Verified Web

அதான் அடுத்தவர்களை அசௌகரியப்படுத்தலாமா

2017-08-13 07:32:49 Administrator

எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலி­ஓயா 

 

ஈமா­னி­யத்தை சுமந்த  முஸ்­லிம்­களை அல்­லாஹு­த­ஆ­லாவை வணங்­கு­வ­தற்­காக தினமும் ஐவேளை அழைக்கும் அழ­கிய ராக­மிக்க அழைப்பு அதான் ஆகும். 

முஸ்­லிம்கள் எங்­கெல்லாம் வாழ்­கின்­றார்­களோ அங்­கெல்லாம் அழ­கிய அதானைக்  கேட்க முடியும். இலங்கை போன்ற முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் நாட்டில் அதான் முஸ்லிம் சமூ­கத்தின் வாழ்­வி­யலில் ஓர் அங்­க­மாக பெரும்­பான்மை மக்­களால் கரு­தப்­ப­டு­கின்­றது.  

அதான் ஏகத்­துவம் , நபித்­து­வத்தின் உறு­திப்­பாடு , ஏகத்­துவம் நபித்­துவம் மீதான சாட்­சியம் , தொழு­கையின் வெற்றி முத­லா­ன­வற்றைப் பறை­சாற்­று­கின்­றது. இத்­த­கைய கருத்துப் பொதிந்த அதா­னுக்கு நம்மிள் எத்­தனை பேர் அதன் அர்த்­தத்தை உள்­வாங்கிக் கொண்டு பதில் கூறு­கின்­றனர் என்­பது சிந்­திக்­கத்­தக்­க­தாகும். தொழு­கைக்குத் தயா­ராகும் முஸ்லிம் அதான் சொல்­வதில் இருந்து தொழு­கைக்­காக தன்னைத் தயார்­ப­டுத்­து­கின்றான். 

அதானின் மூலம் தஃவா­வுக்கு களம்  அமைக்­கலாம்.  பள்­ளி­வா­சல்­களில் முஅத்­தி­னுக்­கான தகை­மைகள் வரை­ய­றுக்­க­ப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டில் முஅத்தின் தொடர்­பாக எது­வித தகைமை­களும் இல்லை. அவர்­க­ளுக்­கான சம்­ப­ளமும் சில சொச்­சங்கள் மட்­டுமே. அதான்கள் அழ­கிய தொனி, இனிய  ராகம் மற்றும் சரி­யான உச்­ச­ரிப்பைக் கொண்­டி­ருத்தல் அவ­சியம். ஆனால், தற்­கா­லத்தில் பல பள்­ளி­வாசல் அதான்கள்  இனிமை, ராகம் என்­ப­வற்றை இழந்து நிற்­கின்­றது. இதற்கு பள்­ளி­வாசல் முஅத்­தின்­மார்­களை குற்றம் சொல்ல முடி­யாது. பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் நமது முஅத்­தின்­க­ளுக்கு உல­மாக்கள் மூலம் உரிய வழி­காட்­டல்­களை பெற்றுக் கொடுப்­பது அவ­சியம். ஆனால்,  நமது பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் எப்­போதும் அசட்­டை­யாக இருக்கும் விட­யங்­களில் அதானும் ஒன்­றாகும் என்றால் பிழை­யா­காது. . 

ஒரு தடவை ஒரு பாட­சாலை மாண­வ­னொ­ருவன் எனக்கு  மத்­திய கிழக்கில் இருந்து கொண்டு வந்த மேசைக் கடி­காரம் ஒன்றை அன்­ப­ளிப்­பாக வழங்­கினார். இக்­க­டி­கா­ரத்தில் ஐவேளை தொழு­கைக்கு அதான் கேட்க முடி­யு­மான வசதி காணப்­பட்­டது. 
இக்­க­டி­கா­ரத்தில் கூறப்­படும் அதானை இந்து மத ஆசி­ரி­ய­ரொ­ரு­வ­ருக்கு  நான் ஒலிக்க விட்டுக் காட்­டிய போது, அந்த ஆசி­ரியர் என்­னிடம் கூறிய வார்த்­தைகள் ஆச்­ச­ரி­ய­மா­னது, 

“இதனைக் கேட்கும் போது உள்­ளத்தில் இனம்­பு­ரி­யாத ஒரு ஈர்ப்பு ஏற்­ப­டு­கின்­றது. இது  இனி­மை­யா­ன­தா­கவும் ஈர்ப்­புள்­ள­தா­கவும் இருக்­கின்­றது. நான் இப்­படி ஒன்றைக் கேட்­ட­தில்லை” என்றார்.  

