Verified Web

திருமலை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்படுமா

2017-08-20 15:22:24 ARA.Fareel

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் காணிகள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் காணிப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள், முஸ்லிம் அமைப்­புகள், துறைசார் நிபு­ணர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சமூகம் தமது சொந்­தக்­கா­ணி­களை இழந்து, பலாத்­கா­ர­மாக அல்­லது சட்­ட­ரீ­தி­யாக அப­க­ரிக்­கப்­பட்டு வாழ்ந்து கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் இவ்­வா­றான கோரிக்­கைகள் நிச்­சயம் விடுக்­கப்­பட வேண்டும். 

ஆய்­வுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான செரண்டிப் நிறு­வனம் கொழும்பில் ஜமா அத்தே இஸ்­லா­மியின் தலை­மை­ய­கத்தில் நடத்­திய "திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் காணிப்­பி­ரச்­சி­னை­களும் தீர்­வு­களும்" எனும் தலைப்­பி­லான கலந்துரையாடலிலேயே இந்தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

முசலி முஸ்லிம் மீள்­கு­டி­யேற்றம்

திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணிப்­பி­ரச்­சி­னைகள் இம்­மா­நாட்டில் ஆரா­யப்­பட்ட அதே­வேளை, முசலி முஸ்லிம் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எதி­ராக இரு சூழ­லியல் அமைப்­பு­க­ளினால் உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனு உயர்­நீ­தி­மன்­றினால் தள்­ளு­படி செய்­யப்­பட்­டமை சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அதே­வேளை, முசலி முஸ்லிம் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எதி­ராகத் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில் முஸ்லிம் சமூகம் வெற்­றி­ய­டைந்­ததைப் போல் திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னை­க­ளிலும் சமூகம் வெற்­றி­கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது. இந்த வெற்­றிக்கு சமூ­கத்தின் பல அமைப்­புகள், அர­சி­யல்­வா­திகள், சட்ட வல்­லு­னர்கள்  ஒன்­றி­ணைந்து செயற்­பட்­ட­மையே காரணம் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சி­ய­ல­மைப்பு சட்ட விவ­கார பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் இங்கு கலந்து கொண்டு உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கை வெற்­றி­கொள்­வ­தற்கு அனைத்து தரப்­பி­னரும் எவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டனர் என்­பதை விளக்­கினார். 

முசலிப் பிர­தே­சத்தில் நடை­பெற்­று­வரும் அனைத்து செயற்­பா­டு­களும், அனைத்து குடி­யேற்­றங்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யெ­னவும் காணிகள் வழங்­கப்­பட்­டி­ருப்­பது சட்­டத்­துக்கு முர­ணா­ன­தெ­னவும் அவற்­றுக்குத் தடை உத்­த­ரவு பிறப்­பிக்கும் படியும் இம்­மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

மனு­வினை இலங்கை வன­ஜீ­வ­ரா­சிகள் மற்றும் இயற்கை பாது­காப்பு அமைப்பு, சூழ­லியல் பவுண்­டேசன் ஆகிய இரு அமைப்­பு­களும் தாக்கல் செய்­தி­ருந்­தன. 

திரு­கோ­ண­மலை மாவட்டம்

திரு­கோ­ண­மலை மாவட்டம் 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்கி 2630.8 சதுர கிலோ மீட்டர் பரப்­ப­ள­வினைக் கொண்­ட­தாகும். 2015 ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் படி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் மொத்த சனத்­தொகை 431,780 ஆகும். இச்­ச­னத்­தொ­கையில் முஸ்­லிம்கள் 184,084 பேர், தமி­ழர்கள் 132,663 பேர், சிங்­க­ளவர் 113,104 பேர் ஆகும். இன விகி­தா­சா­ரத்தை நோக்­கினால் முஸ்­லிம்கள் 42.63 வீதம், தமி­ழர்கள் 30.72 வீதம், சிங்­க­ள­வர்கள் 26.19 வீத­மாகும். 

