Verified Web

ஆட்டங்காணும் அரசும் முஸ்லிம் தலைமைகளும்

2017-07-30 09:16:53 Administrator

- எஸ்.றிபான் -

நல்­லாட்சி அர­சாங்கம் விரைவில் ஆட்டம் கண்டுவிடுமென்று எண்ணும் அள­விற்கு ஆளும் சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையே முரண்­பா­டுகள் தோற்றம் பெற்­றுள்­ளன. ஐ.தே.கட்சி, சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே காணப்­படும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அணி எனும் பிரி­வி­னையைப் பயன்­ப­டுத்தி தனி­யாக ஆட்சி அமைப்­ப­தற்கு எண்­ணு­கின்­றார்கள். இதேவேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அணி­யி­னரில் ஒரு சாரார் மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ­வுடன் சம­ரசம் செய்து தனி­யாக ஆட்சி அமைப்­ப­தற்கு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு அழுத்­தங்­களைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வாறு தாம் முடிவெடுத்துச் செயற்­பட்டால் அது மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் செல்­வாக்கு அர­சாங்­கத்­திற்குள் மோலோங்கி தாம் ஒரு சூழ்­நிலை கைதி போன்று இருக்க வேண்­டி­யேற்­படும் என்ற எண்­ணப்­பாட்டை மைத்­தி­ரி­பால சிறி­சேன கொண்­டுள்ளார். இந்த கயிறிழுப்­புக்கு மத்­தியில் அர­சாங்­கத்திலுள்ள ஒருசில அமைச்­சர்கள், கூட்­டாட்சி அர­சாங்­கத்­தினை யாரும் அசைக்க முடி­யாது. 2020ஆம் ஆண்டு வரை இன்­றைய அர­சாங்கம் நிலைத்­தி­ருக்கும் என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

தேர்­தல்­களை ஒத்திப் போடல்

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் கலைக்­கப்­பட்டு இரண்டு வரு­டங்கள் கழிந்­துள்­ளன. ஆயினும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தரப்­பினர் உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு தயக்கம் காட்­டு­கின்­றார்கள். பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களுள் 44 பேர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டனும், 51 பேர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷவோடும் உள்­ளார்கள். அத்­தோடு சிங்­கள மக்கள் மத்­தியில் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு இன்னும் செல்­வாக்கு அதி­க­மா­கவே உள்­ளது. இந்­நி­லையில் உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தினால் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அணி­யினர் அதிக ஆச­னங்­களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்­புக்கள் உள்­ளன. இத­னால்தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், அவரைச் சார்ந்­த­வர்­களும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அச்சங் கொண்­டுள்­ளார்கள்.


இதேவேளை, 106 ஆச­னங்­களைக் கொண்­டுள்ள ஐ.தே.க., ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பிற்குள் காணப்­படும் முரண்­நி­லையைப் பயன்­ப­டுத்தி உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது. உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் மைத்­திரி அணி என்றும், மஹிந்த அணி என்றும் தனித்­த­னி­யாக வேட்­பா­ளர்­களை நிறுத்தும்போது அக்­கட்­சியின் வாக்­குகள் இரண்­டாகப் பிள­வு­பட்­டு­விடும். இதனால், அவ்­வ­ணி­க­ளினால் பெரும்­பான்­மையைப் பெற முடி­யாது.

ஆதலால், ஐ.தே.க. பெரும்­பான்­மையைப் பெற்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆட்­சியை கைப்­பற்றிக் கொள்­ளலாம் என்­பதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்­கவின் திட்­ட­மாகும். ஆயினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை இப்­போ­தைக்கு நடத்­து­வ­தில்லை என்­பதில் உறு­தி­யாக உள்ளார். 


ஜனா­தி­பதி தரப்­பினர் தமது இந்தப் பல­வீ­னத்தை வெளி­காட்டிக் கொள்­ளாது புதிய முறையில் தேர்­தலை நடத்­துதல் வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கைகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை என்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லைகள், தேர்தல் நடத்தும் கலப்பு முறையில் உள்ள விகி­தா­சாரம் போன்­ற­வற்றை தீர்­மா­னிப்­ப­தற்கும், அதில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு மாற்று வழி­களைக் காண்­ப­தற்கும் இரண்டு வரு­டங்கள் கழிந்தும் முடிவு காணப்­ப­ட­வில்லை என்றால் இதன் பின்­ன­ணியில் வேறு அர­சியல் கார­ணிகள் உள்­ளன என்­பது தெளி­வா­கின்­றது.


மேலும், தேர்­தலை சந்­திப்­பதில் தயக்கம் உள்­ள­தென்­பது கிழக்கு மாகாண சபை உட்­பட மூன்று மாகாண சபை­களின் ஆட்சிக் காலம் 2017 செப்­டம்பர் 28ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்­றது. இம்­மா­காண சபை­களின் தேர்­தலைக் கூட நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயக்கம் காட்­டு­கின்­றது. மாகாண சபைத் தேர்­தலில் கூட மஹிந்­தவின் செல்­வாக்கு தங்­களை பின்­னுக்குத் தள்­ளி­வி­டு­மென்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி­யினர் இத்­த­கை­ய­தொரு நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ளார்கள். இத­னா­ல்தான், டிசம்பர் மாதத்­திற்குள் நடத்த வேண்­டிய கிழக்கு மாகாண சபை, சப்­­ர­க­முவ, வட­மத்தி மாகாண சபை­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராக இல்­லா­துள்­ளது.


