Verified Web

ஞானசார தேரரை நான் மறைத்துவைக்கவில்லை

2017-06-19 05:01:29 ARA.Fareel

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ
நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரை நானே மறைத்து வைத்­துள்­ள­தாக குற்றம் சுமத்­து­கின்­றனர்.



இக்­குற்­றச்­சாட்­டினை மறுக்­கிறேன். ‘ஞான­சா­ர­தே­ரரை இந்த அர­சாங்­கமே மறைத்து வைத்து பாது­காப்பு வழங்­கு­கி­றது’ என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் இப்தார் நிகழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். நிகழ்வின் பின்பு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

ஞான­சா­ர­தே­ர­ருக்கு நீதி­மன்றம் பிடி­யாணை பிறப்­பித்­துள்ள நிலையில் அவர் மறைந்து வாழ்­கிறார். பொலிஸ் குழுக்­களும் அவ­ரைத்­தேடி வரு­கின்­றன. இந்­நி­லையில் அவ­ருக்கு நீங்கள் தான் அடைக்­கலம் கொடுத்­தி­ருக்­கி­றீர்கள் என்று குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றதே? என்ற கேள்­விக்கு அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் ‘இன்று இன, மத­வாத செற்­பா­டுகள் அதி­க­ரித்துச் செல்­கி­றது. இவற்­றுக்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

ஆனால் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் விட­யத்தில் என் மீதே குற்றம் சுமத்­து­கின்­றனர். ஆனால் அர­சாங்­கமே அவரை மறைத்து வைத்து பாது­காக்­கி­றது. இவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யாத நிலை­யிலே எம்­மீது குற்றம் சுமத்­து­கின்­றனர். இது பற்றி நாம் கவ­லைப்­ப­டு­கிறோம். 

ஞான­சா­ர­தே­ரரை கைது செய்­ய­வேண்­டுமா? இல்­லையா? என்­பது வேறு பிரச்­சினை. என்­றாலும் இன்று நாட்டில் தலை­தூக்­கி­யுள்ள இன,மத­வாத பிரச்­சி­னை­களை அர­சாங்கம் காலம் தாழ்த்­தாது தீர்த்து வைக்க வேண்டும். பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்க இய­லா­து­விடின் இந்த அர­சாங்­கத்­தினால் பயன் இல்லை என்றார். 

இன­வா­தத்தைத் தூண்டும் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு அவ­சி­ய­மேற்­படின் புதிய சட்­டங்கள் உரு­வாக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­க­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கி­றாரே? என்ற கேள்­விக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பதி­ல­ளிக்­கையில்;

‘நாட்டில் மேலோங்­கி­யுள்ள இன­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்தி சட்டம் ஒழுங்­கினை நிலை நிறுத்­து­வ­தற்கு புதிய சட்­டங்கள் அவ­சி­ய­மில்லை. தற்­போது அமு­லி­லுள்ள சட்­டங்­களே இன­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்த போது­மா­ன­தாகும். இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த புதிய சட்டம் ஒன்றின் மூலம் பொலி­ஸா­ருக்கு மேல­திக அதி­காரம் வழங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் பொலி­ஸா­ருக்கு மேல­திக அதி­காரம் வழங்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பொலி­ஸா­ருக்கு தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தைப் பிர­யோ­கித்து இன­வா­தத்தைத் தூண்டும் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடியும் என்­றாலும் நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கு அரசாங்கம் புதிய சட்ட மூலங்களை சமர்ப்பித்தால் அவற்றுக்கு நாம் ஆதரவு வழங்குவோம் என்றார். 

இப்தார் வைபவத்தில் பலஸ்தீன், ஈராக், ஈரான், துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் பல நாடுகளின் கொன்சியூலர்களும் கலந்து கொண்டனர்.