்­பிப்­பது. தமது இயக்­கத்­த­வர்­க­ளது  தவ­று­களை நியா­யப்­ப­டுத்­து­வது, இயன்­ற­வரை அவற்றை மறைப்­பது எல்லாம் தெட்டத் தெளி­வான நய­வஞ்­ச­கத்­த­னமும் அரா­ஜ­க­மு­மாகும். இஸ்­லாத்தின் லேபல் தரித்து வேஷம் போட்டு ஜாஹி­லிய்­யத்தை அமு­லாக்கும் பிர­யத்­த­ன­மாகும். 

வெளிநாட்டுப் பணத்­துக்கான உள்­நாட்டு நிகழ்ச்­சிகள்

இன்னும் சிலரோ வெளி­நாட்­டி­லி­ருந்து தமக்குப் பணம் அனுப்­பு­வோரின் கொள்­கை­க­ளுக்கு இணங்­கவும் அவர்­க­ளது விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்­பவும் இலங்­கையில் நிகழ்ச்­சி­களை ’டிசைன்’ பண்­ணு­கி­றார்கள். அடிப்­ப­டையில் வெளி­நாட்டுப் பணத்தை எடுப்­பதில் தவறு கிடை­யாது. ஆனால் நாம் வாழு­வது ஒரு சிறு­பான்மை நாட்டில் என்­ப­தையும் எமக்­கென்றே பிரத்­தி­யே­க­மான விவ­கா­ரங்கள், பிரச்­சி­னைகள் உள்­ளன என்­ப­தையும் நாம் ஒரு போதும் மறந்­து­வி­ட­லா­காது. வெளி­யி­லி­ருந்து பணம் அனுப்­பு­வோரைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் நிகழ்ச்சி நிரல் தயா­ரிப்­பதா? அல்­லது எமது நாட்­டுக்கு மிக­வுமே உசி­த­மான நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­காக வெளி­நாட்டு உத­வியைக் கோரு­வதும் பயன்­ப­டுத்­து­வ­துமா? அல்­லாஹ்வை முன்­னி­றுத்தி பதில் தேடிக்­கொள்ள வேண்டும். இல்­லாத போது எகிப்­திய, சவூதி அரே­பிய, பாகிஸ்­தா­னிய,துருக்­கிய, இந்­திய, ஈரானிய மூளை­களால் இலங்கை மண்­ணுக்­காக திட்­ட­மிட்ட தவறைச் செய்­த­வர்­க­ளாவோம்.

வெளி­நா­டு­களில் உள்ள பல இயக்­கங்­களும் தனி மனி­தர்­களும் இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்­களில் மிகுந்த அக்­க­றை­யோடு இருக்­கி­றார்கள் என்­பதில் இரண்டு கருத்­து­க­ளுக்கு இட­மில்லை. அதனால் அவர்கள் கருத்­துகள் வாயி­லா­கவும் பண ரீதி­யா­கவும் எமக்கு உதவக் காத்­தி­ருக்­கி­றார்கள், உத­வு­கி­றார்கள். அல்லாஹ் அவர்­களைப் பொருந்திக் கொள்­வா­னாக. ஆனால், எமது சூழலில் முக்­கி­யத்­து­வப்­ப­டுத்த வேண்­டிய விட­யங்­களை நாம் தான் தீர்­மா­னிக்க வேண்டும். எமது சூழலின் தேவை­களை அவர்­க­ளுக்கு நாம் புரி­ய­வைக்க வேண்டும். மாற்­ற­மாக அவர்­களை திருப்­திப்­ப­டுத்த நிகழ்ச்சி செய்­வதும் அவர்­க­ளுக்கு அபிப்­பி­ராயம் கூறினால் பண­உ­தவி நின்று விடுமோ என்று பயப்­ப­டு­வதும் நியா­ய­மல்ல. அது அல்­லாஹ்வின் திருப்­தியை அன்றி மனி­தர்­களின் திருப்­தி­யையும் உலக லாபத்­தையும் எதிர்­பார்த்­த­தா­கவே கரு­தப்­பட முடியும்.

