Verified Web

பொதுபலசேனா யூதர்களின் பாணியில் இயங்குகிறது : பத்தேகம சமித தேரர்

2017-07-16 11:22:53 Administrator

சிங்­க­ளத்தில் : மஹேஷ் மல­வர ஆரச்சி
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார். 


இன­வாதத் தூண்­டு­தலின் விளை­வாக அண்மைக் காலங்­களில் ஒரு­சில அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. இவற்­றுக்கு பொதுபல­சேனா மீதே விரல் நீட்­டப்­பட்­டுள்­ளது. மற்றும் சில தரப்­புகள் வேறு வித­மான கருத்­து­க­ளையும் முன்­வைத்­தன. மேற்­படி விட­யங்கள் தொடர்­பா­கவும் தற்­போ­தைய அர­சியல் நில­வ­ரங்கள் பற்­றியும் தென் மாகாண சபை உறுப்­பினர் பத்­தே­கம சமித தேர­ருடன் ‘அத’ சிங்­கள மொழி ஊடகம் மேற்­கொண்ட பேட்­டியின் தமி­ழாக்கம் இங்கு தரப்­பட்­டுள்­ளது.
 
 
இன்­றுள்ள அர­சியல் நிலை குறித்து உங்கள் கருத்­தென்ன?
பதில்: இன்று மிகவும் கவ­லைப்­ப­டக்­கூ­டிய அர­சியல் நிலை­யொன்றே உரு­வா­கி­யி­ருக்­கி­றது. விஷே­ட­மாக இன்று பொரு­ளா­தாரம் சிதைந்து விட்­டது. அதனை முகா­மைத்­து­வப்­ப­டுத்தி சீர் செய்­யக்­கூ­டிய நிலை அர­சுக்கு இல்லை. மறு­பு­றத்தில் அடிப்­படை வச­தி­களை முறை­யாகக் கையாளக் கூடிய வேலைத்­திட்­டங்­களும் இந்த அர­சிடம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அத்­தி­யா­வ­சி­ய­மான இந்த இரு கார­ணி­களும் செய­லி­ழக்­கப்­படும்போது நாட்டு நிர்­வாகம் ஸ்தம்­பித்துப் போவது உறுதி. இந்த நிலையைத் தான் இப்­போது எமது நாடு அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. 
 
அண்­மையில் மத­வாத மோதல்கள் சில தலை­தூக்­கின. இவற்­றுக்குப் பலரும் பொது­ப­ல­சேனா மீது குற்றம் சுமத்­தினர். இது குறித்து உங்கள் கருத்­தென்ன?
பதில்: இந்த அரசு மறை­மு­க­மாக அடிப்­படை வாதி­க­ளுக்கு வாய்ப்­ப­ளித்­தி­ருப்­ப­தா­கவே எங்­க­ளுக்குத் தோன்­று­கி­றது. இந்த அரசு செய­லி­ழந்து செயற்படு­வதை இந்­நாட்டு சிங்­கள பௌத்­தர்கள், தமி­ழர்கள், முஸ்­லிம்கள், ஆகிய சமூ­கத்­தி­னரில் பெரும்­பா­லோனோர் உணர்ந்­துள்­ளனர். இது எல்லா அடிப்­படை வாதி­க­ளுக்கும் வாய்ப்­பாக அமைந்து விட்­டது. சிங்­கள பௌத்த சக்தி மஹிந்த ராஜபக் ஷவின் பிடியில் இருக்­கி­றது. இதனை செயற்­ப­டுத்தும் ஓர் ஊட­க­மாக பொது­ப­ல­சேனா அமைப்பு இயக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. 
 
 பொது­பல சேனா அமைப்பின் ஞான­சார தேரர் குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?
பதில்: அவர் குறித்து எப்­போதும் என் மன­திலே விமர்­சனம் எழுந்த வண்­ணமே உள்­ளது. அவர் மீதான சந்­தே­கமும் எப்­போதும் என் மனதில் ஊச­லா­டவே செய்­கி­றது. நாம் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கும் முகம் கொடுத்து கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ள சமா­தான சூழ்­நிலை வன்­மு­றையைத் தோற்­று­விப்­பதன் மூலம் மீண்டும் சின்­னா­பின்­ன­மா­கி­விடும். உலகம் முழு­வதும் சர்­வ­தேச யூத பயங்­க­ர­வாத சக்­திகள் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. எனவே பொது­ப­ல­சேனா அமைப்பும் இன்று தெரிந்தோ அல்­லது தெரி­யா­மலோ முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக அதே யூத பாணி­யிலே இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. 
 
