Verified Web

பாடசாலைக் கழிவறைகளும் மாணவிகளின் கஷ்டங்களும்

A.L.Nowfeer

BA, PG Dip in Applied Sociology,
Dip in English.

2017-08-06 15:35:48 A.L.Nowfeer

இலங்கைத் தேசம் கல்வித் துறையில் மேலோங்கி வரு­கி­றது. உலகின் கவ­னத்தை ஈர்க்கும் நிலைக்கு இங்கே கற்றோர் வீதம் உயர்ந்து வரு­கி­றது. இங்கே ஆண், பெண்­க­ளுக்கு என்ற தனிப் பாட­சா­லை­களும், கலவன் பாட­சா­லை­களும் என நாட்டில் பர­வ­லாக பாட­சா­லைகள் காணப்­ப­டு­கின்­றன.

இலங்­கையில் கல்­வி­ய­றிவும் அதன் தரமும் தொடர்ந்து ஆண்­டு­தோறும் உயர்ந்­து­கொண்டே இருக்­கின்­றது. தனியார்  துறைக் கல்வி நிறு­வ­னங்­களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறு­வ­னங்­களில் இணைந்து கல்வி பயில்­வ­தற்­கான வச­தி­களை விளம்­ப­ரத்தின் மூலம் வெளிப்­ப­டுத்தி, மாண­வர்­க­ளையும் அவர்­களின் பெற்­றோர்­க­ளையும் ஈர்க்­கின்­றனர். இது ஆரம்பப் பாட­சா­லை­யி­லேயே தொடங்கி பல்­கலைக் கழகம் வரை பொருந்தும். இங்கே கவ­னிக்க வேண்­டிய விடயம் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு அமைக்­கப்­படும் வகுப்­ப­றைகள் போல் மாண­வர்­களின் இயற்கைத் தேவை­க­ளுக்­காக கழி­வ­றை­களும் மாணவர் எண்­ணிக்­கைக்கு ஏற்ப அமைக்­கப்­ப­டு­கின்­றதா என்­ப­தாகும். எந்த அரச பாட­சா­லையும், தனியார் கல்வி நிறு­வ­னமும் மாண­வர்­களின் எண்­ணிக்­கைக்கு ஏற்ப கழிப்­பறை வசதி செய்து கொடுக்­கின்­ற­னவா என்றால்  சரி­யான முடிவை எட்ட முடி­வ­தில்லை. கல்வித்துறையின் உயரதி­கா­ரிகள் கூட இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்­வ­தில்லை.

இங்கு நாம் யாரும் கல்­விசார் விட­யங்­க­ளுக்குக் கொடுக்கும் முக்­கி­யத்­துவம் போல் பாட­சா­லை­க­ளிலே உள்ள கழிப்­ப­றைகள் பற்றி வெளிப்­ப­டை­யாக யோசிப்­பதோ, கதைப்­பதோ இல்லை. கழிப்­பறை வச­திகள், சல­கூடம் (urinate), மல­சல கூடம் (Toilets)  இருக்­கின்­றது என்று தனியார் கல்வி நிறு­வ­னங்­களும் தங்­களின் விளம்­ப­ரங்­களில் சொல்­வ­தில்லை. காரணம், கழிப்­பறை என்­பது அவர்­க­ளுக்கு அரு­வ­ருப்­பான விஷ­ய­மாக இருக்­கலாம் அல்­லது அது சொ­லு­கின்ற அள­விற்கு முக்­கி­யத்­துவம் இல்­லா­த­தாகக் கூட கரு­தலாம். ஆனால் அவற்றின் குறை­பா­டுகள் மூல­மாகப் பல மாணவ, மாண­விகள் நோய்­வாய்ப்­பட்ட நிலையும் இங்கே தோன்றி வரு­கின்­றன.

