Verified Web

வரலாற்றை பதிய வேண்டியதே இலங்கை முஸ்லிம்களின் முதற்பணி

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

2017-08-08 16:30:11 A.J.M.Nilaam

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை பல எழுத்­தா­ளர்கள் எழுதி நூல்­க­ளாக வெளி­யிட்­டுள்­ளனர். இவற்றில் இலங்கை சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலையம் வழங்­கிய ஆய்­வுநூல் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அறிஞர் சித்­தி­லெப்பை, அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் ஆகி­யோரின் முன் முயற்­சியின் வழியில் வாப்­பிச்சி மரிக்­காரின் பேரனும் ஹொன­ரபல் அப்துர் ரஹ்­மானின் மக­னு­மா­கிய சேர். ராசிக் பரீதின் அரிய பங்­க­ளிப்பே இது­வாகும்.

சிங்­கள மக்­களின் வர­லாற்று நூலான மகா­வம்­சத்தில் முஸ்­லிம்­களின் சரித்­தி­ரத்தை எதிர்­பார்க்க முடி­யாது. அது அவர்­களைப் பற்றி மட்­டுமே குறிப்­பி­டு­கி­றது. அதை வைத்துக் கொண்டே அவர்கள் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இலங்கை சொந்­த­மல்ல என்­கி­றார்கள். போர்த்­துக்­கே­யரும் ஒல்­லாந்­தரும் ஆங்­கி­லே­யரும் இன வேறு­பா­டின்றி பண்­டைய சுவ­டி­களை ஆய்வு செய்து எழு­தி­யதிருந்தே முஸ்லிம் சமூக சரித்­தி­ரத்தை அறிந்து கொள்ளப் பேரு­த­வி­யா­கி­யது. 'யாழ்ப்­பாண மாலை' எனும் பண்­டைய நூலிலும் கூட தமி­ழரைப் பற்றி மட்­டுமே இருக்­கி­றது.

அண்­மையில் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து இலங்­கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அறிஞர் இலங்­கைக்கு வந்­தி­ருந்தார். அவர் நிகழ்த்­திய ஒரு சொற்­பொ­ழிவில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வர­லாறு இல்லை என்று கூறி­யி­ருந்தார். இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றைக் குறிக்கும் பல நூல்கள் இருக்­கின்­ற­போதும் இவ­ருக்கு இவ்­வி­டயம் தெரி­யா­தி­ருந்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தையே அளிக்­கி­றது.
இதை­வி­டவும் வேதனை தரும் விடயம் என்­ன­வென்றால், இலங்கை முஸ்­லிம்­களின் சரித்­திர நூல்கள் முஸ்­லிம்­களால் தேடிப் பார்க்கப் படா­தி­ருப்­பதும் முஸ்லிம் ஊட­கங்­க­ளிலும் கூட முக்­கி­யத்­துவம் இல்­லா­தி­ருப்­ப­து­மாகும்.

10 வரு­டங்­க­ளுக்கு முன் நான் சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலை­யத்­துக்குப் போய் அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸின் சில ஆவண நூல்­களை வாங்­கினேன். தட்­டச்சு கால பழைய பதிப்பு விலை மிகவும் மலிவு. தேடி வருவோர் யாரும் இல்­லா­ததால் ஒரு பக்­க­மாக ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. மீள் பிர­சுரம் நிக­ழுமா? என்­பது நிச்­ச­ய­மில்லை காரணம் கிராக்கி இல்லை.

அந்த முஸ்லிம் வர­லாற்றைத் தொகுத்­தவர் யார் தெரி­யுமா. அறிஞர் ஐ. எல்.எம். அப்துல் அஸீஸ். அவர் அந்த, தனது முஸ்லிம் வர­லாற்று நூலில் இலங்கை முஸ்­லிம்கள் இன ரீதியில் சிங்­களக் கலப்பு என்றே நிறு­வி­யி­ருந்தார். 1889 ஆம் ஆண்டு வரை சட்ட நிர்­ணய சபையில் முஸ்­லிம்­க­ளுக்­கு­மாகச் சேர்த்து சேர். பொன் இரா­ம­நா­தனே அங்­கத்­துவம் வகித்த நேரத்தில் 1889 ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்குத் தனி­யாக எம்.சி. அப்துர் ரஹ்மான் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார் அல்­லாவா?

