Verified Web

ஜனவரி எட்டுக்கு திரும்புங்கள் : தம்பர அமில தேரருடனான நேர்காணல்

2017-07-02 07:07:42 Administrator

சிங்­க­ளத்தில் : பிர­ஸன்ன 
சஞ்­சீவ தென்ன கோன் 
தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார் 

ஸ்ரீ ஜய­வர்த்­தனபுர பல்­க­லைக்­க­ழக  தொல் பொருள்­துறை  சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் சமூக நீதிக்­கான பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களின் சம்­மே­ளன ஏற்­பாட்­டா­ள­ரு­மான தம்­பர அமில தேர­ருடன் லங்­கா­தீப வார இதழ் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமிழ் வடிவம். 

கேள்வி: ‘ஜன­வரி 8 உடன்­பாட்­டுக்குச் செல்­லுங்கள்’ என்று தாங்கள் அடிக்­கடி அர­சாங்­கத்தைக் கோரி வரு­கி­றீர்கள். இந்த ஜன­வரி 8 உடன்­பாடு என்றால் என்ன?

பதில்: முன்னாள் அர­சையும் அப்­போது அதி­கா­ரத்­தி­லி­ருந்த ஜனா­தி­ப­தி­யையும் அகற்­று­வ­தற்­காக முத­லா­வ­தாக அடித்­த­ள­மிட்ட நாள் தான் ஜன­வரி 8. எனவே முன்னாள் ஜனா­தி­ப­தியை நீக்­கு­வ­தற்கு கார­ணி­யாக அமைந்த சம்­ப­வங்­களை மீட்டிப் பார்க்­கும்­ப­டியே ஜன­வரி எட்­டுக்குப் போங்கள் என்று நாம் ஞாப­க­மூட்டிக் கொண்­டி­ருக்­கிறோம்.

கேள்வி: குறித்த அந்தக் கார­ணிகள் என்ன?  

பதில்: குறிப்­பாக நாம் குறிப்­பிடும் ஜன­வரி எட்­டுக்கு முன்­னி­ருந்த நிலைக்கே  நாடு நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பொது­ப­ல­சே­னாவும் அத­னை­யொத்த அமைப்­பு­களும் ஒன்­றி­ணைந்து முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ மூட்­டு­வதன் மூலம் அளுத்­கம தர்ஹா நகரில் ஏற்­பட்ட நிலை­மை­யொன்றை மீண்டும் தோற்­று­விக்­கவும் முடியும்.
அமைச்சர் அலு­வ­ல­கங்­க­ளுக்குள் அநா­க­ரி­க­மான முறையில் ஊடு­ரு­வும்­போது முன்­னைய அரசு எத்­த­கைய நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

குழப்­பக்­கா­ரர்­களைக் காப்­பாற்றும் நிலைப்­பாட்­டி­லேயே அந்த அரசு இருந்­தது. இதனால் அப்­போ­தி­ருந்த ஜனா­தி­ப­தியை நீக்க வேண்டும் என்ற உதிப்பு எங்கள் உள்­ளங்­களில் எழ இது ஒரு பிர­தான கார­ணி­யாக அமைந்­தது. மீண்­டு­மொரு 30 வருட கால யுத்த யுகத்­துக்கு சிங்­களம் மற்றும் முஸ்லிம் மக்­களை இழுத்துச் செல்­வதைத் தடுக்க வேண்­டி­யி­ருந்­தது. வடக்­கிலும் கிழக்­கிலும் 30 வருட கால­மாக யுத்தம் வெடித்துக் கொண்­டி­ருந்­தது. 

படை­யினர், நாம், நாட்டு மக்கள், முன்னாள் ஜனா­தி­பதி ஆகிய அனை­வரும் ஒன்­று­பட்டு மிகவும் சிர­மங்­களைத் தாங்கி யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே போன்­ற­தொரு சிக்­க­லுக்குள் மாட்டிக் கொண்டு யுத்த சூழ­லொன்­றுக்குள் போக விளை­வதை நாம் கண்டு கொண்டோம். மீண்டும் அதே இடத்­துக்குப் போகக் கூடா­தென்றே அப்போது ஜனா­தி­ப­தியை அகற்­றினோம்.