இலங்­கையின் முதன்­மைப்­ப­டுத்­தல்கள்

இலங்கை சமூக நிலை­வ­ரத்தை குறுக்கு வெட்­டு­மு­க­மாக நோக்கும்போது அதா­வது, பகுப்­பாய்வு செய்யும் போது இலங்கை தஃவா மற்றும் சமூகக் களங்­களில் பணி­பு­ரிவோர் முதன்­மைப்­படுத்தி நோக்க வேண்­டிய பல அம்­சங்கள் உள்ளன.  

01. முஸ்லிம் சமூ­கத்­துக்குள் நாஸ்­திகம், சட­வாதம், நவீன நூற்­றாண்­டுக்கு இஸ்லாம் பொருத்­தமா என்ற சந்­தேகம் போன்­றன வலுப்­பெற்று வரு­கி­ன்றன. 

02.ஷியா, காதி­யானி, பெண்­ணி­லை­வாதம், பின் நவீ­னத்­துவம் என்­பன தீவி­ர­மாக ஊடு­ருவி வரு­கின்­றன.

03. தனித் தனி­யா­கவும் குடும்­பங்­க­ளா­கவும் சிலர் மதம் மாறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இஸ்­லாத்தைப் பற்றி விமர்­சன ரீதி­யாக எழு­தப்­படும் சிங்­கள மொழி­யி­லான நூல்­களும் வெப்­த­ளங்­களும் சிங்­கள மொழி மூலம் கற்­பதும் இதற்­கான பிர­தான கார­ணங்­க­ளாகும். 

04. சர்­வ­தேச ரீதி­யா­கவும் உள்­நாட்­டிலும் செயற்­படும் உள­வுஸ்­தா­ப­னங்­களும் நிறு­வ­னங்­களும் முஸ்­லிம்­களைப் பின் தொடர்ந்த வண்ணம் உள்­ளன. முஸ்­லிம்கள் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை உரு­வாக்­கு­வ­திலும் அவர்­க­ளுக்கு மத்­தியில் பிள­வு­களை தோற்­று­விப்­ப­திலும் அவற்றின் பங்கு அதிகம்.

05. முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான உறவு மிக­வுமே பல­வீ­ன­மான கட்­டத்தை அடைந்து விட்­டது.

06. ஒப்­பீட்டு ரீதியில் இலங்கை முஸ்­லிம்கள் கல்வித் துறையில் பின்­தங்­கிய நிலையில் உள்­ளனர். (புள்ளி விப­ரங்கள் உள்­ளன. 

07. இலங்கை முஸ்­லிம்­களில் 22% ஆன­வர்கள் வறு­மைக்­கோட்­டுக்குக் கீழ் வாழு­கி­றார்கள். 50,000  குடும்­பங்கள் அடிப்­படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடி­யாத ‘பகீர்கள்’ எனும் நாமத்­துடன் வாழு­கி­றார்கள். 

08. இலங்­கையில் தொற்றா நோய்கள் (Non Communicable Deceise) களால் பாதிக்­கப்­ப­டு­வர்­களில் முஸ்­லிம்­களின் தொகை மும்­ம­டங்­காகும்.

09. போதை­வஸ்துப் பாவனை சமூக வலைத் தளங்­க­ளுக்கு அடி­மை­யாதல், குடும்ப அமைப்பின் சிதைவு, பிற சமூ­கங்­க­ளு­ட­னான உறவு விரிசல் என ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன.

10. இது தவிர சர்­வ­தேச ரீதி­யாக முஸ்லிம் சமூகம் சந்­திக்­குக்கும் துன்­பங்­களை வார்த்­தை­களால் வடித்து முடிக்க முடி­யாது.