திரு­கோ­ண­மலை மாவட்டம் திரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, பத­வி­ஸ்ரீ­புர, கோம­ரங்­க­ட­வெல, மொர­வெவ, தம்­ப­ல­காமம், கந்­தளாய், கிண்­ணியா, சேரு­வில, மூதூர், வெருகல் ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது. 

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சில செய­லாளர் பிரி­வு­களில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிரி­வுகள் குறைந்த நிலப்­ப­ரப்பைக் கொண்­ட­ன­வாக இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதே­வேளை, பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிரி­வுகள் சில அதிக நிலப்­ப­ரப்­பினைக் கொண்­ட­தா­கவும், அங்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் சிறு­பான்­மை­யாக வாழ்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. 

கிண்­ணியா பிர­தேச செய­லகப் பிரிவை உதா­ர­ண­மாக நோக்­கினால் 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்க­ளின்­படி அங்கு 73,656 பேர் வாழ்­கி­றார்கள். இவர்­களில் 71,650 பேர் அதா­வது 96.46 வீதத்­தினர் முஸ்­லிம்கள் 2,572 பேர் அதா­வது 3.49 வீதத்­தினர் தமி­ழர்கள் ஆவர். இதே­வேளை சிங்­க­ளவர் இரு­வரே வாழ்­கின்­றனர். கிண்­ணியா பிர­தேச செய­லாளர் பிரிவு 146.9 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்­ட­தாகும். அதா­வது குறைந்த நிலப்­ப­ரப்பில் அதி­க­மான முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். அவர்­க­ளுக்கு காணி, நிலங்கள் மிகவும் குறை­வா­கவே இருக்­கின்­றன என்­பது இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. 

சிங்­க­ளவர் பெரும்­பான்­மை­யா­கவும் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் சிறு­பான்­மை­யா­கவும் வாழும் சேரு­வில பிர­தேச செய­ல­கப்­பி­ரிவு கூடிய பரப்­ப­ளவைக் கொண்­ட­தாக இருக்­கி­றது. மொத்தம் 15,183 பேரே இங்கு வாழ்­கின்­றனர். இதில் 9,565 பேர் சிங்­க­ளவர். அவர்­களின் விகி­தா­சாரம் 63. இங்கு முஸ்­லிம்கள் 2,759 பேரும், தமி­ழர்கள் 2858 பேரும் வாழ்­கின்­றனர். முஸ்­லிம்கள் இங்கு 18.17 வீதத்­தினர். தமி­ழர்கள் 18.82 வீதத்தின் ஆவர். 

பத­வி­ஸ்ரீ­புர பிர­தேச செய­லகப் பிரிவின் தர­வு­களை நோக்­கினால், அங்கு ஒரு முஸ்­லிமும் 2 தமி­ழர்­களும் வாழ்­கி­றார்கள். அப்­பி­ர­தே­சத்தின் பரப்­ப­ளவு 279 சதுர கிலோ மீற்­றர்­க­ளாகும். இங்கு 13,245 பேர் வாழ்­கின்­றனர். சனத்­தொ­கையில் 99.98 வீதத்­தினர் சிங்­க­ள­வ­ராவர். இவர்கள் 279  சதுர கிலோ மீற்­றர்கள் பரப்­ப­ளவில் வாழ்­கின்­றனர். இதி­லி­ருந்து இவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் அதி­க­ள­வி­லான காணி­களைக் கொண்­டுள்­ளனர். ஆனால் குச்­ச­வெளி, கிண்­ணியா, மூதூர் ஆகிய பகு­தி­களில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­தாலும் குறைந்த பரப்­பி­லான காணி­க­ளையே கொண்­டுள்­ளனர்.

