Verified Web

அதிகாரப் போட்டி

2017-08-20 15:13:24 S.Rifan

எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 28ஆம் திக­தி­யுடன் கிழக்கு மாகாண சபை கலைக்­கப்­படும். இதனால், அர­சியல் கட்­சிகள் கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­கான முன் ஆயத்த வேலை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு கட்­சியும் தாங்­கள்தான் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்­டு­மென்று நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளன. கிழக்கு மாகாண சபையின் இன்­றைய ஆட்சி அதி­காரம் தனியே ஒரு கட்­சி­யி­ட­மில்லை. ஒரு கூட்டு ஆட்­சியே நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. கிழக்கு மாகாண சபை­யோடு சப்­ர­க­முவ, வட­மத்திய மாகாண சபை­களும் கலைக்­கப்­ப­ட­வுள்­ளன. இம்­மா­காண சபை­களின் தேர்­தலை பிற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு ஐ.தே.க. நட­வ­டிக்­கை­களை எடுத்­தது. பாரா­ளு­மன்­றத்தில் 20 ஆவது திருத்தச் சட்­டத்தைக் கொண்டுவந்து இதனை சாதித்துக் கொள்­வ­தற்கு அக்­கட்சி எண்­ணி­யது. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மூன்று மாகாண சபை­க­ளி­னதும் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்­டு­மென்று தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. இதனால், விரைவில் இம்­முன்று மாகாண சபை­க­ளுக்கும் தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்­ளன.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதி­கா­ரத்தில் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் பங்­குள்­ளது. இதனால், மாகாண சபை கலைக்­கப்­பட்டு நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்ற கட்­டாயம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் மத்­தியில் முஸ்லிம் காங்­கிரஸ் அதிக பட்ச செல்­வாக்கைப் பெற்ற கட்சி என்ற பெயர் இருந்­தாலும் எதிர்­வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் இந்த செல்­வாக்கை நிலை நிறுத்த வேண்­டிய அவ­சியம் இக்­கட்­சிக்கு இருக்­கின்­றது. மேலும், கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதி­கா­ரத்­தையும் கைப்­பற்ற வேண்­டிய தேவையும் இக்­கட்­சிக்கு இருக்­கின்­றது. ஏனெனில், முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய உட்­கட்சி பூசலில் சிக்­கி­யுள்­ளது. மக்கள் மத்­தியில் என்­று­மில்­லாத விமர்­ச­னங்­களும் உள்­ளன. 

இக்­கட்­சியின் முன்னாள் செய­லாளர் ஹஸன்­அலி தலை­மையில் ஒரு குழு­வினர் தனித்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்கள் கட்­சியின் தலை­வ­ருக்கும், கட்­சியின் நட­வ­டிக்­கைகள் பற்­றியும் பல குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக கட்­சியின் தலை­மை­யகம் தாருஸ்­ஸலாம் பற்­றிய சர்ச்சை, தலை­வ­ருக்கு அதி உச்ச அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளமை, செய­லா­ளரின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டமை. செய­லாளர் பத­விக்கு தெரிவு செய்யும் முறை, முஸ்­லிம்­களின் காணி மீட்பில் தலைமை அச­மந்­த­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­பது என பல குற்­றச்­சாட்­டுக்­களை மக்கள் மன்­றத்தில் முன்வைத்­துள்­ளார்கள். இக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முஸ்லிம் காங்­கி­ரஸோ, அதன் தலை­மையோ இதுவரைக்கும் தெளி­வான பதில்­களை அளிக்­க­வில்லை. இதனால், கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளி­டை­யேயும், ஏனை­ய­வர்கள் மத்­தி­யிலும் பலத்த சந்­தே­கங்கள் உள்­ளன. இதனால், எதிர்­வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்­கிற்கு சத்­திய சோத­னை­யோ­கவே அமை­ய­வுள்­ளது. மக்­க­ளி­டையே காணப்­படும் வெறுப்பு பேச்­சுக்கள் அக்­கட்­சியின் செல்­வாக்கில் எதிர்­மறைத் தாக்­கு­தல்­களை ஏற்­ப­டுத்­தவே வாய்ப்­புக்கள் உள்­ளன.

இதே வேளை, முஸ்லிம் கூட்­ட­மைப்பு ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் இடம் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு மக்கள் மத்­தி­யிலும் ஆத­ர­வுகள் உள்­ளன. முஸ்லிம் கூட்­ட­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அது முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்கில் மிகப் பெரிய சரிவை ஏற்­ப­டுத்தும் என்­பதில் ஐய­மில்லை. இதனால், கட்­சியின் தலை­மை­யோடு முரண்­பட்டு தனிக் குழு­வாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஹஸன்­அலி அணி­யுடன் பேச்சுவார்த்­தை­களை மேற்­கொண்டு உடன்­பாட்டு நிலையை அடைந்து கொள்­வ­தற்­கு­ரிய முஸ்­தீ­புகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. 

