Verified Web

ஞான­சா­ரரை தேடும் படலம் தொடர்­கி­றது : அப­ய­ம­ளிப்­பது குற்றம் என்­கி­றது பொலிஸ்

6 days ago MFM.Fazeer

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் நான்கு குழுக்­களும் தொடர்ந்து அது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 

இந் நிலையில் ஞான­சார தேரரைக் கைது செய்ய நீதி­மன்ற உத்­த­ர­வுகள் உள்­ளதால் அவ­ருக்கு அப­ய­ம­ளிப்­பது சட்­டப்­படி குற்றம் என
குறிப்­பிடும் பொலிஸார், ஞான­சா­ரரைக் கைது செய்யும் தற்­போ­தைய நட­வ­டிக்­கை­களில் நவீன தொழில் நுட்­பமும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர்.

 நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ ஞான­சார தேரரை மறைத்து வைத்­தி­ருப்­ப­தா­கவும் மேலும் சில அர­சி­யல்­வா­தி­களின் பெயர் குறிப்­பிட்டு அவர்கள் ஞான­சார தேர­ருக்கு அடைக்­கலம் கொடுத்­துள்­ள­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்­டுள்ள பல்­வேறு கருத்­துக்­களும் பொலிஸ் விசா­ர­ணை­களில் அவ­தா­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­த­கவும் அதன் உண்மைத் தன்­மை­யினை உறுதி செய்­து­கொண்ட பின்­ன­ரேயே அதனை அடி­யொட்­டிய விசா­ர­ணை­களை செய்ய முடியும் எனவும் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

எனினும், இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் ஞான­சார தேர­ருக்கு அமைச்­சர்கள் எவரும் அடைக்­கலம் வழங்­கு­வ­தாகத் தெரி­ய­வ­ர­வில்லை எனவும், அமைச்­சர்­களின் பெயர்­களை தொடர்­பு­ப­டுத்தி இவ்­வாறு வெளி­யி­டப்­படும் தக­வல்கள் பொலிஸ் விசா­ர­ணை­களை திசை திருப்பும் நோக்­கிலோ அல்­லது அர­சியல் நோக்­கி­லான கருத்­துக்­க­ளா­கவோ இருக்­கலாம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிர்­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

ஞான­சார தேர­ருக்கு தற்­போது பிடி­யாணை உள்ள நிலையில் அவ­ருக்கு அப­ய­ம­ளிப்­பது சட்­டப்­படி குற்­ற­மாகும். இது சட்­டத்தில் உள்ள ஏற்­பாடு. இது ஞான­சார தேரர் விட­யத்­திலும் பொருத்தும்.

ஞான­சார தேரரை யார் மறைத்து வைத்­தி­ருக்­கின்றார் என இன்னும் தெரி­யாது. எனினும் அவர் ஒரு திட்­ட­மிட்ட அமைப்பின் செயலாளர் என்ற ரீதியில் மிகத் திட்டமிட்டே மறைந்துள்ளார். எனவே அவரைக் கைது செய்ய தொடர்ந்தும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரியந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டார்.