கிண்ணியா மஜ்லிஷ் அஷ்ஷூராவின் செயலாளரும் திருமலை மேல் நீதிமன்ற பதிவாளருமான எம்.எஸ்.எம்.நியாஸ் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் காணிப்­பி­ரச்­சி­னைகள் மற்றும் தீர்­வுகள் தொடர்பில் ஆய்­வு­களை மேற்­கொண்டு பல ஆலோ­ச­னை­களை முன்­வைத்தார். காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் பின்­வரும் விப­ரங்­களை அவர் முன்­வைத்தார். 

காணி உரித்­தா­வணம்

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான காணி உறு­திகள், உரி­ய­கா­லத்தில், உரிய முறையில் வழங்­கப்­ப­ட­வில்லை. நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக உரித்­தா­வ­ணங்கள் உரிய காலத்தில் வழங்­கப்­ப­ட­வில்லை.
தொல்­பொருள் திணைக்­களம் 

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் காணிகள் திடீ­ரென எல்­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மக்கள் வாழும் குடி­யி­ருப்புப் பகு­திகள் இவ்­வாறு எல்­லை­யி­டப்­பட்டு அறி­வித்தல் பல­கைகள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வதால் மக்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளனர். அவர்­க­ளது காணிக்கு சவால் ஏற்­பட்­டுள்­ள­தாக நினைக்­கி­றார்கள்.

வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம்

வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தி­னாலும் காணிகள் எல்­லை­யி­டப்­ப­டு­கின்­றன. எல்லையிடப்பட்டு அப்பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குட்பட்டது என அறிவிக்கப்படுகிறது. இதனாலும் முஸ்லிம்களின் காணிகள் பிரச்சினைக்குள்ளாகியுள்ளன. 

இராணுவ தேவைகள்

முஸ்லிம்களின் காணிகள் இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்படுகின்றமையை குறிப்பிட்டுக் கூறலாம். முஸ்லிம்களின் காணிகளில் இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்னன. திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு 27 முஸ்லிம் தனியார் காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அரசாங்கம் இராணுவம் கையேற்ற காணிகளில் சிலவற்றை விடுவித்து வந்தாலும் முஸ்லிம்களின் எந்தக் காணியும் விடுவிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் காணிகளுக்கு அருகிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கரை­யோர பாது­காப்பு திணைக்­களம்

கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்­தினால் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரிகள் வேற்று இனத்­த­வர்­க­ளாக இருப்­பதால் முஸ்­லிம்­க­ளுக்கே சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளது காணிகள் கையேற்­கப்­ப­டு­கின்­றன. 

அபி­வி­ருத்தி நோக்­கங்கள்

அபி­வி­ருத்தி நோக்­கங்­க­ளுக்­காக காணிகள் கையேற்­கப்­ப­டு­கின்­றன. கடந்­த­கால அர­சாங்­கத்தில் ஒரு நிறு­வ­னத்­துக்கு 1,400 ஏக்கர் காணி வழங்­கப்­பட்­டது. அபி­வி­ருத்­திக்­காக காணிகள் கையேற்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களில் அப்­ப­கு­தியில் குடி­யேற்­றங்கள் உரு­வா­கின்­றன. அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளிலும் தொழிற்­சா­லை­க­ளிலும் வெளிப்­பி­ர­தே­சங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கே வாய்ப்­ப­ளிக்கப்படுகின்­றது. தென்­ப­குதி மக்கள் தொழில் வாய்ப்­பு­களைப் பெற்று வரு­கின்­றனர். இதனால் அவ்­வாறு வந்து குடி­யேறும் மக்­க­ளுக்­கான பாட­சா­லை­களும் உரு­வா­கின்­றன. மற்றும் உட்கட்­ட­மைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. எனவே அபி­வி­ருத்­தி­யைக்­கூட நாம் சந்­தே­கத்­து­டனே நோக்க வேண்­டி­யுள்­ளது. 