இது­வொரு முக்­கிய நிகழ்­வாகும். இதற்குப் புறம்­பாக கொள்ளை, ஊழல், மோசடி போன்ற கசப்­பான கதைகள் பலவும் இருந்­தன. இன்னும் ஊடக சுதந்­திரம், மக்கள் சுதந்­திரம், மனித உரிமை என்­ப­ன­வெல்லாம் தலை­கீ­ழாகப் போயி­ருந்­தன. அப்போது அரா­ஜ­கமே அர­சோச்­சி­யது. இப்போது முஸ்­லிம்­களை இலக்கு வைத்து நாட்டில் மீண்டும் ஒரு இன­வாத மோதல் ஒன்­றுக்கு இழுத்துச் செல்லும் சூழ்­நிலை உரு­வாகி வரு­வ­தா­லேயே ஜன­வரி 8 க்குப் போங்கள் என்று நாம் இருண்ட யுகத்தை நினை­வூட்டிக் கொண்­டி­ருக்­கிறோம்.

கேள்வி: முஸ்­லிம்­க­ளுக்கு விரோ­த­மான நாச­கார வேலை­க­ளுக்கு ஜன­வரி எட்டுக்கு முன்னர் அன்­றைய அரசின் ஆத­ரவு இருந்­த­தாக நீங்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றீர்கள். இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கும் இன்­றைய அரசு உடந்­தை­யாக இருப்­ப­தாக நினைக்­கி­றீர்­களா?

பதில்: ஆம், இருக்­கி­றது. அத­னால்­தானே ஜன­வரி 8க்கு போகும்­படி நினை­வூட்­டு­கிறோம். ஜன­வரி 8 நிலைப்­பாடு நன்­றா­கத்­தானே இருந்­தது. அது இன­வா­தத்­திற்கு எதி­ரான நிலைப்­பா­டா­கத்­தானே இருந்­தது.

ஆனால் இன­வாதம் மீண்டும் தலை­தூக்­கு­வ­தா­கவே உள்­ளது. சம்­பந்­தப்­பட்­ட­வரை கைது செய்­யும்­படி கூறினால் அவ்­வாறு கைது செய்­யாது இருக்­கையில் அது மேலும் வள­ரவே செய்யும். அரசு என்ற வகையில் இதனைத் தடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே தான் நாம் இருக்­கிறோம்.

ஜன­வரி 8 இல் இன­வா­தத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டை முன்­வைத்தே இந்த அரசு பத­விக்கு வந்­தது. இந்த நிலைப்­பாட்டில் இருந்­தால்தான் இந்த அரசால் தொடர்ந்து நிலைத்­தி­ருக்க முடியும். இன ஐக்­கியம் என்­பது தொட­ரப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். இந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து தடம்­பு­ரண்டால் அது ஜன­வரி 8 இல் இருந்து கரணம் போட்ட மாதி­ரி­யா­கவே அமையும்.

கேள்வி: இப்­போது உங்­க­ளுக்கு அர­சினால் கிடைக்கப் பெற்­றுள்ள பிர­தி­ப­லன்கள் என்ன?

பதில்: ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கூட்டி இத்­த­வ­றுகள் குறித்து நாம் கருத்து வெளி­யிட்டால் அதன் பின் அரசு கொஞ்சம் அசைந்து கொடுக்கும். இதுதான் தற்­போ­துள்ள நிலை.

கேள்வி: அது எப்­படி நடந்­தேற்­றப்­ப­டு­கி­றது?

பதில்: தொடர்ந்து கைதுகள் இடம்பெற்று வரு­கின்­றன. முஸ்லிம் பள்ளித் தாக்­கு­தல்­களும் குறைந்து விட்­டன. மக்கள் மத்­தியில் எமது கருத்­துக்­களும் ஏற்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­கி­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தத்தம் நிலைப்­பா­டு­களை வெளி­யிட்டு வரு­கி­றார்கள். இவற்றின் மூலம் பாரி­ய­தொரு மாற்றம் நிகழ்ந்­துள்­ள­தாக உணர முடி­கி­றது.

கேள்வி: இன­வா­தத்தைத் தூண்டி அதன் மூலம் அவ­ச­ர­கால சட்­டத்தைக் கொண்டு வந்து தேர்­தல்­களைப் பின்­போ­டு­வ­தற்கு அரசு முயல்­வ­தா­கவும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கி­றதே?

பதில்: ஆம், அப்­படி நடந்தால் அதுதான் ஜன­வரி 8 இல் இருந்து வெளியே தாண்டும் செய­லாகும். நல்­லாட்­சி­யா­காது. தேர்­தல்­களை நடத்­து­வது நல்­லாட்­சிக்­க­ழகு. ஜன­நா­ய­கத்தின் பிர­தி­ப­லிப்பு. ஜன­வரி 8 க்கு முன்னர் நாட்டில் ஜன­நா­யகம் நில­வ­வில்லை என்றே நாம் குறை கூறி வந்தோம். இந்த அரசும் அதே பாதையில் பய­ணிப்­ப­தாயின் அது ஜன­வரி 8 இல் இருந்து வெளியே பாய்­வ­தா­கவே அமையும்.

கேள்வி: அவ்­வா­றா­ன­தொரு சந்­தேகம் உங்­க­ளுக்­கி­ருக்­கி­றதா?

பதில்: இல்லை. இன­வாதம் உரு­வா­வது குறித்து அர­சுடன் கலந்­து­ரை­யா­டினோம். ஜனா­தி­ப­தி­யுடன் கதைத்தோம். பிர­த­ம­ரு­டனும் உரை­யா­டினோம். பொலிஸ்மா அதிபர், முன்னாள் ஜனா­தி­பதி ஆகி­யோ­ரு­டனும் கருத்­துக்கள் பரி­மாறிக் கொண்டோம். இவ்­வாறு பல­ரு­டனும் இது விட­ய­மாகக் கதைத்து நல்­ல­தொரு நிலையைத் தோற்­று­வித்­தி­ருக்­கிறோம்.

கேள்வி: அதில் பிர­தி­பலன் ஏதும் கிடைத்­ததா?

பதில்: அவ­ரவர் நிலைப்­பாட்டை நாம் புரிந்து கொண்டோம். இது தொடர்­பாக அவர்கள் பின்­பற்றும் வழி­மு­றை­களைக் கண்­ட­றிந்து, எமது செயற்­பா­டு­களை அமைத்துக் கொள்ள முடி­யு­மாக இருந்­தது. மீண்டும் மோதல் ஒன்­றுக்குச் செல்­லாது இதனை எவ்­வாறு கையா­ளலாம் போன்ற பல படிப்­பி­னை­களைப் பெற்றுக் கொண்டோம். 

கேள்வி: அவ்­வாறு பெற்ற பிர­தி­ப­லன்­களின் விளைவால் அடைந்த நன்­மைகள் என்ன?

பதில்: இப்­போது முஸ்­லிம்­களின் கடைகள் தாக்­கப்­ப­டு­வது முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. அதனை இயக்­கு­ப­வர்கள் ஒளிந்­தி­ருக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் பின்­ன­டைந்து வரு­வதும் தெரி­கி­றது. இதனால் அரசு இவர்­களைத் தட்டிக் கொடுக்­க­வில்லை என்­ப­தையும் உணர முடி­கி­றது. இந்த அரசு முன்­னைய அரசு போல நடந்து கொள்­ள­வில்லை என்­பதும் வெளிப்­ப­டை­யா­கி­விட்­டது. இதனால் தேர்­தலைப் பின்­போ­டு­வ­தற்கு அவ­ச­ர­காலச் சட்­டத்தைப் பிறப்­பிப்­ப­தற்­கான ஒரு தந்­தி­ரோ­பாயம் என்­பதும் பொய்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதும் தெளி­வா­கி­றது.

கேள்வி: உங்­க­ளுடன் ஒரே மேடையில் இருக்கும் ஒரு சிலர், எங்­க­ளுக்கு வேண்­டி­யி­ருந்­த­தெல்லாம் மஹிந்­தவைத் தோற்­க­டிக்கச் செய்­வ­தொன்­றே­யாகும் என்று கூறு­கின்­றனர். உங்­க­ளதும் நிலைப்­பாடு அப்­ப­டித்­தானா?

பதில்: மஹிந்­த­வுடன் எமக்கு தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பெ­துவும் இல்லை. அவரைப் பொதுப்­ப­டை­யா­கத்தான் நோக்­கு­கிறோம். மஹிந்த கலா­சாரம் என்ற ஒன்று இருந்­தது. அதில் அரா­ஜ­கமும் உள்­ள­டங்­கு­கி­றது. அத்­துடன் அவ­ரது ஆட்சி குறித்து நாம் எப்­போதும் கூறி­வரும் விரும்­பத்­த­காத நட­வ­டிக்­கைகள் நில­வி­யி­ருந்­தன. அத­னால்­தானே 62 இலட்சம் மக்கள் அவ­ருக்­கெ­தி­ராக வாக்­க­ளித்து அவரைத் தோல்­வி­ய­டையச் செய்­தனர். அன்று மக்கள் சரி­யா­ன­தொரு முடிவை எடுத்­தனர்.

எமக்கு மஹிந்த ராஜபக் ஷ வெறும் ஒரு தனி நபரைத் தோற்­க­டிக்க வேண்டும் என்ற தேவைப்­பாடு இல்லை. அவர் மீதான தனிப்­பட்ட பிரச்­சினை ஏதும் எமக்­கில்லை. எமக்­கி­ருந்­த­தெல்லாம் அவ­ரது கலா­சா­ரத்­தி­லி­ருந்து விடு­பட வேண்டும் என்ற நிலைப்­பா­டுதான்.

கேள்வி: ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட வேண்டும் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா?

பதில்: ஞான­சார என்ற தனி நபர் குறித்­தல்ல. நான் பிரஸ்­தா­பிப்­பது. இதனை தனி நபர் ஒரு­வ­ராக வரை­ய­றுத்துக் கொள்ள வேண்டாம். ஞான­சா­ர­யா­னாலும் சரி, கர்­தினால் ஒரு­வ­ரா­னாலும் சரி, அல்­லது லெப்பை ஒரு­வ­ரா­னாலும் சரி, கோயில் பூசா­ரி­யாக இருந்­தாலும் சரி, பிர­தமர் அல்­லது அமைச்சர், ஊட­க­வி­ய­லாளர், பெண்­ணொ­ருவர் அல்­லது ஓர் ஆணாக இருந்­தாலும் சரி, வேறு எவ­ராக இருந்­தாலும் சரி இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் அவ்­வாறு  தனிப்­பட்ட ரீதியில் நோக்கக் கூடாது. நடு நிலையில் நின்றே நபர் ஒரு­வரை நோக்க வேண்டும்.

கேள்வி: நான் கேட்ட வினா…..?

பதில்: ஆம் நாட்டில் கொந்­த­ளிப்பு நிலை உரு­வாகும் பட்­சத்தில்…. விசே­ட­மாக இனம், மதத்தை மைய­மாக வைத்து யாரா­கிலும் நாட்டைப் பற்றி எரியச் செய்ய எத்­த­னிக்கும் பட்­சத்தில் அவரை சட்­டத்தின் பிடியில் சிக்கச் செய்ய வேண்டும். அதா­வது அந் நபரைக் கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக்கி சட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்டும். 

கேள்வி: ஞான­சார தேர­ருக்கு அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தாங்கள் முன்­வைக்கும் சட்டம் முஸ்லிம் அல்­லது தமிழ் இனங்­களைச் சேர்ந்த இன­வாதம் பேசுவோர் மீதும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்­லையே.

பதில்: அப்­படி இல்லை. அண்­மைக்­கால வர­லாற்றில் முஸ்­லிம்­களோ அல்­லது தமி­ழர்­களோ பௌத்த விகா­ரை­களைத் தாக்­கிய சம்­பவம் எத­னையும் நாம் கண்­ட­தில்லை. அல்­லது பௌத்த வணக்கத் தலங்­களைத் தாக்­குங்கள் என்று கோஷங்கள் எழுப்­ப­டு­வ­தையும் எம்மால் கேட்க முடி­ய­வில்லை. 

கேள்வி: ஆனால் பல உதா­ர­ணங்கள் இருக்­கவே செய்­கின்­ற­னவே?

பதில்: ஆம், அது குறித்தும் நாம் இவ்­வா­றுதான் பார்க்க வேண்டும். அதா­வது விக்­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம், ரவூப் ஹக்கீம் போன்ற தனி நபர்கள் கூறி­யுள்ள கூற்­றுக்கள் குறித்த உதா­ர­ணங்கள் குறித்­துத்தான் நீங்கள் குறிப்­பி­டு­கி­றீர்கள். இவர்கள் ஒரு சில இடங்­களில் வெளி­யிட்­டி­ருந்த கருத்­து­க­ளுக்கு நாம் அப்­போதே எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்தோம்.

ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­புக்­களின் போதும் எடுத்துக் காட்­டி­யுள்ளோம். தமிழ்ப் பெயரில் உள்ள அமைப்­பு­களைத் தடை செய்ய வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்தி வரு­கிறோம். அதா­வது அமைப்­புக்கள் எனும்­போது இனம், மதத்தின் பெயரால் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அர­சியல் அமைப்­புக்­களைத் தான் இவ்­வாறு தடை செய்­யக்­கோரி வரு­கிறோம். அர­சியல் யாப்பு மூலம் இவற்­றுக்குத் தடை கொண்டு வரப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

கேள்வி: அப்­ப­டி­யாயின், ஜாதிக ஹெல உறு­மய, முஸ்லிம் காங்­கிரஸ்………. என்­றுள்ள அர­சியல் கட்­சிகள் தானே?

