Verified Web

மல்­ல­வப்­பிட்டி பள்ளி தாக்­குதல் சந்­தேக நபரின் அறையில் இன­வாத போஸ்­டர்கள்

6 days ago Administrator

ஏ.எல்.எம்.சத்தார்
குரு­நாகல் மல்­ல­வப்­பிட்­டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தாக கைது செய்­யப்­பட்ட இரு சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரு­டைய கடை­யி­லி­ருந்து இன­வாத போஸ்­டர்கள், பத்­தி­ரிகை பிர­திகள் மற்றும் கையால் எழு­தப்­பட்ட சுவ­ரொட்­டிகள் என்­ப­ன­வற்றைப் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

மல்­ல­வப்­பிட்டி பள்­ளி­வாசல் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான வெல்­லவ, மர­லு­வாவ பிர­தே­சத்தைச் சேர்ந்த நபரின் கடையை பொலிஸ் குழு­வினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்­திய போதே மேற்­படி பொருட்கள் காணப்­பட்டு அவற்றை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். 

மேற்­படி அச்­சி­டப்­பட்­டதும் கையெ­ழுத்தில் வரை­யப்­பட்­ட­து­மான சுவ­ரொட்­டி­களில் கொவி­ஜன பெர­முன விவ­சா­யிகள் முன்­னணி என்ற பெயரில் வெளி­யி­டப்­பட்ட 16 போஸ்­டர்­களும் தய நகன மக மற்றும் பொது­பல சேனா அமைப்பின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள 71 போஸ்­டர்­களும் சிங்­ஹலே ஜாதிக என்ற பெயர் தாங்­கிய 20 பத்­தி­ரி­கை­களும், 8 போஸ்­டர்­களும் பொது­பல சேனா மகா சம்­மே­ளனம் என்ற 42 போஸ்­டர்­களும் மற்றும் 'இன­வா­தத்தைத் தூண்­டு­வ­தற்­கல்ல சிங்­கள மக்­களின் எதிர்­கால சந்­த­தி­யி­னரைப் பாது­காப்­ப­தற்கு மாத்­தி­ரமே' என்று கையால் எழு­தப்­பட்ட 98 போஸ்­டர்­க­ளுமே கைப்­பற்­றி­யதில் அடங்­கி­யி­ருப்­ப­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர். 

இவற்­றுக்குப் புறம்­பாக ஸ்ரீபாத போராட்­டத்தை குரு­நா­க­லை­யி­லி­ருந்து ஆரம்­பிப்போம் என்ற வாசகம் பொறிக்­கப்­பட்ட இரண்டு கையெ­ழுத்துப் பிர­தி­களும் 'இஸ்லாம் என்றால் என்ன' என்ற சிங்­கள மொழி­யி­லான இறு­வட்டு ஒன்றும் குரு­நா­க­லை­யி­லுள்ள நாம் எமது இனத்­திற்­காக அணி திர­ளுவோம், வர­லாற்று தீர்வு ஒன்றைக் காண்போம். என்ற வச­னங்கள் அடங்­கிய 79 போஸ்­டர்­களும் இருந்­த­தாக பொலிஸ் தலை­மை­யகம் மேலும் தெரி­வித்­தது. 

கடந்த மாதம் அதி­காலை மல்­ல­வ­பிட்­டிய பள்­ளி­வா­ச­லுக்கு ஏழு பெற்றோல் குண்­டுகள் எரி­யப்­பட்ட நிலையில் அவற்றுள் நான்கு குண்­டு­களே வெடித்து பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­டது. 

சீ.சீ.ரீ.வி. கெம­ராவின் துணை­யுடன் இரண்டு சந்­தேக நபர்­களை பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்­தனர். இரு­வரும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு இன்று 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு குரு­நா­கலை நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். 

சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட போஸ்டர்கள் மற்றும் பத்திரிகைகள், கையெழுத்துப்பிரதிகளை குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.