பள்­ளி­வாசல், மத்­ரஸா காணிகள்

பள்­ளி­வாசல் காணிகள் மற்றும் மத்­ரஸா காணிகள் இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­காக அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­மையும் பிரச்­சி­னை­யாக உள்­ளது. உதா­ர­ண­மாக கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை குறிப்­பி­டலாம். இப்­பள்­ளி­வாசல் வர­லாற்­றுப்­புகழ் மிக்­க­தாகும். இந்த பள்­ளி­வாசல் காணிக்­கான ஆவ­ணங்கள் எம்­மிடம் இருக்­கின்­றன. நாங்கள் எமது காணி உறு­தியில் உள்­ள­வாறு பள்­ளி­வா­ச­லுக்கு 139.4 பேர்ச்சஸ் கேட்­கிறோம். ஆனால் இரா­ணுவம் மறுத்து வரு­கி­றது. பள்­ளி­வா­ச­லுக்கு 20 பேர்ச்சஸ் காணியே வழங்க முடியும் எனத் தெரி­விக்­கி­றது.


வேறு விட­யங்கள்

யானை­யி­லி­ருந்தும் பொது மக்­களை பாது­காப்­ப­தற்­காக அமைக்­கப்­படும் யானை வேலியும் பிரச்­சி­னை­யாக மாறி­வி­டு­கி­றது. இந்த வேலிகள் நிரந்­தர வேலி­க­ளாக மாறி விடு­கின்­றன. இதனால் மக்கள் யானை வந்­தாலும் பர­வா­யில்லை வேலியே வேண்டாம் என்ற நிலைப்­பாட்டில் இருக்­கி­றார்கள்.

 ஏ.தௌபீக் பிர­தேச சபை முன்னாள் தலைவர்

புல்­மோட்டை பிர­தேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.தௌபீக் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஒவ்வோரு பிர­தேச செய­லகப் பிரி­விலும் பிரச்­சி­னைகள் நில­வு­வ­தாகத் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நிர்­வாக அதி­கா­ரி­க­ளாக முஸ்­லிம்கள் இல்­லாமை பிரச்­சி­னை­யாக உள்­ளது. ஜய­பூமி, சுவர்ணபூமி காணி உறு­திகள் தமி­ழர்­க­ளுக்கு  வழங்­கப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்றும் தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; முஸ்லிம் நிர்­வாக அதி­கா­ரிகள் இங்கு வந்து கட­மை­யாற்­று­வ­தற்கு ஆர்­வ­மில்­லாமல் இருக்­கி­றார்கள். சமூக உணர்­வுடன் வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து முஸ்லிம் அதி­கா­ரிகள் வந்து இப்­ப­கு­தி­யி­களில் கட­மை­யாற்ற வேண்டும். 

புல்­மோட்டை பிர­தே­சத்தில் 5 பௌத்த விகா­ரைகள் இருந்­த­தா­கவும், ஒவ்­வொரு விகா­ரைக்கும் 500 ஏக்கர் காணி இருந்­த­தா­கவும் கூறு­கி­றார்கள். விகா­ரைகள் இருந்­த­தாகக் கூறு­வதில் எமக்கு பிரச்­சினை இல்லை ஆனால் காணிகள் இருந்­த­தற்­கான ஆதா­ரங்கள் எது­வு­மில்லை. அவர்கள் கோரும் நிலம் வழங்­கப்­பட்டால், நாம் எமது வாழ்­வி­டங்கள், பள்­ளி­வா­சல்கள், பாட­சா­லைகள் அனைத்­தையும் இழக்க வேண்­டி­யேற்­ப­டலாம். நாம் வெளி­யேற வேண்டி ஏற்­ப­டலாம்.

நிர்­வா­கக்­கட்­ட­மைப்பு எமக்கு பாத­க­மாக இருக்­கி­றது. இதனால் முத­ல­மைச்சர் முஸ்லிம் ஒரு­வ­ராக இருந்­தாலும் அவ­ராலும் அமைச்­சர்­க­ளாலும் நகர்­வு­களை முன்­னெ­டுக்க முடி­யா­துள்­ளது என்றார். 

