Verified Web

இன மத வன்முறைகளுடன் தொடர்புடைய 14 பேர் கைது

6 days ago MFM.Fazeer

-அனைத்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது­பல சேனா 
இன, மத முரண்­பா­டு­களைத் தூண்டும் வித­மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனைத்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது­பல சேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும், அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட 14 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர், பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொடி தெரி­வித்தார்.



அத்­துடன் இது­வரை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டாத வெல்­லம்­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல், எல்­பிட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ வைப்பு, வென்­னப்­பு­வையில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ வைப்பு தொடர்பில் சந்­தேக நபர்­களை கைது செய்ய அந்­தந்த பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­களின் கீழ் சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களைத் தொடர்­வ­தா­கவும் மிக விரைவில் அவர்­களைக் கைது செய்ய முடியும் என நம்­பு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

' நுகே­கொடை பகு­தியில் நான்கு முஸ்லிம் கடைகள் தீ வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னரை நாம் கைது செய்தபோது, பொதுபல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­தினார்.

அந்த சந்­தேக நபர் தமது அமைப்பைச் சேர்ந்­தவர் இல்லை எனவும் அவர் பொது பல சேனா என நிரூ­பிக்­கு­மாறு பொலிஸா­ருக்கு சவால் விடுத்தார். அத்­துடன் குறித்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் நிரூ­பிக்­கு­மாறும் சவால் விடுத்தார்.

 நான் அவ­ரது பாணியில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்தி அதற்கு பதி­ல­ளிக்­க­வில்லை. மாற்­ற­மாக செயலில் காட்­டினோம். குரு­நாகல் மல்­ல­வ­பிட்­டிய ஜும் ஆ பள்­ளி­வாசல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கைதா­ன­வர்கள் யார்? யார் என்ன சொன்­னாலும் கைதா­ன­வர்கள் யாரென்றும் அவர்கள் யாருக்­காக வேலை பார்த்­தார்கள்? அவர்­க­ளது நிகழ்ச்சி நிரல் என்ன என்­பதும் குரு­நாகல் மக்­க­ளுக்கு நன்கு தெரியும்.

  இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களின் படி, நாட்டில் அண்­மையில் பதி­வான அனைத்து இன, மத முரண்­பாட்டு குற்­றங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பல சேனா இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

கைதா­கி­யுள்ள அனைத்து சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக இன­வாதம், மத­வா­தத்தைத் தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் உறுப்­பு­ரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைவிட தண்டனைச் சட்டக் கோவையின் 291 (1) ஆம் பிரிவின் கீழும் குற்றம் சாட்டப்பட்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.