கல்விக் கூடங்­களின் கழிப்­பறை வசதி விச­யத்தில் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வது பெண் குழந்­தை­கள்தான் என்­பதை நம்மில் பலரும் அறிய முடி­வ­தில்லை. குறிப்­பாக பாட­சா­லை­களில் ஆரம்ப பாட­சாலை முதல் ஆரம்­பித்து இந்த பிரச்­சினை க.பொ.த. உயர்­தர வகுப்­பு­வரை தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. ஆண்­களைப் போல் பெண் மாண­விகள் கண்ட நின்ற இடங்­களில் அவ­ச­ரத்­திற்­காக சிறுநீர் கழிப்­ப­தில்லை. 

எமது பல்­க­லைக்­க­ழ­கங்­களைப் பொறுத்­த­மட்டில் கழிப்­பறை வச­திகள் சிறப்­பாக உள்­ள­துடன், அவற்றைப் பரா­ம­ரிக்­க­வென்றும் சிறப்­பான ஏற்­பா­டு­களும் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. சுத்­தி­க­ரிப்புத் தொழி­லா­ளர்­களும் போது­மான அளவு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.
இலங்­கையில் க.பொ.த. (உ/த) முடி­வ­டைந்த பின்­னரே தொழில் (professional), தொழி­நுட்ப (technical), பணம் உழைக்கும் கற்­கை­களைப் (money based courses) பெறவே தனியார் துறை நகரப் பகு­தி­களில் அதிக கல்வி நிறு­வ­னங்­களை ஆரம்­பித்து வரு­கின்­றன. இங்கே வளர்ந்த மாண­வர்­க­ளுக்கே தனியார் துறையில் கல்வி பயில்­வ­தற்­கான தேவை ஏற்­ப­டு­கி­றது. அரச பாட­சா­லை­க­ளிலும், தனியார் பாட­சா­லை­க­ளிலும் என கழிப்­பறை வசதி விட­யத்தில் பெண்­கு­ழந்­தைகள் மிகவும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். பொது­வாக, கழிப்­பறை வசதி பாட­சாலை வளா­கத்தில் இல்­லாமல் இருப்­பது, சில வேளை­களில் இருந்­தாலும் பரா­ம­ரிப்­பின்றி இருப்­பது, போது­மான எண்­ணிக்­கையில் இல்­லாமல் இருப்­பது, தண்ணீர் இல்­லாமல் இருப்­பது, பாத்­திரம் (வாளி, கப்) இல்­லாமல் இருப்­பது, உள்ளே நுழைய முடி­யா­த­ளவு துர்நாற்றம் வீசு­வது, கதவில் தாழ்ப்பாள் இல்­லாமல் இருப்­பது, வகுப்­ப­றையில் இருந்து தூரத்தில் தனி­யாக இருப்­பது, இப்­படி பல்­வேறு கார­ணங்­க­ளினால் கிராமப் பாட­சா­லைகள், நகரப் பாட­சா­லைகள் என்ற வேறு­பாடு இல்­லாமல் அனைத்து இடங்­க­ளிலும் பெண் குழந்­தைகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அனைத்துப் பாட­சா­லை­க­ளிலும் இந்தப் பிரச்­சினை மௌன­மாக மாண­வி­களால் அனு­ப­விக்­கப்­பட்டுக் கொண்டே இருக்­கின்­றது. 

