Verified Web

பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகள்

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

2017-08-22 06:58:20 A.J.M.Nilaam

சேனை­ய­னுக்கு எதற்கு குரங்கு வித்தை? இது ஜே.ஆரின் நிலையா? இனப்­பி­ரச்­சி­னையை வைத்துக் கொண்டு உலகில் எந்த நாடும் திறந்த பொரு­ளா­தா­ரத்தில் சாதித்­ததில்லை. எனினும் இவர் பேரி­ன­வா­தத்­தையும் திறந்த பொரு­ளா­தா­ரத்­துடன் வைத்துக் கொண்­டதால் இனப்­பி­ரச்­சி­னை­யற்ற நாடு­களின் முன்­னேற்­றங்­க­ளோடு போட்டி போட முடி­யாது போனார். 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ, சிறு­பான்­மை­களை அகற்றி சிங்­களக் குடி­ய­ர­சாக இலங்­கையை ஆக்­கிய செய்­கையைப் போன்­றதே இது­வு­மாகும். ஸ்ரீமாவின் அந்த செய்­கை­யா­லேயே பூமி புத்­திரக் கொள்கை உரு­வா­கி­யது.

எனவே, 1977 ஆம் ஆண்டு சிங்­களப் பெரும்­பான்மை மக்கள் வர­லாறு காணாத மக்­க­ளா­ணையை ஜே.ஆருக்கே வழங்­கி­யி­ருந்­த­படி 1978 ஆம் ஆண்டு அவர் பல்­லின யாப்பை இயற்றி வடக்கு, கிழக்கு தமி­ழரின் மக்­க­ளா­ணைக்குத் தீர்வு கண்­டி­ருக்க வேண்டும். இச் செயற்­பாடு சிங்­கள மக்­களின் மக்­க­ளா­ணைக்கு உட்­பட்­ட­தாகவே அமைந்­தி­ருக்கும். ஆனால் ஜே.ஆர். திறந்த பொரு­ளா­தா­ரத்தின் பல­னையும் சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே என ஆக்­கினார். சிங்­களப் பெரும்­பான்மை எம்.பிக்­களின் மூலம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யா­கி­யதால் பல்­லின ஜனா­தி­ப­தி­யா­க­வன்றி சிங்­கள ஜனா­தி­ப­தி­யா­கவே தனது மன­நி­லையை அமைத்துக் கொண்டார்.

பல்­லினம் வாழும் நாட்டில் பேரின சுய நிர்­ண­யத்­தையும், பேரின இறை­மை­யையும், பேரின மதத்­தையும், பேரினக் குடி­ய­ர­சையும், பேரின திறந்த பொரு­ளா­தா­ரத்­தையும், பேரின நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும் வைத்துக் கொண்டு சம­தர்ம ஜன­நா­யகக் குடி­ய­ரசு எனக்­கூற முடி­யுமா? குடி­ய­ரசு என்றால் மக்­க­ள­ரசு என்றே பொரு­ளாகும். தமிழ் மக்­களும் முஸ்­லிம்­களும் மக்கள் இல்­லையா?
1977 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கில் தமி­ழரின் ஆணையைப் பெற்ற தமிழ் எம்.பி.க்களை, ஜே.ஆர். பாரா­ளு­மன்­றத்தை விட்டும் வெளி­யேற்­றி­யி­ருக்கக் கூடாது. இது அந்த மக்­களின் ஜன­நா­யக ஆணையை நிரா­க­ரித்­த­தாகும். தமிழ் மக்கள் வழங்­கிய ஆணையைக் கைவிட்டு விட்டு பாரா­ளு­மன்­றத்தில் சத்­தியப் பிர­மாணம் செய்தால் மட்­டுமே அம­ரலாம் என நிபந்­தனை விதித்தார். இதை மறுத்த வடக்கு, கிழக்கின் சகல எம்.பி. க்களும் பாரா­ளு­மன்­றத்தை விட்டும் அகன்­றார்கள்.

1976 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்­தின்­படி தமிழர் சுயநிர்­ணய இறைமைக் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்ட பின் வடக்கு, கிழக்கு தமிழ் தரப்­பினர் 1972 ஆம் ஆண்டின் பேரின யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்­டது ஏன். இதன்­மூலம் பௌத்­த­மத, பௌத்த சாசன முன்­னு­ரி­மை­க­ளையும் 29 ஷரத்து நீக்­கத்­தையும் தமிழர் ஏற்றுக் கொண்­ட­தாக ஆகுமா? என நீங்கள் வின­வலாம்.

இந்த யாப்­பின்கீழ் போட்­டி­யிட்ட தமிழ் எம்.பி.க்கள் இவற்­றுக்கு கட்­டுப்­பட வேண்­டி­யது கட­மையா? வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­களும் கட­மைப்­பட்­டுள்­ளார்­களா? ஜே.ஆர். இவற்றைக் காரணம் காட்­டியே அவர்­களை வெளி­யேற்­றினார். தேர்தல் காலத்தில் பத­வியில் இருந்த ஸ்ரீமா­வோவும் வடக்கு, கிழக்கில் தமிழர் போட்­டி­யி­டு­வதைத் தடுக்­கா­தி­ருந்­த­தற்கு இதுவே கார­ண­மாகும். எனினும், சிங்­க­ளவர் வைத்த தேர்­தலில் தமிழர் போட்­டி­யிட்­டாலும் வாக்­க­ளித்­தாலும் அது ஜன­நா­யக ரீதி­யி­லான மக்­க­ளா­ணையே ஆகும்.

ஜே.ஆர். சிங்­க­ள­வரின் மக்­க­ளா­ணையைப் பெற்ற எம்.பி.க்களி­ட­மி­ருந்தே ஒப்­பங்கள் இடப்­பட்ட வெற்றுத் தாள்­க­ளான இரா­ஜி­னாமாக் கடி­தங்­களைப் பெற்றுக் கொண்டு முழு அதி­கா­ரத்­தையும் சுவீ­க­ரித்துக் கொண்­டவர் அல்­லவா? எதிர்த்­த­ரப்­பான சிங்­கள கட்­சி­க­ளையும் முடக்­கி­யவர் அல்­லவா? தமிழ் மக்­களை விட்டு வைப்­பாரா?

பல்­லின நாட்டைப் பேரின வடிவில் ஆள முடி­யாது என நான் முன்பே கூறி­யி­ருக்­கிறேன்.  இதற்­கொரு அடை­யா­ள­மா­கத்தான் ஆங்­கி­லேயர் ஓர­ள­வுக்­கேனும் சமா­ளிக்கும் ஏற்­பா­டாக 29 ஆம் ஷரத்து எனும் சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­டத்தை சோல்­பரி யாப்பில் வழங்­கி­னார்கள்.

அது முறைப்­படி செயற்­ப­டா­மையால் தான் சமஷ்டிக் கோரிக்கை எழுந்­தது. அதுவும் முறைப்­படி அணு­கப்­ப­டா­த­தால்தான் சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கைகள் எழுந்­தன.

புதிய தலை­மு­றைக்கு போதிய தெளிவு இல்லை. முன்பு 29 ஆம் ஷரத்து இருந்­த­போது, யாப்பு பல்­லின வடிவில் இருந்­ததால் சிறு­பான்­மை­க­ளுக்கு ஓர­ளவு பலன் இருந்­தது. காரணம் கோடீஸ்­வரன் வழக்கு தமி­ழரால் வெல்லப்­பட்­ட­போதும், கிழக்கில் 1949 இல் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்­தின்­போதும் மலை­யக தோட்டத் தொழி­லா­ளரின் பிர­ஜா­வு­ரிமை நீக்­கத்தின் போதும் எதுவும் செய்ய முடி­ய­வில்லை.

தந்தை செல்வா சமஷ்டி கோரிய காலத்­தி­லேயே இரு பெருங்­கட்­சி­க­ளும் அவ­ரோடு ஒப்­பந்­தங்கள் செய்து ஏமாற்­றி­யி­ருந்­தன. அவர் மறு கட்­சி­யோடு ஒப்­பந்தம் செய்தால் பிரி­வினை என்றும், தன்­னோடு ஒப்­பந்தம் செய்தால் தேசா­பி­மானம் எனவும் இரு­பெரும் கட்­சி­களும் விளக்கம் கூறி­ய­மைதான் வேடிக்­கை­யாகும். சமஷ்டி பிரி­வி­னையே எனக் கூறிக் கொண்டு அத­னோடு சேர­லமா? 1948 ஆம் ஆண்டு நிர்­வாக முகா­மைத்­து­வ­மான டொமி­னியன் சுயா­தீனம் கிடைத்த நாளி­லி­ருந்தே இவ்­வா­றுதான். சிங்­கள மக்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கி­றார்கள். சேர்ந்தால் சுத்தம். சேரா­விட்டால் அசுத்தம். இது என்ன விளக்கம் இவர்­களை நம்­பித்தான் முஸ்­லிம்கள் காலம் கால­மாக வெற்றுக் காசோ­லையில் ஒப்­ப­மிட்டுக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். 

வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் அர­சியல் சிங்­களப் பகு­தி­களில் பொருந்­தாது. அந்­த­வ­கையில் இரு பெருங்­கட்­சி­க­ளிலும் சிறு­பான்­மைகள் இருக்கக் கூடாது என நான் சொல்­ல­வ­ர­வில்லை. அவற்றில் சிறு­பான்­மை­களும் இருக்­கா­து­விட்டால் பேரி­ன­வாதம் மேலும் வலிமை பெற்­று­விடும். எனவே அவற்றில் இருந்­து­கொண்டே தமது குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். ஏனெனில் போலி தேசி­யத்தை விடவும் பேரி­ன­வாதம் கொடூ­ர­மா­ன­தாகும். கடந்த காலங்­களில் போலி தேசி­யத்தால் சிறு­பான்­மைகள் பல உரி­மை­களை இழந்­த­தையும் மறந்­து­வி­டக்­கூ­டாது. வடக்கு, கிழக்கில் தமி­ழர்­க­ளதும் முஸ்­லிம்­க­ளதும் அதி­கா­ரப்­ப­ர­வலைப் போலி தேசியம் மறுப்­ப­தற்கும் உடன்­ப­டக்­கூ­டாது.

பேரின தேசியம் சிறு­பான்­மை­களை சீர­ணிக்கப் பார்க்­கி­றது. பெரும்­பான்மை சமூ­கத்தின் சுய­நிர்­ணய இறைமை, வாழ்­வா­தார, கலை, கலா­சார, சரித்­திர, மத, மொழி தனித்­து­வங்­க­ளையே முன்­னி­லைப்­ப­டு­த்துகி­றது. பல்­லின தேசியம் தனித்­த­னி­யாக அவற்­றை­யொத்த எல்­லா­வற்­றையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கி­றது. போலி தேசியம் பெரும்­பான்மைச் சமூ­கத்­திடம் அதற்­கு­ரி­யது எனவும் சிறு­பான்­மை­க­ளிடம் அவற்­றுக்­கு­ரி­யது எனவும் அடை­யாளம் காட்டிக் கொண்­டி­ருக்­கி­றது.

இதை அடக்கு முறை­யாக்கி வடக்கு, கிழக்கு தமி­ழரை ஜே.ஆர். ஒடுக்­கி­யதால் தமிழர் இந்­தியா சென்­றதால் இந்­தியத் தலை­யீடு ஏற்­பட்­டது.

ஜே.ஆர். அடக்கு முறையை ஆயுத முனையில் எதிர்­கொண்ட சில தமிழ் இளை­ஞர்­களும் இந்­தி­யா­வுக்கு ஓடிப் போனார்கள். இதனால் வடக்கு –கிழக்கு  தமி­ழர்­க­ளையும் தமிழ்ப் போரா­ளி­க­ளையும் ஆத­ரிக்கும் நிர்ப்­பந்தம் இந்­தி­யா­வுக்கு ஏற்­பட்­டது. 

இந்த நிலையில்  அவர் என்ன செய்­தி­ருக்க வேண்டும். இந்­தி­யா­வு­ட­னேயே பேசி முடிவு கண்­டி­ருக்க வேண்டும். இதில் அவர் காட்டும் தாமதம் இந்­தி­யாவை கூடிய அள­வுக்கு எதிர்­நி­லைக்கு மாற்­றி­விடும் என்­ப­தையும் அவர் உணர்ந்­தி­ருக்க வேண்டும். அந்த சூழலில் இந்­தியா – ரஷ்ய கூட்­டிலும் இலங்கை –அமெ­ரிக்க நட்­பிலும் இருந்­தன. ரஷ்ய – அமெ­ரிக்க அணிகள் இருந்த காலம் அது.

ஆக வெளி­வி­வ­காரக் கொள்­கையில், ஜே.ஆர். இந்­தி­யாவை உதா­சீ­னப்­ப­டுத்­தி­ய­தா­லேயே தனி­மைப்­பட்டார். இந்­தி­யா­வு­ட­னேயே பார்த்துக் கொள்­ளுங்கள் என்று அமெ­ரிக்­காவும் கைவிட்டு விட்­டது. பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கென இந்­தியா அனுப்­பிய உண­வுக் கப்­பலை இலங்கை திருப்­பி­ய­னுப்­பி­யதால் ஆத்­தி­ர­முற்ற இந்­தியா, உண­வோடு ஒரு விமா­னத்தை இலங்­கைக்கு அனுப்­பி­யது. அந்த விமானம் அனு­மதி பெறாமல் ஊடு­ருவி பலாத்­கா­ர­மாக அந்த பொட்­ட­லத்தை வீசி­விட்­டது. கடலில் விரட்­டி­ய­துபோல் விண்ணில் தடுக்க முடி­ய­வில்லை.