இதே வேளை, மேற்­படி மூன்று மாகாண சபை­களின் ஆயுட்­காலம் முடி­வ­டைந்­தாலும் எல்லா மாகாண சபை­களின் தேர்­தல்களையும்  ஒரே நேரத்தில் நடத்­து­வ­துதான் சிறந்­தது. தனித்­த­னியே மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வதில் சிக்­கல்கள் உள்­ளன என்று தேர்­தலை பிற்­ப­டுத்­து­வ­தற்கு காரணம் கூறப்­ப­டு­கின்­றது. இதே வேளை, 2018ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரியில் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.


இவ்­வாறு தேர்­தலை ஒத்திப் போடு­வது ஒரு வகையில் ஜன­நா­யக விரோத செயற்­பா­டாகக் கூடக் கரு­தலாம். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­தாது பிற்­போட்டுக் கொண்­டி­ருப்­ப­தனால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் செயற்­பா­டுகள் மிகவும் மோச­மான நிலையில் உள்­ளன. குப்­பை­களை எடுப்­பதில் கூட மிகுந்த கால­தா­ம­தங்­களும், மோச­டி­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. மக்கள் பிர­தி­நி­திகள் இல்­லாத கார­ணத்­தினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் செயற்­பா­டுகள் மோச­மாகக் காணப்­ப­டு­வ­தற்கு பிர­தான காரணம் அதி­கா­ரி­க­ளி­னதும், ஊழி­யர்­க­ளி­னதும் அச­மந்த நிலையும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தலை­யீ­டு­ளுக­மாகும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.
 
முஸ்லிம் கட்­சிகள்


உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகி­ய­வற்றில் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு ஒரு நிலை­யான கொள்­கையை அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்­திற்கு தலை­யாட்டும் நிலை­யி­லேயே உள்­ளன. முஸ்லிம் கட்­சிகள் கூட தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­த­னையே விரும்­பு­கின்­றன. குறிப்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் மிக மோச­மான வகையில் உள்­ளக முரண்­பா­டு­களைக் கொண்­டி­ருக்­கின்­றது. இதனால் கட்­சியின் செல்­வாக்கில் கூட கீறல்கள் விழுந்­துள்­ளன. கிழக்கு மாகா­ணத்தில் இக்­கட்­சியின் செல்­வாக்கில் எதிர்­மறை தோன்­றி­யுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்தில் மு.காவின் தலைவர் கலந்­துகொண்ட ஒரு சில கூட்­டங்­களின் போது சிறிய அளவில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை அம்­பாறை மாவட்­டத்தில் மு.காவின் வர­லாற்றில் புதிய நிகழ்­வு­க­ளாகும். இதனால், கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பாட்டு நிலை எதிர் விளை­வு­களை தோற்­று­வித்துக் கொண்­டி­ருப்­ப­தனால் பிரச்­சி­னைகள் ஒரு முடி­வுக்கு வரும் வரைக்கும் உள்­ளூராட்சி தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வது மு.காவிற்கு தேவைப்­பட்­ட­தொன்­றா­கவே உள்­ளது.


இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், கட்­சியின் செய­லாளர் நிய­ம­னத்தில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னையால் நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இக்­கட்­சி­யினர் உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலை தனி­யாக சந்­தித்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­கா­ரங்­களைப் பெற வேண்­டு­மென்று திட்­ட­மிட்­டுள்­ளார்கள். இதற்கு கட்­சியின் செய­லாளர் நிய­ம­னத்தில் உள்ள சிக்கல் தீர்க்­கப்­பட வேண்டும். விரைவில் இதற்குத் தீர்வு கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கையில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸார் உள்­ளார்கள். இதனால் இவர்­க­ளுக்கும் தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வது தேவை­யான ஒன்­றா­கவே உள்­ளது. 


இதே வேளை, ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த பொதுத் தேர்­தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்­டி­யிட்ட அனைத்துக் கட்­சி­களும் உள்­ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களை ஐ.தே.கவின் யானைச் சின்­னத்­தி­லேயே சந்­திக்க வேண்­டு­மென்று கேட்­டுள்ளார். இதற்கு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆயினும், இக்­கட்­சிகள் உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலில் தனித்தும், மாகாண சபைத் தேர்­தலில் இணைந்தும் போட்­டி­யி­டு­வ­தற்கு கட்சி மட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


இதே வேளை, முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வா­கினால் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பில் தேர்­தலை தனி­யாக சந்­திப்­ப­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பல­வீ­னப்­ப­டுத்தல்


இதே வேளை, அர­சியல் கட்­சிகள் ஒன்றை ஒன்று பல­வீ­னப்­ப­டுத்தும் தீவிர முயற்­சி­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஐ.தே.க., ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பிற்குள் காணப்­படும் முரண்­பா­டு­க­ளையும், பிள­வு­க­ளையும் மேலும் பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு காய்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றது. மறு­பு­றத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினை ஒற்­று­மைப்­ப­டுத்தி ஐ.தே.கவை பல­வீ­னப்­ப­டுத்த வேண்­டு­மென்று சுதந்­திரக் கட்­சி­யினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.


மு.காவிற்குள் ஏற்­பட்­டுள்ள பிள­வுகள், முரண்­பா­டு­களைப் பயன்­ப­டுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீனோடு பௌத்த இனவாதிகள் மோதிக் கொண்டிருப்பது மிகுந்த சாதகமாக அமைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்காக அவர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரை அடக்குவதற்கு பௌத்த இனவாதிகள் சதிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றதொரு எண்ணம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.


மறுபக்கத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், பிளவுகளினால் கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டும் தூரமாகி விடக் கூடாதென்பதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கொண்டிருக்கின்றார். பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்குரிய ஆரம்ப கட்ட வேலைகளை மேற்கொண்டுள்ளார். அண்மையில் வட்டமடு பகுதிக்கு விஜயம் செய்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.


இவ்வாறு ஒவ்வோர் அரசியற் கட்சியும் தமது சொந்த நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களுக்கும், நாட்டிற்கும் எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை.