Verified Web

ஒரு முஸ்லிம் ஊடகவியலாளனின் ஊடகவியல் ஒழுக்கங்கள்

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2017-07-31 05:43:11 Ash Sheikh SHM Faleel

இஸ்­லா­மிய நோக்கில் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ள­னுக்கு இருக்க வேண்­டிய பண்­புகள், ஒழுக்­கங்கள் பற்றி குர்­ஆனும் ஹதீஸும் மிகச் சிறப்­பாகக் கூறி­யி­ருக்­கின்­றன. அவற்றில் மிகப் பிர­தா­ன­மான ஒரு சில­வற்றை மாத்­திரம் இங்கு நோக்­குவோம்.

1. தக­வல்­களை ஊர்­ஜி­தப்­ப­டுத்திக் கொள்­வது.

முஸ்லிம் ஊட­க­வி­ய­லாளன் தனக்குக் கிடைக்கும் தக­வல்கள் அனைத்­தையும் அவற்றை நிச்­ச­யப்­ப­டுத்திக் கொள்­ளா­த­வரை வெளி­யி­ட­லா­காது. நபி (ஸல்) அவர்கள் “ஒருவன் தனது காதில் விழும் தக­வல்கள் அனைத்­தையும் எடுத்துக் கூறு­வது (அவற்றை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தாமல் வெளி­யி­டு­வது) அவ­னுக்கு அதுவே போது­மான பொய்­யாகும்” என்­றார்கள்.

எனவே ஆதா­ர­மற்ற செய்­திகள், வதந்­திகள், பக்­கச்­சார்­பான தக­வல்கள் சமு­தா­யத்தில் இருக்­கலாம். ஒரு முஸ்லிம் ஊட­க­வி­ய­லாளன் அவற்றை நன்கு அலசி ஆராய்ந்து உண்­மை­களைத் துல்­லி­ய­மாக அறிந்து அவற்றை மாத்­தி­ரமே ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுத்த வேண்டும்.

ஒரு தடவை நபி­ய­வர்கள் பனூ அல் முஸ்­தலக் கோத்­தி­ரத்­தா­ரிடம் ஸத­காவை திரட்டி வரும்­படி ஒரு­வரை அனுப்­பி­னார்கள். அவர் திரும்பி வந்து பனூ அல் முஸ்­த­லக்­கினர் மதம் மாறி­விட்­ட­தாகக் குறிப்­பிட்டார். இத்­த­க­வலை வைத்து நபி­ய­வர்கள் சில முடி­வு­க­ளுக்கு வரப்­பார்த்­தார்கள். இவ்­வே­ளை­யில்தான் “உங்­க­ளிடம் ஒரு பாவி ஒரு தக­வலை எடுத்து வந்தால் (அதனை) தீர்க்­க­மாக விசா­ரித்து தெளிவு பெற்றுக் கொள்­ளுங்கள். அப்­ப­டி­யில்­லா­த­போது நீங்கள் அறி­யா­மையின் கார­ண­மாக ஒரு சமூ­கத்தைப் பாதிக்கும் முடி­வு­க­ளுக்கு வந்­து­விடக் கூடும். அப்­போது நீங்கள் செய்­த­தற்­காகக் கை சேதப்­ப­டு­வீர்கள்". என்ற குர்ஆன் வச­னத்தை அல்லாஹ் இறக்­கினான். எனவே நபி­ய­வர்கள் இந்தத் தக­வலை ஊர்­ஜி­தப்­ப­டுத்த காலித் இப்னுல் வலீத் (ரழி) அவர்­களை அனுப்பி வைத்­தார்கள். அவர் தனது ஒற்­றர்­களை இரவு வேளையில் அனுப்பி பனூ அல் முஸ்­த­லக்­கி­னரை அவ­தா­னித்தார். அவர்கள் மதம் மாற­வில்லை என்ற உறு­தி­யான தகவல் அவ­ருக்குக் கிடைத்­தது. 