இச்­சம்­பவம் சகோ­தர மக்­க­ளுக்கு இஸ்­லாத்தைப் பற்­றிய புரி­தலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அதான் எவ்­வ­ளவு வாய்ப்­பாக இருக்­கின்­றது என்­பதைப் புரிந்து கொள்­வ­தற்குப் போது­மா­ன­தாகும். 

நமது பள்­ளி­வா­சல்­களில் சொல்­லப்­படும்   அதான் தொடர்பில் எது­வித திட்­ட­மி­டல்­களும் நம்­மத்­தியில் இல்லை. இதில் துர­திஷ்­ட­மான நிலை என்­ன­வென்றால் இன்று இந்த அதான் ஏனைய மத சகோ­த­ரர்­க­ளுக்கு தொல்­லை­யா­ன­தா­கவும் சகித்துக் கொள்ள முடி­யா­த­தா­கவும் மாறி­யுள்­ளது. இதனால் தான் “பள்­ளியென் கேக­ஹ­னவா”, “பள்­ளியில் கத்­து­கின்­றனர்” என்று அவர்கள் கூறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

எனக்குத் தெரிந்த கிரா­ம­மொன்றில் பள்­ளி­வா­சலில் பள்­ளியில் முஅத்­தி­ன­ராக கட­மை­யாற்­று­பவர் அப்­ப­குதி பெரும்­பான்மை மக்­களின் நல்ல நண்­ப­ராவார். இவரை ஒரு முறை விசா­ரித்த பெரும்­பான்மை சகோ­த­ரொ­ருவர் “பள்­ளியென் கேக­ஹனெ அய்யா இன்­ன­வத” “பள்­ளியில் கத்­து­பவர் இருக்­கின்­றாரா?” என்று நட்­புடன் வின­வி­யுள்ளார். இது சகோ­தர மக்­களின் நமது அதான் தொடர்­பி­லான புரி­தலை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

இன்­றைய சம­கா­லத்தில்  நக­ர­ம­ய­மாக்கம் , மக்­களின் அறிவு முன்­னேற்றம், சுதந்­திர வேட்கை முத­லான கார­ணங்­களால் மக்கள் மத்­தியில் சூழல் தொடர்­பாக தீவிர கரி­சனை செலுத்தும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இதனால் ஒலி­யினால் சூழல் மாச­டைதல் தொடர்­பாக தனி­ம­னி­தர்கள் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளனர். அர­சாங்­கமும் இது விட­யத்தில் அக்­கறை காட்டி வரு­கின்­றது. இது தொடர்­பான சட்­ட­வாக்­கங்­களும் மேலும் வலு­வ­டையும் என்­பது நிச்­சயம். 

இலங்கை வாழ் முஸ்­லிம்கள் வட கிழக்­கிற்கு வெளியில் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு மத்­தியில் சிதறி வாழ்­கின்­றனர். இத்­த­கைய பின்­பு­லத்தில் முஸ்­லிம்கள் வாழும் பகு­தி­களில் பல பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றன. இப்­பள்­ளி­வா­சல்­களில் ஒரே நேரத்தில் அதான் சத்­த­மாக ஒலிப்­பதால் அப்­ப­கு­தியில் வாழும் பிற மத சகோ­த­ரர்­க­ளுக்கு ஏற்­படும் அசௌ­க­ரி­யங்கள் பற்றி சிந்­திப்­பது அவ­சியம். 

மேலும் ஒரு பள்­ளி­வா­சலில் அதான் முடியும் போது மற்­று­மொரு பள்­ளி­வா­சலில் அதானை ஆரம்­பிப்­பது, ஜும்ஆ பிர­சங்­கங்­களை ஒலி­பெ­ருக்­கியில் போடு­வது, நீண்ட பயான்கள் மற்றும் தொழு­கைக்குப் புறம்­பான சில வைப­வங்­க­ளுக்­கான ஒலி­பெ­ருக்கிப் பாவனை , இஷா தொழு­கைக்கு ஒலி­பெ­ருக்கிப் பாவனை ,  எத­னை­யெல்லாம் பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்­கியில் அறி­விப்­பது என்று புரி­யாமல் நினைத்த நேரத்தில் நினைத்த அறி­வித்­தல்­க­ளை­யெல்லாம்  பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்­கியில் அறி­விப்­பது, ஜனாஸா அறி­வித்தல் என்ற பெயரில் உயி­ரோடு வாழ்­பர்­களின் நீண்ட பெயர்ப்­பட்­டி­யல்­களை ஒலி­பெ­ருக்­கியில் அறி­வித்துப் பெரு­மைப்­பட்டுக் கொள்­வது முத­லா­னவை தொடர்பில் கட்­டாயம் சிந்­திப்­பது அவ­சியம். 