பொது­ப­ல­சேனா அமைப்பு மஹிந்த  ராஜபக் இஷவின் காலத்­திலும் இயங்­கி­யது தானே?
பதில்: ஆம், இயங்­கி­யதுதான். அதனால் தானே பேரு­வளை சம்­பவம் இடம்­பெற்­றது. மஹிந்த  ராஜபக் ஷவை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சதி முயற்­சி­யொன்­றா­கவே அதனை நாம் அன்று நோக்­கினோம். சம்­பந்­தப்­பட்ட பிக்­கு­களைத் தண்­டிப்­ப­தற்குக் கூட மஹிந்த முன்­வ­ர­வில்லை.

ஆனால் பிக்­குகள் என்று பாராமல் சட்டம் அனை­வ­ருக்கும் சமம் என்ற ரீதியில் செய­லாற்றும் படி நாம் அன்று மஹிந்­தவைக் கேட்டுக் கொண்டோம். அதனை அவர் அமுல் நடத்தத் தவ­றி­ய­மையின் பிர­தி­ப­ல­னாக அவ­ருக்குத் தேவை­யான வாக்­கு­களை அவர் இழந்தார். 
 
பொது­ப­ல­சே­னாவை உரு­வாக்­கு­வதில் முன்­னணி வகித்­த­தாக கோதா­பய  ராஜபக் ஷவின்  மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றதே?
பதில்: பொது­ப­ல­சே­னா­வுடன் தனக்கு தொடர்­பில்­லை­யென்று அவர் அதற்கு பதி­ல­ளித்­தி­ருந்­தாரே.
 
மாகாண சபைத் தேர்­தல்கள் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் நடாத்த இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றதே?
பதில்: ஏதா­வது காரணம் காட்டி மேலும் காலம் தள்­ளு­வார்கள் என்று நான் நினைக்­கிறேன். இந்த அரசு இதற்கு முன்பும் இப்­ப­டித்தான் கூறி­விட்டு காலத்தை நீடித்துக் கொண்­டது. இந்த அரசு தேர்­தலை நடத்­தி­னாலும் தற்­கொலை செய்து கொள்ளும், தேர்­தலை நடத்தா விட்­டாலும் தற்­கொலை செய்து கொள்ளும்.

காரணம் அவர்­க­ளுக்கு இனி மக்கள் ஆணை கிடைக்­கப்­போ­வ­தில்லை என்­பதை அவர்கள் அறி­வார்கள். தேர்­தலை நடத்­தாது போனால், மக்­களுக்கிருக்கும் ஜன­நா­யக உரி­மையை பறித்துக் கொண்­டார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் அவர்கள் தற்­கொலை செய்­யத்தான் வேண்டும். 
 
அவ்­வாறு தேர்தல் நடத்தும் பட்­சத்தில் கூட்டு எதி­ர­ணி­யி­னரின் நிலை என்­ன­வாகும்? 
பதில்: ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தேர்­தலில் நின்­றாலும் அல்­லது வெவ்­வே­றாக நின்று போட்­டி­யிட்­டாலும் சரி இரு சாராரும் மண் கவ்­வு­வார்கள். கண்­டிப்­பாக கூட்டு எதி­ரணி முன்­னெ­டுத்­து­வரும் செயற்றிட்­டங்­களால் அது வெற்­றி­யீட்­டவே செய்யும். 
 