எனவே பொறுப்­பற்ற முறையில் நடந்து கொள்­ளக்­கூ­டாது என்­பது ஊட­க­வியல் துறை­யி­ன­ருக்கு இஸ்லாம் இடும் ஆணித்­த­ர­மான கட்­ட­ளை­யாகும். ளுனூன் எனப்­படும் ஊட­கங்­களை வைத்தே காபிர்கள் தமது போக்கை நிர்­ண­யித்­தி­ருப்­ப­தாக குர்ஆன் பல இடங்­களில் சாடு­கி­றது. “உமக்கு எந்த விட­யத்தில் அறி­வில்­லையோ அதனைப் பின்­தொ­டர்ந்து செல்­லாதே! (யூகத்தின் அடிப்­ப­டை­யாக முடி­வெ­டுக்­காதே) நிச்­ச­ய­மாக கேள்விப் புலன், பார்­வைப்­புலன், உள்ளம் ஆகிய பற்றி (மறு­மையில்) விசா­ரிக்­கப்­படும்”


இது குர்ஆன் தரும் வழி­காட்­ட­லாகும். ஆகவே, ஊட­க­வி­ய­லாளன். தான் அல்­லாஹ்வின் சந்­நி­தா­னத்தில் மறு­மையில் பதி­ல­ளிக்க வேண்டும் என்ற பயத்தை மன­தி­லி­றுத்தி செயற்பட வேண்டும்.

2. உண்மை உரைப்­பது

முஸ்லிம் ஊட­க­வி­ய­லாளன் வெளி­யிடும் தக­வல்கள் முழுக்க முழுக்க உண்­மை­யா­ன­வை­யாக இருக்க வேண்டும். அவன் பொய் பேசக்­கூ­டாது. 

ஒரு தடவை நபி (ஸல்) அவர்­க­ளிடம் "ஒரு முஃமின் கோழை­யாக இருப்­பது சாத்­தி­யமா?" என வின­வப்­பட்­ட­போது 'ஆம்' எனப் பதி­ல­ளித்­தார்கள். "அவன் ஒரு பொய்­ய­னாக இருப்­பது சாத்­தி­யமா?" என வின­வப்­பட்­ட­போது ‘இல்லை’ என்­றார்கள். எனவே முஸ்­லி­மிடம் இருக்­கவே கூடாத ஒரு தீய பழக்கம் பொய் பேசு­வ­தாகும். நய­வஞ்­ச­கனின் அடை­யா­ளங்கள் நான்கு எனத் தெரி­வித்த நபி (ஸல்) அவர்கள் அவற்றில் ஒன்று அவன் பேசினால் பொய் பேசுவான்’ என்­றார்கள்.


எனவே (பொய் பேசு­வது முஸ்­லி­முக்­கு­ரிய பண்­பல்ல. பொய்­யு­ரைக்கும் ஒருவர் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ள­ராக இருக்க முடி­யாது. அவர் வெளி­யிடும் புள்ளி விப­ரங்கள், தர­வுகள் மற்றும் செய்­தி­க­ளுக்­காக மேல­திக விளக்­கங்கள் யாவும் உண்­மையின் அடிப்­ப­டையில் அமைந்­தி­ருக்க வேண்டும்).

3. நியா­யமும் துணிச்­சலும்

தற்­கா­லத்தில் ஊட­கங்கள் வாயி­லாக பெரும்­பாலும் பக்கச் சார்­பான தக­வல்­களே வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. இஸ்லாம் இப்­போக்கை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. அர­சுக்கு விசு­வா­ச­மாக நடப்­ப­தற்­கா­கவும் நண்­பர்கள், உற­வி­னர்­க­ளது விருப்பு வெறுப்­பு­களைப் பேணு­வ­தற்­கா­க­வும் சுய­லா­பங்­களை ஈட்டிக் கொள்­வ­தற்­கா­கவும் உண்­மைகள் திரி­பு­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு.

ஆனால் (அல்லாஹ் குர்­ஆனில் "உங்­க­ளுக்கு ஒரு சமு­தா­யத்­தினர். மீது இருக்கும் பகை­மை­யா­னது நீங்கள் நீதி­யாக நடந்து கொள்­வ­தற்கு ஒரு­போதும் தடை­யாக இருக்­க­லா­காது. நீதி­யாக நட­வுங்கள். அப்­படி நடப்­பது இறை பக்­திக்கு மிக நெருக்­க­மா­ன­தாகும்” எனக் கூறு­கிறான்)

எனவே முஸ்லிம் ஊட­க­வி­ய­லாளன் பக்­கச்­சார்பு (Bias) எனப்­படும் குற்­றத்தை இழைக்­க­மாட்டான். அவன் சத்­தி­யத்தின் காவலன். உண்மை எங்­கி­ருப்­பினும் அவன் அங்­கி­ருப்பான். அதற்­காகப் போரா­டு­வதே அவ­னது குறிக்­கோ­ளாகும். நபி (ஸல்) அவர்கள் "மிகச் சிறந்த ஜிஹாத் அநீ­தி­யான ஆட்­சி­யா­ள­னது சந்­நி­தியில் நீதியின் வார்த்­தையை பேசு­வ­தாகும்” என்று தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்­ளார்கள்.  உண்மை அல்­லது சத்­தியம் என்­பது தனக்கு எதி­ரா­ன­தாக இருப்­பினும் அதனை வெளிப்­ப­டுத்த எவ­ருமே தயங்கக் கூடாது. 