இந்த நேரத்தில் சில விதி­வி­லக்கும் உண்டு என்­ப­தையும் நாம் கூற வேண்டும். எது­வா­னாலும் பெரும்­பா­லான பாட­சா­லை­களில் கழிப்­ப­றை­களின் நிலை இப்­ப­டித்தான் இருக்­கின்­றது என்­ப­துடன் சில பாட­சா­லைகளில் சிறப்­பாக போது­மான அளவு கழி­வ­றைகள் உள்­ள­தோடு அவை அதி­பர்­களால், பொறுப்­பான ஆசி­ரி­யர்­களால் சரி­யான நிரு­வா­கத்­துக்­குட்­ப­டு­வ­தையும் நாம் மறந்துவிடக்­ கூ­டாது.
பெரும்­பா­லான கழிப்­பறை வசதிப் பிரச்­ச­ினை­களால் கழிப்­ப­றையைப் பயன்­ப­டுத்த முடி­யாமல் பெண்­கு­ழந்­தைகள் சிறுநீர் கழிப்­பதை அடக்­கிக்­கொள்­கின்­றனர். காலையில் 7 மணிக்கும் முன்­பாக வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் செல்லும் குழந்­தைகள் பி.ப. 3, 4 மணிக்கும்,பொதுப் போக்­கு­வ­ரத்து வாக­னத்தில் தூரத்­தி­லி­ருந்து பாட­சாலை செல்லும் மாண­விகள் மாலை 6 மணிக்கும் வீட்­டிற்கு வந்த பிற­குதான் சிறுநீர் கழிக்­கின்­றனர். சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்­காமல் அடக்­கிக்­கொள்­கின்­றனர். இதில் கொடு­மை­யான விசயம் என்­ன­வென்றால், பெரும்­பா­லான குழந்­தைகள் பாட­சா­லையில் தண்ணீர் குடிப்­ப­தில்லை. காரணம், சிறுநீர் கழிக்க வேண்­டி­வரும் என்­பதால். இதனால் குழந்­தைகள் ஆரோக்­கிய குறை­பா­ட்டிற்கு ஆளா­கின்­றனர். காலையிலிருந்து மாலை வரை தண்ணீர் குடிக்­காமல் தங்­களைப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்­கின்­றனர். மேலும், சிறுநீர் கழிப்­பதை அடக்­கியும் பழ­கிக்­கொள்­கின்­றனர். இதனால் பாட­சாலை நாட்கள் தவிர மற்ற நாட்­க­ளிலும் இதையே செய்­கின்­றனர். இந்தப் பழக்­கத்­துக்கு ஆளா­கின்­றனர். பாட­சா­லை­களில் உள்ள கழிப்­பறைச் சீர்­கேடு கார­ண­மாக சிறுநீர் கழிப்­பதை அடக்­கு­வ­தை­விட வேறு வழியே இல்­லாமல் பெண் குழந்­தைகள் பாட­சாலை சென்று வரு­கின்­றனர்.

இயற்கைத் தேவை­களை நேரத்­துக்குப் போகாது அடக்­கு­வது ஆரோக்­கி­யத்­திற்கு பெரும் பிரச்­சி­னை­யாகும். தண்ணீர் குடிக்­கா­மலும், சிறுநீர் கழிக்­காமல் பல­மணி நேரம் அடக்­கு­வ­தாலும், பெண்­கு­ழந்­தைகள் சிறுநீர்த் தொற்று நோய், சிறு­நீ­ரக பாதிப்பு மற்றும் தொடர்­பான பல்­வேறு நோய்­க­ளுக்காளாக நேரி­டு­கின்­றது. இது உடல் ரீதி­யான பாதிப்­புக்­களை மட்­டு­மல்­லாமல் உள ரீதி­யான பாதிப்­புக்­க­ளையும் அவர்­க­ளி­டத்தில் ஏற்­ப­டுத்­து­கின்­றன. பாட­சாலை செல்ல வேண்டும் என்­றாலே, அவர்கள் இந்த அவஸ்­தை­களை நினைத்து பாட­சா­லையை வெறுக்­கின்ற சூழல் ஏற்­ப­டு­கின்­றது. உள­வியல் ரீதி­யாக பாதிக்­கப்­படும் போது அவர்­களால் படிப்பில் போதிய கவனம் செலுத்த இய­லாமல் போகின்­றது. கழிப்­பறை வசதி பிரச்­சி­னையால் பெண் குழந்­தை­களின் உடல் நலமும், மன நலமும் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றன.

