Verified Web

தனியார் சட்டமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிபாரிசுகளும்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2017-07-30 09:25:23 A.R.A Fareel

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை எதிர்­நோக்கி சமூகம் பல தசாப்­தங்­க­ளாக காத்துக் கிடக்­கி­றது. முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அர­சாங்­கத்­தினால் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது.

அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் இந்தக் குழு­வினை நிய­மித்தார். குழுவில் அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர், செய­லாளர், நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள் அங்கம் வகிக்­கின்­றனர்.

திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு இத்­தனை வரு­டங்­களா? 8 வரு­டங்கள் கடந்து விட்­ட­னவே? என்று பலர் அங்­க­லாய்க்­கின்­றனர். என்­றாலும் இந்த விமர்­ச­னத்தை குறிப்­பிட்ட திருத்த சிபா­ரிசு குழு மீது மாத்­திரம் சுமத்த முடி­யாது.

இக்­குழு நிய­மிக்­கப்­பட்ட 2009 ஆம் ஆண்டே திருத்த பரிந்­து­ரை­களை பொது மக்­க­ளி­ட­மி­ருந்தும் சமூக அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்தும் துறைசார் புத்­தி­ஜீ­வி­க­ளி­ட­மி­ருந்தும் கோரி­யி­ருந்­தது என்­றாலும் சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­னரும் தமது பரிந்­து­ரை­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் இக் குழு­விற்கு  இன்று வரை அனுப்பிக் கொண்டே இருக்­கின்­றனர். இத­னால்தான் இக் குழு­வினால் இறுதித் தீர­்மானம் ஒன்றை எட்ட முடி­யா­துள்­ளது. 

இக்­குழு கடந்த 23 ஆம் திகதி தனது அறிக்­கைக்கு அங்­கத்­த­வர்­க­ளது அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ளத் தீர்­மா­னித்­தி­ருந்­தது. எனினும் கடந்த வாரமே ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்  தனது பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது.

பரிந்­து­ரைகள் தமிழ் மொழியில் 53 பக்­கங்­களில்  அமைந்­துள்­ளன. இதனை ஆங்­கி­லத்தில் மொழி பெயர்த்து வழங்­கு­மாறு நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு தௌஹீத் ஜமா­அத்­திடம் வேண்­டி­யுள்­ளது. 

தௌஹீத் ஜமா­அத்தின் சிபா­ரி­சுகள் என்ன?

இலங்­கையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தின் சில ஷரத்­துகள் மத்­ஹ­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளன. இவை நீக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மத்­ஹ­பு­க­ளுக்கும், தரீக்­காக்­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­காமல் புனித குர்ஆன் மற்றும் ஆதா­ர­பூர்­வ­மான நபி­மொ­ழி­களின் அடிப்­ப­டையில் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தி­ய­மைக்­கப்­பட வேண்டும் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் கோரி­யுள்­ளது. 

13 பரிந்­து­ரைகள் அடங்­கிய 53 பக்­கங்­க­ளி­லான அறிக்­கையை தனியார் சட்டத் திருத்த சிபா­ரிசுக் குழு­வுக்கு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் அனுப்­பி­வைத்­துள்ளார். திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்­கான குர்ஆன் மற்றும் நபி­மொ­ழி­களின் ஆதா­ரங்கள் குறிப்­பிட்ட அறிக்­கையில் விரி­வாக தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

முஸ்லிம் தனியார் சட்டம் ஏன் புனித குர்ஆன் மற்றும் நபி­மொ­ழி­களின் அடிப்­ப­டையில் திருத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்கு உதா­ர­ணங்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