தீர்­வுகள்

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் எமது மக்கள் காணி உரித்­தா­வணம் தொடர்பில் அக்­க­றை­யில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே மக்கள் இது விட­யத்தில் தெளி­வுப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மக்கள் தமது காணி­க­ளுக்­கான ஆவ­ணங்­களைக் கொண்­டி­ருந்­தாலே பிரச்­சி­னை­க­ளுக்கு இல­கு­வாக தீர்­வு­களை எட்­டலாம். 

2009 ஆம் ஆண்­டுக்குப் பின்பே அநேக காணிகள் பறி­போ­யுள்­ளன. 2013 ஆம் ஆண்டில் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்டு காணிகள் கையேற்­கப்­பட்­டுள்­ளன. எனவே எமது காணிப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு சமூ­க­மாகச் சேர்ந்து நாம் குரல் கொடுக்க வேண்டும். முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது கவ­னத்தை இதன்பால் செலுத்­த வேண்டும். 

காணிப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முறை­யாக கொள்­கைகள் வகுக்­கப்­பட வேண்டும். சில விட­யங்கள் நிர்­வாக ரீதி­யாக  தீர்க்­கப்­ப­டலாம். மாவட்ட ரீதி­யிலும், கச்­சேரி மட்­டத்­திலும் சில பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­ளலாம். தேசிய மட்­டத்தில், கொள்கை ரீதி­யா­கவும் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­ளலாம் என எம்.எஸ்.எம்.நியாஸ் தெரி­வித்தார். 

பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு அவை உட­ன­டித்­தீர்வு, மத்­தி­ய­கால தீர்வு மற்றும் நீண்ட கால தீர்வு என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு செயலில் இறங்க வேண்டும் எனவும் மாநாட்டில் கருத்து தெரி­விக்­கப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில் பிரச்­சி­னைகள் வகைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டது. 

அர­சியல் தலை­மைத்­து­வங்­களின் பங்­க­ளிப்பு

திரு­கோ­ண­மலை மாவட்டம் உட்­பட வட, கிழக்கில் வாழும் முஸ்­லிம்­களின் காணிப்­பி­ரச்­சி­னைகள் இன்று பூதா­க­ர­மா­கி­யுள்­ளன. தமது பூர்­வீக காணி­களைப் பறி­கொ­டுத்து மக்கள் அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடி­யாது வேத­னையில் மூழ்­கி­யுள்­ளார்கள். 1990 களில் வெளி­யே­றிய ஒரு முஸ்லிம் குடும்பம் பல குடும்­பங்­க­ளாக விரி­வ­டைந்­துள்­ளன. அவர்­க­ளது பரம்­பரை அதி­க­ரித்­துள்­ளது. இதனால் அவர்­க­ளுக்கு மேல­திக காணிகள் தேவைப்­ப­டு­கின்­றன. 1990 இல் பத்து வயது சிறு­வ­னாக வெளி­யே­றிய ஒருவர், இன்று 37 வயதை அடைந்­தி­ருக்­கிறார். அவரும் திரு­மணம் செய்து அவருக்கென்று ஓர் குடும்பம் உருவாகியிருக்கும் இவையனைத்தும் இயற்கையின் மாற்றம். 

மீள் குடியேற்றம் இன்று பிரச்சினையாக உள்ளது. மீள் குடியேற்றம் விதவிதமாக கையாளப்படுகிறது. மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை சமூகத்தின் மீள் குடியேற்றத்திற்கும் எமது மீள் குடியேற்றத்திற்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எமக்கு தகரமும், கம்பும் தந்து மீள் குடியேறுமாறு கூறப்படுகிறது. 

நல்லாட்சியில் நல்லது நடக்க வேண்டுமென்று வாக்களித்த மக்களின் துயர் துடைப்பதும் அவர்களுக்கு அவர்களது பூர்வீக காணிகளை தாமதியாது வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.