உண்­மையில் ஜே. ஆரே இலங்­கைக்குள் இந்­தியா தலை­யீடு செய்ய வழி­குத்­தி­ருந்தார். ஒரு­நாடு பக்­கத்து நாட்­டுக்கு எல்­லா­வற்­றிலும் விட்டுக் கொடுக்கும். அதுவே இரு நாடு­க­ளி­னதும் சகஜ வாழ்­வுக்கு அடிப்­படை. எனினும் சுய பாது­காப்பு விட­யத்­திலும் ஒன்று மற்­ற­தற்கு விட்டுக் கொடுக்­காது. இவ்­வித விட்டுக் கொடுப்­புக்கு ஸ்ரீமா – சாஸ்­திரி ஒப்­பந்­தமும் ஸ்ரீமா – இந்­திரா ஒப்­பந்­தமும் உதா­ர­ணங்­க­ளாகும். சாஸ்­திரி இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரில் ஒரு தொகை­யி­னரை ஏற்றுக் கொண்டார். இந்­தி­ரா­காந்தி கச்­ச­தீவை இலங்­கை­யிடம் வழங்­கினார். இவற்றை ஏன் இந்­தியா செய்­தது? தன் மீதுள்ள நம்­பிக்­கை­யாலும் உறு­தி­யாலும் இலங்கை தன்­னு­ட­னேயே இருக்கும் என்­ப­த­னால்­தானே?

எனினும் வடக்கு, கிழக்கு பிரச்­சி­னையில் இந்­தி­யாவால் இலங்­கைக்கு விட்டுக்கொடுக்க முடி­ய­வில்லை. காரணம், தனது ஆட்­சிக்­கு­ரிய தமி­ழகம் இலங்­கைக்குப் பக்­கத்தில் இருப்­ப­தே­யாகும் என அது கரு­தி­யது. இலங்கை விவ­காரம் தமி­ழ­கத்தின் ஏழு­கோடி தமி­ழர்­க­ளையும் உசுப்­பேற்­று­மாயின், அது தன்­னையும் பாதிக்கும் என இந்­தியா நினைத்­தது.

ஜே.ஆர். வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கை­களை ஆயுத முனையில் அடக்க முயன்­றதால் தமி­ழகம் கொந்­த­ளித்­தது. ஆயி­ரக்­க­ணக்­காக தமி­ழர்கள் அடைக்­கலம் தேடி அங்கு போனார்கள்.

அதன்­பி­றகு இந்­தியா கடு­மை­யாக அச்­சு­றுத்திக் கொண்டே இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் யாப்­புக்குள் 13 ஆம் ஷரத்தை திணித்­தது. இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­காந்­தியை வர­வேற்கும் வைப­வத்தில் ஒரு கடற்­படை வீரர் அவரைத் தாக்­கி­ய­போது, அவர் மயி­ரி­ழையில் தப்­பி­விட்டார். அதில் ஏதும் விப­ரீதம் ஏற்­பட்­டி­ருந்தால், இலங்கை கடும் அழி­வுக்­குள்­ளா­கி­யி­ருக்கும். ஒரு நாட்­டுக்குள் இன்­னொரு நாடு அத்­து­மீறி நுழை­வதும் அச்­சு­றுத்­து­வதும் யாப்­புக்குள் ஷரத்தை திணிப்­பதும் குற்­றங்­க­ளாகும்.

எனினும் ஜே.ஆர். ஒரு நூலை வெளி­யிட்­டி­ருந்தார். அதில் ஹிட்­ல­ருக்கு ஸ்டாலின் முதல் சுற்றில் விட்டுக் கொடுத்து ஒப்­பந்தம் செய்தபின், இரண்டாம் சுற்றில் வென்­ற­தாகக் கூறி தனது அணு­கு­முறை இது­வா­கவே இருந்­தது எனவும் கூறினார். எனினும் இதை முக்­கி­யஸ்­தர்­களில் லலித் அதுலத் முதலி, காமினி திசா­நா­யக்க, ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் நம்­பி­ய­போதும் பிர­தமர் பிரே­ம­தாச ஏற்றுக்  கொள்­ள­வில்லை.