உதா­ர­ண­மாக தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திரு­மணம் (நிக்காஹ்) வின் போது 'வலி' பிர­சன்­னத்தில் வேறு­பாடு காணப்­ப­டு­கி­றது. ஷாபி மத்­ஹபைச் சேர்ந்த பெண்­ணாக இருந்தால் 'வலி' யின் அனு­மதி கட்­டாயம் என தனியார் சட்டம் தெரி­விக்கும் அதே­வேளை ஹனபி மத்­ஹபைச் சேர்ந்த  பெண்­ணாக இருந்தால் 'வலி' யின் பிர­சன்னம் தேவை­யற்­றது என்­கி­றது. 'வலி'யின் பிர­சன்னம் இல்­லாத திரு­மணம் வலி­தற்­றது என்­பதே எமது நிலைப்­பா­டாகும். பெண்கள் எந்த மத்­ஹபைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் ‘வலி’ அவ­சியம் என சட்டம் திருத்­தப்­பட வேண்டும்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் முன்­வைத்­துள்ள ஏனைய பரிந்­து­ரை­க­ளா­வன; 

* திரு­மணம் செய்து கொள்ளும் பெண்கள் அவர்கள் கன்­னி­யர்­க­ளாக இருந்­தாலும், வித­வை­க­ளாக இருந்­தாலும் திரு­ம­ணத்­துக்கு கட்­டா­ய­மாக அவர்­க­ளது சம்­மதம் பெற்றுக் கொள்ள வேண்டும். தற்­போ­தைய முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சம்­மதம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் என்­பது உறு­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. பெண்­களின் சம்­மதம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டாத ஒரு திரு­மணம் நடந்தால் அதனை செல்­லுப்­ப­டி­யற்­ற­தாக்கும் வகையில் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். 

* சில முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும் எனக் குரல் எழுப்பி வரு­கின்­றன. பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக கட­மை­யாற்­றலாம் என குர்­ஆனில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதனால் பெண் காதி நிய­மனம் என்ற பேச்­சு­வார்த்­தைக்கே இட­மில்லை. அதனால் காதி நீதி­பதி, விவாகப் பதி­வாளர், காதிகள் சபை அங்­கத்­த­வர்­க­ளாக பெண்கள் நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டாது.

* முஸ்லிம் தனியார் சட்டம் ஒரு விவாகப் பதி­வின்­போது இருவர் சாட்­சி­க­ளாக கையொப்­ப­மிட வேண்டும் என்று தெரி­விக்­கி­றது. சாட்­சி­க­ளாக கையொப்­ப­மி­டு­ப­வர்கள் இரு­வரும், முஸ்­லிம்­க­ளாக திரு­மணம் பற்­றிய அறி­வு­டை­ய­வ­ராக, தக­வல்கள் அறிந்­த­வர்­க­ளாக தம்­ப­தி­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் தீர்த்து வைப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்ற வகையில் திருத்தம் அமைய வேண்டும். 

* முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை என்ன என்­பது விதிக்­கப்­ப­டா­தி­ருக்க வேண்டும். ஏனென்றால் வய­தெல்லை 16,18 என்று விதிக்­கப்­பட்­டாலும் பிரச்­சி­னைகள் ஏற்­படும். எனவே வய­தெல்லை இருக்கக் கூடாது என்ற நிலைப்­பாட்­டையே நாம் ஆத­ரிக்­கிறோம். இதே­வேளை பெண் பருவ வய­தை­ய­டைந்­தி­ருக்க வேண்டும். கண்­டிப்­பாக பெண்ணின் சம்­மதம் இருக்க வேண்டும். ‘வலி’ இருக்க வேண்டும். இரண்டு சாட்­சிகள் இருக்க வேண்டும். ‘வலி’ அனைத்­தையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டையே நாம் வலி­யு­றுத்­து­கிறோம். இதே­வேளை சிறுவர் திரு­ம­ணத்தை நாம் ஆத­ரிக்­க­வில்லை. 

* தற்­போது அமு­லி­லுள்ள சட்­டத்தில் 12 வய­துக்கு குறைந்த ஒரு பெண்ணின் திரு­ம­ணத்­துக்கு காதி நீதி­ப­தியின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 12 வயது திரு­மணம் எமது நாட்டில் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் வரு­கி­றது. இது நாட்டின் குற்­ற­வியல் சட்­டத்­துக்கு முர­ணாக அமைந்­துள்­ளது. எனவே இது தொடர்­பாக கலந்­து­ரை­யாடி தீர்­மா­ன­மொன்­றுக்கு வர­வேண்டும். இல்­லையேல் மாற்­றங்­களைச் செய்ய வேண்டும்.