பதில்: கண்­டிப்­பாக ஜாதிக ஹெல உறு­மய, முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய அரசியல் கட்­சிகள் தடை செய்­யப்­பட வேண்டும். தனி நப­ரன்றி பொது­வென்­பதன் அர்த்தம் இது­வாகும். தனி நபர்­க­ளான விக்­னேஸ்­வரன், ஹக்கீம், அதா­வுல்லாஹ், சம்­பிக்க என்­ப­தல்ல முக்­கியம். இன­வா­திகள், மத­வா­திகள் போன்­றோ­ருக்கு எதி­ராக கட்­டப்­படும் வேலி­யாக இதனைப் பார்க்க வேண்டும். அதுவும் நடு நிலை­யி­லி­ருந்தே நோக்க வேண்­டி­யதும் அவ­சியம்.

கேள்வி: நீங்கள் நல்­லாட்சி குறித்து கதைக்­கி­றீர்கள். ஆனால் இந்த ஆட்சி தேர்­தல்­களைப் பின்­போட்டு வரு­கி­றது. இரண்டு வரு­டங்­க­ளாக மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­த­வில்லை. இது நல்­லாட்­சிக்கு நல்­லதா?

பதில்: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்­திற்குப் புதிய தேர்தல் முறை­யொன்று கொண்டு வரப்­பட வேண்டும் என்ற ஆலோ­ச­னையை முன்­வைத்து தினேஷ் குண­வர்­தன தலை­மையில் புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார். இதனை சகல கட்­சி­களும் ஏற்றுக் கொண்­டுள்­ளன. இதற்­கான முறை­மைகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

விருப்புத் தெரிவு இன்றி முழு மாவட்­டத்­தையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் முன்­னரைப் போன்று பாரிய செலவு சிர­மங்­களைத் தவிர்க்­கும்­வா­றான புதிய முறை­யொன்றே மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இதில் விகி­தா­சாரம், தொகுதி வட்­டாரம் என்ற இரண்டும் கலந்த புதிய முறை­மையே அறி­முகம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

இப்­போது இதற்­கான மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் ஒன்று நிறை­வேற்­றப்­பட வேண்டும். இதனை மிகவும் துரி­த­மாகச் செய்ய வேண்டும் என்­பதே எனது கருத்­தாகும்.

கேள்வி: இன்று அமைச்­ச­ர­வையில் பத­விகள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் விதத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் நடந்­தி­ருந்தால் உங்­க­ளுடன் இருப்­ப­வர்கள் கொதித்­தெ­ழுந்­தி­ருப்­பார்­களே!

பதில்: நீங்கள் சொல்வது உண்மைதான். பாதுகாப்பு அமைச்சுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையை அன்று இணைத்தார்கள். எந்த வகையில் பொருத்தமாகவுள்ளது என்று கேட்டிருக்கலாம். நகர அபிவிருத்தி அதிகார சபை என்பது நகரத்திற்குண்டான அபிவிருத்தி வேலைகளைச் செய்வது தான். பாதுகாப்பு அமைச்சு என்றால் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபடும் ஓர் அமைச்சாகும்.

இந்த இரண்டும் எந்த விதத்திலும் பொருந்துவனவாகவில்லை. இதனை நாம் குறுகிய எண்ணப்பாட்டுடன் நோக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வமைச்சுக்களின் திறமை, ஆற்றல்கள், செயற்பாடுகள் எந்த விதத்திலும் இயங்குகின்றன என்பதிலேதான் தங்கியிருக்கின்றன என்பதில் தான் அவதானம் செலுத்த வேண்டும். எனவே வெளிநாட்டு அமைச்சுடன் ஊடக அமைச்சு இணைக்கப்படுவது என்பது பிரச்சினையல்லவே.

கேள்வி: வெளிநாட்டமைச்சுக்கு தேசிய லொத்தர் சபையைக் கையளித்திருப்பது குறித்து….?

பதில்: அதில் தவறில்லையே. சகல துறை வல்லமையும் எதிலும் எவரிடமும் இருக்கலாம். கோத்தபாய ராஜபக் ஷவை எடுத்துக் கொண்டால் யுத்தம் தொடர்பான பாதுகாப்புச் செயலாளர் பதவியில் அவர் அமர்த்தப்பட்டமை அதற்குரிய பரீட்சை எதிலும் சித்திபெற்ற தகைமையுடன் அல்லதானே!  முன்னாள் ஜனாதிபதியால்தான் அவர் நியமிக்கப்பட்டார்.