Verified Web

நாவலடி மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமா

14 days ago Administrator

மட்­டக்­க­ளப்பு – கொழும்பு பிர­தான வீதி நாவ­ல­டியில் படை­யினர் நிலை கொண்­டுள்ள தமது குடி­யி­ருப்புக் காணி­களை விடு­விக்கக்கோரி  காணியை இழந்த மக்கள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வருகின்றனர்.

நாவ­லடிச் சந்­தியில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ள 8 ஏக்கர் தனியார் காணியை விடு­விக்குமாறு கோரியே இப்­போ­ராட்டம் முன்­னெ­டுக்­கப்­படுகிறது.

நேற்றைய தினம் ஆறாவது நாளாகவும் அவர்களது போராட்டம் தொடர்ந்த போதிலும் இதுவரை தமக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என அம் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இக் காணியில் வாழ்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு யுத்தம் கார­ண­மாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதனையடுத்து இக் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

நாவ­லடிப் பகு­தியில் தற்­போ­துள்ள  இரா­ணுவ முகாமானது 18 பேரின் காணி­களை ஆக்கிரமித்தே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக 18 பேர் தமது வீடு வாசல்களை இழந்திருக்கின்ற போதிலும், 02 பேருக்கு மாத்திரம் பிரதேச செயலகத்தால் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு முதல் இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள காணி­களை விடு­விக்க வேண்டும் என்­ப­துடன், நட்ட ஈட்­டையும் பெற்றுத் தந்து மீளக் குடி­யேற்ற வேண்டும் என்று அர­சாங்க அதி­கா­ரி­க­ளி­டமும், அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் தெரி­யப்­ப­டுத்­திய போதிலும் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மா­கவே உண்­ணா­வி­ரதம் இருக்கும் நிலைக்கு மீண்டும் வந்­துள்­ள­தாக கவ­லை­யுடன் தெரி­விக்­கின்­றனர்.

இந்த மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் இதுவரை  அரசியல்வாதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ கவனம் செலுத்தவில்லை என இம் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் தமிழ் மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் காரணமாகவும் தமிழ் அரசியல் தலைமைகள் அரசுக்கு வழங்கிய அழுத்தங்கள் காரணமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் அசமந்தம் காரணமாக இன்று வரை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான காணிகள் விடுவிக்கப்படாமலே உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகள் சிங்கள குடியேற்றங்களுக்காகவும் பௌத்த புனித பூமி, தொல்பொருள் வலயம் எனும் பெயராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பிலும் காத்திரமான நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் எடுக்காமை துரதிஷ்டமானதாகும்.

அந்த வகையில் நாவலடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.