* பல­தார மணத்தின் போது ஒருவர் இரண்­டா­வது, மூன்­றா­வது, நான்­கா­வது எனத் திரு­மணம் செய்து கொள்­ளும்­போது முன்­னைய மனை­வி­யர்­க­ளுக்கு அது அறி­விக்­கப்­பட வேண்டும்.

* மனை­வி­யர்­க­ளுக்கு வாழ்­வா­தாரம், சொத்­து­ரிமை, பாகப்­பி­ரி­வினை அனைத்தும் எழுத்து மூலம் வழங்­கப்­ப­ட­வேண்டும். பிள்­ளை­க­ளுக்­கான தாப­ரிப்பு முறை­யாக வழங்­கப்­ப­டு­வ­தற்கு சட்­டத்தில் நட­வ­டிக்கை இருக்க வேண்டும். 

* தற்­போது விவா­க­ரத்தில் பல முறைகள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. பஸகு, தலாக், குலா, முபாரத் என்று பல­வ­கைகள் இருக்­கின்­றன. இந்த முறைகள் பற்றி மக்கள் தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே விவா­க­ரத்து முறைகள் பற்றி தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

* முத்­தலாக் முறையில் மூன்று தலாக்­கையும் ஒரே முறையில் கூறு­வது தடுக்­கப்­பட்டு மூன்று சந்­தர்ப்­பங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

* 'கைக்­கூலி' என்­பது இஸ்­லாத்தில் சொல்­லப்­ப­ட­வில்லை. எனவே கைக்­கூலி என்­பது இல்­லாமற் செய்­யப்­ப­டு­வ­துடன் விவாகப் பதிவு புத்­த­கத்தில் 'கைக்­கூலி' என்ற வசனம் இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும். 

* காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்கள் குர்ஆன், ஹதீஸ் பற்­றிய அறி­வு­டை­ய­வர்­க­ளா­கவும் நாட்டின் பொதுச்­சட்டம் தொடர்­பான அறி­வினைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். இஸ்­லா­மிய சட்டம் பற்றி நன்கு கற்­ற­வர்­க­ளாக இருக்க வேண்டும். காதி நீதி­ப­திகள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்­யப்­பட வேண்டும்.

* விவா­க­ரத்தின் போது சம்­பந்­தப்­பட்ட குழந்­தை­களின் பாது­கா­வலைத் தீர்­மா­னிக்கும் அதி­காரம் காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். 

* தலாக் கூறப்­ப­டும்­போது பாதிக்­கப்­படும் பெண்­ணுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும் என்­ப­ன­வாகும்.

காலம் தாழ்த்­திய சிபா­ரி­சுகள்

உண்­மையில் தௌஹீத் ஜமா­அத்தின் இந்த சிபா­ரி­சுகள் மிகவும் காலம் தாழ்த்­தியே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் இச் சட்­டத்தில் கைவைக்­கவே கூடாது, திருத்­தங்கள் தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்டில் இருந்த தௌஹீத் ஜமாஅத் தற்­போது தனது நிலைப்­பாட்­டி­லி­ருந்து கீழி­றங்­கி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்­பான செய்­திகள் வெளி­வந்­த­வுடன் கடந்த 2016 நவம்பர் 3 ஆம் திகதி ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­தி­யி­ருந்­தது.

அதில் ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தில் கை வைக்கக் கூடாது எனும் கோரிக்­கையை தௌஹீத் ஜமாஅத் முன்­வைத்­தது. அந்த ஆர்ப்­பாட்டம் புறக்­கோட்­டையை நோக்கிச் செல்­வ­தற்கு பொலிசார் தடை விதித்­தனர். இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது தௌஹீத் ஜமா­அத்தின் முக்­கி­யஸ்­தர்கள் கார­சா­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். குறிப்­பாக  ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்தின் அப்­போ­தைய செய­லாளர் அப்துர் ராஸிக் வெளி­யிட்ட கருத்­துக்கள் இன விரி­ச­லுக்கு வித்­தி­டு­வ­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இத­னை­ய­டுத்து சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே மோதலைத் தூண்டும் வண்­ணமும் பெளத்த பக்­தர்கள் ஒரு தொகு­தி­யி­னரின்  மதிப்­புக்­கு­ரிய மத­கு­ரு­மார்­களை இழி­வாகப் பேசி  கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்­றச்­சாட்டின் கீழ் அவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