இதை எதிர்த்து முஸ்­லிம்­களும் தமி­ழர்­களே எனும் தலைப்பில் ஓர் ஆய்வை எழுதி சேர். பொன் இரா­ம­நாதன் இங்­கி­லாந்து அர­சுக்கு அனுப்பி வைத்தார். இதை ஆட்­சே­பித்த அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் இலங்கை முஸ்­லிம்கள் தமி­ழ­ரல்லர் சிங்­களக் கலப்­பினர் என எழுதி இங்­கி­லாந்­துக்கு அனுப்பி சேர். பொன் இரா­ம­நா­தனின் கருத்­து­களை முறி­ய­டித்தார். 

இவ­ரது ஆய்வே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. எனினும் தமிழ் கலப்பு இல்லை எனக் கூறிக் கொண்டு சிங்­களக் கலப்பு என நிரூ­பிக்­கப்­பட்­ட­தா­னது தனித்­துவ ஆய்வில் ஓர் இடை­வெ­ளி­யையே உண்­டாக்­கி­யது. அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் இலங்­கைக்கு வந்த அர­பிகள் சிங்­களப் பெண்­களை மண­மு­டித்­த­தாகக் கூறு­கிறார். அந்த அர­பிகள் சிங்­களப் பெண்­களை மட்­டுமே மண முடித்­த­தாகக் கூற முடி­யுமா?

தமிழ்ப் பெண்­க­ளையும் மண­மு­டித்­தி­ருக்­கலாம். அதைக் கூறினால் சேர். பொன் இரா­ம­நாதன் வென்று விடுவார் . அதனால் தான் இதை அறிந்த பின் அவர் சேர். பொன் இரா­ம­நா­தனை முறி­ய­டிக்க சிங்­களக் கலப்பே எனக் கூறி­யி­ருக்­கிறார். இது பெரும் குறை­பாடு எனினும் இவ­ரது ஆய்வின் சில தர­வுகள் முஸ்­லிம்­களின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்­து­வதில் சிறந்த எடு­கோள்­க­ளா­கவே இருக்­கின்­றன. ஏறத்­தாழ 2000 ஆண்­டு­க­ளுக்கு முன் யெம­னி­லி­ருந்து அரா­பிய கட­லோ­டி­க­ளான பினீ­ஷியர் இலங்­கைக்கு வந்­த­தா­கவும் மொரோக்கோ அர­பி­களும் வந்­தனர் எனவும் இவர்­களே இலங்­கையின் முதல் மூதாதை எனவும் குறிப்­பி­டு­கிறார். யெமன் யோனக, சோனகன் எனும் சொற்­களை ஒப்­பி­டுங்கள். இரண்­டா­வ­தாக மொரோக்கோ அர­பிகள் வந்­தார்கள். மூர் எனும் சொல் இதையே குறிப்­பி­டு­கி­றது.

1944 ஆம் ஆண்டு சட்ட நிர்­ணய சபையில் கல்­வி­ய­மைச்­ச­ராக இல­வசக் கல்­வியின் தந்தை சி.டப்­ளியு. டப்­ளியு கன்­னங்­கரா இருந்த போது நாடு முழுக்க 144 முஸ்லிம் பாட­சா­லை­களை முஸ்லிம் கிரா­மங்­களில் சேர். ராசிக் பரீத் கட்டிக் கொடுத்தார். முஸ்லிம் முதியோர் கல்­வி­யையும் ஆரம்­பித்தார். முஸ்லிம் பாலர் வாசகம் எனும் பாட நூலையும் வழங்­கினார். அந்தக் கால கட்­டத்­தில்தான் இலங்கை முஸ்லிம் சமூக சரித்­தி­ரமும் அவரால் எழு­தப்­பட்டு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

அப்­போதே எளிய நடையில் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை சிறுவர் பாட நூலில் இணைத்­தி­ருந்தால் இன்­றைய தலை­முறை இந்த அளவு தடு­மா­றி­யி­ருக்­காது. சிறிது காலம் கழித்து கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் கல்­வி­ய­மைச்­ச­ராக இருந்து முஸ்­லிம்­க­ளுக்கு அதிக ஆசி­ரிய நிய­மனங்களைக் கொடுத்­தி­ருந்த போதும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றைப் பாட நூல்­களில் சேர்க்க முயற்­சிக்க வில்லை. அது நிகழ்ந்­தி­ருந்­தாலும் கூட இந்த தலை­முறை உரிய தெளிவைப் பெற்­றி­ருக்கும்.