"ஈமான் கொண்­ட­வர்­களே, தொடர்ந்தும் நீதியை நிலை நாட்­டுங்கள். அல்­லாஹ்­வுக்­காக சத்­தி­யத்­திற்கு சான்று பகர்­ப­வர்­க­ளாக இருங்கள். அது உங்­க­ளுக்கும் உங்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கும் மிக நெருங்­கிய உற­வி­னர்­க­ளுக்கும் எதி­ரா­ன­தாக அமைந்­தி­ருப்­பினும் சரியே. (நீங்கள் யாருக்­காக சாட்சி சொல்­கி­றீர்­களோ) அவர் செல்­வந்­த­ரா­கவோ ஏழை­யா­கவோ இருப்­பினும் சரியே. அல்லாஹ் அவர்­க­ளது நலன்­களில் உங்­களைவிட அதிக அக்­க­றை­யுள்­ள­வ­னாக இருக்­கிறான். எனவே மனோ இச்­சையைப் பின்­பற்றி நீதி தவ­றி­வி­டா­தீர்கள். நீங்கள் உண்­மைக்குப் புறம்­பாக சாட்சி சொன்­னாலோ சாட்­சி­ய­ம­ளிக்­காமல் விலகிச் சென்­றாலோ திண்­ண­மாக அல்லாஹ் நீங்கள் செய்­ப­வற்­றை­யெல்லாம் நன்கு அறி­ப­வ­னாக இருக்­கிறான்".

அல்லாஹ் இது விட­ய­மாகத் தெரி­விக்கும் கடு­மை­யான கட்­டுப்­பாடு இது­வாகும். ஆகவே பக்­கச்­சார்­பின்றி நடந்து கொள்­வது இஸ்­லா­மிய ஊட­க­வி­ய­லா­ள­னுக்கு மட்­டு­மின்றி பொது­வான முஸ்­லிம்கள் அனை­வ­ருக்கும் இருக்க வேண்­டிய ஒரு முக்­கிய பண்­பாகும். 
மேலும் ஊட­கத்­து­றையில் நியாயம் கடைப் பிடிக்­கப்­பட வேண்டும் எனும்­போது நியா­யத்­துக்­கான உரை­கல்­லாக குர்­ஆனும் சுன்­னா­வுமே அமைய வேண்டும் என்­பதும் இங்கு கவ­னிக்­கத்­தக்க அம்­ச­மாகும்.

04. பிற­ரது சுதந்­திரத்­தைப் பேணிக் கொள்­வது

தொடர்­பூ­ட­கங்­களின் மூலம் மக்­க­ளது மத மற்றும் கருத்துச் சுதந்­தி­ரங்­க­ளுக்கு வேட்டு வைக்­கப்­ப­ட­லா­காது. மாறாக அவற்றைப் (பேணிப் பாது­காக்க ஊட­கத்­துறை சார்ந்­த­வர்கள் உழைக்க வேண்டும்) முஸ்லிம் ஊட­க­வி­ய­லாளன் மாற்றுக் கருத்­தாரை தாறு­மா­றாக எல்­லை­மீறி விமர்­சிப்­பவன் அல்லன்.

குர்ஆன் கூறு­கி­றது. “அல்லாஹ் அல்­லாத தெய்­வங்­களை வணங்­கு­ப­வர்­களை அல்­லது அவ்­வாறு வணங்­கப்­படும் தெய்­வங்­களை நீங்கள் ஏச வேண்டாம். அப்­படி நீங்கள் ஏசும் பட்த்தில்) அவர்கள் எவ்­வித அறி­வு­மின்றி அத்­து­மீறி அல்­லாஹ்வை ஏச ஆரம்­பித்து விடு­வார்கள்". 