இதற்­கி­டையில் தௌஹீத் ஜமா­அத்தின் ஆர்ப்­பாட்­டத்­திற்கு எதி­ராக அதே நேரத்தில்  டான் பிரசாத் தலை­மை­யி­லான குழு­வினர் புறக்­கோட்டை ரயில் நிலையம் முன்­பாக கூட்டம் ஒன்றினை நடத்தி இன­வா­தத்தை தூண்டும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து  முஸ்லிம் எம்.பி.க்கள் வழங்­கிய அழுத்­தங்­களின் பேரில் டான் பிரசாத் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

ஆக தௌஹீத் ஜமாஅத் இன்று முன்­வைத்­துள்ள சிபா­ரி­சு­களை அன்றே மேற்­படி தனியார் சட்ட திருத்த குழு­வுக்கு சமர்ப்­பித்­தி­ருந்தால் இவ்­வா­றான சர்ச்­சை­க­ளுக்கு வித்­தி­டாது, மிகவும் இல­கு­வான முறையில் தீர்வை நோக்கி நகர்ந்­தி­ருக்க முடியும் என்­பதே எமது அவ­தா­ன­மாகும். 

சவூதி அரே­பிய ஷூரா சபையின் தீர்­மா­னங்கள்

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தின் கீழ் திரு­மணம் முடிக்கும் பெண்­களின் வய­தெல்லை தற்­போது பெரும் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்­துள்­ளதை நாம் அறிவோம். 

தற்­போது 12 வயதைப் பூர்த்தி செய்த பெண் ஒருவர் காதி நீதி­ப­தி­யின் அனு­ம­தி­யுடன் திரு­மணம் செய்து கொள்ள முடியும் என தற்­போ­துள்ள சட்டம் கூறு­கி­றது. எனினும் இந்த வயதை 16 ஆக அதி­க­ரிக்க வேண்டும் என ஒரு சாராரும் 18 வய­தாக அதி­க­ரிக்க வேண்டும் என மற்­றொரு சாராரும் கோரி வரு­கின்­றனர்.

இந் நிலை­யில்தான் சவூதி அரே­பி­யாவின் ஷூரா சபை அந்­நாட்டு நீதி­ய­மைச்­சுக்கு அனுப்பி வைத்­துள்ள சிபா­ரி­சு­களில் 15 வய­திற்கு கீழ்ப்­பட்ட பெண்­களை திரு­மணம் முடிக்கத் தடை விதிக்க வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 மூதி அல்-­கலப், லதீபா அல்-­ஷாலான், நௌவூறா அல்-­மு­செயிட், இஸ்ஸா அல்-­காலித் மற்றும் பௌவுஸ்யா அபா அல்-­காலித் ஆகி­யோரால் வரை­யப்­பட்­டுள்ள இச் சிபா­ரிசில் பெண்கள் 15 வய­திற்கும் 18 வய­திற்கும் இடைப்­பட்ட வய­தி­லேயே திரு­மணம் செய்­யப்­பட வேண்டும் என்ற இறுக்­க­மான நிபந்­த­னையும் விதிக்­கப்­பட வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  

இந்த நிபந்­தனை திரு­மணம் செய்து கொள்­ள­வுள்ள பெண், அவ­ரது தாய் மற்றும் குறித்த பெண் திரு­மண வாழ்க்­கைக்கு உடல்­ரீ­தி­யா­கவும், உள­ரீ­தி­யா­கவும் மற்றும் சமூ­க­வியல் ரீதி­யாவும் தகு­தி­யானவர் என விஷேட குழு­வினால் சமர்ப்­பிக்­கப்­படும் மருத்­துவ அறிக்­கை­யினை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்க வேண்­டு­மெ­னவும், மண­ம­கனின் வயது பெண்ணின் வய­தை­விட இரட்­டிப்­பான வயதைத் தாண்­டி­ய­தாக இருக்கக் கூடாது எனவும் திரு­மண விட­யங்­களில் நிபு­ணத்­துவம் பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வ­ரி­னா­லேயே திரு­மண ஒப்­பந்தம் செய்­து­வைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஷூரா சபை அங்­கத்­த­வர்கள் விளக்­க­ம­ளித்­துள்­ளனர். 