மாகாண சபைத் தேர்­தலை இலக்காக் கொண்டு முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்­பாறை மாவட்­டத்­திற்கு அடிக்­கடி விஜயம் செய்து பல அபி­வி­ருத்­தி­களைப் பற்றி பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். இந்­நி­லையில் கட்­சியின் உள்ளூர் தலை­வர்­க­ளி­டையே பலத்த முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. கடந்த சனிக்­கி­ழமை நிந்­த­வூரில் முஸ்லிம் காங்­கி­ரஸின் அம்­பாறை மாவட்ட செயற்­குழுக் கூட்டம் ரவூப் ஹக்கீம் தலை­மையில் நடை­பெற்­றது. இதில் கடந்த காலங்­களில் மாற்றுக் கட்­சி­க­ளி­லி­ருந்து முஸ்லிம் காங்­கி­ரஸை அழிக்க வேண்­டு­மென்று செயற்­பட்­ட­வர்கள் முன் வரி­சையில் அமர்ந்­தி­ருந்­தார்கள். இக்­கூட்­டத்தில் இரு குழு­வினர் கைக­லப்பில் ஈடு­பட்­டார்கள். இதனைத் தடுப்­ப­தற்கு முயற்­சிகள் எடுத்த போதிலும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தது. 

எதிர்­வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு பலரும் டிக்கட் கேட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆயினும், தற்­போ­துள்ள மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுடன் பொத்­துவில் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கும் வாய்ப்பு வழங்க உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் ஹஸன்­அலி மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்டால் அதனை எதிர்க்­கொள்­வ­தற்­கான வியூ­கங்­களை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  வகுத்­துள்ள­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை ஒன்­றினை வழங்­கு­வதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இறுதிக் கட்­டத்தை அடைந்­துள்­ளன. சாய்ந்­த­ம­ரு­திற்கு பிர­தேச சபை என்ற விவ­காரம் வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­பட்டால் சில வேளை முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு கல்­முனை பிர­தே­சத்தில் எதிர்ப்­புக்கள் ஏற்­ப­ட­லா­மென்றும் தெரி­கின்­றது. சாய்ந்­த­ம­ரு­திற்கு பிர­தேச சபை அமைக்­கப்­பட்டால் கல்­முனை மாந­கர சபையின் அதி­காரம் தமி­ழர்­களின் கைக­க­ளுக்கு சென்று விடு­மென்ற அச்சம் கல்­முனை பிர­தேச முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்­றது. ஏற்­க­னவே பல்­வேறு சர்ச்­சைகள் உள்ள நிலையில் கல்­முனை மாந­கர சபையின் அதி­காரம் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து கைந­ழுவிப் போகு­மாயின் கல்­மு­னையின் பொரு­ளா­தாரம், அர­சியல் ஆகியவை சூனி­ய­மாகிப் போய்­விடும். ஆதலால், சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை என்­பது முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு பலத்த சவா­லாக அமை­ய­வுள்­ளது.

மறு­பு­றத்தில் சாய்ந்­த­ம­ரு­திற்கு நாங்­கள்தான் பிர­தேச சபையைக் கொண்டு வந்தோம் என்ற பதிவை முஸ்லிம் காங்­கிரஸ் அல்­லாத காங்­கிரஸ்காரர்கள் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும் முஸ்லிம் காங்­கி­ரஸார் இது விட­யத்தில் வாய் திறக்­க­வில்லை. இதனை நாங்­கள்தான் செய்தோம் என்றால் கல்­மு­னையில் உள்ள செல்­வாக்கில் பின்­ன­டை­வினை ஏற்­ப­டுத்தும் என்று மௌன­மாக உள்­ளார்கள். 

முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு அம்­பாறை மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள விமர்­ச­னங்கள், பின்­ன­டை­வுகள் ஆகி­ய­வற்றை சரி செய்து கொள்­வ­தற்கு தேசி­யப்­பட்­டி­யலில் யாரை­யா­வது ஒரு­வரை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக்­கு­வ­தற்கும் ரவூப் ஹக்கீம் முடி­வு­களை எடுக்கக் கூடும். சல்­மா­னுக்கு தேசிய பட்­டி­யலில் தற்­கா­லி­க­மாக இரண்டு வாரங்­க­ளுக்கு என்று சொல்லிக் கொண்டு இரண்டு வரு­டங்­க­ளுக்கு வழங்­கிய கெடு விரைவில் முடி­ய­வுள்­ளது. 

இந்தப் பின்­ன­ணியில் முஸ்லிம் காங்­கி­ரஸைப் பொறுத்தவரையில் அதன் இன்­றைய அர­சியல் சூழலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்­பது முக்­கி­ய­தொரு பாத்­தி­ரத்தை வகிக்­க­வுள்­ளது. கடந்த காலங்­களில் கட்­சிக்குள் பிள­வுகள் ஏற்­பட்ட போதெல்லாம் மக்கள், கட்­சியின் தலை­மையையும், கட்­சி­யையும் விமர்­சிக்­க­வில்லை. பிரிந்து நின்­ற­வர்­க­ளையே விமர்­சனம் செய்­தனர். ஆனால், இம்­முறை மக்கள் முரண்­பட்டு நிற்­கின்­ற­வர்­க­ளுடன் இணைந்து விமர்­ச­னங்­களை முன்வைத்துக் கொண்­டி­ருப்­ப­தனைப் பார்க்­கின்றோம். ஆதலால், இந்த சூழலில் மக்கள் எவ்­வாறு தேர்­தலில் செயற்­படப் போகின்­றார்கள் என்­பது அவ­தா­னத்­திற்­கு­ரி­ய­தாகும். அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் பின்­ன­டை­வினை காணு­மாயின் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் கட்­சியின் செல்­வாக்கில் பின்­ன­டை­வினை ஏற்­ப­டுத்தும். அத்­தோடு அர­சாங்­கத்­திலும் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு இருக்­கின்ற செல்­வாக்கில் கறுப்பு அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­விடும். 