எனவே பல பள்­ளி­வா­சல்கள் , தக்­கி­யாக்கள் காணப்­படும் இடங்­களில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் கலந்து பேசி சில தீர்­மா­னங்­க­ளுக்கு முன்­வ­ரு­வது அவ­சியம் என்­பதை அண்­மையில் கம்­ப­ளையில் நடை­பெற்ற சம்­பவம் உணர்த்தி நிற்­கின்­றது. 

கம்­ப­ளையில் ஒரு பகு­தியில் பல பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள்  காணப்­ப­டு­கின்­றன. இப்­பள்­ளி­வா­சல்­களில் ஒலி­பெ­ருக்­கி­களின் சத்­தத்தை உயர்த்தி வைத்து  அதான் சொல்­ல­ப்ப­டு­வதால் அசௌ­க­ரி­ய­முற்ற பெரும்­பான்மை சகோ­த­ரரொ­ருவர் சில வாரங்­க­ளுக்கு முன்னர் பள்­ளி­வா­ச­லுக்கு முன்பு வந்து  ஏசி­விட்டு சென்­றுள்ளார். இத­னை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வா­க­தினால் கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது. 

இச்­சம்­ப­வத்தில் சம்­பந்­தப்­பட்ட குறித்த பெரும்­பான்மை சகோ­தரர்  அவுஸ்­தி­ரே­லி­யாவில் நீண்­ட­காலம் வசித்து வரு­ப­வ­ராவார். இவர் ஒரு உள­வி­ய­லா­ள­ரு­மாவார். இவர் விடு­மு­றையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது இங்கு பள்­ளி­வா­சலில் சொல்­லப்­படும் அதானின் அதி­க­ரித்த சத்­தத்­தினால் அசௌ­க­ரித்­திற்­குள்­ளா­கி­யுள்ளார். இவர் பொலிஸ் நிலை­யத்­திற்கு வரும் போது ஒலி­யினால் சூழல் மாச­டை­வது தொடர்­பாக பல சர்­வ­தேச சட்­ட­திட்­டங்­களைக் கொண்ட ஆவ­ணங்­க­ளையும்  கொண்டு வந்­துள்ளார்.  இது கம்­பளை  பொலி­ஸாரால்  சம­ர­சத்­திற்குக் கொண்டுவரப்­பட்­டுள்­ளது. 

இத­னை­ய­டுத்து கம்­பளை ஜம்­இய்­யதுல் உலமா சபை இப்­பி­ர­தேச பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­க­ளுடன் பேசி ஒரே நேரத்தில் பல பள்­ளி­வா­சல்­களில் அதான் சொல்­வது தொடர்பில் ஒழுங்­கு­மு­றை­யொன்றைக் கடை­ப்பி­டிக்­கு­மாறு கேட்டுக் கொண்­டுள்­ளது.  
இச்­சம்­ப­வத்தை குறித்த பெரும்­பான்மை சகோ­தரர்  இன ரீதி­யாக அணு­க­வில்லை. இலங்­கையில்  அதான் சொல்­லப்­படும் ஒழுங்கு தொடர்பில் அவர் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளார். அவர்,  தான் கொண்டு  வந்த ஆவணங்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு சென்றதாகவும்   ஆசிரியர் எம். றிஸ்வி தெரிவித்தார். 

பள்ளிவாசல் நமது அதான்கள் சகோதர மக்களை கவரக்கூடியதாக அமைதல் பல பிரச்சினைகளையும் சவால்களையும் தவிர்க்கக் காரணமாக அமையும். இந்நிலையில் நமது பள்ளிவாசல் நிர்வாகங்கள் பள்ளிவாசல் ஒலிபெருக்கிப் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும். இதற்கான ஒழுங்கு முறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.  இதற்கான வழிகாட்டல்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் சூரா கவுன்சில் முதலானவை வழங்க வேண்டும். இன்றேல்  முஸ்லிம் சமூகம் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை எதிர்காலத்தில் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றலாம் என்பதை சொல்லி வைக்க வேண்டியுள்ளது.