அடுத்த ஜனா­தி­ப­தி­யாக ஆவ­தற்கு அவர் குறி­வைத்­தி­ருந்­த­தா­லேயே இந்­திய எதிர்ப்புக் கொள்­கையை முன்­வைத்­தி­ருந்தார். ஜே.வி.பி.யால் சிங்கள மக்­களால் ஜே.ஆர். கடும் எதிர்ப்­புக்கு ஆளா­கி­யி­ருந்­ததும் இவ­ருக்கு அனு­கூ­ல­மா­யிற்று. புலி­களின் கைக்குள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இருந்­ததால் ஆயு­தங்­க­ளோடு பணத்­தையும் வழங்கி அத்­தனை தமிழ் வாக்­கு­களும் கிடைக்க வழி செய்து கொண்டார்.

கிழக்கு முஸ்­லிம்­களின் வாக்­கு­களும் தேவைப்­பட்­டன. வடக்கு, கிழக்கின் ஆளுமை தமிழ் போரா­ளி­க­ளி­டமும் கிழக்கின் ஆளுமை மு.கா. விடமும் இருப்­பதைப் புரிந்து கொண்ட அவர், அஷ்­ரபை அழைத்து தேர்தல் சட்­டத்­தி­லி­ருந்த 12 1/2 வீத வெட்டுப் புள்­ளியை 8 ஆகக் குறைத்து தேர்­தல்­களில் மு.கா.வும் சில ஆச­னங்­களைப் பெறும் வாய்ப்பை வழங்­கினார்.

எனினும், தமிழ் ஆயுதப் போரா­ளி­கள் ­மூலம் அவர் இந்­திய சமா­தா­னப்­ப­டையைத் திருப்பி அனுப்­பி­யதால் வடக்கு, கிழக்கின் பாது­காப்பில் ஒரு வெற்­றிடம் ஏற்­பட்­டி­ருந்­தது. காரணம், இலங்கைப் படை­ முகாம்­க­ளுக்குள் இருந்­த­தே­யாகும். இதனால் சிறு சிறு தமிழ் ஆயுதக் குழுக்­களைப் பெரிய தமிழ் ஆயுதக் குழு அழித்­த­தோடு முஸ்­லிம்­களின் சுய­நிர்­ண­யத்­தையும் கூட்டு இறை­மை­யையும் முடக்­கு­வ­தற்­காக நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்­களைப் படு­கொ­லையும் செய்­தது.

வடக்கில் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த முஸ்­லிம்­களை விரட்­டி­ய­டித்து இனச் சுத்­தி­க­ரிப்பு செய்­த­தோடு கிழக்­கிலும் முஸ்­லிம்­களை ஆளு­மைக்கு உட்­ப­டுத்­தி­யது. இந்த நிலை­யில்தான் ஜிஹாத் எனும் சுலோ­கத்தை அஷ்ரப் பாரா­ளு­மன்­றத்தில் எழுப்பி தனக்கும் உதவி புரி­யு­மாறு பிரே­ம­தா­ச­விடம் கோரினார்.

அதன் பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. முடிவில் பிரேமதாசவும் ரஞ்சன் விஜேரத்னவும் படுகொலை செய்யப்பட்டார்கள். அஷ்ரப் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். சந்திரிகாவுக்கு ஆதரவளித்து ஆட்சியில் அமர உதவிய அவரது முயற்சிகள் யாவும் வியர்த்தனமாகின.

பிரேமதாச, அவரது உதவியைப் பெற்று ஆட்சியமைத்த பின் தமிழ் ஆயுதப் போராளிகளிடம் காவு கொடுத்தது போலவே சந்திரிகாவும் அவருக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி அவரது இலட்சியங்களில் ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தாதுவிட்டார். மஹிந்த ராஜபக் ஷ மு.கா.வைப் பல கூறுகளாக்கிப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆக, உரிமை அரசியலுக்காக உருவாகிய முஸ்லிம் சமூக தனித்துவ எழுச்சி, தற்போது பேரினப் போலி தேசியக் கட்சிகளின் முகவர் பிரிவுகளாகி அஷ்ரப் விதைத்ததை அறுவடை செய்து உண்டு களிக்கின்றன. இப்போது அஷ்ரபையும் அவரது இலட்சியங்களையும் நினைவு கூர்வதையும் கூட விரும்புவதாகத் தெரியவில்லை. அவை இருப்புக்கு இடைஞ்சல் என்றே அஞ்சுகின்றன. "ஆறிப்போனா போகட்டும் என் ஆசை மச்சான் கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன் அருமை மச்சான்". எனும் பாடல்தான் ஞாபகம் வருகிறது.