மனித வாழ்க்­கை­கக்குத் தீங்கு ஏற்­ப­டாது பாது­காத்தல் என்ற ஷரீஆ சட்­டத்­திற்­குட்­பட்ட வகை­யி­லேயே தமது சிபா­ரி­சுகள் அமைந்­துள்­ள­தாக விளக்­க­ம­ளித்த ஷூரா சபை அங்­கத்­த­வர்கள், இள­வ­யதுத் திரு­ம­ணங்­களால் ஏற்­ப­டு­கின்ற உடல்­ரீ­தி­யான, உள­ரீ­தி­யான மற்றும் சமூ­க­வியல் ரீதி­யான பாதிப்­புகள் தக்க சான்­று­க­ளாக உள்­ள­தா­கவும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

திரு­ம­ணங்­களை ஒழுங்­கு­ப­டுத்­துதல் என்­பது வணக்­க­வ­ழி­பாடு, சமயப் பிரச்­சி­னைகள் போலல்­லாது, மாற்­றங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய வாழ்க்­கைப் பிரச்­சி­னை­யாகும் எனத் தெரி­வித்த அவ்­வு­றுப்­பி­னர்கள், பல இஸ்­லா­மிய நாடுகள் திரு­மண வய­தினை ஒழுங்­கு­ப­டுத்­தி­யுள்­ளன. எகிப்­தியச் சட்­டத்தில் மணப்­பெண்ணின் வயது 18 வய­துக்கு கீழ்ப்­பட்­ட­தாக இருக்­கு­மாயின் அவ்­வா­றான திரு­மணம் தடை செய்­யப்­ப­டு­கி­றது எனவும் மேற்கோள் காட்­டியுள்ளனர். 

இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் சுகா­தாரம் சார்ந்த பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வது மட்­டு­மல்­லாது, பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­லகும் நிலை­யி­னையும் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­து­கின்­றது. பெண்­களை மலி­னப்­ப­டுத்தும் பாரம்­ப­ரிய சமூகக் கலா­சார நிலை­களை மாற்றி கல்­வி­யூ­டாக பெண்­களை வலுப்­ப­டுத்த வேண்டும் என முன்­னணி ஷூரா சபை உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்தார். 

வறு­மைக்கும் இள­வ­யதுத் திரு­ம­ணத்­திற்கும் இடை­யே­யான தொடர்பு என்­பது பல அடுக்­கு­களைக் கொண்ட சிக்­க­லான சுழற்­சி­யாகும். இள­வ­யதுத் திரு­ம­ணத்­திற்கு வறுமை கார­ண­மாக இருப்­பது மாத்­தி­ர­மன்றி அது தொடர்ச்­சி­யான வறு­மைக்கே இட்டுச் செல்­கி­றது. குறிப்­பாக இளம் தாய்மார் விவா­க­ரத்துச் செய்­யப்­ப­டும்­போது அல்­லது கணவர் மர­ணித்­து­வி­டும்­போது தமது குடும்­பத்தை பரா­ம­ரிக்கும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.  

1988 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைப் பிரகடனம் உள்ளிட்ட சவூதி அரேபியா கையொப்பமிட்டுள்ள சர்வதேச சாசனங்களில் இளவயதுத் திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.  

சவூதி அரேபியாவின் இந்த சிபாரிசுகள் இலங்கைச் சூழலுக்கும் பொருந்துவதாகும். இவை தொடர்பிலும் தனியார் சட்ட திருத்தக் குழு கவனம் செலுத்துவது சிறந்ததாகும்.

அந்த வகையில் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம் குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணற்ற வகையில் ஷரீஆ சட்டத்தினை மீறாது திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.