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மோடு முரண்­பட்­டுள்­ள­வர்­களை சம­ரசம் செய்து அவர்கள் மீண்டும் தலை­மை­யோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்வந்தால் முஸ்லிம் காங்­கி­ரஸின் பின்­ன­டை­வினை தடுப்­ப­தற்கும் வாய்ப்­புக்கள் உள்­ளன.
அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தில் குறி­யாக உள்­ளது. அம்­பாறை மாவட்­டத்­திற்கு தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைக் கொடுத்து கட்­சியின் செல்­வாக்கை அதி­க­ரிப்­ப­தற்கு றிசாட் பதி­யுதீன் திட்­ட­மிட்­டுள்ளார். அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்கை உடைத்தால் அந்த இடத்­தினை தாம் பெற்றுக்கொள்ள முடி­யு­மென்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எண்­ணு­கின்­றது. இதனால், முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரோடு முரண்­பட்­டுள்­ள­வர்­க­ளையும், முரண்­ப­டா­துள்­ள­வர்­க­ளையும் இணைத்துக் கொள்­வ­தற்­கு­ரிய தீவிர முயற்­சிகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

இதே­வேளை, முஸ்லிம் கூட்­ட­மைப்­புக்­கு­ரிய முயற்­சி­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு றிசாட் பதி­யுதீன், ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் ஆகி­யோர்கள் சம்­மதம் தெரி­வித்­துள்­ளார்கள். இத­னி­டையே தமக்­கா­ன­தொரு அணியை பலப்­ப­டுத்தும் வேலையை ஹஸன்­அ­லியும், சிலரும் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது தங்­களை தாங்­களே அழித்துக் கொள்­வ­தற்கு குழி தோண்­டு­வ­தற்கு சமம் என்று ஹஸன்­அலி அணி­யினர் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்கள். ஆயினும், முஸ்லிம் கூட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இது தடை­யாக அமை­யாது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்­தினை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய வியூகம் வகுக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் மஹிந்த அணி, மைத்­திரி அணி என்று பிரிந்து நின்று தேர்­தலில் போட்­டி­யி­டாது சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்ற உணர்­வோடு இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மென்று அவர் தெரி­வித்­துள்ளார். 

மறு­பு­றத்தில் ஐ.தே.கவும் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய திட்­டங்­களை வகுத்­துள்­ளது. அண்­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் உள்ள கட்­சி­களின் தலை­வர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க சந்­தித்து மாகாண சபை தேர்தல் பற்றி பேசி­யுள்ளார். அவர் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய தேசிய முன்னணியில் அனைத்துக் கட்சிகளும் யானைச் சின்னத்திலேயே சந்திக்க வேண்டும். தனித்துப் போட்டியிடக் கூடாதென்று கேட்டுள்ளார். இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், கபீர் ஹாசிம் உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இதன் போது இப்போதைய நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடுவதில் எந்த ஆட்சேபனையுமில்லை என்று கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அமைப்­பா­ள­ராக அண்­மையில் நிய­மிக்­கப்­பட்டார். இவர் ஊடாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிராம மட்டக் கிளைகள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் மீண்டும் கிழக்கில் ஐக்­கி­ய­தே­சியக்கட்­சியை நிலை­நி­றுத்­தவும் மாகாண சபையில் ஐ.தே.க. ஊடாக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­வ­தற்­கு­மாக ஐ.தே.க. திட்டமிட்டு வருகிறது. அத்துடன் ஐ.தே.க.விலிருந்து பிரிந்த பழைய முக்கியஸ்தர்களும் கட்சியில் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.

   இதனால், முஸ்லிம் கட்சிகள் கிழக்கு மாகாண சபையின் தேர்தலை எந்த அடிப்படையில் சந்திக்கும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆயினும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற அவா எல்லாக் கட்சிகளுக்குள்ளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கட்சிகளிடையே காணப்படும் அதிகாரப் போட்டியில் வெற்றிபெறும் அணியை தீர்மானிக்கும் சக்தி மக்களின் கைககளில்தான் உள்ளன. மக்கள் வழக்கம் போன்று செயற்படாது சிந்தித்து செயற்ட வேண்டும். நாம் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் நமது எதிர்காலம் என்பதனை மனதிற் கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போன்று மீண்டும் விரல்கைள சுட்டுக் கொள்ளக் கூடாது.