Verified Web

கொள்கைகளுடன் உடன்படின் முஸ்லிம் கூட்டமைப்பில் இணைவோம்

2017-08-08 10:14:06 ARA.Fareel

ந.தே.மு.செயலாளர் நஜா மொஹமட்

புதி­தாக அமை­ய­வுள்ள முஸ்லிம் கூட்­ட­மைப்பு வெறும் அர­சி­ய­லையே நோக்­க­மாகக் கொள்­ளாது தேசிய பிரச்­சி­னை­க­ளிலும் சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளிலும் ஒரு­மித்து குரல் கொடுக்கக் கூடிய அமைப்­பாக உரு­வாக்­கப்­படும் என்ற உறுதி வழங்­கப்­பட்டால் மாத்­தி­ரமே நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி அக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து செய­லாற்றும் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் நஜா மொஹமட் தெரி­வித்தார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி முஸ்லிம் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­வது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணி­யுடன் முஸ்லிம் கூட்­ட­மைப்பின் அமைப்­பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லாளர் ஹசன் அலி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். அதன்பிறகு இது தொடர்பில் வேறுசிலர் பலர் இரு தட­வைகள் எம்மைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்கள். ஆனால் நாம் இது­வரை முஸ்லிம் கூட்­ட­மைப்­புடன் இணை­வது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாகத் தீர்­மா­னிக்­க­வில்லை.

முஸ்லிம் கூட்­ட­மைப்பின் நோக்கம், கட்­ட­மைப்பு, அதன் செயற்­பா­டுகள் மற்றும் தீர்­மா­னங்கள் மேற்­கொள்ளும் வழி­மு­றைகள் என்­பன பற்­றிய விப­ரங்கள் ஆவணம் மூலம் எமக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான விட­யங்­களில் தெளி­வுகள் பெற்ற பின்பே எம்மால் ஒரு தீர்­மா­னத்­துக்கு வர முடியும். 

முஸ்லிம் கூட்­ட­மைப்பு தனது தேர்­த­லுக்கு முன்­ன­ரான செயற்­பா­டுகள் மற்றும் அதற்குப் பின்­ன­ரான செயற்­பா­டுகள் என்­பன தொடர்பில் வேலைத்­திட்­ட­மொன்­றினை முன்­வைக்க வேண்டும். அவற்றை மிக ஆழ­மாக ஆராய்ந்தே எம்மால் இறுதித் தீர்­மா­னத்தை எட்ட முடியும்.

சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை நாம­னை­வரும் ஒன்­று­பட்டு ஒரே குரல் கொடுப்­பதன் மூலமே தீர்க்க முடியும். எனவே முஸ்லிம் கூட்­ட­மைப்பு எல்லாத் தரப்­பி­ன­ரையும் உள்­வாங்கிக் கொள்­ள­வேண்டும். நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி வெறும் அர­சியல் மற்றும் தேர்­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறு­கிய நோக்­கத்­துடன் செயற்­படும் அமைப்­பு­க­ளு­டனும் கட்­சி­க­ளு­டனும் இது­வரை ஒன்று சேர­வில்லை.

எமக்­கென்று கொள்­கைகள், விழு­மி­யங்கள் இருக்­கின்­றன. எமது கொள்­கை­க­ளுடன் உடன்படும் எந்த அமைப்புடனும் கட்சியுடனும் இணைந்து சமூகத்துக்காக குரல் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். எமது கதவுகள் பேச்சுவார்த்தைகளுக்காக எப்போதும் திறந்தே இருக்கும் என்றார்.