Verified Web

இராணுவத்தினரால் காணி அபகரிப்பு

15 days ago Administrator

நாவலடி மக்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில்

வாழைச்­சேனை நிருபர்

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள மட்­டக்­க­ளப்பு – கொழும்பு பிர­தான வீதி நாவ­ல­டியில் படை­யினர் நிலை கொண்­டுள்ள தமது குடி­யி­ருப்புக் காணி­களை விடு­விக்ககோரி  ஐந்­தா­வது நாளாக நேற்றும் காணியை இழந்த மக்கள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் ஆரம்­ப­மான உண்­ணா­வி­ரத போராட்டம் எது­வித உறு­தி­மொ­ழிகள் வழங்கப்படாமை மற்றும் அர­சி­யல்­வா­திகள், உயர் அதி­கா­ரிகள் வருகை தரா­மையால் ஐந்­தா­வது நாளா­கவும் நேற்று தொடர்ந்தது.

நாவ­லடிச் சந்­தியில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம் பகு­தியில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு இருக்கும் 8 ஏக்கர் தனியார் காணியை விடு­விக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தியே இப்­போ­ராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­போது, நல்­லாட்சி அரசே அக­தி­க­ளாக்­கப்­பட்ட எமக்கு நாம் இழந்த காணியை வழங்கு, 8 ஏக்கர் காணியில் 4 ஏக்கர் காணி இராணு முகா­முக்கு எடுத்து மிகுதி 4 ஏக்கர் காணியை எமக்கு வழங்கு, 5 நாட்­க­ளா­கியும் அரச அதி­கா­ரிகள், அர­சி­யல்­வா­திகள் யாரும் வந்து பார்க்­க­வில்லை போன்ற வாச­கங்­க­ளுடன் போராட்­டத்தில் கலந்து கொண்­டுள்­ளனர்.

இங்­கி­ருந்து 1990ஆம் ஆண்டு யுத்தம் கார­ண­மாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட தாங்கள், 1968 ஆம் ஆண்டு முதல் மேற்­படி பிர­தே­சத்தில் குடி­யேறி வாழ்ந்து வந்­துள்­ள­தா­கவும், அங்கு வாழ்ந்­த­மைக்­கான அனைத்து ஆவ­ணங்­க­ளும் தங்­க­ளிடம் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நாவ­லடிப் பகு­தியில் வசித்த மக்கள், இடம்­பெ­யர்ந்து தற்­போது நாட்டின் பல்­வேறு இடங்­க­ளிலும் அக­தி­க­ளாக வசித்து வந்­துள்­ளனர்.

தற்­போ­தைய நல்­லாட்­சியின் சுமூக சூழ்­நி­லையில் தமது பழைய குடி­யி­ருப்பு இடங்­களை படை­யினர் திருப்பி ஒப்­ப­டைக்க வேண்டும். தமது வீடுகள், கடைகள் உள்­ள­டங்­க­லாக அசையும் அசையாச் சொத்­துகள் அனைத்­தையும் படை­யினர் அழித்து விட்டே அந்தப் பகு­தியில் இரா­ணுவ முகாமை அமைத்துக் கொண்­ட­தாக தெரி­விக்­கின்­றனர்.

1968 ஆம் ஆண்டு முதல் மேற்­படி பிர­தே­சத்தில் குடி­யேறி வாழ்ந்து வந்து நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக 1990ஆம் ஆண்டு இருப்­பி­டங்­களை விட்டு இடம்­பெ­யர்ந்து உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்­களின் வீடு­களில் வசித்து வந்­துள்­ளனர்.

1990 ஆம் ஆண்டு முதல் இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள காணி­களை விடு­விக்க வேண்டும் என்­ப­துடன், நட்ட ஈட்­டையும் பெற்றுத் தந்து மீளக் குடி­யேற்ற வேண்டும் என்று அர­சாங்க அதி­கா­ரி­க­ளி­டமும், அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் தெரி­யப்­ப­டுத்­திய போதிலும் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மா­கவே உண்­ணா­வி­ரதம் இருக்கும் நிலைக்கு மீண்டும் வந்­துள்­ள­தாக கவ­லை­யுடன் தெரி­விக்­கின்­றனர்.

நாவ­லடிப் பகு­தியில் தற்­போ­துள்ள  இரா­ணுவ முகாம் 18 பேரின் காணி­களை உள்­ள­டக்கி அமைக்­கப்­பட்­டுள்­ளது. இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக 18 பேர் தமது வீடு வாசல்களை இழந்திருக்கின்ற போதிலும், 02 பேருக்கு மாத்திரம் பிரதேச செயலகத்தால் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.