தங்கள் குழந்­தைகள் சிறந்த பிர­பல்­ய­மான பாட­சா­லை­யிலே படித்து சிறந்த பெறு­பே­று­களைப் பெற்று பல்­க­லைக்­க­ழ­கமோ அல்­லது நல்ல வேலையில் அம­ர­வேண்டும் என்று எண்ணி பெற்­றோர்கள் தங்கள் குழந்­தை­க­ளுக்­கான சிறந்த பாட­சா­லையைத் தேடு­கின்­றனர். பாட­சா­லையின் வாயிலில் நீண்ட வரி­சையில் நின்று விண்­ணப்பப் படிவம் பெறு­கின்­றனர். பாட­சா­லையைத் தேர்வு செய்­வதில் அவர்கள் காட்டும் அக்­க­றையில் கொஞ்சம் கூட அப்­பா­ட­சா­லையின் அடிப்­படை வச­தி­யான கழிப்­பறை எவ்­வாறு உள்­ளது, தங்­களின் பெண்­கு­ழந்­தை­க­ளுக்கு ஏற்­ற­தாக உள்­ளதா என்று அவர்­களின் நலன்­க­ருதி பார்ப்­ப­து­மில்லை. பாட­சா­லை­க­ளுக்­கான அடிப்­படை வச­திகள் (infrastructure facilities) பட்­டி­யலில் கழிப்­பறை அவர்­களின் மனதில் வரு­வ­து­மில்லை. 

பாட­சாலை நல்ல பெறு­பே­று­களைப் பெற்­றுள்­ளதா, சிறப்பு வகுப்­புகள் நடை­பெ­று­கின்­ற­னவா, போதிய ஆசி­ரி­யர்கள் உள்­ள­னரா, விஞ்­ஞான ஆய்வு கூடம் உள்­ளதா, படிப்­பை­விட புறக்­கி­ருத்திச் செயற்­பா­டுகள் (co- carycular activities) எவ்­வா­றுள்­ளன என்று மட்­டுமே பார்த்துத் தங்கள் பிள்­ளை­களை பாட­சா­லையில் சேர்த்­து­வி­டு­கின்­றனர். ஆனால், கழிப்­பறை உள்­ளதா, பரா­ம­ரிப்பில் இருக்­கின்­றதா, போது­மான எண்­ணிக்­கையில் கழிப்­ப­றைகள் உள்­ளனவா? என்ற பார்­வையோ, கவ­னிப்போ இல்­லாமல் பாட­சா­லை­களைத் தேர்ந்­தெ­டுத்து பிள்­ளை­களை சேர்த்­து­வி­டு­கின்­றனர். பிற்­கா­லத்தில் கழிப்­ப­றை­களின் குறை­பா­டுகள் பற்­றிய விசயம் பெற்­றோர்­க­ளுக்குத் தெரிய வந்­தாலும் பாட­சாலை நிர்­வா­கத்­திடம் யாரும் முறை­யி­டு­வ­தில்லை. பெறு­பேறு குறைந்தால் ஆசி­ரி­யர்­க­ளிடம் முறை­யிடும் பெற்­றோர்கள் தங்­களின் குழந்­தை­களின் ஆரோக்­கியம் குறைவு விச­யத்தில் முறை­யி­டு­வ­தில்லை. காரணம் ஒன்­றுதான், குழந்­தை­களின் ஆரோக்­கி­யத்தை விட பெறு­பே­றுதான் முக்­கியம். இது நகரப் பாட­சா­லை­களில் மட்­டு­மல்ல கிரா­மங்­க­ளிலும் இந்தப் பிரச்­சினை பெரி­தாகத் தான் உள்ளது. கழிப்பறை வசதி விசயத்தில் கிராமம், நகரம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஆரோக்கியம் சம்பந்தமான பேச்சுக்கே இங்கு இடமில்லை. சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தினால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கெளரவம் போன்றவை பாதிக்கப்படுகின்றன.

எல்லாவற்றிலும் பெண்கள் முதலிடம் என்று வகுப்பறையில் அவர்களைப் போற்றிப் புகழும் நம் சமூகம் கழிப்பறை வசதி விசயத்தில் அவர்களை வஞ்சிக்கின்றோம். பெண் குழந்தைகள் பள்ளிகளில் கழிப்பறைப் பயன்பாட்டில் தங்களின் மானம் காக்கப்படுவதில்லை என்றே உணர்கின்றனர். நம் வீட்டில் மட்டும் கழிவறை வசதி வைத்துக்கொண்டால் போதாது. பெண்கள் புழங்கும் பொதுவெளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வேண்டும். அது முதலில் பாடசாலையாக இருக்கட்டும். அதற்கு அரசும் நாமும் சேர்ந்து முயற்சிக்கவும், செயற்படவும் வேண்டும்.