ஆகவே பிற­ரது மனதை புண்­ப­டுத்தும் வகையில் எழு­து­வதும் பேசு­வதும் கண்­டிக்­கப்­ப­டு­கி­றது. பிறரை நிர்ப்­பந்­த­மாக இஸ்­லாத்­தின்பால் அழைப்பு விடுக்க இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை. “மார்க்­கத்தில் நிர்ப்­பந்­த­மில்லை” என அல்லாஹ் தெளி­வா­கவே கூறி­விட்டான்.
சுமு­க­மான சூழலில் பிற­ருடன் கருத்துப் பரி­மா­றவும் கலந்­து­ரை­யா­ட­வுமே அல்லாஹ் வழி­காட்­டு­கிறான் “நீங்கள் அவர்­க­ளுடன் மிகவும் அழ­கிய வழி­மு­றை­யி­லேயே வாதாட்டம் புரி­யுங்கள்” எனக் கூறி­யி­ருக்­கிறான். பிர்­அவ்­னிடம் செல்லும் நபி மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இரு­வ­ருக்கும் “அவ­னுக்கு நீங்கள் இரு­வரும் இத­மான வார்த்­தை­யையே கூறுங்கள்” என அல்லாஹ் கட்­டளை பிறப்­பித்தான்.

நபி (ஸல்) அவர்கள் விதண்­டா­வாதம் புரியும் குதர்க்கம் செய்யும் மனி­தர்­களை கடு­மை­யாகச் சாடி­யி­ருக்­கி­றார்கள். ஊட­கத்­து­றை­யி­லும்­கூட நளி­ன­மான அணு­கு­மு­றைகள் பின்­பற்­றப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை இது வலி­யு­றுத்­து­கின்­றது.

5. குற்றச் செயல்­களை மென்­மேலும் வளர்க்­கா­தி­ருப்­பது…

ஊட­கத்­து­றை­யினர் குற்றச் செயல்கள் ஒழிய வேண்­டு­மென்­ப­தற்­காக உழைக்க வேண்­டுமே தவிர அவற்றை மென்­மேலும் வளரச் செய்­ய­லா­காது. குறிப்­பாக அவர்கள் மனி­த­னது கற்­பொ­ழுக்­கத்­தோடு தொடர்­பான தக­வல்­களை மிகவும் கவ­ன­மா­கவே சமூ­கத்தின் முன் ­வைக்க வேண்டும். சமூ­கத்தில் பாலியல் ரீதி­யான அத்­து­மீ­றல்கள் தாறு­மா­றாக அம்­ப­லப்­ப­டுத்­தப்­ப­டும்­போது  விப­ரீ­த­மான விளை­வுகள் உரு­வா­கி­வி­டக்­கூடும். அத்­த­கைய குற்­றங்கள் சமு­தா­யத்தில் தாரா­ள­மாக புரி­யப்­ப­டுவ­தாகக் கருதும் பல­வீ­ன­மான விசு­வாசம் உடை­ய­வர்கள் அவற்றில் தாமும் ஈடு­பட்டால் என்ன என சிந்­திக்க வழி­யேற்­ப­டு­கி­றது. எனவே இத்­த­கைய கீழ்த்­த­ர­மான தக­வல்­களை திட்­ட­மிட்டுப் பரப்­பு­ப­வர்­களை அல்லாஹ் கடு­மை­யாக்க கண்­டிக்­கிறான்.

“நிச்­ச­ய­மாக விசு­வா­சி­க­ளுக்கு மத்­தியில் மானக்­கே­டான செயல்கள் பரவ வேண்டும் என யார் விருப்பம் கொள்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு உல­கிலும் மறு­மை­யிலும் நோவினை தரும் வேத­னை­யுண்டு. அல்லாஹ் (இதி­லுள்ள ரக­சி­யங்­களை) அறிவான். நீங்கள் அறி­ய­மாட்­டீர்கள். 

இவ்­வ­சனம் ‘ஹதீதுல் இப்க்’ எனப்­படும் சம்­பவம் தொடர்­பாக இறக்­கப்­பட்­ட­தாகும். அதா­வது, நபி (ஸல்) அவர்­க­ளது மனை­வி­யான ஆயிஷா (ரழி) அவர்­க­ளது கற்­பொ­ழுக்கம் பற்றி யூத சமூ­கத்தைச் சேர்ந்த அப்­துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலுல் என்ற நய­வஞ்­சகன் மிக மோச­மான செய்­தி­களைப் பரப்­பினான். இஸ்­லாத்தை தகர்ப்­பதே அவ­னது நோக்­க­மாக இருந்­தது. 