மொத்­தத்தில்- மிகைப்­படக் கூறு­வ­தாக எவரும் நினைத்து விட­லா­காது.- ஒரு பின்­தங்­கிய, பல­வீ­ன­மான, நொந்­து­போன சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் உள்­ளது. இஸ்­லா­மிய பிர­சா­ரத்தில் சம்­பந்­தப்­ப­டு­வோரும் பொறுப்­பான பத­வி­களில் அமர்ந்­தி­ருப்­போரும் சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­வோரும் இவற்றை கருத்தில் எடுக்க வேண்டும். சில்­லறைத்தன­மான கருத்து வேறு­பா­டு­களில் தொடர்ந்தும் ஈடு­ப­டு­வது சமூ­கத்தை இன்னும் பல­வீ­னப்­ப­டுத்தும் என்­பதை மறக்கலாகாது பொறுப்­புக்­களை உரிய முறையில் நிறை­வேற்­றாத நிலையில் மறு­மையை நோக்கிச் செல்வோர் தமது நிலைப்­பா­டு­களை எப்­படி நியா­யப்­ப­டுத்­தலாம்? 

யாரோ கூறி­யது போல் அத்­த­ஹிய்­யாத்தில் விரலை அசைப்­பதா? இல்­லையா? என்ற பாரம்­ப­ரி­ய­மான கருத்து வேறு­பாட்டைப் பற்றி நாம் விவாத்­தித்து சரி பிழை கண்டு கொண்டிருக்கையில் உலகிலுள்ள பல கோடிப் பேர் ஸஹாதத்துக் கலிமாவையே அறியாத நிலையில் இருக்கிறார்கள்.(இவை எமது பணிவான அவதானங்களும் கருத்துக்களுமாகும்.குர்ஆன் கூறுவது போல் ”வதவாஸவ் பில்ஹக்” சத்தியத்தைக் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே.இவற்றில் தவறுகள் இருக்கலாம்.மனதைப் பிழிந்து கொண்டிருக்கும் கவலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.எவரது மனதையாவது பாதித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிப்பது நல்லதாகும்.எழுதும் நாம் எமது கடமைகளை எந்த அளவு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சமும் உள்ளது.அல்லாஹ்வே எம்மை மன்னிக்க வேண்டும்.) 
சுருக்கமாக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கமுடியும்  

01. அதி முக்கியமான பிரச்சினை களையும் சவால்களையும் மிகத் துல்லியமாக இனம் காண்போம். இதில் இயக்க, கட்சி முரண்பாடுகளை ஒரு பக்கத்தில் தூக்கி எறிவோம். அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சமும் பரந்த வாசிப்பும் தேடலும் பரந்த மனப்பாங்கும் இதற்குத் தேவை.

02. முஸ்லிம் சமூகத்திலுள்ள துறைசார்ந்த நிபுணர்கள் சமூகப் பணிகளுக்கான காத்திரமான மூலோபாயத் திட்டங்களை (Stretegic  Plane) வகுக்க வேண்டும். இப்படிச் செய்தால் எமது வளங்கள் திறமைகள், நேரகாலம் என்பன வீணடிக்கப்படமாட்டாது. இலக்கு தெளிவாகும். வேலைப்பகுப்பு நடக்கும் துறைசார்ந்தவர்கள் மாத்திரம் ஈடுபடுவார்கள். 

03.உள்ளங்களில் உள்ள பதவி மோகம், அகம்பாவம், அறிவீனம், பணஆசை, புகழாசை, போன்ற உள நோய்களிலிருந்து தூரமாக வேண்டும் என்ற ஆழமான விருப்பம் என்பன உருவாக்கப்பட வேண்டும். சமூக நலன்களுக்காக எமது தனிப்பட்ட நலன்களை குர்பான் கொடுப்போம். 

அல்லாஹ் எம் அனைவரையும் பரந்த மனப்பாங்குடன், அறிவுத் தெளிவுடன், அவனுக்காக என்று மட்டும் செயட்படுபவர்களது கூட்டத்தில் சேர்ப்பானாக!