ஒரு­வ­கையில் அவை நிக­ழா­மற்­போ­னதும்  நன்­மை­யா­கவே முடிந்­தி­ருக்­கி­றது. இல்­லா­விட்டால் சிங்­களக் கலப்பு என்­பது மேலும் வலுப்­பெற்­றி­ருக்கும். ஏனெனில் தந்தை வழி அரபி என்­பதும் தாய் வழி சிங்­களம் என்­பதும் அரை­குறை பூமி­புத்­தி­ரர்கள் என்றே பேரி­ன­வா­தி­களால் இன்று நோக்­கப்­ப­டு­கி­றது. தந்தை வழிதான் அசல். அவர் அந்­நிய நாட்­டவர். இலங்­கையில் பெண் எடுத்­தற்­காக அவ­ரது சந்­த­தி­யினர் முழு­மை­யான பூமி­பூத்­தி­ரர்­க­ளாக ஆகி­வி­ட­மு­டி­யாது எனவும் அவர்கள் கூறினர். சிங்­கள தந்­தைக்கும் சிங்­கள தாய்க்கும் பிறந்தால் தான் முழு­மை­யான சிங்­கள இரத்தம். அரபு தந்­தைக்கும் சிங்­கள தாய்க்கும் பிறந்­தது கலப்பு என்­பது மட்­டு­மல்ல, தந்­தையின் உயி­ரணு அரபு என்­பதால் அசல் அல்ல என்றும் கூறினர். 

இலங்­கையின் சுதே­சியம் பேசு­வ­தற்கு இரத்த அடிப்­படை தேவை­தானா? அப்­ப­டி­யானால் தமி­ழரின் இரத்தம் சிங்­கள இரத்தம் அல்­லவே. அறி­வியல் ரீதி­யிலும் கூட இது ஓர் ஆபத்­தான கூற்று அல்­லவா? யாரு­டைய உடலில் எவ­ரது இரத்தம் ஓடு­கி­றது என்று எவ­ருக்­குத்­தெ­ரியும்? மனித இரத்­தத்தில் சிங்­கள இரத்தம், தமிழ் இரத்தம் என்­றெல்லாம் உண்டா? அறி­வியல் அதி­க­ளவில் வளர்ந்த பிற­கும்­கூட சிங்­க­ளத்தின் இரத்தம் தமது உடல்­களில் ஓடு­கி­றது எனும் பண்­டைய நம்­பிக்­கையின் தாக்­கமே இது­வாகும். இதற்கு சில அறி­ஞர்­களும் பலி­யா­கி­யி­ருக்­கின்­றனர். மு.கா.தலைவர் ரவூப் ஹக்­கீமும் கூட தனது பெய­ருடன் சிங்­கள வாசகம் இருப்­ப­தாக சமீ­பத்தில் பெரு­மைப்­பட்­டி­ருக்­கிறார். 

இது முஸ்லிம் வர­லாற்றை கண்­டி­ய­ரச காலத்­தோடு மட்­டி­டு­வ­தாகும். முஸ்லிம் அரபு வியா­பா­ரி­க­ளுக்கு சிங்­கள மன்னன் அரச குமா­ரி­களை மண­மு­டித்துக் கொடுத்­தானாம். அர­ச­வை­யிலும் முஸ்­லிம்­களை வைத்­தி­ருந்­தானாம். வைத்­திய பொறுப்­பையும் வழங்­கினானாம். ஒரு முஸ்லிம் பெண் சிங்­கள அர­சனைக் காப்­பாற்றப் பலி­யா­னாளாம். இவற்­றையே இலங்கை முஸ்­லிம்கள் தமது தேசிய உரி­மையை என்­பிக்க முன்­வைக்­கி­றார்கள். 