ஆனால் அவன் பரப்­பிய செய்­தி­களில் கடு­க­ளவும் உண்­மை­யி­ருக்­க­வில்லை. அவ­னது கருத்­து­களை நம்­பிய சிலர் தமக்கு மத்­தியில் சந்­தே­கங்­களை வளர்த்துக் கொண்­டனர். அப்­போது அல்லாஹ் குர்ஆன் வச­னத்தை இறக்கி ஆயிஷா நாய­கியின் தூய்­மையைப் பற்றி தெளி­வா­கவே தெரி­வித்தான். அது மட்­டு­மல்ல, இந்த வதந்­தியை பரப்­பு­வதில் பங்­கெ­டுத்­த­வர்­க­ளுக்கு அவர்கள் ஈடு­பட்ட அள­வுக்கு தீமை கிடைக்­கு­மென்றும் கூறிய அல்லாஹ் "அவர்­களில் இதில் அதிக பங்­கெ­டுத்துக் கொண்­ட­வ­னுக்கு பாரிய வேதனை இருக்­கி­றது” என்றும் கூறினான். இது தொடர்­பான விரி­வான விளக்­கத்தை சூரா அந்­நூரில் அல்லாஹ் தரு­கிறான்.

எனவே குற்றச் செயல்­களைப் புரியும் விதம், அவற்­றி­லி­ருந்து தப்பும் வழிகள் போன்­றன இன்று ஊட­கங்­களின் வாயி­லாக சமூ­கத்­திற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. நடந்த சம்­ப­வங்கள் மட்­டு­மின்றி நடக்­கா­த­வையும் கூட கவர்ச்­சி­யாக சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்­றன. நடந்­த­வை­யாக இருப்­பினும் அவற்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வதால் ஏற்­படும் விப­ரீ­தங்கள் பற்றி ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஒரு தட­வைக்கு பல தடவை சிந்­திக்க வேண்டும். வெள்ளை மாளி­கைக்­குள்ளும் பிரித்­தா­னிய அரச குடும்­பத்­திலும் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மானங்­கெட்ட செயல்கள் உண்­மை­யாக  இருக்­கலாம். ஆனால் அவற்றை உலக சமு­தா­யத்­துக்கு கவர்ச்­சி­யாக அம்­ப­லப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளிடம் முக்­கி­ய­மாக இரு நோக்­கங்கள் இருந்­தன. வாச­கர்­க­ளது கீழ்த்­த­ர­மான ரச­னைக்குத் தீனி போட்டு தமது பத்­தி­ரி­கையை அல்­லது சஞ்­சி­கையை விற்று பணம் சம்­பா­திப்­பது அல்­லது மக்கள் மத்­தியில் திட்­ட­மிட்டு ஒழுக்க வீழ்ச்­சியை உண்டு பண்­ணு­வது. எனவே இஸ்­லாத்தின் பார்­வையில் இவை அனு­ம­திக்­கத்­தக்­க­வை­யல்ல.

கிடைக்கும் தக­வல்கள் சரி­யா­னதாக இருப்­பினும் அவற்றில் எதனை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­பதைப் பற்றி ஊட­கத்தார் அதிகம் சிந்­திக்க வேண்டும். எப்­ப­டியும் பேசலாம். எழு­தலாம். எந்தக் காட்­சி­யையும் காட்­டலாம் என்­ப­தல்ல. மனித சமூக மேம்­பாட்­டுக்கு குந்­தகம் விளை­விக்கும் உயர் இலட்­சி­யங்­களை அடைய தடைக்­கல்­லாக இருக்கும் எந்தத் தக­வலும் அல்­லது காட்­சியும் முற்­றாகத் தடை செய்­யப்­பட வேண்டும் என்­பதே இஸ்­லாத்தின் கருத்­தாகும். மனி­த­னது மார்க்க உணர்வு (தீன்), உயிர் (நப்ஸ்), குடும்ப அமைப்பு (நஸ்ல்), செல்வம் (மால்), பகுத்­த­றிவு (அக்ல்) ஆகிய ஐந்து அம்­சங்­களும் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதில் அவற்­றுக்கு பாத­கத்தை உண்டு பண்ணும் எல்லா நட­வ­டிக்­கை­களும் தடை செய்­யப்­பட வேண்டும் என்­ப­திலும் இஸ்­லா­மிய ஷரீஆ மிகுந்த கவ­ன­மெ­டுப்­பதால் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இவற்றை மனதிற் கொண்டே தமது செயல்­பா­டு­களை நெறிப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

6.ஞானமும் சம­யோ­சி­தமும்

நாம் தக­வல்­களை பரி­மா­றும்­போதும் நன்­மையை ஏவி தீமையைத் தடுக்­கும்­போதும் போத­னை­களைச் செய்யும் போதும் அறிவு மற்றும் உள­வியல் அணு­கு­மு­றை­களைக் கைக்­கொள்ள வேண்டும் என்­பதே இஸ்­லாத்தின் கட்­ட­ளை­யாகும்.