மத்­திய வங்கி ஊழல் தொடர்­பாக இன்னும் சட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லையே? 
பதில்: அர­சாங்­கத்­திற்குள் இவ்­வி­டயம் தொடர்­பாக முறை­யான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கள்­வர்கள் காப்­பாற்­றப்­ப­டு­கி­றார்கள். மத்­தி­ய­வங்கி கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. அது சாதா­ரண சம்­ப­வ­மொன்­றாக சித்­தி­ரித்துக் காட்­டப்­ப­டு­கி­றது. அதில் முன்­னிலை வகித்த பிர­தமர் இப்­போது சத்­த­மில்­லா­ம­லி­ருக்­கிறார். கொள்­ளை­ய­டித்­த­வ­ருடன் விருந்­துண்டு மகிழ்­கிறார். எதிர்த்­த­ரப்பு யாரா­கிலும் இது விட­ய­மாக கதைத்தால், அவர்­களைக் கூண்டில் அடைக்­கி­றார்கள். வர­லாற்றில் பாரிய கொள்­ளை­யாக இந்த விடயம் பதி­யப்­ப­டு­வது உறுதி. 
 
ஜோன் அம­ர­துங்­கவின் நட­வ­டிக்கை குறித்து அண்­மையில் ஊட­கங்­களில் பல­மாக பேசப்­பட்டு வந்­ததே?
பதில்: ஜோன் அம­ர­துங்க மக்கள் சொத்­துக்­களை நாசம் செய்தார். பின்னர் மீண்டும் அவ்வுடமைகளைச் செய்து கொடுத்தார் என்­ப­தற்­காக எப்­படி மன்­னிப்புக் கிடைக்கும்? பின்னர் ஊட­கங்கள் மீது துஷண வார்த்தை பிர­யோ­கங்­களைச் செய்து மரண அச்­சு­றுத்தல் விடுத்தார். நல்­லாட்­சியைக் கொண்டு வரு­வ­தாகக் கூறி அதி­கா­ரத்­திற்கு வந்த இவர்கள் இன்று இப்­ப­டித்­தானா நடந்து கொள்ள வேண்டும் என்று தான் நாம் கேட்­கிறோம்.

எனவே இரு கூட்­டு­களும் இணைந்து நாட்­டுக்கு இழைத்­து­வரும் நாசம் மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும்.  
 
அனர்த்தம் ஒன்று நிகழ்ந்­த வேளையில் அமைச்­ச­ரவை மாற்றம் தேவையா என்று அரசு மீது தொடுக்­கப்­படும் விமர்­சனம் குறித்து….?
பதில்: உண்­மை­யிலே அமைச்­ச­ரவை மாற்­றத்தின் மூலம் நடந்­தது ஒன்­று­மில்லை. நல்­ல­தொன்று நடக்­கு­மாயின் அதற்கு கால, நேரம் என்­பது அவ­சியம் இல்லை. ஆனால் இந்த மாற்­றத்தில் நன்மை ஏதும் இல்லை.

இன்று உல­கிலே சிறந்த நிதி­ய­மைச்சர் என்று போற்­றப்­பட்ட ஒரு­வரை ஓரம் கட்டிவிட்டு  பொரு­ளா­தாரம் பற்­றிய போதிய தெளி­வில்­லாத ஒரு புது­மு­கத்தை நிதி­ய­மைச்­ச­ராக்­கி­யி­ருக்­கி­றார்கள். மறு­பு­றத்தில் மங்­கள சம­ர­வீர போன்ற ஒரு­வரை ஊடக அமைச்­ச­ராக்­கி­யதில் மத்­திய வங்கி மோசடி மூலம் கொள்­ளை­ய­டித்த பணத்­திற்கு ஊடக நிறு­வ­னங்­க­ளையும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் விலை கொடுத்து வாங்கி வரு­வது குறிப்பிடத்தக்கதாகும். 
 
கூட்டு எதிரணியினரின் எதிர்கால செயற்பாடு எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்: தற்போது பின் தள்ளப்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு புத்திஜீவிகள், அரசியல் ஞானிகளை உள்ளடக்கி முற்போக்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தும் மீண்டும் மத மோதல் ஒன்றுக்கு வழிவகுக்காத விதத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் செயல்திட்டம் ஒன்றை மேற்கொண்டும் வருகின்றனர்.

மக்கள் நலன் கருதி நாம் இதனைச் செய்தாக வேண்டும். இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கூட்டு எதிரணி என்ற வகையில் எமக்கு அதுவொரு பாரிய சவாலாகவே உள்ளது.    
 
நன்றி – 'அத' பத்திரிகை