இவை அடிப்­படை உரி­மை­க­ளுக்­கான விட­யங்­க­ளல்ல. சலு­கை­க­ளுக்­கான, உரி­மை­க­ளுக்­கான விட­யங்­க­ளாகும். இவையே லோனா தேவ­ரா­ஜி கருத்­து­க­ளு­மாகும். இவற்­றையே பெரு­மை­யாகப் பேசிக் கொண்டு முஸ்­லிம்கள் இரண்டாம் தரப்­பி­ர­ஜை­க­ளாகி தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்தும் விடு­பட்டுப் போனார்கள். உண்­மையில் நபி (ஸல்) பிறப்­ப­தற்கு 600 ஆண்­டு­க­ளுக்கு முன்பே யெமன் நாட்டின் பினீ­ஷியர் அர­பிகள் இலங்­கைக்கு வந்­தார்கள். சிறந்த கட­லோ­டி­க­ளான அவர்­களே இந்த தீவுக்கு முதலில் திர­ளாக வந்து குடி­யே­றியோர். இவர்கள் சூரியன், நட்­சத்­திரம், மரம், நெருப்பு, சிலை ஆகி­ய­வற்­றையும் வணங்­கினர். 

பிற­குதான் இவர்­களின் பத்தாம் தலை­மு­றைக்கு மக்­காவில் நபி (ஸல்) அவர்கள் பிறந்த செய்­தி ­கேள்விப்­பட்டு இது பற்றி விசா­ரித்து வர ஒரு குழுவை அனுப்­பி­வைத்­தார்கள். அந்­தக்­குழு அங்கு சென்­ற­போது, மாதக்­க­ணக்­கான கடற் பயணம் என்­பதால் இரண்டாம் கலீ­பா­வான உமர் (ரழி) அவர்­க­ளையே காணக் கிடைத்­தது. அன்று வஹப்­இப்னு அபீ­ஹப்ஸா (ரழி) இலங்­கைக்கு அனுப்­பப்­பட்­ட­தாக சித்­தி­லெப்பை எழு­தி­யுள்ளார். அன்­றி­லி­ருந்தே இஸ்லாம் இலங்­கைக்கு வந்­தது. 

பிறகு நூறாண்டு கழித்து அப்­பா­ஸிய காலத்தில் இஸ்­லா­மிய அறிவை விரி­வு­ப­டுத்த காலித் பின் பகாயா (ரழி) அவர்கள் வந்­தி­ருந்­தார்கள். முதலில் வந்­தவர் அறி­மு­கப்­ப­டுத்­தினார். பிறகு வந்­தவர் விரி­வு­ப­டுத்­தினார். அந்த வகையில் முஸ்லிம் எனும் சொல் இனம், மொழி, பிர­தேசம் ஆகி­ய­வற்றைக் கடந்­த­தாகும். இன ரீதி­யா­கவோ, மொழி ரீதி­யா­கவோ, பிர­தேச ரீதி­யா­கவோ மட்டுமல்ல, இரத்த ரீதியாகவும் கூடவேறுபடுத்தமுடியாததாகும். 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வந்த அரபிகளின் சந்ததியாகவும் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொள்கையைப் பின்பற்றும் சமூகமாகவும் இருக்கிறார்கள். இந்தவகையிலேயே இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் நிலைநாட்டப்படவேண்டும். சுயநிர்ணயத்திலும், இறைமையிலும், வாழ்வாதாரத்திலும் பங்குவேண்டும். 

இத்தகைய உண்மையான நிலைப்பாட்டை முன்னாள் மு.கா.தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபே முன்வைத்தார். இதன் அடிப்படையில் அவர் முன்வைத்த கருத்துகள் அதிவிரைவில் நூல் வடிவில் வெளியாகவிருக்கிறது. ஆய்வாளர்களுக்கு கால வரையறையும் கிடையாது. பண்டைய நூல்களிலேயே புதைந்திருக்கவும் வேண்டியதில்லை. புதிய ஆய்வாளர்கள் எம்.எச்.எம்.அஷ்ரபின் எடுகோளின்படி தமது முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். செய்வார்களா?