“நபியே! நீர் உமது இரட்­ச­கனின் பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிர­யோ­கித்தும் அழ­கிய உப­தே­சங்­களை ஊட­க­மாகக் கொண்டும் அழைப்பு விடுப்­பீ­ராக!".

இங்கு குறிப்­பி­டப்­படும் ("ஹிக்மா") என்ற பதம் மிகவும் விரிந்த பொருளில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது. தகவல் யாருக்கு முன்­வைக்­கப்­ப­டு­கி­றதோ அவர்­க­ளது சூழல் அறிவுப் பின்­னணி போன்­றன கவ­னிக்­கப்­பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இது விட­ய­மாக அரு­மை­யான முன்­மா­தி­ரி­களைக் காட்டித் தந்­தி­ருக்­கி­றார்கள்.

அன்­னா­ரிடம் வந்த ஒருவன் தனக்கு உப­தேசம் புரி­யும்­படி வேண்டிக் கொண்­ட­தற்கு “நீர் எங்­கி­ருந்­தாலும் அல்­லாஹ்வைப் பயந்து கொள்” என்­றார்கள். வேறு ஒருவர் வந்து அதே­போன்று கேட்­ட­தற்கு “நீர் கோப­மெ­டுக்­காதே!” என்­றார்கள். மற்­று­மொ­ரு­வ­ருக்கு “நீர் ஈமான் கொள். பின்னர் அதில் ஸ்திர­மாக இரு” என்­றார்கள். எனவே ஒரே கேள்­விக்கு வித்­தி­யா­ச­மான பதில்­களை வழங்­கி­னார்கள். கேள்வி கேட்­ட­வர்­க­ளுக்கு ஏற்­பவே நபி­ய­வர்­க­ளது பதில்­களும் அமைந்­தன.

மேலும் நபி­ய­வர்கள் கட்டம் கட்­ட­மான கற்­பித்தல் முறை­களைக் கடைப்­பி­டித்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் அற்­ப­மா­ன­வற்றை பெரிதுப்படுத்திக் காட்டவோ பாரிய அம்சங்களை அற்பதமாகச் சித்திரிக்கவோ முயற்சிக்கவில்லை. தவறு செய்பவரது மனோ நிலையைக் கூட நபி (ஸல்) அவர்கள் கவனித்தார்கள். குற்றவாளியின் ஆளுமையை நாசப்படுத்தும் வாசகங்களைப் பயன்படுத்தவில்லை. 

ஒரு தடவை பள்ளிவாசலுக்குள் ஒரு கிராமப்புறத்து அறபி சிறுநீர் கழித்தார். ஸஹாபாக்கள் அவரைக் கண்டித்த போது அவசரப்பட வேண்டாம் என்றும் அந்த அறபி சிறுநீரை முழுமையாக் கழிக்க விடும்படியும் கூறினார்கள். அவர் தனது தேவையை பூரணமாக நிறைவு செய்த பின்னர் அவரை அழைத்த நபியவர்கள் “இந்த பள்ளிவாசல்கள் சிறுநீருக்கும அழுக்குக்கும் பொருத்தமான இடங்களல்ல. மாறாக அவை திக்ர், தொழுகை, குர்ஆன் ஓதல் போன்றவற்றிற்குரியவை” என்று அமைதியாகக் கூறினார்கள். தனது தோழர்களைப் பார்த்து “நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்களே தவிர சமூகத்தை நெருக்குதல்களுக்கு உள்ளாக்க அனுப்பப்படவில்லை" என உபதேசித்தார்கள். 

எனவே ஊடகவியலாளர்கள் எவ்வளவு சமயோசிதமாக செயற்பட வேண்டும் என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். 
மேற் கூறப்பட்டவற்றைத் தவிர, மேலும் பல ஊடகவியல் ஒழுக்கங்களைக் கூற முடியும். அவை ஒரு விரிவான பகுதிகளாகும். எனவே முஸ்லிம் ஊடகவியலாளன் மிகுந்த எச்சரிக்கையோடு செயற்பட வேண்டிய கடமைப்பாட்டை சுமந்திருக்கிறான்.
மனித சமுதாயத்திற்கு அவன் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி தன் மீதான அமானிதத்தைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் எம் அனைவருக்கும் நேரான பாதையைக் காட்டுவானாக!